கருணைக்கிழங்கு சாம்பார்

தேதி: October 25, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

கருணைக்கிழங்கு - 4
வெங்காயம் - 1/2 (அ) சின்ன வெங்காயம் - 6
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கர்ண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
கடலை பருப்பு - கால் தேக்கரண்டி
சாம்பார் பொடி - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய்
உப்பு
துவரம் பருப்பு
புளி


 

கருணைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி வைக்கவும்.
துவரம் பருப்பை கழுவி அதில் நறுக்கின வெங்காயம், நறுக்கின தக்காளி, சாம்பார் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றையும் புளி தண்ணீரையும் சாம்பாரில் சேர்த்து ஒரு கொதி விடவும்.
இதில் வேக வைத்த காய், உப்பு சேர்த்து நன்றாக கொதித்ததும் எடுக்கவும். சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இப்பவே சாப்பிடனும் போல இருக்கு, ஈஸியாவே சொல்லிருக்கீங்க,, செய்திட வேண்டியதுதான். சாப்பிட்டு சொல்றேன் வனி.

அன்புடன்
பவித்ரா

இது கருணைகிழங்க? சேனை கிழங்க?

ஏமாறாதே|ஏமாற்றாதே

வனிதா
ரொம்ப ஈஸியான குறிப்பு. நான் வெங்காயம் சேர்க்காம சாதாரண புளிக்குழம்பு போல் செய்வேன். இந்த குறிப்பு நல்லாருக்கு.

எனக்கு ஒரு டவுட். நானும் கருணைக்கிழங்கு உபயோகித்து தான் செய்வேன். ஆனா புகைப்படத்துல இருக்கறது கருணைக்கிழங்கா, சேப்பங்கிழங்கா..
மோர் குழம்புக்கு போடுறது சேப்பங்கிழங்கு தானே... இந்த கிழங்கு டவுட் பெரிய டவுட்டா இருக்கு....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. :)

பவி... மிக்க நன்றி. அவசியம் செய்து சாப்பிடுங்க. :)

பிரியதர்ஷினி... இரண்டும் ஒன்று தான். இதில் இரண்டு வகை உண்டு, ஒன்று பெருசா இருக்கும், இது பிடி கருணை என்று சொல்வோம். சேனைக்கிழங்கு தான் கருணைக்கிழங்கும்.

ராதா... ஆமாம் கருணைக்கிழங்கில் புளிக்குழம்பு ரொம்ப பிரபலம், ருசியா இருக்கும். எனக்கும் ரொம்ப விருப்பம். இது சேப்பங்கிழங்கு இல்லை, பிடி கருணைக்கிழங்கு. மிக்க நன்றி, அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
பிடி கருணை கிழங்கில் சாம்பார் வித்தியாசமா இருக்கு.நான் இந்த கிழங்கு வாங்கியதே இல்லை.செய்யவும் தெரியாது.இனி பிடி கருணை கிடைத்தால் வாங்கி செய்வேன்.குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

எங்க ஊரில் இதை கருணை கிழங்குனு தான் சொல்வாங்க. சென்னை வந்த புதிதில் கருணை கிழங்கு கேட்டால் சேனை கிழங்கு எடுத்து தருவார்கள். ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு வழக்கு.
எங்க அம்மா கருணை கிழங்கு குழம்பு பண்ணுவாங்க. சாம்பார் சாப்பிட்டது இல்லை. ஊருக்கு பொய் அம்மாவை செய்ய சொல்லணும். ஐயோ இப்பவே நாக்கு ஊறுதே!!!

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

வனிதா மேடம்,

சாம்பார் குறிப்பு அருமை ஆனால் இது கருணை கிழங்கா?சென்னையில் பெரிசா இருக்கும் அதை வெட்டி தருவாங்க இந்த லிங்க் பாருங்க இப்படி தான் பார்த்து இருக்கேன் http://www.uga.edu/rootandtubercrops/photos/elephantyamcorm

என்றும் அன்புடன்,
கவிதா

எனக்கு அந்த லிங்க் ஓபன் ஆகல.

http://www.tamilvanan.com/content/2010/09/17/healthy-life-27/

இதை எங்க ஊரில் சேனை கிழங்குன்னு சொல்வாங்க.

http://sampoornamvilas.blogspot.com/2010_03_01_archive.html

இதில் கருணை கிழங்கு மசியலில் உள்ளதை தான் கருணை கிழங்குன்னு சொல்வாங்க. வனிதாவும் இதை தான் கருணை கிழங்குன்னு சொல்லிருக்காங்க. சென்னையில் பிடி கருணைன்னு கேட்டால் கிடைக்கும்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

வனிதா, சூப்பரோ...............சுப்பர். பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கின்றது.நானும் உங்கள் முறைப்படிதான் செய்வேன்.ஆனால் புளித் தண்ணீர் சிறிதாக விட்டு பிரட்டல் கறியாக செய்வேன்.உங்கள் முறைப்படி செய்து பார்க்கின்றேன்.

அடுத்து உங்கள் பாவற்காய் குறிப்பையும் ஆவலுடன் எதிர்பாத்துக்கொண்டு இருக்கின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹர்ஷா... மிக்க நன்றி. உடம்புக்கு ரொம்ப ஆரோக்கியமான கிழங்கு வகை இது. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கிருத்திகா... மிக்க நன்றி. எனக்கும் இந்த கிழங்கு வகை எல்லாம் தெரியாது, அம்மா சொல்லி தந்து தான் மற்ற பெயர்களும் தெரிந்து கொண்டேன். நீங்க டெலிவெரி'கு ஊருக்கு போறீங்க தானே??? நல்லபடியா போயிட்டு , நல்ல படியா ஆரோக்கியமா குழந்தை பெற்று, நல்லபடி திரும்ப வாங்க.... உங்களுக்கு எங்க பிராத்தனைகள் என்றும் உண்டு. ஊருக்கு போய் அம்மா கையால் ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிடுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிதா.... மிக்க நன்றி :) இது தான் கருணை. பெருசா இருப்பது சேனை. பொதுவா இரண்டுமே கருணை என்று சொல்வாங்க (கார கருணை, பிடி கருணை). சென்னையில் பிடி கருணை என்று சொல்லும் வகை தான் இது.

கிருத்திகா.... இழை தந்து உதவியமைக்கு மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யோகராணி... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க. பிரட்டல் நானும் செய்ததில்லை, என்னவருக்கு இது போல் கிழங்கு வகை பிடிக்கும், அவசியம் பிரட்டல் போல் செய்து பார்க்கிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த கருனை எனக்கு ஒரே குலாப்ஸா இருக்கு. இரண்டு நாளைக்கு முன்னாடி எங்க அம்மா சேப்பக்கிழங்கு சாம்பார் நல்லா இருக்கும் சொல்லிட்டு செஞ்சு கொடுத்தாங்க. ஆனால் இந்த கிழங்கு சளி அதிகம் உள்ளவர்கள் சாப்பிட்டால் கோழைக்கட்டிக்குமா. அவர்கள் அதிகம் சாப்பிடக்கூடாது. நீங்க செஞ்சு காண்பித்த முறைப்படி செய்துபார்த்து விட்டு சொல்கிறேன். .

வினோஜா... நீங்க என்னை குழப்பிட்டீங்க ;) //இந்த கிழங்கு சளி அதிகம் உள்ளவர்கள் சாப்பிட்டால் கோழைக்கட்டிக்குமா// - எனக்கு தெரியலயே... அம்மா'ட கேக்கறேன். செய்து பார்த்து சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா