அங்காயப் பொடி

தேதி: September 12, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (6 votes)

அங்காயப்பொடி நம் உடலில் வாதம் மற்றும் பித்தத்தின் அளவை சரி செய்ய கூடியது. அஜீரண கோளாறு, சோர்வு ஆகியவற்றிற்கு சிறந்தது. பாலூட்டுபவர்கள் தினமும் சேர்த்து கொண்டால் இருவருக்கும் நல்லது. பயண நேரத்தில் அவசியம் எடுத்து செல்ல வேண்டிய பொடி இது.

 

சிகப்பு மிளகாய் - 12
தனியா - அரை கப்
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
சுக்கு - 2 துண்டு
பெருங்காயம் - 3 தேக்கரண்டி
ஓமம் - 2 தேக்கரண்டி
அரிசி திப்பிலி - ஒரு தேக்கரண்டி
கண்டதிப்பிலி - ஒரு தேக்கரண்டி
சுண்டை வற்றல் - 25
மணத்தக்காளி வற்றல் - 25
கறிவேப்பிலை - கால் கப்
உளுந்து - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
எள் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைக்கவும்.
முதலில் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே பெருங்காயம், உப்பு தவிர்த்து சிறு தீயில் வைத்து புகை வராமல் வறுக்கவும்.
கடைசியாக வற்றல், திப்பிலி வகை சேர்த்து வறுக்கவும்.
எல்லாவற்றையும் பரத்தி நன்கு ஆற விடவும்.
நன்கு பொடியாக திரித்து பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
அங்காய பொடி தயார்.

இதனுடன் வேப்பம் பூ - கால் கப், சதகுப்பை - 2 தேக்கரண்டி சேர்த்து திரிக்க வேண்டும். இங்கு கிடைக்காததால் சேர்க்கவில்லை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நிறைய மருத்துவ குணமுள்ள பொருட்கள் எல்லாம் சேர்த்து செய்து இருக்கீங்க. ஆரோக்கியத்திற்கு ஏற்ற பொடி. அவசியம் செய்து வைத்து கொள்ள போகிறேன் கவி.

கவிதா, அங்காயப்பொடி பேரே புதுமையா இருக்கு நான் கேள்வி பட்டதில்லை... இதை எப்படி? எதனுடன் சாப்பிடுவது!!!

வித்தியாசமான ஆரோக்கியமான குறிப்பு. வாழ்த்துக்கள்.
இந்தியா செல்லும் போது தான் இந்த பொடியை தயார் செய்ய முடியும்.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கும்,குழுவினர்க்கும் நன்றி

வினோ,
உடலுக்கு ஏற்ற உணவு தான்..
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

உமா,
இது எல்லாருக்கும் தெரிந்த பொடி தான்..சுடு சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாப்பிடனும்.
இப்போ உங்களுக்கு ரொம்ப நல்லது.செய்து பாருங்க

சங்கரி,
நலமா? கிடைக்கிற பொருட்களை வைத்து செய்யுங்க
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

Thanks to uk5mca.

இந்தப் பொடியை சூடான சாதத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு போட்டு, நல்லெண்ணையை காய்ச்சி ஊற்றிக் கொண்டு, (விரலை சுட்டுக்கொள்ளாமல்) கலந்து சாப்பிட்டால், வயிற்றுக்கு நல்லது. ஜுரத்தால் அல்லது நீண்ட விமான/ரயில் பயணத்தால், வாயில் கசப்பான உணர்வு இருக்குமே, அப்போது சாப்பாடு எதுவும் வாய்க்கு ருசிக்காது. இந்த பொடிசாதம் அப்போது அருமையாக இருக்கும்.

இதுவும் கடந்து போகும் !

ரொம்ப நல்ல குறிப்பு, உடம்புக்கு சத்தானது

Jaleelakamal

சத்தான குறிப்பு
வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மகி,

வருகைக்கும் ,விளக்கத்திற்கும் நன்றி
ஒரு சிறிய வேண்டுகோள்:மற்ற தளத்தில் உள்ள செய்திகளை அப்படியே போடாதீங்க.அறுசுவையில் மற்ற தளங்களின் லிங்குகளை தவிர்க்க பாருங்க.இது அறுசுவை தளத்தின் விதி.தவறாக நினைக்காதீங்க.

என்றும் அன்புடன்,
கவிதா

ஜலீலா மேடம்,

நீங்க வந்து பின்னூட்டம் தந்தது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.
ரொம்ப நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ரம்யா,
வருகைக்கும் ,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
அங்காய பொடி இப்போ தான் கேள்விபடுறேன்.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.ஆரோக்கியமான குறிப்பு.வாழ்த்துக்கள்.

கவிதா மிக பயனுள்ள குறிப்பு... வாழ்த்துக்கள்...
அரிசி திப்பிலி, கண்டதிப்பிலி இது இரண்டும் என்ன? எங்கு கிடைக்கும்?

கவிதா,
வித்தியாசமாக நல்லதொரு மருத்துவ குறிப்பு கொடுத்திருக்கிங்க! பேரு புதுமையா இருக்கு! வாழ்த்துக்க‌ள் க‌வி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்பரசி,
இது ரொம்ப பழைய குறிப்பு.அவசியம் செய்து பாருங்க
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

தீபா,
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

சுஸ்ரீ,
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவி இது பேரே நான் இப்போதான் கேள்விபடுறேன் கைவசம் நெறைய இருக்கு போல வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி,

ரொம்ப நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அருமையன பதிவு, நன்றி

Hi madam please can you explain how to add neem flower into this recipe?
I have 7 day's new baby is crying before every dirty nappy & before passing the wind.
After that he is happy till the next one.so please let me know ASAP.
I have got all the ingredients in hand.

Thanks
Nithya