பார்பிக்யூ

தேதி: October 27, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (4 votes)

 

கோழி துண்டுகள் - 20
இறைச்சி துண்டுகள் - 20
சிகப்பு, பச்சை, மஞ்சள் குடைமிளகாய் - தலா ஒன்று
வெங்காயம் - ஒன்று
பார்பிக்யூ குச்சிகள் - 10
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கரம்மசாலா - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் ஆயில் - சிறிது


 

கோழி, இறைச்சிகளை சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.
இறைச்சியில் மிளகு தூள், பூண்டு தூள், 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, சிறிது ஆலிவ் ஆயில், உப்பு இந்த மசாலாக்களை மட்டும் போட்டு பிரட்டி வைக்கவும். கோழியில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு, எலுமிச்சை சாறு, உப்பு, ஆலிவ் ஆயில் இவை அனைத்தையும் போட்டு பிரட்டி வைக்கவும்.
குறைந்தது 10 மணி நேரமாவது இவைகள் ஊற வேண்டும். பார்பிக்யூ குச்சியில் முதலில் 1 துண்டு மஞ்சள் குடை மிளகாய், பிறகு 1 துண்டு இறைச்சி, 1 சிகப்பு குடை மிளகாய், பிறகு 1 துண்டு இறைச்சி, 1 பச்சை குடைமிளகாய், பிறகு 1 இறைச்சி கடைசியாக 1 துண்டு வெங்காயம் இந்த முறையில் எல்லா இறைச்சிகளையும் கோர்க்கவும்.
கோர்த்த குச்சிகளை அவனில் வரிசையாக அடுக்கி வைக்கவும். இதை 200° சூட்டில் வேக விடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும்.
இதைப் போல் சிக்கனை கோர்த்துக் கொண்டு அவனில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
மயோனைசுடன் சாப்பிட நன்றாக இருக்கும். சூடான பார்பிக்யூ ரெடி


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

parkum poluthe sapitanu pola irukku.

parkum pothé unga barbucu romba super

ரஸியா,
முதல் விளக்கப்பட குறிப்பு அழகா கொடுத்து இருக்கீங்க.மேலும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

நன்றி vidhikarthik & rinoz
ஹர்ஷா மேடம்!இது என்னுடைய முதல் விளக்கப்பட குறிப்பல்ல,4 வது குறிப்பு,நேரமிருந்தால் என்னுடைய குறிப்புகளை போய் பாருங்கள்,1.ரவை பூ பணியாரம்,2.ரெயின்போ ஸ்வீட்,3.கிரிஸ்பி சமோசா (பாபு அண்ணா இன்னும் வெளியிடவில்லை),4.பார்பிக்யூ...

Eat healthy

ஹாய் ரஸியா, எப்படி இருக்கீங்க.

பார்பிக்யூ சூப்பராக இருக்கே. செய்வதற்கும் ரெம்ப சுலபமா இருக்கு, செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன். குறிப்புக்கு நன்றி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

//பார்பிக்யூ// அப்படின்னா என்னன்னு தெரியாது, சரின்னு வந்து பார்த்தா, கல்ப்ஸ் சொல்ற மாதிரி “என் காதுக்கு பிடிக்காத” உணவு, அதான் அசைவம் ;((

//மயோனைசுடன்// இப்படின்னா என்னவென்றும் தெரியலையே ;((

வாழ்த்துக்கள், பார்த்தேன், அதான் ஒரு பதிவு போட்டுவிடுவோமேன்னு வந்தேன் :))

