குடைமிளகாய் சட்னி

தேதி: January 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

குடைமிளகாய் - இரண்டு பெரியதாக
தக்காளி - இரண்டு
சர்க்கரை - அரைக் கோப்பை
வினிகர் - அரைக் கோப்பை
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - இரண்டு
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - நான்கு பற்கள்
எலுமிச்சைச்சாறு - இரண்டு பழத்திலிருந்து
எண்ணெய் - அரைக்கோப்பை
கடுகு - ஒரு தேக்கரண்டி


 

குடமிளகாயை கழுவி நன்கு துடைத்து விட்டு அதனுள்ளிருக்கும் சதைப்பகுதியை அகற்றி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய்,கடுகு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
எலுமிச்சை பழத்திலிருந்து சாற்றை பிழிந்து எடுத்து அதில் மிளகாய்த்தூளையும், உப்பையும் போட்டு கலக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி நன்கு காயவைக்கவும். அதில் அரைத்த விழுது, மற்றும் தக்காளியைப் போட்டு வதக்கவும்.
பிறகு குடமிளகாயைப் போட்டு சிறிது வதக்கி சர்க்கரை, வினீகர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி நன்கு கலக்கவும்.
அடுப்பை மிதமாக எரியவிட்டு அடிக்கடி கிளறி விடவும்.
கலவை நன்கு வெந்து சட்னி பதம் வந்தவுடன் இறக்கி வைத்து ஆறவிடவும்.
இந்த சட்னியை செய்து இரண்டு அல்லது மூன்று நாள் கழித்து சாப்பிட்டால் சுவை அதிகமாக ஊறி இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

vanakkam viji
kudaimilakaai chatnikku sarkarai serkamal seiyalama?

உங்கள் செய்முறைக்குறிப்பை பார்த்து செய்தேன் நன்றாக இருந்தது நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

மிக்க நன்றி டியர்.

ரொம்ப நன்றாக இருந்தது. நன்றி.

ஹலோ விஜி எப்படி இருக்கீங்க? இந்த சட்னி உங்களுக்கு பிடித்திருந்தது மகிழ்ச்சியைத் தந்தது, பின்னூட்டம் அனுப்பியதற்கு மனமார்ந்த நன்றி.