தேதி: October 13, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தரமான பாசுமதி அரிசி - 300 கிராம்
தக்காளி - 150 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
உருளை - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பட்டாணி, பீன்ஸ், கார்ன் - 75 கிராம் (தலா 25 கிராம்)
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு தேவையான அளவு
தயிர் - இரண்டு மேசைக்கரண்டி
எலுமிச்சை பழம் - பாதி
பச்சை மிளகாய் - இரண்டு
கொத்தமல்லி தழை - கால் கட்டு
புதினா - கால் கட்டு
எண்ணெய் - 75 மில்லி
நெய் - இரண்டு தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலம் - தலா ஒன்று









வெஜ் பிரியாணியில் இது குக்கர் முறை, இதை இன்னும் இரண்டு வகையில் செய்யலாம். தம் போட்டு மற்றும் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் அரைத்து ஊற்றி சிறிது தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம். இது நான்கு நபர்கள் சாப்பிடும் அளவு, காய்கறி காலிஃப்ளவர், பீட்ரூட், கருணைக்கிழங்கு சேர்ப்பதாக இருந்தாலும் சேர்த்து கொள்ளலாம். உருளை, கேரட் அளவை சிறிது குறைத்து கொள்ளலாம்.
<b> வெஜ் தயிர் பச்சடி:</b>
தயிர் - அரை கப்; உப்பு - கால் தேக்கரண்டி; தக்காளி - பாதி; வெள்ளரி - பாதி; வெங்காயம் - பாதி; கேரட் - பாதி; எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி;
கொத்தமல்லி, புதினா - ஒரு மேசைக்கரண்டி பொடியாக நறுக்கியது;
காய்களை பொடியாக நறுக்கி அத்துடன் தயிர், உப்பு, எலுமிச்சை சாறு, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி சேர்த்து கலக்கவும்.
Comments
நன்றி ஜலீ
கலக்கிட்டிங்க. நேரா உங்க வீட்டுக்கு வந்து சாப்பிட வேண்டியது தான். பிரியாணி என்றால் ஜலீ தான்.
ம்.. அவசியம் இந்த சண்டே செய்துடவேண்டியது தான்.
செய்துட்டு சொல்கிறேன். ரொம்ப ரொம்ப நன்றிங்க....
அருமையான விளக்கம்.....
படங்களும் அருமையாக வந்துள்ளது....சாப்பிட தூண்டியதால் இன்று மதியம் செய்து விட்டேன். முதல் முறையாக என் அம்மா குறை கூறாமல் சாப்பிட்டார்கள். பிரியாணி என்றால் உங்களின் குறிப்பு தான். இப்பொழுதெல்லாம் என்ன செய்ய போகிறேன் என்று சொல்வதை விட ஜலீலா குறிப்பிலிருந்து செய்கிறேன் என்றால் எந்த விதமான எதிர்ப்பும் வருவதில்லை. நான் உங்கள் குறிப்பின் தீவிர ரசிகை.
லாவண்யா
Never give up!!!
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
விஜி நீங்கள் கேட்டதால்
விஜி நீங்கள் கேட்டதால் தான் உடனே செய்து அனுப்பினேன்.
மற்ற யாருக்கும் இந்த குறிப்பை பார்கக் நேரமில்லை போல,
Jaleelakamal
லாவன்யா உங்கள் அம்மாவிற்கு
லாவன்யா நீங்கள் உடனே செய்து பதில் போட்டதற்கு மிகுந்டஹ் சந்தோஷம்.
நீங்களும் பிரபாவும் தான் என் குறிப்பை செய்கிறீர்கள் போல இருக்கு, மற்ற தோழிகள் மறந்து விட்டார்கள்.
உங்கள் அம்மாவிற்கு என் பிரியாணி பிடித்தது ரொம்ப சந்தோஷம்.
Jaleelakamal
Super Veg Briyani
Hi Jaleela,
Your receipe was too good.....I donot how to scrap in Tamil font........Everyday, I just see your receipe for what all vegetables and Ingredients I have and cook...Thatz it!!!!! Ur receipes are too good.....Thanks a lot for SHaring!!
Best Regards,
VidhyaNavi
வித்யா நவி எழுத்துதவி
வித்யா நவி இதற்கு உடனே பதில் போட்டேன், அது போகல போல
அருசுவையில் எழுத்துதவி என்று எல்லா பக்கங்களிலும் கீழே இருக்கு பாருங்கள் அதன் மூலம் பழகி கொள்ளுங்கள்.
வெஜ் பிரியாணி செய்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
Jaleelakamal
சூப்பர் பிரியாணி..
ஜலீலாக்கா நல்லாருக்கீங்களா? உங்க வெஜ் பிரியாணி செய்தேன்.மிகவும் அருமை.சூப்பரா இருந்தது.என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிட்டார்.எனக்கு மிகவும் ஆச்சிரியமா இருந்தது என் மகள் விரும்பி சாப்பிட்டது தான்.பருப்பு சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் இதை தவிர மற்றவை சாப்பிட அவளிடம் போராட வேண்டும். முதல் கடவாய் பல் முளைக்க ஆரம்பித்திருப்பதால் கொஞ்சம் சிரமப்படுகிறாள்.டீத்தர், கேரட், ஆப்பிள் எல்லாம் கடிக்க கொடுத்தாள் தூக்கி எறிந்து விட்டு என்னை கடிக்கிறாள்.
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
திவ்யா , வெஜ் பிரியாணி
திவ்யா ரொம்ப சந்தோஷம் வெஜ் பிரியாணி செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு. கணவர்ர், உங்கள் மகள் விரும்பி சாப்பிட்டது ரொம்ப சந்தோஷம்.
குழந்தைகள் அப்படி தான் போக போக சரியாகும்.
Jaleelakamal
மிக்க நன்றி
ஜலீலா மேடம், நானும் மூன்று வாரங்களாக இந்த தளத்திற்குள் நுளைந்து தங்களுக்கு நன்றி சொல்ல முயன்று வந்தேன். ஓரு வழியாக இன்று வந்து விட்டேன். இதுவே எனது முதல் பதிப்பு...தளம் புதிப்பிக்கும் முயற்சியால் எனது பெயர் பதிவு சில பல தடவைகள் வெற்றியடையவில்லை போலும்.
நான் சமீப காலமாக தான் சமையலறைக்குள் நுளைந்திருக்கின்றேன். அனுபவம் ஒரு வருடத்திற்கும் கம்மியே....அதனால் நான் கண்டிப்பாக கிட்சன் கில்லாடி இல்லை. ஆனாலும் என் கணவர் சமைத்துக் கொடு என விரும்பி கேட்கும் அளவிற்கு எனக்கு உதவியது தங்களது பிரியாணி குறிப்பு தான் :) கடந்த மூன்று வாரங்களில், மூன்று தடவைகள் செய்து விட்டேன்... ஓவ்வொரு தடவையும் சுவை குறையாமல் வருகிறது.
ஓரு சுவையான குறிப்பை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவே ஒரு பெருந்தன்மை வேண்டும். அவ்வகையில் தங்களுக்கும் இத்தளத்தில் குறிப்புகள் பகிர்ந்து கொண்டிருக்கும் மற்ற சகோதரிகளுக்கும் எனது மனமுவந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!!!!
சத்யா ரகுராம் ஞாபகம்
டியர் சத்யா ரகுராம் ஞாபகம் வைத்து வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
என்றும் உங்கள்
ஜலீலா
Jaleelakamal
ஜலீலா அக்கா
ஜலீலா அக்கா கடந்த வாரம் என்னவரின் பிறந்தநாள் நிகழ்சிக்காக உங்களின் வெஜ் பிரியாணி பண்ணினேன் ரெம்ப நல்லா இருந்தது.அதனுடன் வெஜ் தாளிச்சாவும் பண்ணினேன் அவரின் நண்பர்களிற்கும் பிடித்திருந்தது.இரண்டு நாள்களாக நெட் slowvaaka இருந்ததனால் இன்றுதான் பதிவு பண்ண் முடிந்தது.நன்றி.
Hello Banu, This is Raje
Hello Banu,
This is Raje from Bahrain, Hope u r fine, i have seen ur receipes , too gud, today i prepared veg briyani in ur method,my husband says its too gud, Thanks banu, keep on send ur receipies.
By(e)
Raje
super Veg Briyani
உங்கள் குறிப்பினை பார்த்து பிரியானி செய்தென், மிகவும் நன்றாக இருந்தது, எனது கணவர் என்னை பாராட்டினார். மிக்க நன்றி பானுமா. நீங்கள் இது போன்ற குறிப்பினை தொடர்ந்து அனுப்ப வேன்டும்.
ஹாய் ஜலீலா அக்கா
ஹாய் ஜலீலா அக்கா அஸ்ஸலாமு அழைக்கும் நல்லா இருக்கீங்களா ?உங்கள் பிரியாணி செய்தான் ரொம்ப நல்லா இருந்தது மிக்க நன்றி
அன்புடன் நஸ்ரின் கனி
ராஜி , வெஜ் பிரியாணி
டியர் ராஜி வெஜ் பிரியாணி செய்து பார்த்து தவறாமல் இங்கு வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிகக் நன்றி + சந்தோஷம்.
என்றும் உங்கள்
ஜலீலா
Jaleelakamal
நஸ்ரின், மிக்க நன்றி
நஸ் ரீன் வா அலைக்கும் அஸ்ஸலாம்.
நல்ல இருக்கேன்பா, வெஜ் பிரியாணி நல்ல இருந்தது குறித்து ரொம்ப சந்தோஷம் + நன்றி
என்றும் உங்கள்
ஜலீலா
Jaleelakamal
Jaleela madam!
நான் நேற்று இந்த வெஜ் பிரியாணிதான் செய்தேன். ஒரே பாராட்டுதான் போங்க! அறுசுவையில் மட்டுமில்ல, உங்க blog லயும் தொடர்ந்து படிச்சிட்டு வரேன். எல்லா இடத்திலும் கலக்குறீங்க madam!
HELLO MADAM
yesterday i made veg. biriyani as per your receipe, the taste is super, but little mased(கொஞ்சம் குலைந்திருந்து)my daughter liked too much.
whatis the use of LEMON ?
whatis the use of LEMON ?
hello mam, i hav seen your
hello mam,
i hav seen your recipes .
it's tempting me to do this veg.biriyani .
i will try this next week .
my kis is 5 years old .
will you please help me to increase her weight.
what foods can we give to her ?
in what way v can add cheese to her ?
thanks,
expecting your reply.
priya.
to jaleela madam
Dear madam,
Im in brunei. im new visitor to this site.. i read most of ur recipies..im going to do one by one...im working woman..my baby is 3yrs old...she is not gaining her weight..i tried so many food she is so fuzzy and dont like any kind of foods... can u help telling what can i try her and how to feed her..i dont know how to type in Tamil thats y i typed in English..Thank you.
pls Jeleela Banu medam
medam
nan arusuvai ku puthusu. pls நெய் சாதம் எப்படி செய்வது? pls.............
உன்னை போல பிறரையும் நேசி.
வெஞ் ப்ரியானி செய்து
வெஞ் ப்ரியானி செய்து பார்தேன்.சுவை நன்றாக இருந்தது.
ஆனால் எனக்கு அடி பிடித்து விட்டது.என்ன தவறு செய்தேன் என்று காரணம் தெரிய வில்லை
கவிதா
மேடம், லிஸ்டில் எலுமிச்சை
மேடம்,
லிஸ்டில் எலுமிச்சை இருக்கிறது. அதை எப்போது சேர்ப்பது?
பூங்கோதை தங்கவேல்
hi jaleela how r u , i tried
hi jaleela
how r u , i tried many recipes from ur link , all came out well...........but in this recipe, u havn't mentioned abt the quanty of ginger garlic paste.......could u tell me how much i should add...
waiting for ur reply...............
hello madam
I have tried many of your receipes and this veg biriyani came out very well,
my son and husband liked it very much..thank you
hi banu madam, neenga ginger
hi banu madam, neenga ginger garlic paste yavalavu saerkanumnu sollavae illa......pls adha unga recipela add pannunga.....
unga recipes nan niraiya try panni irukaen.....romba nalla vandhu iruku...
thanks for sharing .........
உங்கள் குறிப்பு மிகவும் நல்லா
உங்கள் குறிப்பு மிகவும் நல்லா இருக்குங்க.
என் சமையல் எது செய்தாலும்
திவ்யா சுரேஷ்
வெஜ் பிரியணி செய்து பார்த்துங்கீளா என் சமையல் எது செய்தாலும் கண்டிப்பாக உங்கள் வீட்டுல பாராட்டு மழை தான் கிடைக்கும்.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
Jaleelakamal
குக்கரில் அதிக விசில் விட்டு
அன்பு மனோ பாரதி இது ஏன் குழைந்தது என்றால், ஒன்று தன்ணீர் அதிகமா வைத்து இருப்பீங்க இல்ல குக்கரில் அதிக விசில் விட்டு இருப்பீங்க
உங்கள் மகளுக்கு ரொம்ப பிடிச்சிருந்ததா ரொமப் சந்தோஷம்.
வாசனையே மூக்க துளைத்து இருக்குமே.
Jaleelakamal
லெமன் சேர்ப்பது சிறிது
விஜி கண்ணன் லெமன் சேர்ப்பது சிறிது புளிப்பு சுவை, மற்றும் ஜீரன த்துக்கு மற்றும் சாதம் உதிரியாக வரவும்.
Jaleelakamal
குழந்தைகளுக்கு இங்கு அறுசுவையிலேயே
பிரியா 80 உங்கள் குழந்தைகளுக்கு இங்கு அறுசுவையிலேயே ஏகப்பட்ட்ட ரெசிபிகள் இருக்கு, என் குறிப்பியே எல்லா சமையலும் காரம் குறைவாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வன்ணம் தான் கொடுத்து இருக்கேன்.சில குறிப்புகளில் குழந்தைகளுக்கு என குறிப்பிட்டும் இருப்பேன் செய்து பாருங்கள்
Jaleelakamal
லிகா குழந்தைகளின் வெயிட் குறைவுக்கு
லிகா குழந்தைகளின் வெயிட் குறைவுக்கு சரியா சத்தான உணவு சேராதது தான்
அதுவும் இல்லாம இந்த வயதில் விளையாட்டு தனம் ஜாஸ்தியாக இருக்கும்.
கொஞ்சம் கலர் ஃபுலான உணவு வகைகள் கொடுக்கனும்
முட்டை ரொம்ப நல்லது மைதா, முட்டை, சர்க்கரை , ஏலப்பொடி கலந்து தோசை போல செய்து கொடுங்க.
நிறைய சிக்கன், மட்டன் முட்டை வகைகளை சாண்ட்விச் போல கொடுங்கள்.
வயிற்றில் பூச்சி இருந்தாலும் சரிய சாப்பிட மாட்டாங்க வெயிட்டும் போடாது, குழந்தைகளுக்கு ஆறு மாதம் ஒரு முறை பூச்சி மருந்து கொடுக்கனும்.
இதில் என் குறிப்புகளில் குழந்தைகளுக்கு என்று தனியாக நிறைய குறிப்புகள் இருக்கும் அதை ஓவ்வொன்றாக செய்து கொடுங்கள்.
Jaleelakamal
பகறா கானா
M.Devi நெய் சாதம் பல வகையாக செய்யலாம் , இதில் என் பகறா கானா இருக்கு இது செய்து பாருங்கள்/
http://www.arusuvai.com/tamil/node/12362
Jaleelakamal
அடி பிடித்து விட்டது என்றால்
அனிராஜன்
இது அடி பிடித்து விட்டது என்றால் கிரேவி ரொம்ப வத்த விட்டு இருப்பீங்க
இல்லை தீயின் தனலை அதிக படுத்தி இருப்பீங்க. அரிசி போட்டு கொதி வந்ததும் அடுப்பில் தீயின் தனலை மீடியமாக வைத்து இரண்டு விசில் வந்ததும் முன்றாவது விசில் வர இருக்கும் போது அடுப்பை அனைத்து சிறிது நேரத்தில் அடுப்பில் இருந்து இரக்கிடனும், இல்லை என்றால் கேஸ் சூட்டில் அடி பிடித்து விடும்.
Jaleelakamal
பூங்கோதை எலுமிச்சை
பூங்கோதை எலுமிச்சை பழம் இதில் குறிப்பிட மறந்துட்டேன். அதை அரிசி தட்டியதும் தண்ணீர் ஊற்றி கொதி வரும் போது பிழிந்து குக்கரை மூடனும். தவற்றை சுட்டி காண்பித்தமைக்கு மிக்க நன்றி.
Jaleelakamal
இஞ்சி பூண்டின் அளவு ஓன்னறை மேசை கரண்டி.
உஷா 123 ரொம்ப சாரி இதில் எப்ப கமெண்ட் போட்டீங்கன்னு எனக்கு கண்டு பிடிக்க முடியல முன்பு சமீபத்திய பதிவுஎன்று இருக்கும் அதில் எல்லார் கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் போட்டு விடுவேன் , இபப் அந்த பகுதி இல்லாததால் எந்த குறிப்புக்கு யார் கமெண்ட் போடுகீறார்கள் என தெரியல
இதில் இஞ்சி பூண்டின் அளவு ஓன்னறை மேசை கரண்டி.
Jaleelakamal
வெஜ் பிரியாணி
மணி தனராஜ், இந்த வெஜ் பிரியாணி செய்து பார்தது இங்கு பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி, உங்கள் கனவருக்கும் உஙக்ள் மகனுக்கும் பிடித்தது குறித்தும் ரொம்ப சந்தோஷம்.
என் நிறைய குறிப்பு செய்து பார்த்தேன் என்று சொல்லி இருக்கீங்க ரொமப் ரொம்ப சந்தோஷம்
Jaleelakamal
நிஷா - பாபு கிட்ட மெயில்
நிஷா இஞ்சி பூண்டு பேஸ்டும், எலுமிச்சையும் குறிப்பிட மறந்துட்டேன்,
பாபு கிட்ட மெயில் பண்ணி சொல்ல்றேன், அவஙக் என் மெயில பார்த்தால் சரி பண்ணுவாங்க.என் ரெசிபி நிறைய செய்து பார்த்தது குறித்து மிக்க மகிழ்சி.இது வரை அனுப்பிய இரண்டு குறிப்புகள் இன்னும் இது வரை போட படவில்லை
Jaleelakamal
புவனா. சமீபத்திய பதிவுகள்
உங்க்ள் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி புவனா.
இது வரை இங்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் பதில் அளித்து விட்டேன்.
முன்பு சமீபத்திய பதிவு ஒன்று இருக்கும் அறுசுவை ஓப்பன் செய்த்தும் அதை பார்த்தால் போதும் உடனே கேள்விகளுக்கு பதில் அளித்து விடுவேன்.
இப்போது அது இல்லை ஆகையால் மிகச்சிரமம்.
இப்படிக்கு
என்றும் உங்கள்
ஜலீலாக்கா
Jaleelakamal
Latha Ashok
I tried this briyani today. It was very nice and the curd pachadi is also nice.
ஜலீலா அக்கா
உங்க வெஜ் பிரியாணி நேற்று செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது வீட்டில் எல்லோரும் ரசித்து சாபிட்டார்கள் yummy biriyani
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
assalamu alaikkum
nan puthithu jaleelaakka enaku unga samayal romba pitykkum
jaleela akka
nan arusuvaikku puthusu
உங்க வெஜ் பிரியாணி நேற்று
உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி.உங்க வெஜ் பிரியாணி நேற்று செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது
உன்னை போல் பிறரை நேசி.
வெஜ் பிரியாணி
லதா அஷோக் வெஜ் பிரியாணி செய்து பார்த்து மறவாமல் இங்கு வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி + சந்தோஷம்
Jaleelakamal
சரியான அளவு
பரிதா இது நான் செய்யும் சரியான அளவு , ருசி கண்டிப்பாக அபாரமாக இருக்கும்.
கண்டிப்பாக யார் இதை செய்தாலும் அனைவருக்கும் பாராட்டு உண்டு. அறுசுவையில் என் குறிப்பை யாரும் செய்கிறார்களா இல்லையான்னுஅடிக்கடி நினைபப்துண்டு,
அறுசுவை 10ஆம் ஆண்டுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம் என வந்தேன்..
அப்ப்டியே என் குறிப்புகளுக்கு யாரும் கருத்து தெரிவித்தார்களா என பார்த்த்த போது, நிறைய குறிப்புகளுக்கு கருத்து தெரிவித்து இருக்கிறீர்கள், இதை பார்த்ததும் மிகுந்த சந்தோஷம்
Jaleelakamal
nanum panunan veg briyani.
nanum panunan veg briyani. supera vanthuchu thanks
வெஜ் பிரியாணி
மிகவும் நன்றாக உள்ளது
ஹாய்
ஜலீலா மேடம் இஞ்சி பூண்டு நீங்க மேல கொடுக்கவே இல்லையே ஆனா செய்முறையில போட சொல்லிருக்கிங்க இன்னைக்கு நீங்க சொல்லி தந்த முறையில தான் சமையல் வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் நன்றி