மனதை உறுத்தும் சில சந்தேகம்

அன்பு தோழிகளே , காலை வணக்கம்
நான் 5 மாதம் கர்ப்பம் .. இது எனக்கு இரண்டவது குழந்தை ... என் சந்தேகம் என்வென்றால் கொடி சுத்தி பிறக்கும் குழந்தைக்கு என்னென்ன problems வரும் ?.யதனால் அப்படி நடக்கிறது ? பிறக்கும் குழந்தைக்கு நோய்
எதிர்ப்பு சக்தி இல்லையென்றால் என்னவாகும் ? ஏன் குறை பிரசவம் ஆகிறது ?வெயிட் கம்மி என்றல் என்னவாகும்?

முதல்ல இந்த நேரத்தில் இது போல் நினைப்பு, பயத்தை விடுங்க... அது தான் குழந்தையை பாதிக்கும். பாசிடிவ் தாட்ஸ் இருக்கனும் எப்பவும். எந்த குறையும் இல்லாம ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். வாழ்த்துக்களும், பிராத்தனைகளும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ராஜி.,

படுத்திருக்கும்போது நேரா எந்திருச்சு திரும்பி படுங்க. படுத்தவாக்கிலேயே திரும்பி படுத்திராதீங்கபா. கொடி சுத்தி பிறந்தாலும் பயப்பட ஒன்னுமே இல்லை. அப்படி பிறந்த குழந்தையும் ஆரோக்கியமாதான் இருக்காங்க;)

நோய் எதிர்ப்பு சக்தி குறைவா இருந்தாலும் பரவாயில்லை, வெயிட் கம்மியா இருந்தாலும் பரவாயில்லைபா ஏன்னா தாய்ப்பாலில் அதிக நேய் எதிர்ப்புசக்தி இருக்கு. குழந்தையும் நல்லா ஊறும் ( வெயிட் போடும் ).

ஏழு மாதத்திலும் அதற்கு குறைவா உள்ளங்கை அளவுக்கு பிறந்த குழந்தையகூட பாத்திருக்கேன். அவங்க பின்னாளில் மிகுந்த அறிவும் சுட்டிப்புமா இருந்ததை கண்கூடா பாத்திருக்கேன்.

என் இரண்டாவது பொண்ணு இரண்டரை கிலோ மட்டுமே இருந்தப்ப என் கசின் அவங்க பொண்ணக்காமிச்சு இவ பிறந்தப்ப இரண்டு கிலோகூட இல்ல இப்ப சொன்னா யாராவது நம்புவாங்களான்னு காமிச்சா;) என் பொண்ணும் கடவுள் அருளில் இப்ப நல்லாதான் இருக்கா;)

அதனால எதுக்கும் பயப்படாதீங்கபா. நல்லா தூங்கி எந்திரிங்க, வாக்கிங்க் போங்க, மனசுக்கு பிடிச்சத சாப்பிடுங்க, நல்ல இசை கேளுங்க, நிறய தண்ணி குடிங்க. வனி சொன்னதுபோல நல்லதையே நினைங்க;) உங்க குழந்தைக்கு உங்க அம்மா நான் இருக்கேன்னு தையிரியம் சொல்லுங்க.., ஆரோக்கியமான குழந்தை பிறக்க என்றென்றும் என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்;-)

அன்புடன்
ஜெய்.

Don't Worry Be Happy.

நன்றி பா . நான் பயப்படவில்லை நான் என் பக்கத்து வீட்டில் நடந்ததை தன
கேட்டன்...

மேலும் சில பதிவுகள்