இல்லத்தரசிகளின் ’ஸ்பெசல்’ அரட்டை! - 54 -

இன்னிக்கு அனேகரது ஆபிஸ் லீவுங்கறதுனால அரட்டையக் கிடப்பிலே போட்டாச்சு. தேடி கஷ்டப்பட்டு கொண்டு வந்திருக்கேன். இன்றும் நாளையும் இல்லத்தரசிகளுக்கானது. இனிதாய், பயனுள்ளதாய் அரட்டை அடிக்க வரவேட்கிறேன், வருக! வருக!......... (வருங்கால இல்லத்தரசிகளும் வரலாம்)

ஜெயலஷ்மி,
ஆமாம், எல்லோரும் இன்னிக்கு டி.வி.ய மும்முரமாக பாத்துட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

கவி, இந்த வாட்டி கண்டிப்பாக கலந்துக்குவேன், இந்த தடவை யாருப்பா நடுவர், என்னிக்கு ஆரம்பிக்கிறாங்க?

மாமி, நீங்க எழுதினதை படிக்காம இருப்பேனா,ரொம்ப நல்லா இருந்தது. எனக்கு பதில் பதிவு போடத்தான் நேரமில்லாம இருந்தது.

அன்புடன்

சீதாலஷ்மி

என்னப்பா நான் வரதுக்குள்ள எல்லாரும் வந்து பேசிட்டு போயிட்டீங்களா? இப்ப யாருல்லாம் இருக்குக்கீங்க.

காலையிலயும் நம்ம மட்டும் தான் இருந்தோம் இப்பவும் யாரையுமே காணும், நீங்க தூங்கலையா தூங்க போறேன்னு சொன்னீங்க.
குட்டி தலை இங்அ தான் இருந்தது போல இருந்துச்சு அதுகுள்ள எஸ்கேப் ஆகிட்டாங்களே வெரி பேட்

சீத்தாம்மா நல்லா இருக்கீங்களா? நானும் அது தான் வறுத்தப்பட்டேன் ஆனா கார்த்திகா சொன்னாங்க இது 3வருடத்துக்கு முன்னாடி டிசைட் பண்ணது அதனால சுஜாதா பங்களிப்பு இருக்கு அதோட அவங்க பேரும் டைட்டில்ல போடறாங்கன்னு
உங்க பேரன் எப்படி இருக்காரு? என்ன பேரு வச்சியிருக்கீங்க?

நானும் இருக்கேன் என்னையும் உங்க அரட்டைல சேத்திக்கங்களேன்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

யாழினி நான் குட்டி தூக்கம் தானே சொன்னேன். மணி இப்போ 4 ஆயிடுச்சு இதுக்கு மேல தூக்கன நைட் தூக்கம் வராது. அப்புறம் வேலையெல்லாம் முடிச்சுட்டீங்களா. தஞ்சாவூர் நிறைவு விழாவுக்கு கோயிலுக்கு போயிருந்தீங்களா. எப்படி இருந்துச்சு கண்காட்சி, பரதநாட்டியம் எல்லாம்.

என்னங்க லதா நீங்க கேட்டுகிட்டு வரவேண்டியது தான். கெட் டு கெதர் போறீங்களா உங்களுக்கு பக்கம் தானே கோவை.

லதா எப்படி இருக்கீங்க. ரொம்ப பிஸியா. காந்தி ஜெயந்திக்காக இல்லத்தரசி ஸ்பெஷல் தான் இந்த அரட்டை. இதுக்கெல்லாம் கேட்டுட்டு இருப்பீங்களா. வந்து அப்படியே கண்டினியூ பண்ணுங்க. இரண்டு நாளைக்கு மட்டும் தான் இந்த ஸ்பெஷல் அரட்டை.

நல்லாருக்கீங்களா? கண்டிப்பா போக போறேன் இப்பதான் வினீட்ட கால் பன்னி எல்லாரும் போலாம்னு கெஞ்சிருக்கேன் நைட் வந்து சொல்றேன்னு சொல்லிருக்காங்க அவங்க வந்தாலும் வரலனாலும் நான் கண்டிப்பா போய்ருவேன். பக்கம்னு சொல்ல முடியாது தூரம்னும் சொல்ல முடியாது. எங்க ஊருல இருந்து போறதுன்னா 3 மணி நேரம் ஆகும் பரவால்ல அதெல்லாம் ஒரு மேட்டரா??? இன்னிக்குதான் கோவைல இருந்து எங்க ஊருக்கு வந்தேன். சோ கண்டிப்பா கலந்துக்குவேன்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

நல்லாருக்கீங்களா? ரொம்பல்லாம் இல்லைங்க சின்ன பிஸிதான். வேலை விஷயமா தான் போய்ருந்தேன். சரி நீங்க எந்த ஊரு ஒன்னுமே சொல்லலையே ஃப்ரொபைல்ல???

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஓ குட்டி தூக்கம் தானா சரி சரி. நல்லா இருந்துச்சு வினோ, ரொம்ப பிரம்மாண்டமா இருந்துச்சு,

லதா 3 மணி நேரம் பயணமா? ஆமாம் லதா நம்ம தோழிகள சந்திக்க போறோம் அப்படிங்கிற சந்தோஷத்துல இதுலாம் ஒரு தூரமே கிடையாதுபா. வினீ அண்ணாட்ட பர்மிஷன் வாங்கிட்டு போங்க, முடிந்தால் குடும்பதோட போங்கபா அட்மின் குடும்பத்தோட கலந்துக்கலாம்னு சொல்லி இருக்காங்களே.

மேலும் சில பதிவுகள்