ஆந்திரா சிக்கன் கிரேவி

தேதி: August 16, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (6 votes)

 

கோழி- அரைகிலோ
வெங்காயம்-2
தக்காளி-3
கறிவேப்பிலை- ஒரு கொத்து
இஞ்சிபூடு விழுது-3 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய்-2 மேசைகரண்டி
வறுத்து அரைக்க:-
தனியா-2 ஸ்பூன்
மிளகு-1/2 ஸ்பூன்
பட்டை-1
லவங்கம்-3
ஏலக்காய்-3
வரமிளகாய்-4
சீரகம்- 1/2 ஸ்பூன்
பூடு-8 பல்


 

வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மையாக அரைத்து தயாராக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலை, வெங்காயம் தாளிக்கவும்

பின் இஞ்சி பூடு விழுதும் அதன் பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

இப்போது கறியை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்

கறியின் நிறம் மாறி சற்று சுருக்கிங்கினால் போல் வரும் சமயத்தில் மசாலாவும் உப்பும் சேர்த்து வதக்கவும்.

தேவைக்கு நீர் ஊற்றி வேக வைத்து பின் இறக்கவும்.


சங்கட்டி மற்றும் சாதவகைகளுக்கு பொருந்தும். தனியா மட்டும் கடைசியாக அடுப்பை அணைத்தபின் அதன் சூட்டில் வறுத்தால் போதுமானது.

மேலும் சில குறிப்புகள்


Comments

super .
thanks,
Eniya

மிக்க நன்றி இனியா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆந்திரா சிக்கன் கிரேவி செய்து பார்க்கிறேன் ஆமினா நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மிக்க நன்றி குமாரி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

romba nanraha irundadu...

மிக்க நன்றி அனிஷா...

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Ammeena..Madam, superb andhra chicken senju pathen..chance a illa..amma seira taste kedacha thu..innakum Andra Chicken tha spl..en hostel a irukka north indians ellarum taste panni pathu asanthu taanga..thanks..intha mathree Coconut use pannama..spicy items nerya upload pannunga[Hostel a Mixie la use panna mudiyathu..inga Coconut kedaikartahum kastam]Naa ithuku kandeppa comment kodukkanum tha member aanen,,.,Thanks a lot..

ரொம்ப சந்தோஷம் பிரபாகரன்...அங்கே தேங்காய் கெடைப்பது ரொம்ப கஷ்ட்டம்ல? :-)

கருத்திட்டு ஊக்கப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி சகோ

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா