வீட்டு வேளைக்கு ஆள் வைக்கவா?

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்.....நான் வீட்டு வேலைக்கு ஆள் வைக்கவில்லை....ஏனென்றால் அவர்கள் செய்யும் வேலை சரியாவே இருக்கறது இல்ல..எனக்கும் சொல்லி சொல்லி கோவம் தான் வருது நானே செய்துக்கலாம் என்று வேலை ஆளை நிறுத்தி விட்டேன்...

இப்போ எனக்கு இரண்டு வயதில் பிள்ளை இருக்கிறது அது கொஞ்சம் அடம் பண்ணவே என்னால் என் அன்றாட வேலைகளை செய்வது கடினமாக உள்ளது...வீட்டுவேலை கொஞ்ச நாளாக செய்ய முடியவில்லை என் கணவர் வரும் வரை வீட்டை அப்படியே போட்டு வைத்திருக்கேறேன்...யாரவது வீட்டுக்கு வந்தா அவ்ளோதான் தலை சுத்திடும்....எனக்கு ஒரு வழி சொல்லுங்கபா...என் பொன்னுகூடவே இருக்கணும்னு சொல்றா..தூங்குற நேரம் கூட கம்மி ஆகிட்டு..

வீட்டு வேளைக்கு ஆள் வைக்கவா? இல்லை நானே செய்துகவா...வேலை செய்றவங்க ஒரு வேலை மட்டும் தான் வராங்க(பாத்திரம் தேய்ப்பது,வீடு துடிப்பது, துணி காயமாட்டும் வைகர்த்து)..அவங்க வீட்டை துடைக்கும் முன் என்னை தான் வீட்ட ஏறகடி வைங்க நான் பெருகி துடைக்கினு என்னை வேலை வாங்குறாங்க...நீங்க என்ன செய்றிங்க வேலை ஆள் வைத்தால் எப்படி வேலை வாங்குவது?

வீட்டு வேலைக்கு ஆளை வைத்தால் காசை கொஞ்சம் கஞ்சத்தனம் பண்ணாமல் கொடுக்கவும் வேண்டும் அடிக்கடி எதாவது சமைத்து கொடுத்தால் சந்தோஷமாக வருவார்கள்..முக்கியமாக அவர்களிடம் அதிகம் பேச்சு கொடுக்க கூடாது..பேசினோம் தலைக்கு மேல் ஏறி டான்ஸ் போடுவார்கள்.
நல்ல வேலை செய்யும் விசுவாசமான ஆள் என்றால் அவர்கள் வந்ததும் சூடாக ஸ்ட்ராங்கான டீ ஒன்றை மனசாற போட்டு கொடுத்தால் மீத வேலையை பம்பரமாக செய்வார்கள்
முதலில் சொல்ல வேண்டிய ஒன்று என்றாவது வர முடியாவிட்டால் காலையே நேரமாக சொல்லி விட வேண்டுமென்பது...அவர்களை நம்பி வேலையை போட்டு வைத்திருந்தால் கடைசியில் கைவிரிக்கும் பழக்கத்தை முதலிலேயே சொல்லி வைத்து விடுங்கள்.
சின்ன குழந்தை இருப்பதால் சொல்கிறேன் அதிகம் அவர்களுடன் குழந்தையை உறவாட விடாமல் துவக்க்லத்திலேயே பார்த்துக் கொள்ளுங்கள்..காலமே சரியில்லை.தூக்கிக் கொண்டு அவர்கள் நிற்க நீங்கள் குளிக்க போகவோ மற்ற வேலை பார்க்கவோ செய்ய வேண்டாம்
இதற்கெல்லாம் மேலே அது அவங்க வீடு இல்லை வயிற்றுப் பிழைப்புக்காகவருகிறார்கள் அதனால் நாம செய்வது போல செய்யும் ஆட்களை கிடைப்பது கஷ்டம் தான்

ok pa innaiku aal vechiten.....

