மேதி ரைஸ்

தேதி: August 26, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

பாசுமதி அரிசி - ஒரு ஆழாக்கு (200 கி)
வெந்தயக்கீரை - ஒரு கைப்பிடி
வெங்காயம் - ஒன்று (பெரியது)
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
பட்டை, லவங்கம் - தாளிக்க
ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எலுமிச்சம் பழம் - அரை மூடி


 

வெந்தயக் கீரையை அலசி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாசுமதி அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்னர் வெந்தயக் கீரை சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வதக்கவும்.
இப்போது ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்து ஒரு கிளறு கிளறி, அதனுடன் ரசப் பொடியை சேர்க்கவும்.
பின்னர் 1 1/4 டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். ஒரு விசில் வந்ததும் 2 நிமிடங்கள் சிம்மில் வைத்து குக்கரை நிறுத்தவும். சமைக்கும் நேரம் குக்கரைப் பொறுத்து மாறுபடும்.
ஆவி அடங்கியதும் அரை மூடி எலுமிச்சம் பழம் சேர்த்து கிளறி பரிமாறவும். மேதி ரைஸ் தயார். இதனுடன் குருமா, ரைத்தா, பனீர் பட்டர் மசாலா நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நான் வெந்தயத்தை விதச்சு முளச்சதுக்கு பிறகு செய்துட்டு சொல்கிறேன். இங்கே கிடைக்காது!

கசப்பு இருக்காதுல?

மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வெந்தயக்கீரையில் பருப்பு சேர்த்து கடைவது இதை தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது, இப்பொழுது இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாகவும்,சத்தானதாகவும் உள்ளது

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஹர்ஷா

நல்ல ஹெல்த்தியான வித்தியாசமான் குறிப்பு.. வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹர்ஷா வெரி நைஸ். வெந்தய கீரை கிடைக்கும் போது செய்யணும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கும், அறுசுவை குழுவினருக்கும் எனது நன்றிகள்.

ஆமி,
வழக்கம் போல் உங்கள் முதல்பதிவைப் பார்த்ததும் ரொம்ப மகிழ்ச்சி.
ஆமி, கசக்காது. தைரியமா செய்யலாம். இது என் தோழியின் குறிப்பு. அவங்க வீட்ல சாப்பிட்டு எனக்கு பிடிச்சதால தான் இங்க போட்டு இருக்கேன்.
பதிவுக்கு நன்றி.

ஹேமா,
நானும் உங்களை போல தான்.
இந்த ரெசிப்பி தெரிந்த பிறகு,வெந்தயக் கீரை வாங்கும் போதெல்லாம் மேதி ரைஸ் செய்துட்டு, மீதியுள்ள கீரையை இன்னொரு நாள் பருப்பு போட்டு கடஞ்சுடுவேன்.
கண்டிப்பா செய்து பாருங்க. பதிவுக்கு நன்றி,.

ரம்யா,and கவிசிவா,
. வெந்தயக் கீரையை, வதக்கும் போது கசூரி மேதியின் மணம் வரும். அதனால் ரொம்ப நல்லா இருக்கும். செய்து பாருங்க. உங்கள் பதிவுகளுக்கு நன்றி

அன்பரசி,
மேதி ரைஸ் நல்லா இருக்கே !!
இங்கே அடிக்கிற வெயிலுக்கு நல்லது!!!
நான் வீட்டிலேயே வெந்தயகீரை போட்டு வைத்து இருக்கேன் கண்டிப்பாக செய்கிறேன்
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பரசி, நலமா இருக்கீங்களா? நாம் முதல் முறையா பேசறோமா???
உங்க மேத்தி ரைஸ் ரொம்ப நல்லா இருக்கு, நான் வேற மாதிரி செய்வேன். நீங்க ஏன் ரசப்பொடி சேர்க்கறீங்க? எந்த ரசப்பொடின்னும் கொஞ்சம் சொல்லுங்க. நீங்களா தயாரிப்பீங்களான்னும் சொல்லுங்க.
ரொம்ப ஈசியா இருக்கு அடுத்த முறை கீரை வாங்கி செய்து பார்க்க தான்.

கவிதா,
இங்க 4 நாளா மழை. அங்க வெயில் அடிக்குதா? வெந்தயக் கீரை வீட்லயே இருக்கா? அப்டினா கண்டிப்பா செய்து பாருங்க. பதிவுக்கு நன்றி.

உமா,
உங்க பதிவை பார்த்ததும் சந்தோஷமா இருக்கு. நீங்க மேதி ரைஸ் எப்படி செய்வீங்க? சீக்கிரம் குறிப்பு அனுப்பி வைங்க.

ரசப் பொடி,
நான் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைச்சு வச்சுருக்கேன். எந்த ரசப்பொடி வேணும்னாலும் போடலாம். ரசப் பொடி போடுவதால், வழக்கமான புலாவ், பிரியாணி டேஸ்ட் இல்லாம, வித்தியாசமா இருக்கும். தேங்காய்ப் பால் கூட சேர்க்கலாம். ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க. பதிவுக்கு நன்றி.

நன்றி அன்பரசி,

நான் சீரகம் தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் வதக்கி தக்காளி,கீரை சேர்த்து வதக்கி மிளகாய், மல்லி, மஞ்சள் தூள்களை போட்டு பச்சை வாசனை போக வதக்கி உதிரியா வடித்த பாஸ்மதி ரைஸ் சேர்த்து கிளறி இறக்குவேன் அதுவும் ரொம்ப சிம்பிள் தான். நான் உங்க முறையில் ட்ரை பண்றேன்.

நல்ல குறிப்பு வாழ்த்துக்கள். செய்து பார்த்துட்டு சொல்றேன்.

அன்புடன்
பவித்ரா

உமா,
உங்கள் குறிப்பு நல்லாயிருக்கு. நானும் செய்து பார்க்கிறேன். உங்க பதிவுக்கு லேட்டா பதில் போடுவதற்கு Sorry.

பவித்ரா,
கண்டிப்பா ட்ரை பண்னி பாத்துட்டு சொல்லுங்க. பதிவுக்கு நன்றி.