தேதி: September 9, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோதுமை ரவை - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப் (அ) சுவைக்கேற்ப
நெய் - 2 மேசைக்கரண்டி
முந்திரி - 8 -10
காய்ந்த திராட்சை - 10-15
ஏலக்காய் - 2
கேசரி கலர் - 2 பின்ச்
தண்ணீர் - 3 கப்
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெறும் கடாயில், கோதுமை ரவையை லேசாக வறுத்துக் கொள்ளவும். தீ மெல்லியதாக இருத்தல் அவசியம். வறுத்த ரவையை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

அடுத்து, ஒரு குழிவான கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை போட்டு சூடாக்கி அதில் முந்திரி, காய்ந்த திராட்சையை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு பொன்னிறமாக வறுக்கவும். இதை தனியே ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

பிறகு அதே பாத்திரத்தில், 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், கேசரி கலர் சேர்க்கவும்.

சர்க்கரை கரைந்து, மேலும் ஒரு கொதி வரும் நிலையில், வறுத்து வைத்த கோதுமை ரவையை, சிறிது சிறிதாக கொட்டி, கட்டி விழாமல் கலக்கவும். 2,3 தேக்கரண்டி நெய்யை அவ்வப்போது விட்டு, கிளறிக்கொண்டே இருக்கவும்.

தண்ணீர் எல்லாம் வற்றி, கோதுமை ரவை வெந்தபதம் வந்ததும், ஏற்கனவே வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சையை சேர்க்கவும்.

மீதமுள்ள நெய்யையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

சுவையான கோதுமை ரவை கேசரி தயார்.

