பால் தாளிக்கலு

தேதி: September 30, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (14 votes)

 

பால் - அரை லிட்டர்
பச்சரிசி - ஒரு டம்ளர்
ஜவ்வரிசி - அரை கப்
சர்க்கரை - 5 தேக்கரண்டி
வெல்லம் - கால் கிலோ
முந்திரி -அவரவர் விருப்பம்
ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி


 

அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும். வெல்லத்தை பொடித்து வைத்து கொள்ளவும். ஜவ்வரிசியை கழுவி சிறிது நீர் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.
ஊறிய அரிசியை நீர் வடிக்கும் தட்டில் போட்டு தண்ணீர் வடியும் வரை வைக்கவும்.
வெல்லத்தை சிறிது நீர் ஊற்றி ஒரு கொதி வரும் வரை அடிப்பில் வைத்து இறக்கவும்.
அரை லிட்டர் பாலில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சி அதில் ஜவ்வரிசியை வேக வைத்துக் கொள்ளவும்.
அரிசியில் உள்ள நீர் மொத்தம் வடிந்ததும் மிக்சியில் நைசாக மாவாக்கிக் கொள்ளவும்.
மாவில் சிறிது உப்பு போட்டு, வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
அரிசி மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து படத்தில் காட்டியுள்ளது போல செய்துக் கொள்ளவும்.
எல்லா மாவையும் இது போல செய்து கொள்ளவும்.
ஜவ்வரிசி வெந்ததும் உருட்டி வைத்துள்ள அரிசி மாவை ஒவ்வொன்றாக பாலில் போடவும். சிறிது நேரத்திற்கு கிளற கூடாது.
அனைத்தும் வெந்து விட்டதா எனப் பார்க்கவும்.
பாலில் 5 தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரையும் வரை கிளறி அடுப்பை அணைத்து விடவும். சிறிது நேரம் கழித்து வெல்லப்பாகை ஊற்றி நன்கு கிளறவும். அரிசி மாவு குச்சிகள் எல்லாம் சிறு சிறு துண்டுகளாக உடையுமாறு கிளறிக் கொள்ளவும்
முந்திரி பருப்பு மற்றும் ஏலக்காய் போட்டு பரிமாறவும். சுவையான பால் தாளிக்கலு ரெடி. இவை ஆந்திராவில் விநாயகர் சதுர்த்திக்கு செய்வார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அழகான வித்தியாசமான ரெசிபி. பாக்கவே சூப்பர் ஹா இருக்கு, கண்டிப்பா பண்ணி பாக்கறேன்..... விளக்கங்கள் அருமை. ஸ்டார் தந்தாச்சு, விருப்ப பட்டியல்ல சேர்த்துட்டேன்....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அருமையான படங்கள் இது பால் கொழுக்கட்டை மாதிரி பா நாங்க செய்வோம் அதாவது ஆந்திரா பக்கம் ரொம்ப பிடிக்கும் இது எங்க வீட்டு குட்டீஸ்க்கு ரொம்ப பிடிக்கும் அரிசி மாவை டிசைனா செஞ்சி போடுவோம் குட்டி குட்டியா உருட்டியும் போடுவோம் வேணுனா உளுந்தையும் இதே போல சேர்க்கலாம் சூப்பரா இருக்கும் வாழ்த்துகள் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

Anbu sagothiri unga recipe ku nan wait panninean. Recipe super kurippu super photos super. Navarathiri vazhthukal.

என்ன சுந்தரி.................இப்படி ருசியான ஐட்டம் செஞ்சி ஆசையை கிளப்புறீங்க?பார்க்கவே ரொம்ப டேஸ்ட்டா இருக்கு,மேலே போட்டுள்ள முந்திரி!!!!!!!!என்னன்னு சொல்ல?சுந்தரியின் கைவண்ணத்தைக் காட்டுது!குறிப்புக்கு நன்றி.

