ஆப்பிள் ஜூஸ் & சாலட்

தேதி: January 22, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (6 votes)

 

ஜூஸ்:
ஜாவா ஆப்பிள் - ஒன்று
சர்க்கரை - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
இஞ்சி - சிறு துண்டு
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
சாலட்:
ஜாவா ஆப்பிள் - ஒன்று
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு
மிளகு - சுவைக்கு
தேன் - சுவைக்கு (விரும்பினால்)


 

இஞ்சியை தோல் நீக்கவும். பழத்தை சுத்தம் செய்து நறுக்கவும்.
மிக்சியில் நறுக்கிய பழம், இஞ்சி, சர்க்கரை, உப்பு கலந்து ஒரு கப் குளிர்ந்த தண்ணீர் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
அடித்த ஜூஸை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க சுவையாக இருக்கும். விரும்பினால் மிக்ஸியில் அடிக்கும் போது சிறிது புதினாவும் சேர்க்கலாம்.
சாலட்டுக்கு பழத்தை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். மிளகை பொடித்து வைக்கவும்.
பழத்துடன் பொடித்த மிளகு, உப்பு சேர்த்து நன்றாக பிரட்டவும்.
இத்துடன் எலுமிச்சை சாறும் விரும்பினால் சிறிது தேனும் கலந்து சிறிது நேரம் ஃபிரிஜ்ஜில் வைத்து எடுத்தால் சுவையான வேக்ஸ் ஆப்பிள் சாலட் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரிச்சான ஜூஸ்.... சத்தானது கூட

நல்லா இருக்கு அக்கா

செய்து பார்த்துட்டு சொல்றேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரொம்ப சிம்பலா இருக்கு,படத்த பார்க்கும் போதே சாப்பிடுனும் போல இருக்கு,வாழ்த்துக்கள்..

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

ஆப்பிள் ஜூஸ் பத்தி சொல்லனும்னா, மொதல்ல பால் ஊத்தி குடிப்பேன் ஆனா இப்போ அப்படி குடிக்கவே பிடிக்கறது இல்லை. நீங்க கொடுத்த ஜூஸ் ஆஹா லெமன் போட்டுனா, டேஸ்ட் நினைச்சு பாக்கவே சூப்பரா இருக்கு. எப்படிதான் இப்படியெல்லாம் யோசிப்பீங்களோ;-) சூப்பர்!!!!

ஆப்பிள் சாலட் பெப்பர் போட்டு, ம்ம் அதையும் ட்ரை பண்ணிப் பாத்தடறேன்;-)

மிக்க நன்றி, மேலும் குறிப்புகள் கொடுத்து எங்களை அசத்த வாழ்த்துக்கள்;-)

( வனி இந்த ஜாவா ஆப்பிள்ங்கிறது புளிப்பா இருக்குமே அதுவா?)

Don't Worry Be Happy.

வனி ரிச்சானதும் சத்தானது கூட நல்லா இருக்கு செய்துட்டு சொல்றேன் வாழ்த்துக்கள்

ஏன் உங்களை ஒருவாரமாக காணவில்லை லேப்டாப்பில் ஏதும் பிரச்சினையா?நலமா நீங்கள்? நல்ல ஒரு ஜூஸும் சாலடும் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் . சீக்கிரம் அறுசுவைக்கு வாங்க...

வாழு, வாழவிடு..

வனி அக்கா..நலமா...

நானும் பாலில் தான் அடிப்பேன்.இது வித்தியாசமாகவும் சத்தானதாகவும் உள்ளது.வாழ்த்துக்கள்.