nandri tholi

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

தளி ,குமாரி ... எனக்கும் சென்னைதான் ஆள் வைத்துதான் இருக்கேன் ரொம்ப நல்லவங்க 1 வருஷத்துக்கும் மேலா இருக்க்காங்க...ஆனால் எல்லோரும் இப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது...சென்னையில் நீங்க இருக்கீங்களா அப்ப ரொம்பவே கஷ்டம் பல இடத்தில் திருட்டுதனம் ஜாஸ்தியா போச்சு....2 மாசம் முன் என் அக்கா வீட்டுக்கு பக்கத்து அப்பார்ட்மெண்டில் ஒரே ஒரு ஆள் மட்டுமே அவங்க வேலைக்கு ஆள் வைத்து இருக்காங்க நல்ல்லாதான் வேலை பார்த்து இருக்கா வேலை பார்ப்பதோட வீட்டுகாரங்க என்னலாம் செய்யுறாங்கன்னும் கண்கானிச்சுட்டு இருந்திருக்கா...வீட்டுகாரங்க தினம் பிரிஜில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து காலை சுகர் மாத்திரை போடுவது வழக்கமாம் இதை கவனித்து வைத்து கொண்டு அந்த தண்ணீரில் மயக்க மருந்து கலந்து வைக்க அந்தம்மாவும் அதை எடுத்து வழக்கம் போல குடிக்க மயக்கமாக வீட்டுக்குள் ஒரு ஆணை செட் பண்ணி அவன் வந்து எல்லா நகையையும் அள்ளிட்டு அந்த ஆள் மட்டும் போக, வேலை ஆளோ ம்ற்றவக்களுக்கு சந்தேகம் வராத மாதுரி வேலை முடிச்சுட்டு போராப்ல போய் இருக்கா...அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சதும் எல்லாமே போனது தெரிய வந்து இருக்கு...இப்படி நிறைய நடந்திருக்கு வைப்பது பார்த்து கவனமா வைங்க அவங்க வீடு இருக்கும் இடத்தை தெரிஞ்சு வைத்துகங்க...தெரிஞ்சவங்க சொன்னதின் பெயரில் வைப்பதும் நல்லது...நான் வழக்கமாக ஊரில் இருந்துதான் ஆள் அழைத்து வருவேன் சென்னை ஆட்களை நம்பி வேலைக்கு வைக்க மாட்டேன் முதல் முறையா ரொம்ப பயந்து பிள்ளைகளை வைத்து சமாளிக்க முடியாமல் ஒருத்தங்க சொல்லி அவங்க மூலமாகதான் வைத்தேன்...

அன்புடன்,
மர்ழியா நூஹு

வணக்கம் தோழி உங்கள் பதிலுக்கு நன்றி மர்ழியா, தாளிகா

நான் நேற்று ஆள் வைத்துவிட்டேன் எப்படி இருபங்கனு தெரியல...ஒரு மாதம் வேலை செய்ய சொல்லி இருக்கேன்...பிடித்தால் தொடரச்லாம்னு

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஆள் வைப்பதில் கொஞ்சம் கவனம் தேவை நண்பி.அவர்களிடம் வேலையைத்தவிர நம் குடும்ப விஷயங்கள் ஏதும் தெரியாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் .அவர்கள் முன்னிலையில் போனில் பேசும்போது கவனமாக பேசவேண்டும். உங்களின் பீரோ சாவி எங்கு வைப்பீர்கள் .எங்கு கைப்பை வைப்பீர்கள்.என்பது மிக ரகசியமாக இருக்கட்டும்.நீங்கள் வெளியில் போகும் நேரம் ...ஊருக்கு போவது எல்லாம் அவங்களிடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.நீங்கள் இப்படி சொல்லலாம் ரெண்டு நாள் கழிச்சு வந்தாபோதும்னு நினைக்கிறன்.ஏன்னா எங்க வீட்டுக்கு சொந்தகாரங்க வாராங்க நாங்களே பாத்துக்குறோம். நான் சொன்னதுக்கு அப்புறம் வந்தா போதும்னு சொல்லுங்க.எப்பயும் சிரித்த முகத்தோடு இருங்க.அவங்கள வாட்ச் பண்றது தெரியாம வாட்ச் பண்ணனும்.எப்பயுமே அவங்க மேல ஒரு கண்ணு வச்சுகோங்க நாம நல்லா அவங்கள புருஞ்சிகுற வரைக்கும்.....ஜாக்கிரதையாக இருங்கப்பா .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் அஸ்வதா நலமா? நான் இன்னைக்கு தான் வேளைக்கு ஆள் சேர்த்தேன் நேற்றே அவங்க இரண்டு வேலை காலை மாலை வருகிறேன் 1000 ரூபாய் குடுங்கன்னு சொல்லிடு இன்னைக்கு வந்தாங்க வேலை சரியாவே செய்யல பா மர்ழியா சொன்னமாதிரி காபி போட்டு குடுத்தேன் துணி துவைக்க வேணாம் நாளை துவசிக்கலாம்னு சொல்லிட்டேன் ஓகே நு கிளம்புறப்ப ஆயிரம் ரூப பத்தாது 1300 குடுங்கன்னு கேக்குறாங்க ....என்ன பண்ணுறதுன்னு சொல்லுங்க 1300 குடுக்கறது பெருசு இல்ல நாம எதிர் பார்த்த மாதிரி அவங்க வேலை இன்னைக்கு செய்ய வில்லை அவங்க வேலை மட்டும் பாக்குறாங்க

