ஃபீஜோவா பை

தேதி: April 12, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (5 votes)

 

டாப்பிங் (topping) செய்வதற்கு:
மா - 3/4 கப்
சீனி - அரை கப்
மார்ஜரின் - 100 கிராம்
உலர்த்திய தேங்காய்த் துருவல் (decicated coconut) - கால் கப்
ஷெல் (shell) செய்வதற்கு:
மா - 2 கப்
பேக்கிங் பௌடர் - ஒரு தேக்கரண்டி
மார்ஜரின் - 125 கிராம்
சீனி - கால் கப்
முட்டை - ஒன்று
பால் - 1 அல்லது 2 மேசைக்கரண்டி
ஃபீஜோவா பழங்கள் - 2 1/2 கப் (சதைப் பகுதி மட்டும்)


 

தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். அவனை 180°c வெப்ப நிலையில் முற்சூடுப்படுத்தவும்.
டாப்பிங் செய்வதற்குக் கொடுத்துள்ள அளவு மா, சீனி, தேங்காய்த் துருவல் மூன்றையும் ஒன்றாகக் கலக்கவும். அத்துடன் மார்ஜரின் சேர்த்துப் பிசறி வைக்கவும்.
ஷெல் செய்வதற்கு 2 கோப்பை மா, பேக்கிங் பவுடர் இரண்டையும் சேர்த்து சலித்து எடுக்கவும். அத்துடன் 125 கிராம் மார்ஜரின் சேர்த்து விரலால் நன்கு பிசறவும்.
இதனோடு ஒரு முட்டை, கால் கோப்பை சீனி சேர்த்து நன்கு பிசையவும்.
தேவைக்கு பால் சேர்த்து சற்றுத் தளர்வாகப் பிசைந்து கொள்ளவும். (பால் முழுவதும் தேவைப்படாது.)
20 செ.மீ அளவு வட்டமான கேக் ட்ரேயை ஸ்ப்ரே செய்து அதில் பிசைந்து வைத்துள்ள மாவினை படத்தில் காட்டி இருப்பது போல் கையால் சமனாகப் பரவி விடவும்.
ஃபீஜோவா பழங்களை இரண்டாக வெட்டி சிறிய கரண்டி ஒன்றினால் சதைப் பகுதியைச் சுரண்டி எடுக்கவும்.
பை ஷெல்லின் உள்ளே பரவலாகப் போடவும்.
இரண்டாவது மாக்கலவையை பழம் முழுவதாக மறையுமாறு பரவலாகப் பிசறியது போல் போடவும்.
25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
சூடாகப் பரிமாறவும். விரும்பினால் க்ரீம் அல்லது ஐஸ்க்ரீம் சேர்த்துப் பரிமாறலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முகப்புல பேர் பாக்கும் போதே நினைச்சேன், நீங்களாத்தான் இருக்கும்ன்னு.
எல்லாமே புது புது பேரா இருக்கே :-(
அது என்ன ஃபீஜோவா பழங்கள்?? மா??

ரொம்ப புது முறைல பண்ணி காட்டி இருக்கீங்க, படங்கள் விளக்கம் எல்லாமே சூப்பரோ சூப்பர் :) :)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இமா செய்து பார்க்கனும்னு ஆசையா இருக்கு எனக்கும் அது என்ன பழம்னு தெரியல்ல வேறு ஏதாவது பழங்கள் சேர்த்துப் பண்ண முடியுமா? பேரீட்சம்பழம் சேர்த்தால் நன்றாக இருக்கும்னு தோனுது/ அப்படி செய்ய முடியுமா

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

இமா மேடம்,
முகப்பில் பார்த்ததும் உங்க குறிப்பு என்பதை கண்டு கொண்டேன்
பிஜோவா எப்படி இருக்கும் ?இனிப்பா இருக்குமா?இங்கு பார்த்ததே இல்லை
வேறு எதை கொண்டு செய்யலாம்?மா என்றால் மைதாவா ?
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சுகி & கவிதா, வைடமின் சீ அதிகம் உள்ள பழம் இது. காய் நீளமாக இருக்கும்; சுவையில் கொய்யாக்காய் போல இருக்கும். மெலிதான புளிப்புச்சுவை தெரியும். பழம் இனிமை. சாப்பிட ஆரம்பித்தால் சுலபத்தில் நிறுத்த மாட்டேன். ;)) உள்ளே ஜெலி மாதிரி இருக்கும்; இரண்டாக நறுக்கி வைத்து கரண்டியால் சுரண்டிச் சாப்பிட வேண்டும். கீவியும் ஃபீஜோவாவும் சாப்பிடவென்றே விசேட கரண்டிகள் உள்ளன. இங்கு இப்போ ஃபீஜோவா சீசன். மேலும் விபரத்துக்கு http://en.wikipedia.org/wiki/Acca_sellowiana பாருங்கள்.

//மா// ம். அதுவேதான். ;)) நாங்கள் 'மைதா' சொல்வதில்லை, இல்லையா பூங்காற்று! ;)

பூங்காற்று, பேரீச்சை... ம்ஹூம். இதே சுவை, கிடைக்காது. இறுக்கமாகவும் இருக்கும். வாழைப்பழம்... புளிக்கதலி பொருத்தமாக இருக்கும்.
ஸ்டூட் (stewed) ஆப்பிள் / பெயார்ஸ் போன்றவை சுவை வேறுபட்டாலும் ஓரளவு சரியாக இருக்கும். ஸ்டூ செய்யும் போது தேவையான அளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள். ஃபீஜோவா சுவைக்கு பை ஷெல் உயரமாக இருப்பது சரியாக இருந்தது. வாழைப்பழத்துக்கும் இதே உயரம் வைத்துக் கொள்ளலாம். ஆப்பிள், பெயார்ஸுக்கானால் கொஞ்சம் பெரிய தட்டு எடுத்து உயரம் குறைவாக வருவது போல் செய்தால் நல்லது.

‍- இமா க்றிஸ்

இமா வித்தியாசமான குறிப்பு வாழ்த்துக்கள்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இமாம்மா உங்க குறிப்புகள் எல்லாமே வித்தியாசமாதான் இருக்கு. ஃபீஜோவா பழங்கள் பேரும் இப்பதான் கேள்விபடுறோம். இன்னும் பல புது குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

இமா,
ஃபீஜோவா பை பார்க்கவே சாப்பிட தூண்டுது.சுவை எப்படி இருக்கும்னு தெரிந்து கொள்ள ஆவலா இருக்கு.ஃபீஜோவா இங்கு கிடைக்குமானு தெரியல. ;-)
சீக்கிரம் கூட்டாஞ்சோறு பகுதியில் இணைய வாழ்த்துக்கள்.

இமாம்மா உங்க குறிப்பு வித்தியாசமா இருக்கு. ஃபீஜோவா பழங்கள் பேரும் இப்பதான் கேள்வி படுகிறேன். எப்படி இருக்கும் அந்த பழம்.

அப்படியே கொஞ்சம் பார்சல் அனுப்புங்க அம்மா.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

இமா டீச்சர்... முகப்பில் பெயர் கண்டதும் தெரிந்தது இது நம்ம ஆள் தான்னு... உங்க குறிப்பை விட எனக்கு எப்பவுமே நீங்க அதை ப்ரெசண்ட் பண்ணும் விதம் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்குது... அத்தனை அழகா கொடுக்கறீங்க. படங்கள் நினைவில் நிக்குது... அத்தனை தெளிவு. சூப்பர் இமா. இனி இந்த பழத்தை நான் தேடனும்... பெட்டர் நீங்க அடுத்த முறை வரும்போது பழத்தை கொண்டு வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்தியாசமான குறிப்பு இமா

Jaleelakamal