ஸைலன்ஸ்

என்ன பாக்கறீங்க.. இது நம்ம அரட்டைக்கு துளியும் சம்மந்தமில்லாத வார்த்தை.. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு தான் நானே சிந்திச்சு வெச்சேன்.. ஹீஹீஹீ எப்படி இருக்கு ?

அப்பாடா நான் தான் அரட்டை அடுத்த இழை துவங்கி இருக்கேன்.. கடமை முடிந்தது.. எத்தனை நாள் ஆச்சு.. இழை துவங்கி :)

எல்லாரும் ஓடி வாங்கனு கூப்பிடவே வேண்டாம்..என்னவோ அரட்டைக்கு நாம கூப்பிட்டாத் தான் வருவோம் மாதிரி... :)
எல்லாரும் சேர்கிற களமே இது தானே ....

ஒன்று பிரச்சனை இல்லை. ஒரு சில வீடுகளில் விரிசல் அவ்வளவுதான். ஆனால் பயம்தான் போக மாட்டேங்கறது. இன்று இரவு சிவராத்திரிதான்.

அன்புடன்
THAVAM

உண்மைதான் அண்ணா........போர்கள் முக்கிய காரணம்.....விலங்குகளுக்கு நம்மை விட 6த் சென்ஸ் அதிகம் அண்ணா........இயற்கையை அப்படியே பிரதிபலிக்கும்.ஆனால் நமக்குதான் அவை புரிவதில்லை.....
ஜெயா:
விடுங்கள் அதுதான் நான் இருக்கேனே உங்களின் தோழியாக.என் பெயர் பிடித்துள்ளதா?
வனி: சரி தெரிந்தவர்களிடம் கேட்டு சொல்லுங்கள்.....

என் குழந்தைகள் இரண்டுபேருக்கும் பாலிசி போட நினைத்தப்போ அவங்க சொன்னது குழந்தைகளுக்கு வேண்டாம் உங்க பேர்ல போட்டு குழந்தைய நாமினியா போடுங்கன்னுதான். அதனால நாங்க குழந்தைக்கு போடலைபா. அப்புறம் இப்ப புது புது பாலிசி நிறய வந்துருச்சு அதனால அவ்வளவு டீடெய்ல் எனக்கு தெரியாது. அப்போ எப்படி தனி இழையில அதப்பத்தி சொல்ல முடியும் அதான் விசயம்பா..

Don't Worry Be Happy.

யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை யாழினி, பயம்தான் இன்னும் போகலை... புதிய அனுபவம் இல்லையா அதான் ஒரு பயம்... இனிமே அடிக்கடி வரப்போகுதில்லே... அதனால சமாளிக்கற பக்குவம் வந்துடும்.

அன்புடன்
THAVAM

தவம் அண்ணா!முன்பு கவிஞர் என்றீர் பின்பு பொய்யர் என்கிறீர் ஏனய்யா உமக்கு இந்த ஓரவஞ்சனை!கூறும்!கூறி பாரும்!இதுதான் வஞ்ச புகழ்ச்சி அணி என்பதோ?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

இரண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி இங்கேயும் (அஜ்மான் சார்ஜாவில்) நிலநடுக்கம் ஏற்பட்டது. அது மதியம் மூணு மணிக்கு.... நாங்க இருந்தது கீழ்தளத்தில்... அதனால எனக்கு தெரியலை... ஏழாவது மாடியில இருந்து என் ஃபிரண்ட் எனக்கு ஃபோன் பண்ணி வெளிய வர சொன்னாள். அது லேசான நிலநடுக்கம்.. அப்புறம் இரவும் வரும்னு அங்கே ரேடியோவில அறிவிச்சாங்க.. வெளியேவும் இருக்க முடியாது பயங்கர வெப்பம்... நாங்க இரவு பூரா விழித்திருந்து அப்புறமா தூங்கிட்டோம்;-) ஆனா அன்னிக்கு இரவு நிலநடுக்கம் வரலை.. இரண்டு மூணு நாள் பயமாவே இருந்துச்சு அப்புறம் சகஜமாயிட்டோம்..என்ன ஒரு பயம்னா போனா ஊர்ல சொந்தக்காரங்களோடு போகனும் இப்படி தனியா யாருன்னே கண்டுபிடிக்க முடியாதவாரு போயிடுவோமோங்கிற காரணம்தான்....

Don't Worry Be Happy.

ரேனுகா lic.com போய் பாருங்க உங்கள் குழந்தைகளுக்கு தேவையான பிளான்கள் இருக்கு.
Jeevan Anurag
Komal Jeevan
CDA Endowment Vesting At 21
Marriage Endowment Or
Educational Annuity Plan
CDA Endowment Vesting At 18
Jeevan Kishore Jeevan Chhaya
Child Career Plan Child Future Plan

அன்புடன்
THAVAM

உன்மைதான், நாமல்லாம் பாதுகாப்பா இருக்கிறோம் என்ற உணர்வே போய்ட்டது. உங்க உணர்வுகள் சரிதாங்க. நம்ம சொந்தகாரங்க இருந்தால் கொஞ்சம் பயமில்லாமல் இருக்கலாம்தான். போறதில ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனால் இடிபாடுகளுகிடையே மாட்டிக்காம போய்ட்டால் போதும்.

அன்புடன்
THAVAM

ஆமாம் அண்ணா ஒரு முறை அதை சந்திச்சுட்டோம்னா அதன் பிறகு நான் மனதளவில் தயாராகி விடுவோம். இன்னும் இருக்கும்னு எதுவும் அறிவிச்சு இருக்காங்கலா அண்ணா.

வனி என்ன ஒரு சந்தோஷம்பா உங்களுக்கு. செட் கிடைச்சதுல

தவமணி ஆசிரியர் அவர்களே!இந்த மாணவனுக்கு ஓர் சந்தேகம்.பூகம்பம் என்பது பூமிக்கு அடியில் உள்ள பாறைகள் நகர்வதால் ஏற்படும் விளைவுதானே?ஒன்றை கவனித்தீரா?மனிதன் ஆறரிவு படைத்தவனாய் இருப்பினும் பறவைகள்,விலங்குகள் போல் அதை உணரும் சக்தி இல்லையே!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்