கத்தரிக்காய் காரக்குழம்பு

தேதி: September 10, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (7 votes)

 

கத்தரிக்காய் - கால் கிலோ
வெங்காயம் - அரை கப்
தக்காளி - கால் கப்
பூண்டு பல் -
புளி - ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி (அ) மிளகாய் தூள் + தனியா தூள் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைபதற்கு:
தேங்காய் - 2 மேசைக்கரண்டி
தக்காளி - ஒன்று
தாளிக்க :
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு


 

எண்ணெய் சூடானதும், தாளிக்க கொடுத்துள்ளதை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.
கத்தரிகாயை நான்காக அரிந்து தக்காளிக்கு பின் சேர்த்து வதக்கவும்.
சாம்பார் பொடி சேர்த்து ஒரு முறை பிரட்டி புளி தண்ணீர் சேர்க்கவும். தேவையானால் மேலும் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ளதை அரைத்து கொதிக்கும் குழம்பில் ஊற்றவும்.
கடைசியாக உப்பு மற்றும் அரை தேக்கரண்டி வெந்தயத்தை பொடி செய்து குழம்பில் கொட்டி கொதிக்க விடவும்.
காய்கறிகள் வெந்து எண்ணெய் மேல மிதந்ததும் தீயை அணைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

The tips given was very good. I have cooked a delicious kathrikka kaarakkulambu ... thanks

Very good

லாவண்யா , கத்திரிக்காய் குழம்பு சூப்பரா வந்தது.நல்ல ருசி.வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருநதது.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மூர்த்தி மேடம் உங்களோட இந்த கத்தரிக்கா காரக்குழம்பு மிக சுவையாக இருந்தது. நன்றி.

மேடம் எல்லாம் வேண்டாம். உங்களின் பின்னூடத்திற்கு மிக்க நன்றி.

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!