ட்ரெண்டி டிசைன்ஸ் - 2

தேதி: November 27, 2010

5
Average: 4.2 (12 votes)

 

ஹென்னா கோன்

 

கையின் நடுப்பகுதியில் சற்று பெரிய பூ வரையவும்.
இதழ்களின் இடைவெளியில் படத்தில் இருப்பது போல் இலைகள் வரையவும்.
அந்த பூவின் மேலும், கீழும் அதே போன்ற பூக்கள் சற்று சிறிய அளவில் வரைந்து அதன் அருகே இலைகளும் வரையவும்.
இதே போல் கையில் எந்த அளவில் வேண்டுமானாலும் பூக்களும், இலைகளும், கொடிகளுமாக வரைந்து முடிக்கவும்.
காலின் ஒரு பக்கத்தில் படத்தில் இருப்பது போல் இலையும், பூவும் வரைந்து கொள்ளவும்.
அந்த பூவின் மேல் ஒரு கொடியும், பூவும் வரைந்து கொள்ளவும்.
அந்த பூவின் மேல் மீண்டும் கொடிகளும், அதில் சிறு இலைகளும் வரையவும்.
கொடியின் முடிவில் மீண்டும் ஒரு பூ வரையவும்.
கடைசியாக கட்டை விரலில் சிறு கொடியும், இலையும் வரையவும்.
அதே போல் மற்ற விரல்களிலும் வரைந்து முடிக்கவும்.
இது மிக சுலபமாக போட கூடிய டிசைன். இதே போல் கையில் வேண்டுமானாலும் கீழிருந்து துவங்கி போடலாம்.
இதே போல் சுலபமாக போட கூடிய சிறு ரோஜா மற்றும் இலைகள் கொண்ட மற்றொரு டிசைன். இதில் நடுவில் இருக்கும் ரோஜா மற்றும் இலை டிசைன் தான் மீண்டும் மீண்டும் வரைய வேண்டும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு எப்படிதான் புதுசு புதுச கண்டுபிடிக்கிறிங்கலோ. தெளிவ எளிதில் போடகூடியது,,, மிகவும் அழகா இருக்கு,,, இன்னும் அதிக டிசைன எதிர் பார்க்கிறோம்

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

சூப்பர் வனி.ரொம்ப அழகாக இருக்கு.உங்களுடைய டிசைனை பார்த்துதான் இனி போடவேண்டும்.

மெகந்தி டிசைன் நன்றாக இருக்கிறது. காலில் போட்டுள்ள டிசைன் இன்னும் அழகாக உள்ளது.

ரொம்ப அழகா இருக்கு வனிக்கா. சிம்பிளாவும் எளிதில் போட்டுவிடும்படியும் இருக்கு.

Looking so nice & easy very good job sister

fantastic desin vanitha madam. by g.gomathi.

நாளை இரவு என் காலில் இதுபோல் ஒன்று இருக்கக் கூடும். அழகாக இருக்கிறது. போட்டோஸ் எல்லாம் தெளிவாக இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

எல்லாம் ஒன்றாகவே வந்துடுச்சா??? வெளியிட்ட அட்மினுக்கு மிக்க நன்றி :)

விமலகீதா... மிக்க நன்றி. நிறைய அனுப்ப தான் ஆசை... கை தான் கிடைக்க மாட்டங்குது டிசைன் போட ;)

தஸ்னீம்... மிக்க நன்றி. போடுங்க போடுங்க... போட்டுகிட்டே இருங்க. :)

வினோஜா... மிக்க நன்றி. உங்க காலிலும் போட்டுடுங்க... இதைவிட அழகா இருக்கும். ;)

யாழினி... ரொம்ப ரொம்ப நன்றி.... சுலபமா போட்டுடலாம். :)

சரண்யா.... ரொம்ப நன்றி. :)

கோமதி... ரொம்ப நன்றி :) கூடவே "மேடம்" எல்லாம் வேண்டாம். வனிதா அக்கா ஓக்கே, வனிதா சூப்பர், வனி சூப்பரோ சூப்பர்.... சரியா??? சூஸ் த பெஸ்ட். ;)

இமா..... ரொம்ப நாளைக்கு பின் என் குறிப்பு பக்கம் தலை தெரியுது ;) ஹிஹிஹீ. போட்டுட்டு படம் அனுப்ப மறக்க கூடாது!!! ரொம்ப நன்றி இமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

from today onwards i call vanitha akka.o.k. by your sister gomathi.

