சைனீஸ் நூடுல்ஸ்

தேதி: October 4, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

ட்ரைடு நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்
வெங்காயம் - ஒன்று
கேரட் - ஒன்று
பச்சை, சிகப்பு குடை மிளகாய் - பாதி
பீஃப் கறி - ஒரு கோப்பை
காளான் - கொஞ்சம்
சோயா சாஸ் - தேவையான அளவு
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். கேரட்டை நீள நீளமாக கீறி கொள்ளவும். மிளகாயை கட்டமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
சுடுநீரில் தேவையான அளவு நூடுல்ஸை போட்டு வேக விடவும்.
வெந்த நூடுல்ஸை வடிகட்டியில் வடிகட்டி வைக்கவும்.
ஒரு அகலமான கடாயில் பீஃபை போட்டு அதனுடன் உப்பு, மிளகு தூள் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக விட்டு ஒரு கோப்பையில் தனியே எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் ஆலிவ் ஆயில் கொஞ்சம் ஊற்றவும். அதில் குடைமிளகாயை போட்டு வதக்கவும்.
மிளகாய் வதங்கியதும் கேரட் மற்றும் காளானை போட்டு வதக்கவும்.
அனைத்தும் வதங்கிய பின் சோயா சாஸ் ஊற்றவும்.
பின் வெங்காயம் மற்றும் வேக வைத்த பீஃபை போடவும். அதில் சிறிது மிளகுதூள், அஜினோமோட்டோ, தேவையான உப்பும் சேர்க்கவும்.
ஒரு அகலமான தட்டில் வேக வைத்த நூடுல்ஸை சுற்றிலும் வைத்து அதன் நடுவே தயார் செய்து வைத்துள்ள பீஃப் கலவையை வைத்து சுடச்சுட பரிமாறவும்.

சோயா சாஸ் சேர்ப்பதால் உப்பின் அளவை கொஞ்சம் பார்த்து போடவும். காளான் இல்லையென்றால் அது இல்லாமலும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரசியா,
பீப் தான் இடிக்கிறது..
இல்லாமல் செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஆவி பறக்க சுடச்சுட சூப்பரா சமைச்சு அசத்திட்டீங்க;-)
ஒரே ஒரு இன்கிரேடியன்ஸ் தவிர மத்தது சேர்த்து செஞ்சுபாத்தடறேன்...
வாழ்த்துக்கள்.

Don't Worry Be Happy.

வாழ்த்துக்கு நன்றி கவிதா!பரவாயில்லை பீஃப் இல்லாமல் சிக்கன் கூட சேர்த்து செய்யலாம்,செய்து பாருங்க!நம்ம ஊரில் நிறைய பேருக்கு பீஃப் பிடிக்காதுதான்,என்ன செய்ய நானும் ஊரில் இருக்கும்வரை இதெல்லாம் சாப்பிட்டது கிடையாது,வெளிநாட்டுக்கு வந்துவிட்டால் சிலவகை உணவுகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!

Eat healthy

நீங்க சொன்னது பீஃபை தானே!!!கவிதாக்கு சொன்னதைத்தான் உங்களுக்கும் சொல்ரேன்,சிக்கன் சேர்த்துக்குங்க!நன்றி ஜெயலக்ஷ்மி!

Eat healthy

சலாம் ரசியா என் குட்டீஸ்க்கு பிடித்த சமையல் காட்டிட்டீங்க ரெம்ப நன்றி பாக்கவே நல்லாருக்கு செyதுட்டு வாரேன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

காய்கறிகளை வேட்டியிருப்பது அழகாக இருக்கு. சூப்பர் கலர் காம்பினேஷன். நல்ல குறிப்பு. வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நூடுல்ஸ்னாவே குட்டீசுக்கு ரொம்ப பிடிக்கும் தானே!!!!செய்து பசங்கள அசத்துங்க பல்கீஸ்!

Eat healthy

நன்றி லாவண்யா;இப்படி கலர்ஃபுல்லா இருந்தாதானே பசங்க விரும்பி சாப்பிடுவாங்க!!!பாராட்டுக்கு நன்றி லாவண்யா

Eat healthy