ஹசீன்

வனிதா.. ரொம்ப டேஸ்டியான ஹெல்த்தியான ஜுஸ். படிக்கும்போதே குடிக்க தோணுது. விரைவில் செய்து பார்த்துவிடுகிறேன். அந்த க்ரீன் ஆப்பிள் இங்கு அதிகம் கிடைக்கும். நான் புளிக்கும் என்பதால் அதை அதிகம் வாங்கமாட்டேன். இப்படியும் அதை ஜுஸ் செய்து குடிக்கலாம் என்றால் கண்டிப்பாக ஒரு நாள் செய்து பார்த்துவிடுவேன். பால் விட்டு தான் ஆப்பிள் ஜுஸ் செய்வேன். இது புதுமையா இருக்கு. கண்டிப்பா பையனுக்கு செய்து கொடுத்துடுவேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வனிரொம்ப ஹெல்தியான குறீப்பு
ஆப்ப்ல் சாலட் நானும் அடிக்கடி செய்வேன் ஆனால், இன்னும் இரண்டு பழஙக்ள் சேர்த்து.செய்வேன்.
ஜலீலா

Jaleelakamal

வனிக்கா உங்களோட ஆப்பிள் சாலட் செய்தேன் நல்லா இருந்தது....நன்றி வனிக்கா...

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

ஆமினா... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க.

விஜய குமார்... மிக்க நன்றி. செய்து பாருங்க.

ஜெயலக்ஷ்மி... கண்டிப்பா இப்படி செய்தா தெகட்டாது. பால் சேர்க்குறதை விட நல்லது பெரியவங்களுக்கு. சாலட்'கு எப்பவுமே பெப்பெர் கூட லெமன், ஹனி நல்ல காம்பினேஷன். ட்ரை பண்ணுங்க. ஜாவா ஆப்பிள் புளிக்குமா?? எனக்கு தெரிஞ்சு புளிக்காது... நம்ம ஊர் பேரிக்கா மாதிரி தான் இருக்கும். ஆனா ரொம்ப இனிப்பாவும் இருக்காது.

பாத்திமா... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க.

ருக்சனா... மிக்க நன்றி. தொடர்ந்து தேடி இருக்கீங்க. பதில் இப்போ கிடைச்சுடுச்சா??? பொங்கல் கொண்டாட 1 வாரம் கிராமம் பக்கம் போயிட்டேன், அதனால் உடனே புது டெஸ்க்டாப் வாங்க முடியல.

ஹசீனா... ட்ரை பண்ணி பாருங்க, சுவையும் பிடிக்கும்.

ராதா... அவசியம் செய்து பாருங்க. பால் விட்ட குழந்தைகளுக்கு பிடிக்கும், பெரியவங்களுக்கு கொஞ்சம் தெகட்டும், இல்ல ஹெவியா இருக்கும்... இப்படி செய்தா நமக்கு குடிக்க நல்லா இருக்கும்.

ஜலீலா... ரொம்ப நாளைக்கு பின் என் குறிப்பில் உங்க பின்னூட்டம் பார்க்கிறேன். மிக்க நன்றி.

சுமதி... செய்தே ஆச்சா??? மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நலமா? பிள்ளைகள் நலமா? தேடி தேடி கலைத்துபோய் உங்க ஆப்பிள்ஜூசையும் சாலடையும் ஃபுல்லா சாப்டுட்டேன் ..அப்புறம் பொங்கல் எப்படி இருந்தது ...நன்றி வனிதாக்கா

வாழு, வாழவிடு..

ருக்சனா... உண்மையிலேயே இத்தனை நாளைக்கு பின் அறுசுவை பக்கம் வந்ததை விட மகிழ்ச்சி நீங்க எல்லா பதிவிலும் என்னை கேட்டு எழுதினது தான். :) நானும் குழந்தைகளும் நலம். பொங்கல் கிராமத்தில் சூப்பராக போனது. 1 வாரம் போனதே தெரியல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

\\ருக்சனா... உண்மையிலேயே இத்தனை நாளைக்கு பின் அறுசுவை பக்கம் வந்ததை விட மகிழ்ச்சி நீங்க எல்லா பதிவிலும் என்னை கேட்டு எழுதினது தான். :) //

நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தில்தான் இருக்கிறோம் குடும்பத்தில் ஒருத்தரை காணவில்லை என்றதால் நான் கேட்டேன்.. பொங்கல் சூப்பரா போச்சுல்ல சொந்த கிராமத்தில் சொந்தங்களுடன் கொண்டாடினாலே எல்லா பண்டிகையும் மகிழ்ச்சிதானே நன்றி வனிக்கா..

வாழு, வாழவிடு..