வனி சூப்பரோ சூப்பர் போங்க//////
என்னமா தோணுது பா உங்களுக்கு.கை கால் டிசன்ஸ் எல்லாமே அருமையா இருக்கு.
அதைவிட பாராட்டணும்னா.... கொஞ்சம் கூட சிலும்பல்கள் இல்லாமல் போடுவதுதான்.
உங்கள் மெஹந்தி திறனுக்கு பாராட்ட வார்த்தைகள் இல்லை.
நானும் என் குட்டி பொண்ணை வைத்துதான் இந்த சிம்பிளான டிஸைனெல்லாம் போட்டு முயற்ச்சி செய்யணும்.
வனிக்கு நிகராக முடியுமா என்ன..? chance இல்லை.
பாராட்டுக்கள்***

என்றூ அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

Hai how are you...design simple & very nice...

//வனிதா அக்கா ஓக்கே, வனிதா சூப்பர், வனி சூப்பரோ சூப்பர்.... சரியா??? சூஸ் த பெஸ்ட். ;)//
முகப்பில் பார்த்ததும்,உங்க கால் என்று கண்டு பிடிச்சுட்டேன்.எல்லா டிசைன்களும் ரொம்ப அழகு.எனக்கு மெஹந்தி எல்லாம் போட வராது.நீங்க போட்டு விட்டா தான் உண்டு ;-).வலது கையிலும் ரொம்ப அழகா போட்டு இருக்கீங்க.பாராட்டுக்கள்.

நல்ல சாய்ஸ் கோமதி. :)

அப்சரா.... நன்றி நன்றி... அநியாயத்துக்கு தும்ம வெச்சுட்டீங்க. ;) போட்டு பழகுங்க, அப்பறம் உங்க பதிவை நீங்களே மாத்திடுவீங்க.

சுமதி... நான் நலம். நீங்க நலமா? மிக்க நன்றி. அழகு தமிழில் பதிவிடுங்க பார்ப்போம். ப்ளீஸ் ;)

ஹர்ஷா... மிக்க நன்றி. வலது கையில் போடுவது கஷ்டம் இல்ல ஹர்ஷா, எல்லாமே பழக்கம் தான். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ் இந்த டிசைன் அழகா இருக்கே! அவசரப்பட்டு பழைய டிசைனையே கைகளில் போட்டுக்கிட்டேனே! ஆனால் வனியின் டிசைன் எல்லாமே அழகுதானே :). நன்றி வனி! இன்னும் சில கைகள் காத்துக்கிட்டு இருக்கு பை பை

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பரவாயில்லை கவிசிவா.... 1 வாரம் தான்... காணாம போகும், நம்ம கைலயே மீண்டும் போட்டுடலாம் ;) தீபாவளி கொண்டாட்டத்துக்கு நிறைய கை மாட்டிடுச்சா???? ஜமாய்ங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அய்யோ, வனிதாக்கா சூப்பரோசூப்பர்.எப்படி யிப்படியெல்லாம் தோனுதுங்களுக்கு மட்டும்.உங்களுக்கு நிகர் நீங்கதான்.சிம்பிலாகவும் போடதெரியாத என்னைபோன்ரோரும் கற்றுகொள்ளும்படியாகவும் உள்ளது.

மேடம்...கலக்கிடிங்க போங்க!!!ரொம்ப அழகா இருக்கு..உங்க டிசைன் தான் வீக் எண்டில் போடலாம் ன்னு இருக்கேன்....

ரொம்ப ஈஸியா வும் சிம்பிளாவும் சொல்லி குடுத்து இருக்கீங்க பா. நன்றி

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

வனி அறுசுவையில் எல்லோரும் உங்க கைய்யை காலை காமிச்சாவே இது வனிதா ந்னு சொல்லிடுவாங்க .ரொம்ப அழகா இருக்கு..அழுத்தம் திருத்தமா தப்பில்லாம போடுவது தான் சிறப்பா இருக்கு

இனியா.... நான் அறுசுவைக்கு அனுப்புவதே அது மாதிரி சுலபமான டிசைன்ஸ் தான், கஷ்டமான டிசைன்ஸ் அத்தனை அழகா படம் எடுத்து அனுப்ப முடிவதில்லை. ஃப்ரென்ச் நாட் போட்டு பார்த்தீங்களா??? வந்துச்சா? சந்தேகம் இருந்தா சொல்லுங்க. மிக்க நன்றி.

