சிக்கன் சுக்கா

தேதி: December 31, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சிக்கன் -- 1 கிலோ (சிறிதாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் -- 3 என்னம் (பெரிய சதுரமாக வெட்டியது)
இஞ்சி -- 1 துண்டு
பச்சைமிளகாய் -- 2 என்னம் (நீளமாக நறுக்கியது)
பூண்டு -- 1 என்னம்
மிளகாய் தூள் -- 1 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் -- 1 டேபிள் ஸ்பூன்
சோம்புத்தூள் -- 1 ஸ்பூன்
கறிமசால்தூள் -- 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் -- 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை -- 1கப்
எண்ணைய் -- 2 கப்
உப்பு -- ருசிக்கேற்ப


 

சிக்கனில் மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து 1/2 மணிநேரம் ஊற வைக்கவேண்டும்.
இஞ்சி, பூண்டை அரைக்கவும்.
பின்பு வாணலியில் எண்ணைய் ஊற்றி கோழிக்கறியை வறுத்து எடுக்கவும்.
மீதம் உள்ள எண்ணையில் நறுக்கிய பெரிய வெங்காயம், அரைத்த இஞ்சி,பூண்டு கலவை, நறுக்கிய பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் பொரித்த கோழித்துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தேவை எனில் மேலே டொமோட்டோ சாஸ், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை போடலாம்.
சுவையான சுக்கா சிக்கன் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

சுபா இதில் எங்கெங்கயோ என்னென்னவோ இடிக்குதே..செக் பன்னி சொல்லுங்க பாப்போம்.

ஹாய் ரூபி,
எங்கே எழுத என தெரியாததால் இங்கே எழுதுகிறேன்.
ஒரு சிறிய ஹெல்ப்.
Abudhabi யில் உள்ள "novotel"பின்புறம் உள்ள "arab udupi"யில் சாப்பிட்டு உள்ளீர்களா?
அங்கே உள்ள வெஜ் ஃப்ரைட் ரைஸ் டேஸ்ட் எப்டி என்று தெரிந்தால் உடனே எனக்கு சொல்லுங்களேன்..
அங்கே சாப்பிடது போல் வேறு எங்கும் எனக்கு பிடிக்கவில்லை...ப்ளீஸ்.. ஹெல்ப் மீ

சுபா நாங்கள் வாரத்தில் ஒரு நாள் கன்டிப்பா வெளிய சாப்பிடுவோம்..ஆனால் kfc,mc, pizza hut, hardees,oasis,golden fork adikkadi sangeetha தவிற எங்கும் எதையும் சாப்பிட்டதில்லை..once i went to arab uduppi but i had mutton grav and naan.ஆனால் ஃப்ரைட் ரைஸ் வெஜ் நா செய்வேன்..இங்க என் சொந்தங்களுக்கு பிடிக்கும்.நெய்யில் கேரட்,பீன்ஸ் பட்டானி என்ன ஒன்னொன்றாய் கொஞ்சம் இஞ்சி பூண்டு நறுக்கியது சேர்த்து வதக்கி பாதி வெந்த ரைஸில் இட்டு சோய் சாஸ் சேர்த்து கொஞ்சம் வெஜெடபில் ச்டாக் சேத்து செய்யும் முறை அது..ஆனா கன்டிப்பா போய் (arab uduppi)சாப்பிட்டுட்டு சொல்றேன்..