வண்டப்பம் செய்யும் முறை

வண்டப்பம் செய்யும் முறை பற்றிய விளக்கங்கள் தரமுடியுமா ?

வட்டிலப்பம் கேள்விப்பட்டிருக்கேன்.......

வண்டப்பம் புதுசா ......

Don't Worry Be Happy.

நோன்பு காலங்களில் இஸ்லாமியர்கள் வீடுகளில் செய்வார்கள்.
சாப்பிட்டிருக்கிறேன்..
இட்லி மாதிரி பெரிதாக தயாரிப்பார்கள்,இனிப்பு சேர்த்து...
சரியான அளவுகள் தெரியவில்லை...

அன்புடன்

றஹீமா பைஷால்

ஓ அப்படியா நீங்க பேர் தெரியாம போட்டீங்களோன்னு நினைச்சேன்!

ஆமினா வருவாங்க ஹெல்ப் பண்ண வெயிட் பண்ணுங்க..

Don't Worry Be Happy.

Thanks Jayalakshmi

அன்புடன்

றஹீமா பைஷால்

ஆஹா பெயரே வித்தியாசமா இருக்கே,ஸ்ரீலங்காவில் செய்வாங்களா.இந்த இனிப்பு மைதாமாவில் செய்வதா???


என் தம்பி மதுரேலேந்து வாங்கிண்டு வந்தான்! ரொம்ப நன்னாருக்கும்!
கோதுமை மாவுல செய்வாளோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நானும் மாத்தி தப்பா எழுதிருப்பாங்கன்னு தான் இந்த பக்கமே வரல. என்ன தான் இருக்கும்னு பாக்கலாம்னு வந்தா ஆமினா பேர் வந்துச்சு. அதான் வந்தேன். சாரி எனக்கும் தெரியாது. இப்பதான் கேள்விபடுறேன்.

ஜலீலா அக்கா வந்தா கண்டிப்பா சொல்லுவாங்க. அவங்களுகு தான் இதெல்லாம் தெரியும்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா அவஙக் நோன்பு சமயதிலன்னு சொன்னதால உங்க பேர்தான் சட்டுனு ஞாபகத்துக்கு வந்துச்சு. உங்க பேர் சொன்னதில தப்பு இல்லையே.

Don't Worry Be Happy.

என்னப்பா இப்படி கேட்டூட்டீங்க? என் பெயரை மறக்காம போட்டதுக்கு நான் தான் உங்க கிட்ட நன்றி சொல்லனும்!

அறுசுவைல எனக்கு மிகவும்,மிகவும் நெருக்கமான தோழிகளில் நீங்களும் ஒருவர்!
என் தோழியை எப்போதும் நான் தவறாக நினைப்பது கிடையாது:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரஹீமா,எங்கல் வீட்டிலும் உம்மா செய்வார்கள். மிகவும் நல்லா இருக்கும்.அப்பத்திற்கு(rice flour)மாவு கரைப்பதை போல் கரைத்து,இன்னும் ஒரு நாள் கூடுதலாக புழிக்க வைக்கவும்,பின் அதனுடன் இனிப்பு தேவையான அளவு (கருப்பட்டி அல்லது சீனி) சேர்த்து,நிறதுக்காக சீனி கறுக்கி சேர்த்து தேங்காய் துருவல் சிரிது சேர்த்து இட்லி போல் அவிதெடுக்கவும்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

மேலும் சில பதிவுகள்