மோர்குழம்பு

தேதி: September 2, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (6 votes)

 

ஆமைவடை (சிறிதாக தட்டிய மசால் வடை) - 10 - 15
புளித்த தயிர் - ஒரு கப்
உப்பு - தேவைக்கு
அரைக்க:
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி (1/2 மணி நேரம் ஊற வைத்தது)
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு துண்டு
தாளிக்க:
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - தாளிக்க


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
மசால் வடைகளை சுட்டு தயாராக வைத்துக் கொள்ளவும். புளித்த தயிரை நீர் சேர்த்து மிக்சியில் அடித்து மோராக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்த பின் அடித்து வைத்திருக்கும் மோரை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
ஒரு கொதி வந்தவுடன் வடைகளை சேர்த்து, அடுப்பை நிறுத்தி விடவும்.
வடைகள் 1/2 மணி நேரத்துக்குள் குழம்பில் ஊறி விடும். வேண்டுமானால் வடைக்கு அரைக்கும் போது, கடலை பருப்புடன், ஒரு பிடி உளுத்தம் பருப்பையும் சேர்த்து அரைக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எங்க வீட்டுலையும் இதுமாறி தான் செய்வோம் வடை சேர்த்து. ஆனால் செய்முறை மட்டும் கொஞ்சம் மாற்றம் வரும். இந்த முறையில் செய்துபார்க்கிறேன்.

நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மோர்க்குழம்பும் ரொம்ப நல்லா இருக்குப்பா கண்டிப்பா செய்து பார்த்திட வேண்டியதுதான், வித்யாசமான குறிப்புக்கு நன்றி.

அன்புடன்
நித்யா

எனது குறிப்பை வெளியிட்ட, அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

ஆமி,
என்னவருக்கு மோர் குழம்பு ரொம்ப பிடிக்கும். எனக்கு உளுந்து வடை பிடிக்காது, அதனால் மசால் வடை போட்டுடுவேன். பதிவுக்கு நன்றி. செய்து பாருங்க.

நித்யா,
கண்டிப்பா செய்து பாருங்க, ஈசி தான். பதிவுக்கு நன்றி பா.

இப்பதான் இங்க வடை இருந்துச்சு, அதுக்குள்ள அது குழம்மு ஆயிருச்சா..

மோர்க்குழம்புனாலே எனக்கு ரொம்ப இஷ்டம், அதுல வடை போட்டுனா கண்டிப்பா ட்ரை பண்ணுவேன். அருமையான குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

Don't Worry Be Happy.

ஜெயலக்ஷ்மி,
எல்லா இழையிலும், நகைச்சுவை கலந்து இருக்கும் உங்க பதிவுகள் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.மசால் வடை பெரிய சைஸில் இருக்கும். மோர் குழம்பில் போட்டது, குட்டி வடை. கண்டிப்பா செய்து பாருங்க. பதிவுக்கு நன்றி.

என்னை ரொம்ப பிடிக்கும்னு சொல்லி வெக்கப்பட வெச்சுட்டீங்க.நன்றி;-)

Don't Worry Be Happy.

ஜெயலக்ஷ்மி,
முன்னாடியே சொல்லனும்னு நினச்சேன், இப்ப தான் வாய்ப்பு கிடச்சது.

அன்பரசி,
வடை சேர்த்து மோர்குழம்பு !!!!!!!!!!
கண்டிப்பாக இந்த சனிக்கிழமை இது தான்
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
செய்துட்டு பிடிச்சதானு சொல்லுங்க. பதிவுக்கு நன்றி.

வடை போட்ட மோர்குழம்பு சூப்பர். பொதுவா உளுந்தவடை தான் போட்டு போண்டா மோர்குழம்பு வைப்போம். இது வித்யாசமா மசால் வடை போட்டு வைத்துள்ளீா்கள். கண்டிப்பாக ஒரு நாள் செய்து பார்த்துவிடவேண்டியதுதான்.. உங்க குறிப்புக்கு நன்றி...

வடை எங்கே வடை எங்கேனு தேடினா கடைசில அது மோர்குழம்புல போய் ஒளிஞ்சுக்கிட்டுஇருக்கு.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா,
// வடை எங்கே வடை எங்கேனு தேடினா கடைசில அது மோர்குழம்புல போய் ஒளிஞ்சுக்கிட்டுஇருக்கு.....//

வடை போச்சே....!!
மசால்வடையும் மோர் குழம்புக்கு ரொம்ப நல்லா இருக்கும். செய்து பாருங்க. பதிவுக்கு நன்றி.

நேற்று இப்தார்க்கு இதை தான் செய்தேன். அருமையாக இருந்தது. வாசமும் அருமை. மீதம் இருந்த வடையில் மோர் குழம்பு சகர்(காலையில்) செய்தேன். சாப்பாடு ஜாஸ்தியாவே போய்டுச்சு:)

குறிப்புக்கு நன்றி அன்பரசி!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி,
செய்து பார்த்து, பின்னூட்டம் தந்ததற்கு நன்றி.

அன்பரசி உங்க மோர்குழ்ம்பும் மசால் வடையும் செய்தேன் ரொம்ப நல்லா வந்தது குறிப்புக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

நித்யா,
செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததுக்கு நன்றி.

masal vadai eppadi seivathu

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

இன்று உங்க மோர்குழம்பு செய்தேன் நன்றாக இறுந்தது.
நான் எப்பவும் பருப்புடன் ஒரு ஷ்பூன் பச்சரிசி சேர்த்து ஊரவைத்து அரைப்பேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

http://www.arusuvai.com/tamil/node/16146

இந்த லின்க் சென்று பார்க்கவும்.

ஸ்வர்ணா,
உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி.தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.