ஓட்ஸ் சாதவடகம்.

தேதி: August 29, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

சாதம் - மீதமான சாதம்
ஓட்ஸ் - ஒரு கப்
சின்ன வெங்காயம் - இரண்டு கப்
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - இரண்டு


 

முதல் நாள் இரவு மீந்துபோன சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும் ,காலையில் அதை பிழிந்து மிக்ஸ்ய் ஜாரில் போட்டு அதனுடன் பெருங்காயம்,சீரகம்,உப்பு,ஓட்ஸ் சேர்த்து நன்றாக அரைக்கவும்.(ஓட்சை வறுத்து அரைக்கவும்)
அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து சுத்தமான துணியில் கையால் கில்லி வைக்கவும்
இரண்டு நாள் நன்றாக வெயிலில் காய்ந்தால் வடகம் ரெடி.சாத வைகளுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.(ஓட்ஸ் சேர்த்தது போலவே தெரியாது )


மேலும் சில குறிப்புகள்


Comments

ஓட்சில் வடகமா? நான் கேள்விபட்டது இல்லை.செய்து பார்க்கிறேன் மா.

ஹாய்
கௌசல்யா
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி ஆமாம் நல்லா இருக்கும்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி,

ஓட்சில் வடகமா?கலக்குங்க!!!
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய்
கவி
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி ஆமாம் நல்லா இருக்கும் செய்தேன் கவி போடோஸ் கூட எடுத்தேன் என் பொண்ணு தான் என்ன பன்னுனாலோ அதுவரை செய்து எடுத்த குறிப்பு போட்டோ எல்லாம் டெல் ஆஹிட்டு :( அடுத்த முறை செய்தால் போட்டோ அனுப்புறேன்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வாழ்த்துக்கள் குமாரி. தினமும் ஓட்ஸ் சாப்பிடனும்னு நினைப்பேன். ஆனால் இந்த பழைய சாதம் எல்லாவற்றையும் தடுத்துவிடும். ரெண்டையும் சேர்த்து ஒரு ரெசிபி கொடுத்து என்னை ரொம்ப சந்தோஷப்படுத்திட்டீங்க..... வித்தியாசமான முயற்சிக்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

தினமும் சாப்பிட சுவையாக இருக்கும் செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க பிரியா வாழ்த்துக்கு நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