சோமாசா

தேதி: April 2, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

மைதா - 2 கப்
சீனி - 2 கப்
பொட்டுக்கடலை - ஒரு கப்
தேங்காய் துருவல் - அரை கப்
கசகசா - கால் கப்
நெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
வாணலியில் பொட்டுகடலையை லேசாக வறுக்கவும்.
கசகசாவை சிவக்க வறுக்கவும்.
தேங்காய் துருவலை நன்கு சிவக்க வறுக்கவும்.
சீனி, பொட்டுகடலை, தேங்காய்துருவல், கசகசா ஒவ்வொன்றையும் தனித் தனியாக பொடித்து, ஏலப்பொடி சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
மைதா மாவில் 2 தேக்கரண்டி நெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.
சிறிய உருண்டை மாவு எடுத்து மெல்லிய சப்பாத்தியாக தேய்த்து அதில் ஒரு தேக்கரண்டி பூரணம் வைக்கவும்.
ஒரு பாதியில் தண்ணீர் தொட்டு ஒட்டி மூடவும், சோமாசா கரண்டியால் ஓரத்தை வெட்டவும்.
படத்தில் உள்ளது போல் நான்கைந்து செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோமாசாவை போட்டு இரண்டு பக்கமும் திருப்பி விட்டு பொரிக்கவும்.
சுவையான சோமாசா தயார். இதை காற்று புகாத ப்ளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைத்தால் 10 நாட்களுக்கு மேல் கெடாமல் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஸ்வர்ணா சோமாசா தீபாவளி பலகாரத்த எல்லாம் ஒவ்வொன்னா செஞ்சு காண்பிச்சு அசத்துறீங்க. சோமாசா கட் பண்ணுறது அண்ணன் தானே:-)கசகசா சேர்க்கறது காரணம் என்ன ஸ்வர். நிறைய சேர்த்து இருக்கீங்களே.

ஸ்வர் சுழியம் அடுத்தது சோமாசாவா சூப்பர் ................. அசத்துரிங்க வாழ்த்துக்கள்...

உன்னை போல பிறரையும் நேசி.

சுவர்ணா... சோமாஸ் ரொம்ப நல்லா வந்திருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் ரெசிபி ;)
அழகா இருக்கு..
வாழ்த்துக்கள்
ஒரு நாள் கண்டிப்பா செய்து பார்க்கிறேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நல்ல குறிப்பு சுவர்ணா ... நான் செய்யும் பொது சோமாசி மொரு மொறுப்பாக வர வில்லை .அதற்கு என்ன செய்ய வேண்டும் ?

அன்புடன் தோழி
வீணா

ஹாய் வீனாதேவி, மொரு மொறுப்பா வராமல் இருப்பதற்க்கு காரணம் நீங்க சப்பாத்தி மெல்லிசா போடனும்.கொஞ்சம் தின்னா இருந்தா கூட மோரு மொறுப்பு வராது.

///சிறிய உருண்டை மாவு எடுத்து மெல்லிய சப்பாத்தியாக தேய்த்து அதில் ஒரு தேக்கரண்டி பூரணம் வைக்கவும்.///

இந்த மாதிரி செய்து பாருங்க. கண்டிப்பா மொறு மொறு னு வரும்.
ஸ்வர் கொஞ்சம் பிஸி போல பா. சீக்கிரம் வந்து சொல்லுவாங்க wait பண்ணுங்க. :)

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் ஸ்வர்,எப்படிடா தொடர்ந்து அசத்தலான குறிப்புகள் கொடுக்கறீங்க.பிஸியா இருக்கிற போதும் குறிப்புகள் தொடர்ந்து வருது!! பாராட்டுக்கள் ஸ்வர்.

பார்க்கவே ஆசையாயிருக்கு ஸ்வர்.நல்லா வந்திருக்கு,நானும் செஞ்சு பார்க்கறேன் ஸ்வர்.வாழ்த்துக்கள் ஸ்வர்.வழக்கம் போலவே போட்டோஸ் அழகு ஸ்வர்.இனிப்பான குறிப்புகள் தொடர வாழ்த்துக்கள் தங்கம்.

அன்புடன்
நித்திலா

வனக்கம் நித்திலா

சூப்பர் சோமாஸ்.. பார்க்கவே நாக்கூருது பா.. செய்து சாபிடற அளவுக்கு பொருமை இல்ல, எனக்கு பார்சல் பண்ணிடுங்க....

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்......

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி வினோ :) கசகசாதான் பூரணத்துக்கு வாசனையே அதனாலதான் கால் கப் சேர்க்க சொல்லிருக்கேன் பா.சிலர் தேங்காய் அதிகமா சேர்ப்பாங்க அது சீக்கிரம் கெட்டுப்போயிடும் அதான் தேங்காய் குறைத்து கசகசா சேர்த்துள்ளேன்.....
வினோ சோமாசா கட் பண்ணுரது அண்ணா இல்ல என் நாத்தனார் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி தேவி :)எனக்காக எப்பவும் வந்து உடனே பதில் சொல்லுர பாரு அதுக்கும் ஒரு நன்றி..........

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி வனி...:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி ரம்ஸ் கண்டிப்பா செய்து பாத்துட்டு சொல்லுங்க....:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி வீனா.... நீங்க சப்பாத்திய எந்த அளவுக்கு மெல்லியதாக தேய்க்க முடியுமோ அப்படி தேய்த்து போடுங்க நல்ல மொறுமொறுப்பாக வரும்.....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நித்தி மிக்க நன்றிடா..... கண்டிப்பா செய்து பாத்துட்டு சொல்லுப்பா.......

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தீப்ஸ் மிக்க நன்றிப்பா கண்டிப்பா பார்சல் பன்னுரேன் ...:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா,
சோமாஸ் அழகா செய்து இருக்கீங்க.நானும் ஒரு முறை ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

நன்றி தேவி!... கண்டிப்பா செய்து பாத்துட்டு சொல்றேன்

அன்புடன் தோழி
வீணா

நன்றி ஸ்வர்ணா!!!!!

அன்புடன் தோழி
வீணா

அசத்துறீங்க போங்க வாழ்த்துகள். ஆமா செய்தது அண்ணன் தானே

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

சுவர்ணா... சோமாஸ் ரொம்ப நல்லா இருக்கு....
வாழ்த்துக்கள்...

ஹசீன்

வாழ்த்துகளுக்கு நன்றி ஹர்சா.... ட்ரை பன்னிட்டு சொல்லுங்க....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி மஞ்சு ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கீங்க ;)

///ஆமா செய்தது அண்ணன் தானே/// அதான் இல்ல நிச்சயமா நானேதான் செய்தேன் நம்புங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஹசீன்..........

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா,
எளிமையான முறையில் செய்து இருக்கீங்க
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.