மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார்

தேதி: August 17, 2007

பரிமாறும் அளவு: 6 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 2
முருங்கைக்காய் - 1
புளி - சிறிய எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
காய்ந்த மிளகாய் - 8
பெருங்காயம் - சிறிது
தேங்காய் எண்ணை- 1 டேபிள் ஸ்பூன்
பச்சைக் கொத்தமல்லி - சிறிது


 

துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்துக் குழைய வேக வைக்கவும்.
வெங்காயத்தை உரித்து வைக்கவும்.
தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கவும்.
முருங்கைக்காயை நறுக்கி வைக்கவும்.
பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும்.
எண்ணையைக் காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, உரித்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய முருங்கைக்காயைப் போடவும்.
புளியைக் கரைத்துச் சேருங்கள்.
உப்பு சேர்த்து, புளி வாசனை போனதும், பருப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஜெயந்தி அக்கா, இந்த சாம்பாரை செய்து பார்த்தேன். நல்ல மணமாக மிகவும் நன்றாக இருந்தது. சூப்பர் சாம்பார். நன்றி உங்களுக்கு.

பின்னூட்டத்திற்கு நன்றி
அன்புடன்
ஜெயந்தி மாமி

சாம்பார் ரொம்ப ஈஸி & சூப்பர். கடைசியாக ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தேன் மாமி

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

பின்னூட்டத்திற்கு நன்றி.
அன்புடன்
ஜெயந்தி மாமி

உங்கள் குறிப்பு எல்லாம் நேற்றே எடுத்து வச்சாச்சு. இன்று சாம்பார் சிம்ப்ளி சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஜெ மாமி சாம்பார் ரொம்ப நல்லா இருந்தது.மிக்க நன்றி மாமி.