நோன்பு கஞ்சி

தேதி: September 16, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

 

1. அரிசி நொய் - 1/2 கப்
2. சிறு பருப்பு - 1/4 கப்
3. வெங்காயம் - 1/2
4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
5. எண்ணெய் - 1 தேக்கரண்டி
6. தேங்காய் பால் - 1/2 கப்
7. கொத்தமல்லி இலை
8. புதினா இலை
9. உப்பு
10. பூண்டு பல் - 10

பொடிக்க:

1. மிளகு - 1 தேக்கரண்டி
2. சீரகம் - 1 தேக்கரண்டி
3. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
4. சோம்பு - 1/4 தேக்கரண்டி
5. ஏலக்காய் - 1
6. பட்டை - 1 துண்டு
7. லவங்கம் - 4


 

பொடிக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் பொடி செய்யவும்.
குக்கரில் அரிசி நொய், பருப்பு, பூண்டு பல், கொத்தமல்லி புதினா இலை, பொடித்த தூள், 7 கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இத்துடன் வேக வைத்த கஞ்சி, தேவைக்கு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் எடுக்கவும்.


விரும்பினால் சிக்கன் அல்லது ஆட்டுக்கறி சேர்த்தும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இதுவரை நோன்பு கஞ்சி செய்து பார்த்ததே இல்லை. உங்க குறிப்பு பாத்து செய்து
பார்க்கலாம்னு இருக்கு.

வனிதா மேடம்,
ரொம்ப நாட்களாக காணவில்லையே!
நலமா?
வழக்கம் போலே அசத்தல் குறிப்பு

என்றும் அன்புடன்,
கவிதா

கோமு, கவிதா... மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. கண்டிப்பா பிடிக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா