நன்னாரி வேர்

அன்பு தாய்மார்களே,சகோதரிகளே,தோழிகளே எனக்கு உதவுங்கள்.
நன்னாரி வேர் என்னிடம் உள்ளது.அதில் எப்படி சர்பத் போடுவது என்று கூறவும்.அதை வைத்து வேறு என்ன செய்யலாம் என்றும் கூறவும்.

அன்புடன்
திவ்யா அருண்

மண் பானையில் தண்ணீர் ஊற்றி நன்னாரி வேரை போட்டு வைப்பார்கள். தன்ணீர் மணமக குடிக்க நல்ல இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

அன்புள்ள ஜலீலாக்கா,
உங்க பதிலுக்கு நன்றி.நான் வெட்டி வேரை பானை நீரில் போட்டு வைத்துள்ளேன். நன்னாரியும் போட்டு வைக்கிறேன்.அக்கா இதை தவிர வேறு எப்படி உபயோகிக்கலாம்?

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

திவ்யா,
முடிந்தால் கொஞ்சம் எனக்கு பார்சல் அனுப்பி வையுங்கள். நானும் கொஞ்சம் நன்னாரி தண்ணீர் குடிக்கிறேன்.

அடடா, சுபாவுக்கு இல்லாமலா?உங்க அட்ரஸ் கொஞ்சம் சொல்லுங்க. துபாய் பஸ் ஸ்டான்டுக்கு பக்கத்துல முதல் குறுக்கு சந்து தான சுபா.வீட்டு நம்பர் என்ன?

பி.கு: வேர் மட்டும் போதுமா இல்ல வேர் போட்ட தண்ணி பானையோட அனுப்பவா?

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

வெட்டி வேர் தன்னி குடிச்சா பிறக்கும் குழந்தை தக்காளி மாதிரி பிறக்கும்னு சொல்லி சொல்லியே என் ஆன்டி இஷ்டத்துக்கு குடிப்பாங்க..குழந்தய் பிறந்தப்ப லோ வெயிட் பேபி ..ஆன்டி சொன்னாங்க ஆயோ ஓவெரா வெட்டி வேர் குடிச்சு குடிச்சு என் பொன்னு வேர் மாதிரியே ஆச்சேன்னு...அப்படி ஏதுமா திவ்யா?

குறும்பு
திவ்யா பானை வேண்டாம்..
வேர் போதும்..
ஏன்னா பானை உடைஞ்சி போயிட்டா வேர் ஸ்பாயில் ஆகிவிடும்..
அட்ரஸ்..
அதுக்குள்ளே கிடைச்சிடிச்சா???

ஹலோ திவ்யா
நன்னாரி டீயில் போட்டு குடிகலாம் வாசமாக இருக்கும்,அது ஊறிய தண்ணீரில் சர்பத் கரிப்பார்கள்.
ஜலீலா

Jaleelakamal

அப்படி ஏதும் இல்ல தளிகா.இருந்தால் உங்ககிட்ட சொல்லாமலா?நீங்க சொன்னதுபுதுசா இருக்கு.வெட்டி வேர்ல இப்படி ஒரு விஷயம் இருக்கா!
ரீமா எப்படி இருக்கா தளிகா?காய்ச்சல் சரியாகிருச்சா?

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

நீங்க சொன்ன மாதிரியே சர்பத்,டீ போட்டு குடிக்கிறேன்.இஞ்சிய தட்டி போடுவது மாதிரியே இதயும் போடலாமாக்கா?

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

திவ்யா
நன்னாரி வேரை காயவைத்து மிக்சியில் திரித்து டீ தூளுடன் கலந்து கொள்ளுங்கள், கொஞ்சமா கலந்து பிடித்திருந்தால் செய்யுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்