தீப்பா... மிக்க நன்றி. அவசியம் போட்டு பாருங்க. :)

அனிதா... மிக்க நன்றிங்க. ட்ரை பண்ணுங்க.

தளிகா... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க. இனி கை கால் பார்த்ததும் இது நானா வேற யாராவதான்னு கண்டு பிடிச்சுடுவாங்க தானே??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனிதா அக்கா அவர்களுக்கு நான் நலம்...வெட்டி வொட்ட சோம்பேறித்தனம்..எனவே ஆங்கிலம்...இனி வரும் காலங்களில் தமிழில் பதிவு செய்கிறேன்...இந்த பக்கத்திலேயே நேரடியாக தமிழில் பதிவு செய்ய முடியுமா...எப்பிடினு சொல்லி குடுங்க பிளீஸ்....

சுமதி உங்க பதிவை தமிழில் கண்டதே ஆனந்தம். :) இங்கயே தட்டச்சு செய்ய இயலாது... "Tamil Font Help"ல் போய் தான் அடித்து இங்கு பதிவிட முடியும். பழகிடும்... கவலை வேண்டாம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதாக்கா உடன்பதிலுக்கு நன்றி.இதெல்லாம் நான்8_ம்வகுப்பில் தொழில் பிரிவில் படித்தது.அப்புரம் மரந்துடுத்து.உங்க புன்னியத்தால் அதெல்லாம் தெரிந்துவிட்டது,ரொம்ப நன்றி.அதில் "ப"தையல் எப்படின்னு கொஞ்சம் சொல்லிதாங்க.தொந்தரவுக்கு மன்னிக்கவும்.அப்புரம் எம்ப்ராய்டிங் பொருள்கள்ஸ்டோன்,மற்ற பொருள்கள்(எந்த கடைகளில்) எங்கேகிடைக்குமென்ரும் சொல்லுங்கல் எனக்கு ஒன்றும்தெரியாது தயவு செய்து சொல்லுங்கள்.நான் இந்தியாவில் இருக்கிரேn

அன்பு வனிதா,

எங்கென்றாலும் ஒரு பூ டிசையின் கண்டால் அப்படியே மெகந்தி டிசைன் ஆக்கிவிடுவீர்கள் போல் இருக்கின்றது.அந்த திறமை உங்களை விட யாருக்கு வரும்.உங்கள் திறமைக்கு எனது பாட்டுக்கள்.

மெகந்தி டிசைன் நன்றாக இருக்கிறது. எனக்கும் போட்டுக்கொள்ள ஆசைதான்.X.MAS லீவு வருகின்றது தானே.போட்டு அசத்த வேண்டியதுதான்.

இங்கு பாக்கிஸ்தான் மக்கள் அதிகமாக இருக்கின்றபடியால் ஹென்னா கோன் நிறையவே உண்டு.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ரொம்ப அழகா இருக்கு வனி இப்படி அழகா காலும் கையும் இருந்தா போடலாம்
சுப்பரா இருக்கு

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

PLS EN KAIKKUM POTU VITUNGA PA . ALIKILOM POLA IRUKKU . SUPPER VANI MA . [ SRY TO TYPE IN THANGLISH ]

all is well

ரொம்ப அழகாக இருக்கு.சிம்பிள் மற்றும் சூப்பர்.

kalaimathi

first time I seeing like this kind of effort. very nice and easy to practice

Please put some more designs like this

thanks

வரும் முன் காபது சிரப்பு

இனியா... தொந்தரவுலாம் ஒன்னுமில்லை. அதென்ன 'ப' தையல்??? எதை கேக்கறீங்கன்னே எனக்கு புரியல. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க ப்ளீஸ். :D

யோகராணி... க்ரிஸ்த்மஸ்'கு போட்டு கலக்குங்க. மிக்க நன்றி.

மீரா கிருஷ்ணன்.... மிக்க நன்றி. போடுங்க உங்க கை இதைவிட அழகா இருக்கும் :)

சுந்தரமதி... மிக்க நன்றி. தமிழில் பதிவு போடுங்க நான் உங்க கைக்கு ஹென்னா போட்டுடறேன்... ;)

கலைமதி... மிக்க நன்றி :)

துர்காலஷ்மி.. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta