கச்சிகா

தேதி: February 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (3 votes)

 

வறுத்த கொண்டைக்கடலை - ஒரு கப்
சீனி - ஒரு கப்
தேங்காய் துருவல் - கால் கப்
ஏலக்காய் - 4
மைதா மாவு - 2 கப்
எண்ணெய் - பொரிக்க தகுந்த அளவு
உப்பு - தேவைக்கு
சோடா உப்பு - ஒரு பின்ச்


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மைதாவில் உப்பு, சோடா உப்பு சேர்த்து பூரி மாவு போல் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்
வறுத்த ஏலக்காய் மற்றும் கொண்டைக்கடலையை பொடி செய்யவும். ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலை மாவு, சீனி, தேங்காய் துருவல் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
மாவில் சிறு உருண்டை எடுத்து பூரி போல் பரத்தி நடுவில் பூரணத்தை வைத்து மூடவும். சிறிது நீரை ஓரங்களில் தடவி அழுத்தி மூடி விடவும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் செய்து வைத்ததை போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான கச்சிகா ரெடி.

பூரணம் வைக்கும் போது சிதறாதப்படி வைக்கவும். பூரண மாவு ஓரத்தில் ஒட்டினால் பின் மூடி விட சிரமமாக இருக்கும். இது மாலை நேர சிற்றுண்டியாக குழந்தை முதல் பெரியவர்கள் வரை கொடுக்கலாம். ஆந்திராவில் அடிக்கடி செய்யப்படும் சிற்றுண்டி. பூரிக்கு தேய்த்தது போக மீதியிருக்கும் மாவில் இது போல் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் ஆமினா.வித்தியாசமான குறிப்பு.மேலும் நிறைய குறிப்பு கொடுக்க என் வாழ்த்துக்கள்.கொண்டைக்கடலை வறுத்து மிக்ஸியில் அரைத்தால் பவுடர் ஆகிவிடுமா பா.சோடா உப்பு போடாம செய்யலாமா பா.அம்மா இப்படி வித்தியாசமான டிஷ் பண்ணி கொடுத்தால் உங்க பசங்க நல்லா என்ஜாய் பண்ணுவாங்க இல்ல.வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

சலாம் ஆமினா நலமா?

ஆந்திர டிஷ் நிறைய தெரியும் போல?...

வித்தியாசமாக இருக்கு.கண்டிப்பாக செய்துப் பார்கிறேன்.

வாழ்த்துக்கள்.

ஹசீன்

//அம்மா இப்படி வித்தியாசமான டிஷ் பண்ணி கொடுத்தால் உங்க பசங்க நல்லா என்ஜாய் பண்ணுவாங்க இல்ல.//
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணே ;) இன்னும் விவரம் பத்தல(3 1/2 வயசு)... ஸ்வீட் ஐட்டம் பன்ணா நல்லா சாப்பிடுவான். ஆனா கொஞ்சமா காரம் பண்ணி கொடுத்தாலும் நோ சொல்லிடுவார் ;)

மிக்க நன்றி மீனாள்

செய்து பார்த்துட்டு சொல்லுங்க

//கொண்டைக்கடலை வறுத்து மிக்ஸியில் அரைத்தால் பவுடர் ஆகிவிடுமா பா.//
கடைல கூட காய்ந்த பட்டாணி,காய்ந்த கொண்ட கடலன்னு கிடைக்கும். அதுலையும் செய்யலாம். கொன்டைகடலையை வெறும் சட்டியில் நிலக்கடலை போல் வறுத்தாலே அதன் தோல் ஓரளவுக்கு நீங்கிவிடும். மிக்ஸ்யில் பொடி செய்தால் மாவு போலவே வரும் (நான் இருக்கும் இடத்தில் கொண்டைகடலை வாங்கி பக்கத்தில் இருக்கும் கடையில் கொடுப்போம். அவர்களே பெரிய சட்டியில் மணல் கொட்டி அதில் கொண்டைகடலை போட்டு வறுத்து கொடுப்பார்கள்)

சோடா உப்பு நான் சேர்ப்பது மிகவும் கம்மி தான். விருப்பப்பட்டால் சேர்க்கலாம். பூரி கொஞ்சம் உப்பியது போலவே வரும்.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மீனாள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வ அலைக்கும் சலாம் வரஹ்..

