க்ரில்டு ஹமூர் ஃபிஷ்

தேதி: January 29, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (6 votes)

 

ஹமூர் ஃபிஷ் ஃபில்லட் - 600 கிராம்
எலுமிச்சை - ஒன்று
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
சிக்கன் டிக்கா பவுடர் – ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
ரெட் கலர் – பின்ச்
உப்பு – தேவைக்கு


 

ஃபிஷ் ஃபில்லட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சிக்கன் டிக்கா பவுடர், மிளகுத்தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, ரெட் கலர், உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்து மசாலா தயார் செய்துக் கொள்ளவும்.
தயார் செய்து வைத்திருக்கும் மசாலாவை ஃபிஷ் ஃபில்லட்டில் தடவி குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு மைக்ரோவேவில் க்ரில் செட் செய்து டைம் செட் செய்யவும், 5 நிமிடம் முற்சூடு செய்து க்ரில் ப்ளேட்டில் மீனை வைத்து சுமார் 40 நிமிடம் கழித்து எடுக்கவும்.
20 நிமிடத்தில் மீனின் ஒரு பக்கம் வெந்து விடும், திருப்பி போட்டு மறுபடி 20 நிமிடம் வைத்து எடுத்தால் ஃபில்லட் முழுமையாக தயாராகி விடும். கவனமாக வெளியே எடுக்கவும்.
சுவையான சத்தான க்ரில்டு ஃபிஷ் ஃபில்லட் ரெடி. இதனை வெஜ் சாலட்டுடன் பரிமாறவும். இந்த க்ரில்டு பிஷ் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக <b> திருமதி. ஆசியா உமர் </b> அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆசியா க்ரில்ட் ஃபிஷ் பரிமாறியிருப்பதைப் பார்க்கவே அழகா இருக்கு. தொடர்ந்து இன்னும் குறிப்புகள் கொடுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்கள் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.முடிந்தபொழுது நிச்சயம் படங்களுடன் குறிப்பு கொடுக்க முயற்சிக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

க்ரில் பிஷ் சூப்பராக இருக்கு.ப்ரெஷண்டேஷனும் அருமை..

ஆஹா ஆசியா.... கிரில்டு ஹமூர்... சிரியா நியாபகம் வந்துடுச்சே.... :( சென்னை'ல கிடைக்குதா ஹமூர்? ரொம்ப தெளிவான படங்கள், நல்ல குறிப்பு... வாழ்த்துக்கள் ஆசியா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆசியா உமர்[ ஆசியான்னு கூப்பிடலாமா] ஒவன் சமயல்னு ஆசையா ஓடிவந்தேன் ஆனா மீன் நாங்க சாப்பிடமாட்டோம் பா ஒரு வெஜ் ஒவென் டிஸ் எனக்காக கொடுக்க முடியுமா[ சத்தியமா இது நான் யாரையும் காப்பி பன்னாம தான் போட்டுருக்கேன்[ just for fun] thanks paa

do fast mathi

ஆசியாக்கா நல்மா?பிள்ளைகள் நலமா?பார்க்க அழகா இருக்கு எனக்கும் வனி கேட்ட சந்தேகம்தான் ஹமூர் சென்னையில் கிடைக்குமா?

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

asiya samayal nanragairyutatu

ஹாய் ஆசியா, உங்கள் க்ரில்டு மீன் பார்த்தாலேச் சாப்பிடணும் போல் உள்ளது. ஆனால் மைக்ரோ வேவ்வில் க்ரில்டு மோடுக்கு எப்படி செட் பண்ணுவது?. என்னிடம் Kenwood , national panosonic இரண்டும் உள்ளது.Manual இல்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.Save the Energy for the future generation

Save the Energy for the future generation

ஆசியா மேடம் எப்படி இருக்கீங்க..?வீட்டில் எல்லோரும் நலம் தானே............?சூப்பர் குறிப்போட வந்து இருக்கீங்க மேடம்.ப்ரஸன்ட்டேஷன் பார்க்கவே சாப்பிட நா ஊருகின்றது.கலக்கிட்டீங்க போங்க.....
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

இப்ப தான் விடுமுறை முடிந்து ஊர் வந்திருக்கிறேன்.பின்னூட்டம்,கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.எழுத்துதவி கொண்டு எழுதுவதால் விரிவாக பதில் அளிக்க முடியலை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேனகா,வனிதா,மதி,மர்லியா,சல்மியா,இந்திரா,அப்சரா உங்கள் அனைவரின் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.
இந்திரா உங்கள் ஓவனில் கிரில் ஆப்ஷன் இருந்தால் கிரில் பட்டனை செட் செய்து டைம் செட் செய்து ஸ்டார்ட் கொடுத்தால் வைத்து விடலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா,க்ரில் பட்டன் உள்ளது. நான் செய்துப் பார்த்துவிட்டு பதில் எழுதுகிறேன்.நன்றி.Save the Energy for the future generation

Save the Energy for the future generation

asiya akka i'm first time in arusuvai.I tried this recipe.It's delicious.presentation is very nice.

thanks for your comments.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

asiya akka,,pls give me microwave grill setting step by step.i hv like dis microwave,
so pls send me madam.thanx

நல்ல குறிப்பு. படங்கள் எல்லாம் தெளிவாக இருக்கிறது ஆசியா.

‍- இமா க்றிஸ்

-

yesterday i did this recipe with fresh hamoor fish. it was so tasty. thanks .

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society