'குணசிறி புல்டோ' (bulto toffee from Sri Lanka)

யாரிடமாவது 'புல்டோ' (bulto toffee) செய்முறை கிடைக்குமா? கொடுத்து உதவ முடியுமா?

இமா, பல்கிஸ்.......... நீங்க சொல்லும் புல்டோ, கல்கோனா போன்றவைகளின் செய்முறைகள் பார்த்தால் எங்க அம்மா வீட்டிலேயே செய்யும் கமர்கட், கட்டாமிட்டா போன்றல்லவா இருக்கு. ஒருவேளை புல்டோ, கல்கோனா போன்றவை கமர்கட் தானா.........? இல்லை வேறையா................? இரண்டும் ஒன்றென்றால் எங்க அம்மா கிட்ட அளவுகள் கேட்டு சொல்கிறேன் தோழீஸ். ஹோஒ........ கமர்கட், கட்டாமிட்டா வின் ருசியையு வாசனையும் நினைத்தாலே மனம் மயங்குதப்பா.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

கமர்கட், கல்கோனா வேறு. ஆனா இமா சொல்லும் புல்டோ கமர்கட்டாக இருக்க வாய்ப்பு இருக்கு. எல் சேர்ப்பதில்லைன்னு சொல்றதால். ஆனா கமர்கட்டில் 2 வகை உண்டே... ஒன்னு தேங்காய் சேர்ப்பது, இன்னொன்னு தேங்காய் இல்லாதது. இம்மா சொல்றது எது?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேங்காய் இல்லாதது சொல்லுங்க வனீ.

இந்தியாவில ஒருத்தர் கமர்கட் கொடுத்தாங்க. ;) குட்டி குட்டியா இருந்துது. தேங்காய்ப்பூ சேர்த்து.

சுவை, வாசனை கலர் எல்லாம் புல்டோ போலதான் இருந்தது. ஆனால் புல்டோ அப்படி கடினமாக இருக்கும். தேங்காய்ப்பூ போடுவாங்க, தெரியவே தெரியாது. கமர்கட் வெளியே கொஞ்சம் ஈரப்பதமாக.. பிசுபிசுன்னு இருக்குமா? புல்டோ அப்படி இராது.

சரி.. நீங்க தெரிஞ்ச ரெசிபியை சொல்லுங்க வனி, பார்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

http://www.arusuvai.com/tamil/node/13875
http://www.arusuvai.com/tamil/node/5650
http://arusuvai.com/tamil/node/1317

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தாங்ஸ் வனி. இது மூணும் முன்னாடியே பார்த்துட்டேன். எப்பிடி அந்தக் கருப்பு கலர் வரும்னு தான் தெரியல. ரெண்டாவது குறிப்பு இல்லை.

எதுக்கும் முதலாவது ரெசிபியை ஒரு தடவை ட்ரை பண்ணிரணும். நாளை இதான் வேலை எனக்கு. ;)

‍- இமா க்றிஸ்

இமா குளிக்கேல தான் ஞாபகம் வருது அரிசியும் கொஞ்சம் பொருச்சு வருத்த தேங்காப்பூ எல்லு பொருச்ச அரிசி மூணையும் நர நரவென பொடி பண்னிக்கொள்ள வேண்டும் இதைத்தான் பாகில் போட வேண்டும்
சாப்பிடும் போது தேங்காப்பூ மட்டும் லேசா நாக்கில் தெரியும்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

இது எல்லாமே செய்தா நிறம் டார்க்கா தான் இருக்கும். வெல்லப்பாகு காய்ச்சுவதால். எங்க பெரியம்மா செய்து பார்த்திருக்கேன்... நான் இதுவரை செய்ததில்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப தாங்ஸ். நாளை பரிசோதனையில் இறங்குகிறேன். ;)

‍- இமா க்றிஸ்

இமா இப்படி வேர இருக்கா
நெஜமாவே என்க்கு இது தெரியாது மன்னிக்கனும்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

என் வேண்டுகோளை நிறைவேற்றியமைக்கு மிக்க நன்றி பல்கிஸ். @}->-- பரவாயில்லை, தெரிந்திருந்தால் போட்டிருக்க மாட்டீர்கள்தானே. :)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்