Eat healthy

சுவையான சூப்பரான குறிப்பு. ரொம்ப அழகா செய்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப சுவையான குறிப்பு! அருமையா செய்திருக்கிங்க. ஒரு நாள் செய்துப்பார்க்கனும். வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

சுந்தரி,
பண்டிகை கால ஸ்பெஷல் குறிப்பு.பார்க்கவே சாப்பிட தூண்டுது.செய்முறையும்,விளக்கமும் அருமை.வாழ்த்துக்கள்.

யம்மி யம்மி எப்போ செய்து சாப்பிடுவோம்னு இருக்கு பார்க்கவே ரொம்ப ஆசையா இருக்கு சுந்தரி நல்ல குறிப்பு. எங்கள் வீட்டில் பால் கொழுகட்டை இப்படி தான் செய்வாங்க ஆனால் வெல்ல பாகில் தான் செய்வாங்க நீங்க பாலில் செய்து இருக்கீங்க. வாழ்த்துக்கள் இன்னும் இதுபோல் நிறைய ஆந்திரா குறிப்புகளை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளனும்னு கேட்டுகிறேன்.

ஆந்திரா பால் கொழுக்கட்டை ஜவ்வரிசி, முந்திரி எல்லாம் சேர்த்து சூப்பரா யம்மியா இருக்கு.

சுந்தரி பால் தாளிக்கலு சான்சே இல்லப்பா செம சூப்பர் ஆனால் இப்படி படத்த பாத்து ஜொள்ளு விட வச்சிட்டீங்களே இது நியாயமா??? பார்சல் ப்ளீஸ்............

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி சுகா,கட்டாயம் செய்து பார்.டேஸ்டியா இருக்கும்.

நன்றி ரேணு,நீங்க செய்யும் முறையில் ஒரு தடவை செய்து பார்க்கிறேன்.உங்க சொந்த ஊர் எது.

நன்றி கெளதமி,கட்டாயம் செய்துபாருங்க,உங்களுக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.

ரசியா இப்படி புகழ்ந்தா எப்படிப்பா,என்னால தரையில நிக்க முடியலபா.வாழ்த்துக்களுக்கு நன்றிபா.கட்டாயம் வீட்டில் செய்துபாருங்க.

வாழ்த்துக்களுக்கு நன்றி வனிதா.

கட்டாயம் செய்துபாருங்க ஸ்ரீ.வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிபா.

கட்டாயம் பண்டிகைக்கு செய்துபாத்துட்டு சொல்லுங்க நல்லாயிருந்ததான்னு,நன்றிபா.

ஹாய் யாழினி,உங்க விருப்பப்படியே இனி ஆந்திரா குறிப்புக்கள் நிறைய அனுப்ப முயற்சிக்கிறேன்.வாழ்த்துக்களுக்கு நன்றிபா.

நன்றி வினோஜா,ஆந்திராவில் இந்த பாயாசம் முதல் குழந்தை கர்ப்பமாயிருப்பவர்களுக்கு செய்துகொடுப்பார்கள்.ஆண் குழந்தை பிறக்குமாம்.

ஹாய் சுவர்ணா,பார்சல் எதுக்குபா நேரா இங்க வாங்க சூப்பரா செய்து தரேன் சாப்பிடுங்க.வாழ்த்துக்களுக்கு நன்றிபா.

அழகாக செய்து காட்டியிருக்கீங்க. பார்க்கவே சாப்பிட தூண்டுது. வாழ்த்துக்கள்.

இதை நாங்கள் பால் கொழுக்கட்டை என்று சொல்லுவோம் :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி லாவண்யா.பால் கொழுக்கட்டை எப்படி செய்வதுன்னு எனக்கு தெரியாதுபா,இப்படி தான் செய்யனும்னு இப்ப தெரிந்துகொண்டேன்:

சுவையான சூப்பரான குறிப்பு. ரொம்ப அழகா செய்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.விருப்பபட்டியில் சேர்த்துட்டேன்