சர்க்கரை அளவை அவரவர் விருப்பம் போல குறைத்து, கூட்டிக் கொள்ளலாம். கேசரி முடிக்கும் போது கொஞ்சம் தண்ணீர் விட்டதுப்போல தெரிந்தாலும், சிறிது நேரம் ஆறியதும், கெட்டிப்பட்டு விடும்.
Comments
சுஸ்ரீ
குறிப்பெல்லாம் அசத்தறீங்க. உங்க முதல் குறிப்பில் முதல் பதிவு என்னுடையது தான் :) ரொம்ப ஆரோக்கியமான ரவை இது. அதுவும் கலர் சூப்பர். :) அடுத்தமுறை கேசரி உங்க முறை தான். இனி நிறைய குறிப்புகள் கொடுங்க. வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சுஸ்ரீ
முதல் குறிப்பா, ஸ்வீட் ஓட தொடங்கி இருக்கீங்க, கலரே சூப்பர் ஹ இருக்கு. வாழ்த்துக்கள். இன்னும் நிறையா குறிப்பு தரனும் :-)
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
சுப ஸ்ரீ சூப்பர் குறிப்பு பா.
சுப ஸ்ரீ சூப்பர் குறிப்பு பா. எனக்கு ஒரு தட்டு ஓ.கே வா.
கேசரி சூப்பர்
கேசரி கலர் நல்லா இருக்கு,டேஸ்டும் அபாரமாகத்தான் இருக்கும்,வாழ்த்துக்கள் susri
Eat healthy
சுஸ்ரீ
ஆஹா சூப்பர் கேசரி சுஸ்ரீ. முதல் குறிப்பு ஸ்வீட்டோட ஆரம்பிச்சாச்சு போல சூப்பர் சூப்பர். பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு படங்களும் ரொம்ப தெளிவா இருக்கு. இனி என்ன அடுத்து அடுத்து குறிப்புகள் கொடுத்து அசத்திடுங்க சுஸ்ரீ.
சுஸ்ரீ
சுஸ்ரீ இனிப்பான சத்துள்ள கேசரி. உங்க முதல் குறிப்பா இனி தொடர்ந்து நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.
ஸ்வீட்
முதல் குறிப்பை ச்வீட்டுடன் ஆரம்பிச்சிருக்கீங்க. கோதுமை ரவை நல்ல சத்துள்ள உணவுதான் மேலும் நிறைய சத்தான குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.
சுஸ்ரீ
கோதுமை ரவை கேசரி நல்லா இருக்கு பா நானும் செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
எப்புடீடீடீ!!!
சுஸ்ரீ, கலக்குறீங்க! அசத்தலா இருக்கு... அப்புறம் கலர் அல்லுது...போங்க.........
அதை பார்த்து கொஞ்சம் அசந்துட்டேன்னு சொல்லலாம். கோதுமை ரவை கேசரியை கண்டிப்பா செய்து பார்கிறேன்.
உங்க பாத்திரம் எல்லாமே... கரண்டி, கடாய், பிளேட் எல்லாமே என்கிட்டயும் இருக்கா... அதனால நானே செய்த மாதிரி இருக்கு..... இதெப்புடி!!!
சுஸ்ரீ...
ஹாய் சுஸ்ரீ..... எனக்கு சாதாரன ரவகேசரி பிடிக்காது என்பதால் எங்க அம்மா சம்பா கோதுமை ரவை கேசரி தான் செய்து தருவாங்க. ரொம்ப டேஸ்ட்டான குறிப்போட ஆரம்பிச்சிருக்கீங்க..... வாழ்த்துக்கள்.
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
சுஜா
அசத்தலான கேசரி :)
கலர் அப்படியே எடுத்துக்கோனு சொல்லுது..
தெளிவான படங்கள் மற்றும் விளக்கங்கள்..
வாழ்த்துக்கள் ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
கோதுமைரவை கேசரி,
சுஸ்ரீ,
முதல் குறிப்பு-கோதுமை ரவை கேசரி சூப்பரா இருக்கு.ரொம்ப அழகா ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கி இருக்கீங்க.இதுவரை கோதுமை ரவையில் கேசரி செய்ததில்லை.கண்டிப்பா செய்துட்டு சொல்றேன்.இன்னும் நிறைய குறிப்புகள் கொடுங்க.வாழ்த்துக்கள்,சுஸ்ரீ.
சுஸ்ரீ,
சுஸ்ரீ,
சத்தான கேசரி
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
அட்மின் குழுவினருக்கு நன்றி!
என் குறிப்பை இத்தனை சீக்கிரமா வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு முதலில் மிக்க நன்றி! (இவ்வளவு சீக்கிரமா குறிப்பு வெளிவருமென்று நான் நினைக்கவேயில்லை! இன்று அறுசுவை திறந்தால்... ஒரு சிறிய இன்ப அதிர்ச்சி! :) மீண்டும் நன்றிகள்!)
அன்புடன்
சுஸ்ரீ
வனி, சுகி, ஜீவிமா, ரசியா - மிக்க நன்றி!
மிக்க நன்றி!
வனி,
முதல் குறிப்புக்கு முதல் பதிவு உங்ககிட்ட இருந்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி! :) ரொம்ப நாளா அனுப்ப நினைத்து, இப்பதான் ஒரு வழியா அனுப்பி வைத்தேன்.
ஆமாம் வனி, ஆரோக்கியமான ரவை இது. கண்டிப்பா செய்து பாருங்க, எப்படி இருந்துச்சுன்னு வந்து சொல்லுங்க!. வாழ்த்துக்களுக்கு நன்றி!
சுகி,
ஆமாம் சுகி, இதுதான் முதல் குறிப்பு! இன்னும் நிறைய குறிப்புகள்தானே?! கட்டாயம் முயற்சிக்கிறேன், எப்ப என்றுதான் தெரியலை! :)
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுகி!
ஜீவிமா, (உங்க பேர் இதுதானா, சரியா தெரியலை தோழி)
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி! ஒரு தட்டுதானே?! இதோ இப்பவே அனுப்பிடறேன்! :)
ரசியா,
டேஸ்ட் நல்லாருக்கும், நீங்களும் செய்துபாருங்க ரசியா. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
யாழினி, வினோஜா - மிக்க நன்றி!
யாழினி,
ஆமாம் யாழினி, நீங்க சொல்வது சரிதான். முதல் குறிப்பு ஸ்வீட்டுடன் ஆரம்பிக்க நினைத்துதான் அனுப்பினேன்!. கண்டிப்பாக நிறைய குறிப்புகள் அனுப்ப முயற்சிக்கிறேன்!. (இதுவே படம் எடுத்து இரண்டு மாதங்கள் கழித்துதான் குறிப்பு இணைத்து அனுப்பினேன்! :))
வாழ்த்துக்களுக்கும், பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி யாழினி!
வினோஜா,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
கோமு, குமாரி, ப்ரியாஅரசு - மிக்க நன்றி!
கோமு,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
குமாரி,
நீங்களும் கண்டிப்பா செய்துபாருங்க குமாரி! எப்படி இருந்துச்சுன்னு மறக்காம சொல்லுங்க. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
ப்ரியாஅரசு,
உங்களுக்கும் பிடிக்குமா?! அப்ப ஒருமுறை செய்திடுங்க. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
உமா, ரம்யா - மிக்க நன்றி!
உமா,
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி! ரொம்ப நாளா அனுப்ப நினைத்திருந்து இப்பதான் ஒருவழியா நடந்தது! :) கட்டாயம் செய்து பாருங்க உமா, டேஸ்ட் நல்லாருக்கும், உங்களுக்கும் பிடிக்கும்!
//உங்க பாத்திரம் எல்லாமே... கரண்டி, கடாய், பிளேட் எல்லாமே என்கிட்டயும் இருக்கா... அதனால நானே செய்த மாதிரி இருக்கு..... இதெப்புடி!!! //
சூப்பர்ர்ர்ர்... :) அப்படியே நீங்க சாப்பிட்ட மாதிரியும் இருக்குதானே?! :) நன்றி உமா!
.
ரம்யா,
வாங்க, பக்கத்திலேயேதான் இருக்கேன்! நேர்லயே வந்து அப்படியே எடுத்துக்குங்கன்னு கூப்பிடறேன்! :) பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ரம்யா!
அன்புடன்
சுஸ்ரீ
அன்பரசி, கவிதா - மிக்க நன்றி!
அன்பரசி,
வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி! அவசியம் ஒருமுறை செய்து பாருங்க அன்பரசி, டேஸ்ட் நல்லாருக்கும்! அப்புறம் அடிக்கடி செய்வீங்க! :)
கவிதா,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
கோதுமை ரவை கேசரி
அன்பு சுஸ்ரீ,
சூப்பராக இருக்கு இந்தக் குறிப்பு. கலர்ஃபுல்லாகவும் இருக்கு. அவசியம் செய்து பார்க்கிறேன்.
பாராட்டுக்கள், இன்னும் நிறைய குறிப்புகள் கொடுங்க, வாழ்த்துக்கள்!!
அன்புடன்
சீதாலஷ்மி
அன்பு சீதாலஷ்மிமா
அன்பு சீதாலஷ்மிமா,
நலமா? அனிவெர்சரி எல்லாம் நல்லா கொண்டாடினீர்களா?!
உங்களோட பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிமா! அவசியம் செய்து பார்த்து, எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க. மீண்டும் நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
ஹாய் சுஸ்ரீ, உங்க முறையில
ஹாய் சுஸ்ரீ,
உங்க முறையில நேற்று கேசரி செய்தேன்....செமையா இருந்துச்சு.....நன்றி....