//ஆந்திர டிஷ் நிறைய தெரியும் போல?...//
கணவர் ஆந்திராக்காரர் ;) அங்கேயே வளர்ந்ததுனால தமிழ்நாடு சமையலைவிட ஆந்திரா சாப்பாடு தான் அதிகம் விரும்புவார். அவருக்குக்காக கற்றுக்கொண்டது ;)

செய்து பார்த்துட்டு சொல்லுங்க ஹசினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உங்களுக்கு ரொம்ப பொறுமை என்று நினைக்கிறேன்.ரொம்ப அழகா பதில் சொல்லியிருக்கீங்க.தேங்ஸ்.

சீக்கிரம் இன்னொரு குழந்தை பெற்றுக்கோங்க.
உங்களுக்கு பையனா,பொண்ணா.என்ன பெயர்.

Expectation lead to Disappointment

//சீக்கிரம் இன்னொரு குழந்தை பெற்றுக்கோங்க.//
;) இப்பவே தலைய பிச்சுட்டு இருக்கேன். இருந்தாலும் இறைவன் நாடும் போது கிடைக்கும். மிக்க நன்றி மீனாள்... பையன் பேரு தன்விர் ஷாம்....

//ரொம்ப அழகா பதில் சொல்லியிருக்கீங்//
நீங்க செய்யணூம்னு தான்... செய்துடுவீங்க தானே? ;)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சலாம் ஆமி ஷாம் எப்படி இருக்கார்??ஆந்திரா டிஷ்ல கலக்குற வித்தியாசமா இருக்கு நான் தேங்காப்பூ சீனி கசகசா போட்டு செய்வேன் இது வேற மாதிரி இருக்கு வாழ்த்துக்கள்டா

வஸ்ஸலாம் பாத்திமாம்மா

நானும் கூட தேங்காய் பூ ,ரவை போட்டு ரவா கச்சிக்கா செய்வேன்.போட்டோ கூட அனுப்பிட்டேன். ஆனா கசகசா சேர்த்ததில்ல

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி

நல்ல குறிப்பு.. நாங்க கஜூர்க்கானு சொல்வோம்.. பேறு தான் வேற ;) வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வித்தியாசமான பெயர் அதான் ஆந்திரா ஸ்பெஸலா ..வாழ்த்துக்கள் ஆமினா..
நன்றி

வாழு, வாழவிடு..

//நாங்க கஜூர்க்கானு சொல்வோம்//
ஆந்திராலதானா?
எனக்கு சொல்லி கொடுத்தவங்க கச்சிக்கான்னு தானே சொல்லி கொடுத்தாங்க... தப்பா சொல்லி கொடுத்துட்டாங்களா? ;)

மிக்க நன்றி ரம்யா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றி ருக்‌ஷானா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா...,நலமாக இருக்கின்றீர்களா..?
முற்றிலும் வித்தியாசமான உள்ளடம் வைத்த குறிப்பை கொடுத்திருக்கீங்க..
முடிந்த போது செய்து பார்க்கின்றேன்.
வாழ்த்துக்கள் ஆமினா..

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வஸ்ஸலாம்

ரொம்ப நன்றி அப்சரா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா... நல்ல குறிப்பு. கொண்டைகடலை வைத்து செய்வது சத்தும் கூட. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் ஆமினா.வித்தியாசமான ,சத்தான குறிப்பு.... வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அழைக்கும் ஆமினா உங்க கச்சிகா செய்தேன்பா நன்றாக இருந்தது ஆனால் மொரு மொறுன்னு இல்லாம கடித்து இழுகுரமாதிரி இருந்ததுப்பா நான் மைதாவில் சூடு எண்ணெய் ஊற்றி செய்வேன் அது போல செய்தால் நன்றாக இருக்குமா

ஹாய் ஆமினா,வணக்கம்.நான் உறுப்பினர் பட்டியலில் சேர்ந்து சில மாதங்கள் ஆகிறது.நீங்கள் தரும் அனைத்து வகை சமையல் குறிப்புகளும் அருமை.இதுவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் உள்ளது.இன்னும் நிறைய குறிப்புகளை எதிர்ப்பார்க்கிறேன்,வாழ்த்துக்கள்.