கலர்புல் பருப்பு சாதம்

தேதி: July 29, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
வெண்டக்காய், கத்தரிக்காய், கொத்தவரங்காய், பீன்ஸ், காரட், அவரைக்காய், கோவக்காய், முள்ளங்கி - 250 g
பசலை கீரை - 1/2 கப்
எண்ணெய் - 2 tsp
பட்டை - 1
லவங்கம் - 2
சோம்பு - சிறிதளவு
ஏலக்காய் - 1
தனியா தூள் - 1/2 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
உப்பு
தாளிக்க:
கடுகு - 1/2 tsp
வெந்தயம்
பெருங்காயம்
கருவேப்பில்லை
நெய் - 3 tsp
அலங்கரிக்க :
கொத்தமல்லி
பூந்தி


 

பருப்பு கழுவி ஊறவைக்கவும். காய்கறிகளை ஒரு அங்குல துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயத்தை நீளமாகவும் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்கள் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து பொரிய விடவும். பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
2 நிமிடம் பிறகு காய்கறிகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி எல்லா பொடிகளையும் சேர்க்கவும். 5 நிமிடம் வதங்கியதும் அரிசி சேர்த்து ஒரு கிளறு கிளறி குக்கரில் 4 கப் தண்ணீர்,கீரை,உப்பு சேர்த்து 3 விசில் விடவும்.
நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து சாதத்தில் கொட்டவும்.
கொத்தமல்லி , பூந்தி தூவி ரைதவுடன் பரிமாறவும்.


பூந்தி ரைதவுடன் பரிமாறினால் இன்னும் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ms .மூர்த்தி மேடம் ,
நல்ல குறிப்பு எளிமையா தந்து இருக்கீங்க மேலும் பல நல்ல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்
உங்க பெயர் என்ன?

என்றும் அன்புடன்,
கவிதா


எங்காத்ல வெறும் பருப்பு சாதம் தான் கொழந்தேள் சாப்டுவா!
இன்மேர்பட்டு kalar full பருப்பு சாதம் பண்ணி கொடுபேன்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எப்படி இருக்கீங்கோ. எங்காத்துலே என் குழந்தைகள் எல்லாம் இதை ரொம்பவே விரும்பி ஷாபிடுவா....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உங்க பருப்பு சாதம் செய்து 5 நாளைக்கு மேலே ஆகுது... சொல்ல மறந்து மறந்து போகுது. தெரிஞ்சா அக்கா என்னை வெரட்டி வெரட்டி அடிப்பீங்கனு இன்னைக்கு நியாபகமா பதிவு பொடுறேன் ;) ரொம்ப டேஸ்ட்டி, குட்டிக்கு ரொம்ப பிடிச்சுது. சுவையான பருப்பு சாதத்துக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களின் பின்னூடத்திற்கு நன்றி. செய்து பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!