என்ன கொடும இது ...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

முன் பணம் கொடுக்கும் பழக்கம் மட்டும் வேண்டவே வேண்டாம். சும்மா பணம் கேட்டுகொண்டே இருப்பாங்க. சம்பளத்தில் கழிச்சிக்சொல்லுவாங்க. ஆனா, இலவசமாக வேலை செய்வதைபோல செய்வாங்க. கணக்கு சரியா வச்சிக்கமாட்டங்க. மனஸ்தாபம்தான் மிஞ்சும்.

உண்மைதான் இலவசமா செய்ற மாதிரித்தான் இன்னைக்கு செஞ்சிட்டு காசு பத்தலன்னு வேற சொல்லிடாங்க ..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

தோழிகள் எல்லார் சொல்றதும் உண்மை குமாரி. இப்படி வந்த முதல் நாளே வேலை ஒழுங்கா செய்யாம சம்பலமும் பேரம் பேசும் ஆள் தேவையான்னு யோசிங்க. இதெல்லாம் கடைசி வரை ஒத்து வராது. அதை விட வேறு ஆள் பாருங்க. யார் வந்தாலும் அவங்களை வேலை ஆளாக மட்டுமே நடத்துங்க. அதிகம் முகம் கொடுத்து பேசாதிங்க, நம்ம மேல பயம் போனா வேலையும் போயிடும். முன் பணம் கொடுப்பதில் இன்னொரு பிரெச்சனை காசு வாங்கின பிறகு வேலைக்கு வர மாட்டாங்க ஒழுங்கா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்படி வனிதா நேர்ல பாத்தா மாதிரி சொல்லி இருக்கீங்க...அவங்க நல்லாவே என்னை ஏமாத்திட்டாங்க...
அந்த வேலை ஆள் என் வீட்டிற்கும் என் தோழி வீட்டிற்கும் வேலை செய்தார்கள்..என் தோழி சொன்னதால்தான் நம்பி வேளைக்கு ஆள் சேர்த்தேன்..

இதனால் எங்கள் friendship கட் ஆனதுதான் மிச்சம்...என் தோழிக்கு அவர்களை நான் வெளில் இருந்து நிறுத்திவிட்டேன் என்று தெரிந்தும்
என்ன பிரச்சனைன்னு கேக்கவே இல்லை...நான் இரண்டு முறை போன் செய்தும் எடுக்கவில்லை என் தோழி..
எனக்கு கோவம் வந்துவிட்டது ...நேர்ல போய் ஏன் கால் அட்டென் பண்ணலன்னு கேட்டேன்..இல்ல தலைவலின்னு சொல்லிட்டா..
எனக்கு misscall பார்த்தும் அவ கூபிடலன்னு வருத்தம்..அதுக்கப்புறம் 10 முறை எனக்கு கால் பண்ணிட்டா நான் எடுக்கவில்லை..
இன்னைக்கு கூட என்கிட்ட பேச ட்ரை பண்ணி அவள் பையனை அனுப்பி எனக்கு போன் பண்ண சொல்லு ஓவென் பத்தி பேசணும்னு சொல்லி அனுப்பினா...எனக்கு மனசு வரல பேசறதுக்கு

என்ன பண்ணலாம் தோழிகள் எனக்கு சொல்லுங்க பா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மேலும் சில பதிவுகள்