இன்ஸ்டண்ட் சத்துமாவு

தேதி: March 7, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (13 votes)

 

கோதுமை மாவு - ஒரு கப்
கேழ்வரகு மாவு - ஒரு கப்
ஓட்ஸ் - அரை கப்
பொட்டுக்கடலை - அரை கப்
பாசிப்பருப்பு - அரை கப்
அரிசி - கால் கப்
பாதாம் - 13
முந்திரி - 13
ஏலக்காய் - நான்கு


 

தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் கோதுமையை நன்கு வறுத்து எடுக்கவும். (இங்கு உபயோகப்படுத்தி இருப்பது உடைத்த கோதுமைரவை)
அடுத்து கேழ்வரகு மாவை போட்டு வறுத்து எடுக்கவும்.
பின்னர் பாசிப்பருப்பை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
அதன் பிறகு அரிசியை போட்டு வறுக்கவும் (இங்கு பயன்படுத்தி இருப்பது சிவப்பரிசி)
பொட்டுக்கடலையை போட்டு வறுத்து எடுக்கவும். அடுத்து ஓட்ஸை போட்டு வறுத்து எடுக்கவும்.
கடைசியில் பாதாம், முந்திரி, ஏலக்காய் போட்டு வறுத்தெடுக்கவும். ( ஒவ்வொன்றையும் குறைந்தது நான்கு நிமிடங்களாவது வறுக்க வேண்டும்)
வறுத்தவற்றை எல்லாம் ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
பின்னர் மிக்ஸியில் முதலில் பருப்பு அரிசி போன்றவற்றை அரைத்து விட்டு பின் மற்றவைகளை போட்டு நன்கு நைஸாக அரைத்து சலித்து வைத்துக் கொள்ளவும்
இப்போ சத்தான சத்துமாவும் அதில் செய்த சத்துமாவு பாலும் ரெடி.

தேவைப்படும்போது ஒரு கிளாஸ் பாலில் மூன்று தேக்கரண்டி சீனி சேர்த்து அடுப்பில் வைத்து, அது கொதிக்கும் போது, மூன்று தேக்கரண்டி சத்து மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் போல் கிண்டி கட்டியில்லாமல் இறக்கவும். ஆற வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மிகவும் சத்தானது மட்டுமல்லாமல் ருசியானதும் கூட. பெரியவர்களும் இதனை சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுபெர்ப் ருக்ஸ்...
இததான் எதிர்ப்பார்த்தேன் யாரும் தருவார்களா என்று...
அரிசி பச்சையா, புழுங்களா?...
ரொம்ப நன்றி + வாழ்த்துக்கள்..

ஹசீன்

சூப்பரான சத்தான ஈசியான ஹெல்த் மிக்ஸ் கண்டிப்பா செய்து வச்சிக்கனும் . தொடர்ந்து சத்தான குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

அன்புடன்
ஸ்ரீ

ருக்சனா... எல்லாருக்கும் அரோக்கியமான சுவையான குறிப்பு கொடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

super .this recipe very useful to me. keep it up. with regards.g.gomathi.

ஆரோக்கியமான குறிப்பு வாழ்த்துக்கள் ருக்ஸ்....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்திய தோழிகள் அனைவருக்கும் என் நன்றிகள்
ஹசீன் சிவப்பரிசி சேர்த்தால் நல்லது ..நன்றி அனைவருக்கும்..

வாழு, வாழவிடு..

வாவ்..

புதுவிதமான குறிப்பு.. சூப்பர்.. வாழ்த்துக்கள்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மிகவும் சத்தான குறிப்பு கொடுத்துருக்கீங்கம்மா. செய்து பாக்கரேன்.

hi madam

i have 5 months old girl child.shall i give this instant sathu maavu as docter advised to start on six month onwards.

ருக்சானா நல்ல சத்தான குறிப்பு நான் என் பேத்திக்கு இன்னும் நிறைய பொருட்க்கள்
சேர்த்து செய்வேன் இதுவும் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்டா

ருக்சானா, ருசியான, சத்தான,எளிதான குறிப்பு. இந்த பொருள் எல்லாம் இங்கே கிடைத்தபிறகு செய்து பார்த்து விட்டு பதிவிடுகிறேன் பா. சிறியவர் முதல் பெரியவர் வரை குடிக்க வேண்டிய மிகவும் அத்தியாவசியமான சத்து பானம்.வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நல்லா இருக்கீங்களா?

சூப்பரான ஆரோக்கியமான குறிப்பு..!!

வாழ்த்துக்கள்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நீங்கள் டாக்டரின் ஆலோசனைப்படி கொடுப்பதே நல்லது ..
குழந்தைகளுக்கு எது கொடுத்தாலும் சிறிதளவு கொடுத்து பாருங்கள்
ஒன்றும் செய்யவில்லை என்றால் கொடுக்கலாம் ..நன்றி

வாழு, வாழவிடு..

ரம்யா...கை இப்ப எப்படி இருக்கு ...நன்றி உங்களுக்கு
கோமு ஃபாத்திமம்மா இளவரசி உங்களின் பின்னூட்டத்திர்க்கும் என் நன்றிகள்
கல்பனா நலமா பிள்ளைகள் நலமா? உங்கள் பின்னூட்டத்திர்க்கு என் இனிய ‘நன்றிகள் நெட் ப்ரச்சனையால் அறுசுவைக்கு வரமுடிவதில்லை.....

வாழு, வாழவிடு..

ருக்ஸ் வாழ்த்துக்கள் சூப்பரான ஆரோக்கியமான குறிப்பு..!!

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி ஸ்வர்ணா நலமா? உங்களின் வாழ்த்திர்க்கு என் இனிய நன்றிகள் நன்றி.

வாழு, வாழவிடு..

ஆரோக்கியமான குறிப்பு ருக்சானா.

செய்முறையும்,விளக்கமும் தெளிவா இருக்கு.படங்களும் அழகு.இங்கு கிடைக்கும் தானியங்களை வைத்து தயாரிக்கலாம் என எண்ணியுள்ளேன்.
வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சத்துமாவு ரொம்ப ஈஸியா இருக்குது.அதே சமயத்தில் ரொம்ப சத்து உள்ளதாகவும் இருக்குது.வாழ்த்துக்கள் ருக்சானா.

Expectation lead to Disappointment

Ithil walnut serkalama?