டாக்டரைதான் பார்கனுமா?

என் பெரிய குழந்தைக்கு சளியால் காது இன்fஎக்சனாகி வலி ஆன்டிப்யொடிக் கொடுக்கிறேன் இப்ப சின்ன குழந்தையும் காதை பிடித்து பிடித்து காட்டுறா மூக்கு தண்ணியா கொட்டுது என்ன செய்வது இது பரவுமா?

இருக்கலாம்.டாக்டரிடம் கொண்டு போங்க..இரவில் தான் இது அதிகமாகும் பிறகு நட்ட நடு ராத்திரியில் தூக்கிக் கொண்டு ஓட வேண்டி வரும்

ஆமாம் உடனே மருத்துவரை பாருங்கள்...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

என் கணவர் என் மீது கோபபடுறார் அடிகடி டாக்டர்ட கொகனுமானு எனக்கு என்ன சொல்றதுனு தெரிலபா

நீங்க எங்க இருக்கீங்க...குழந்தைக விசயத்தில் இந்த (திட்டுறாரு ) கண்டுக்க கூடாது.....அவங்களுக்கு அப்படிதான் சொல்வாங்க ...பாவம் குழந்தைக தான் கஷ்டபடுவாங்க......பாவம்பா அவங்க......நீங்க உடனே டாக்டரிடம் கூட்டிட்டு போங்க......

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நீங்கென்ன சினிமா பாக்க போறேன்னா சொன்னீங்க.. எதாவது வந்தால் பிள்ளைகள் நொய் நொய் என்று நம்மையே தூக்க சொல்லும்..அப்படி சொல்லும்போது அப்பாவிடமே தூக்கி வைக்க சொல்லுங்க..கண்டுக்காம டாக்டரை பாருங்க சுமையா

நான் இருப்பது அபுதாபில என் கணவர் தான் என்னை அழைத்து போகனும் அவருக்கு ஆfபீஸ்ல பர்மிசன் வாங்குவதும் கஸ்டம் இவ்னிங்தான் வருவார் எனக்கு3குழந்தைகள் அப்பாய்மென்ட் கிடைக்கமாடுது டாக்டர்ட போய்டு வரனும்னா4மணி நேரமாது ஆகுது அதனாலே டாக்டர்ட போகனும்னா பயமா இருக்குபா இதனாலே எப்படா ஊருக்கு போகனும்னுதோனுது

தனியா போய் பழகுங்க சுமையா..நீங்க எந்த டாக்டரிடம் போவீங்க??
ஆம்பிளைகள் நமக்காக வந்து ஹாஸ்பிடலில் வெயிட் பன்னுவதெல்லாம் நடக்காத காரியம்...பிள்ளைகளுக்கு லேசாக மூக்கு ஒழுகினாலே அப்பவே கூப்பிட்டு ரெண்டு நாளைக்குள் அப்பாயின்ட்மென்ட் எடுத்து வைக்கலாம்..கூடினால் போகலாம் இல்லையென்றால் கேன்செல் பன்னிவிடலாம்.
தினமும் ஜன்னல் கதவை கொன்cஜ்ஹ நேரம் திறந்து வைய்யுங்க..ஆனா பாத்து பிள்ளைகளை கவனிக்கனும்
ஸ்கூள் போகும் பிள்ளைகள் இருந்தால் வந்ததும் சானிடைசெர் தடவி விடுங்க..

காது இன்பெக்ஷன் ஆனால் அதை உடனே கவனிக்க வேண்டும். நமது நடுக்காதில் ஜலதோஷம் ஏற்படும் போது ஒரு ப்லுஇட் தாங்கும். அதுவே பாக்டீரியாவால் இன்பெக்ட் ஆகும் போது தான் காது வலி ஏற்படும். சில நேரம் உள்ளே சீழ் கூட கட்டிக் கொள்ளும். சிறு குழந்தைகளுக்கு அது தானாகவே சரியாகும் சில நேரம் ஆகாது. அப்படியே நாம் கண்டு கொள்ளாமால் விட்டால் சில நேரங்களில் காது கேளாமல் கூட போகலாம். அதனால் நீங்கள் உடனே டாக்டரிடம் கூட்டி செல்லுங்கள். அவர்கள் ஆண்டிபயாடிக் கொடுப்பாங்க பத்து நாள் தர சொல்லுவார்கள். விட்டாமல் கொடுங்கள். ஒன்னும் பயப்பட தேவை இல்லை. ரூமில் ஹுமிடிபியர் போட்டு வையுங்கள். ஆவி கூட பிடிக்கலாம். தனியாக சென்று வர பழகுங்கள். அது தான் நமக்கும் நல்லது குழந்தைக்கும் நல்லது. குழந்தைகளால் பெற்றோர் நடுவில் சிறு பூசல்கள் சகஜம் தான். அதை விட்டு தள்ளுங்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்