பலாக்கொட்டை சாம்பார்

தேதி: July 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

துவரம்பருப்பு - 100 கிராம்
பலாக்கொட்டை - ஒரு கப்
புளி - சிறு உருண்டை
சின்னவெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 2
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
வரமிளகாய் - 2
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - கால் தேக்கரண்டி
வெந்தயம் - சிறிதளவு
சீரகம் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு


 

பருப்பை கழுவி விட்டு குக்கரில் போட்டு ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.
பலாக்கொட்டையை தோல் சீவவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை கீறி வைக்கவும்.
வேக வைத்த பருப்பில் பலாக்கொட்டை, மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு, புளிக்கரைசல், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்க்கவும்.
அதனுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து 3 விசில் விட்டு வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வரமிளகாயை கிள்ளி போட்டு தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
குக்கரை திறந்து தாளித்த பொருளை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
மல்லித்தழை தூவி பரிமாறவும். சுவையான பலாக்கொட்டை சாம்பார் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

படம் பார்த்தா நல்லாருக்கும் மாதிரி இருக்கு. கெதியா ட்ரை பண்ணிட்டு வந்து சொல்றேன்.

‍- இமா க்றிஸ்

ஹய்யா!! நீங்கதான்னு கரெக்ட்டா கண்டு பிடிச்சுட்டேன் ஸ்வர்.

போட்டோஸ் சூப்பர் ஸ்வர்!என்ன ஒரு அழகு!!எப்பவும் அழகுதான்,இந்த முறை

இன்னும் அழகு,ஸ்பெஷல் பாராட்டுக்கள் ஸ்வர்.பலாக்கொட்டை சாம்பார்,பார்க்கும்

போதே மனசை அள்ளுது ஸ்வர்,டேஸ்ட்டும் அசத்தலாவே இருக்கும்.

அடுத்த முறை சாம்பார் செய்யறப்ப,உங்க குறிப்புபடி செஞ்சு பார்க்கிறேன்

ஸ்வர்.என் தங்கத்திற்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

அன்புடன்
நித்திலா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு எனது நன்றிகள்..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இமா சாப்பிடவும் நல்லாருக்கும் :)) முதலாய் வந்துருக்கீங்க நன்றி.. கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நித்தி உன் வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப ரொம்ப சந்தோசம் பா...:))

வாழ்த்திற்க்கும்,பாராட்டிற்க்கும் மிக்க நன்றி நித்தி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ம் சூப்பர் ஸ்வர் பலாகொட்டை மட்டும் போட்டு சாம்பார் வெச்சி இருக்கிங்க. அம்மா காய்கறஇயும் போடுவாங்க சரி நான் அம்மா கிட்ட சொல்லுரேன் உங்க முறையல் செய்ய சொல்லுரேன். வாழ்த்துக்கள் ;)))

உன்னை போல பிறரையும் நேசி.

ஸ்வர்ணா என்னப்பா பலாக்கொட்டை வாரம்மா?எனக்கு ரொம்ப புடிக்கும் எப்படிவைத்தாலும்சாப்பிடுவேன் ஞாபகப் படுத்திட்டீங்க சீக்கிரம் செய்துடுறேன் வாழ்த்துக்கள்

each step by step photos are very colourful , photos and recipe came out very well.keep it up. regards.g.gomathi.

நாங்க செய்வது போலவே செய்யுறீங்க. ஆனா புளி கரைசல் கடைசியாக தானே சேர்ப்பாங்க.. முன்பே சேர்த்தால் சுவை கெடாதா? புளி சேர்த்தா ரொம்ப நேரம் அடுப்பில் வைக்க கூடாதுன்னு சொல்வாங்க. அதான் கேட்டேன். நாங்க எல்லாம் சேர்த்து குக்கரில் வைத்து எடுத்து பின் தாளித்து, புளி கரைசல் சேர்த்து ஒரி கொதி விட்டு எடுப்போம். உங்க முறையில் செய்து பார்க்கிறேன். நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேவி வாழ்த்துக்கு நன்றிப்பா. பலாக்கொட்டையோட காயும் சேர்த்து போடலாம்ப்பா,முருங்கைகாய்,மாங்காய் சேர்த்து போடலாம், நான் போடமாட்டேன் ஏன்னா அண்ணாவுக்கு கலந்து போட்டா பிடிக்காது :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி பாத்திமா.எனக்கும் ரொம்ப பிடிக்கும்:) செய்துட்டு சொல்லுங்க :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி கோமதி :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி புளி சேர்ப்பதால் சுவை மாறாதுங்க,என்ன முன்னலாம் சொல்லுவாங்க காயோட புளி சேர்த்தா வேக நேரம் ஆகும்னு இப்பதான் குக்கரில் வச்சிடுறோமே அதனால புளி சேர்த்துடலாம் நாங்க அப்படித்தான் செய்றோம் பா .

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அழகான படங்கள்

நல்ல குறிப்பு

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஆமினா. எங்க போனீங்க இத்தனை நாளா? இந்த பக்கம் வரவே இல்லயே?

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பலாக்கொட்டை சாம்பார் அருமை ஸ்வர்ணா

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மிக்க நன்றி குமாரி...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா,

சுவையான சாம்பார் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஸ்வர்ணா,
பலாக்கொட்டை வாசனையுடன் சாம்பார் சூப்பரா இருக்கும்.ஊருக்கு வந்ததும் தான் செய்யணும்.உங்க செய்முறையும் ஈசியா இருக்கு.வாழ்த்துக்கள்.

தெளிவான படங்கள்.. சூப்பர் சாம்பார். இதென்ன சீசனா.. எல்லாரும் பலக்கொட்டையை விட மாட்ட்றீங்க..;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாழ்த்துக்கு மிக்க நன்றி கவி...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அன்பு....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி ரம்ஸ்... ஆமாம்ப்பா இங்க பலாப்பழம் சீசன் அதான் :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா,
உங்க முறைப்படி முருங்கைக்காயில் சாம்பார் வைத்தேன்.ரொம்ப நல்லா இருந்தது.குறிப்புக்கு நன்றி.(பலாக்கொட்டை கிடைக்கல.)

சாரிப்பா இப்பதான் பார்க்கிறேன் உங்க பதிவை :(
உங்களுக்கு பிடிச்சதில் சந்தோசமே மிக்க நன்றி அன்பு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.