வெல்ல அவல்

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அவல் - ஒரு கப் கெட்டியான அவல்
தேங்காய்ப்பூ - அரை கப்
அச்சு வெல்லம் - ஒன்றரை கப் பொடி பண்ணினது
நெய் - 3 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி (நறுக்கியது)
ஏலப்பொடி - சிறிதளவு


 

கெட்டியான அவலை மிக்ஸியில் ரவை மாதிரி பொடித்துக் கொள்ளவும்.
பிறகு அதை ஒரு கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
15 நிமிடங்களில் ஊறி நன்கு மலர்ந்து விடும். அதைக் கட்டியில்லாமல் உதிர்த்துக் கொள்ளவும்.
ஒரு அகன்ற மைக்ரோவேவ் பாத்திரத்தில் அவல், பொடி பண்ணின வெல்லம், தேங்காய் முதலியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்.
5 நிமிடம் 'ஹை'யில் வைத்து வேக விடவும். நடுவில் ஒரு முறை கிளறி விடுவது அவசியம்.
வெளியில் எடுத்து நெய், முந்திரி, ஏலப்பொடி முதலியவற்றைச் சேர்த்து மறுபடியும் 2 நிமிடம் ஹையில் மைக்ரோவேவ் செய்யவும்.


மைக்ரோவேவ் சமையல் - அதிகப்படியாக 2 அல்லது 3 மைக்ரோவேவ் கண்ணாடிப் பாத்திரங்களை வைத்துக் கொண்டால் எல்லாமே அதில் சமைத்து விடலாம். வெவ்வேறு வடிவங்களும், அளவுகளும் இருந்தால் நல்லது.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்கள் 'வெல்ல அவல்' குறிப்பின்படி தயாரித்தேன். சுவையாக இருந்தது. நன்றி.

‍- இமா க்றிஸ்