அன்புடன்
பவித்ரா

பவி, மயோனைஸ், நீ விரும்பி சாப்பிடுவியே 'முட்டை'கோஸ். அந்த முட்டையோட மஞ்சள் கருவில் இருந்து பண்றது. நான்வெஜ் கூட இதை தொட்டு சாப்ட்டா நல்ல டேஸ்டா இருக்கும். நான் சொன்னதை எல்லாம் காதை மூடிட்டு தானே கேட்டே ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரஸியா, பார்பிக்யூ தெளிவான விளக்கப்படங்களுடன் எளிமையான முறையில் அழகாக தந்துள்ளீர்கள். இந்த பொருட்கள் எல்லாமே இருக்கு. ஒருநாள் செய்து பார்த்து விட்டு பதில் போடுகிறேன். வாழ்த்துக்கள். தொடர்ந்து குறிப்புகளை தரவும் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரஸியா,
ரொம்ப சாரிங்க.நீங்க சொன்ன பிறகு தான் உங்களுடைய மற்ற ரெசிப்பிகள் பார்த்தேன்.எல்லாமே ரொம்ப இன்னோவேட்டிவா இருக்கு.அதிலும் அந்த ரெயின்போ ஸ்வீட் பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கு.உங்கள் ரெசிப்பிகளை சொன்னதுக்கு நன்றி.நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்.

நன்றி யோகராணி மேடம்!ஹெல்லொ பவித்ரா மேடம்!கறி வகைகளை சுட்டு சாப்பிடும் முறையைதான் பார்பிக்யூ என்பார்கள்.இது பார்ட்டிகளுக்கு ஏற்றது,மயோனைஸ் என்பது முட்டை கருவுடன் எண்ணெய் மற்றும் சில பொருட்களை சேர்த்து செய்வாங்க,உங்களுக்கு பிடிக்காத விஷயமாக இருந்தாலும் கூட எனக்கு பதில் எழுதியத்ற்காக நன்றி,எனக்கும் அசைவத்தை விட சைவம்தான் மிகவும் பிடிக்கும்.

Eat healthy

உங்க பாராட்டுக்கும் & பதிவுக்கும் நன்றிகள்

Eat healthy

உடனே போய் பார்த்ததற்கு ரொம்ப நன்றி ஹர்ஷா மேடம்!பார்க்க கலர்ஃபுல்லா இருந்ததனால் தான் அதற்கு ரெயின்போ ஸ்வீட்னு பேர் வச்சேன்,செய்தும் பாருங்க.

Eat healthy

ரஸியா ரொம்ப சூப்பர் அருமையாகவும் கலர்புல்லாகவும் இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

//பவித்ரா மேடம்!// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், பவித்ரா போதுமானது, மேடம் வேண்டாம் ;((((

//எனக்கும் அசைவத்தை விட சைவம்தான் மிகவும் பிடிக்கும்.//சைவ குறிப்புகளும் நிறைய கொடுங்க.

அன்புடன்
பவித்ரா

மிக்க நன்றி ஜலீலா மேடம்,உங்களைப் போன்ற கிச்சன் கில்லாடிகளிடமிருந்து நல்ல பேர் வாங்குறது என்பது அவார்டுக்கு சமம்,தொடர்ந்து உற்சாகப்படுத்துங்கள்,நீங்க எந்த நாட்டில் இருக்கீங்க? advanced eid wishes

Eat healthy

பவித்ரா மேடம் என்று சொன்னதற்க்கா இப்படி உதட்டை கடிக்கறீங்க?(அவ்வ்வ்வ்வ்வ்)உங்க வயசு என்னன்னு தெரியாம எப்படி பேர் சொல்லி அழைப்பது?அது மரியாதை இல்லை தானே?சரி இப்போ உங்க வயசை சொன்னீங்கன்னா அதன் பிறகு நான் உங்களை பேர் சொல்லியே கூப்பிடறேன்,இப்போதைக்கு மேடம் தான்....சரிசரி... இவ மட்டும் வயசை சொல்லலியேன்னு நீங்க முறைக்கிறது புரியுது,சொல்லிடரேன்...எனக்கு 28 ஆகுது.

Eat healthy

அப்ப நீங்க தாராளமா பவியை தங்கைன்னே அழைக்கலாம்;)

Don't Worry Be Happy.

பவியின் வயசை சொல்லாமல் தங்கைன்னு கூப்பிட சொல்றீங்களே?!அவருடைய வயசை அவ்வளவு ரகசியமாக வச்சிருக்கீங்களா?

Eat healthy