"மனம்(மணம்) பறக்கும் அரட்டை......."

வாருங்கள் தோழிகளே,
கவலைகளைப் பகிர்ந்து மனம் மகிழ்வோம், சமையல் கற்று மணம் பறப்புவோம்.....
கொஞ்சம் புதுசா முயற்சி செய்தேன்,ஆனால் கரு ஒன்றுதான் பேசிப்பேசி சந்தோஷப்பட்டு கவலை மறப்போம்,கவலை துறப்போம்.....
அனைவரும் தயவு செய்து கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை உபயோகித்து தமிழில் பதிவுகளிடவும்......சரியா........:))
வாங்க வாங்க அனைவரும் மனம் திறந்து மணம் பறப்புவோம்........

சூடான சூப் ரெடி...,

முதலில் வருபவர்களுக்கு நம்ம ரேணுதேவின் கைவண்னத்தில் சூடா வெஜிடபுள் சூப் கிடைக்கும்.......(இங்க ஒரே மழைப்பா..... சூப் நல்லாயிருக்கும்.....)

ஹாய் ரேணு எப்படி இருக்கீங்க. என் செல்ல ப்ரவீன் எப்படி இருக்காரு? குட்டி உள்ள என்ன சொல்லுது. இப்போ ஹெல்த் எப்படி இருக்கு. உடம்ப கவனிச்சுக்கோங்க. நான் தான் பர்ஸ்ட் இந்த அரட்டைக்கு. எனக்கு ஸ்வீட் கார்ன் சூப் தான் வேணும்.

யாழ்,ரேணுதேவ்,
யாழ்
நலம் விசாரிப்புக்கு மிக்க நன்றி, அனைவரும் நலம்,உடலும் நல்லா இருக்கு.வாமிட் குறைந்து வேலை செய்யமுடியுது, செல்லக்குட்டி பிரவிராஜா மிக்கநலம்,பள்ளி போக மீதி நேரம் ந்னை பேசவைப்பதே குறி அவனுக்கு.
வயிற்றுக்குட்டி அதற்குமேல் கடந்த 2,3நாள்களாக ஒரே ஆட்டம்....:)

ரேணுதேவ்:
உன் கைவண்ணத்தில் முதல் ஆளாக வந்த யாழினிக்கு ஸ்வீட்கான் சூப் கொடும்மா.....எனக்கும் ஸ்வீட்கான் ரொம்ப பிடிக்கும் சோ எனக்கு ஒரு ஸ்வீட்கான் சூப் சரியா...? வாம்மா மின்னல்........வந்து சூப் தயாரித்துக் கொடும்மா.......

இங்கயும் மழைதா இதெல்லாம் நல்லா இல்லப்பா இப்டியா மாட்டிவிடுறது சரி பரவலா இந்தாங்க சூப் ஏதோ எனக்கு தெரிஞ்சவரை பண்ணியிருக்கேன் பட் பயப்படாம குடிக்கலாம் குடிங்கபா ( "*¤`" ) இங்கயும் மழைதான்பா என்ஜாய் பண்ணுங்க ஹாய் யாழி உங்களூக்கும் தா பா எடுத்துக்கோங்க கூடவே காலி ப்ளவர் பக்கோடா வாழைக்காய் உருளை மிளகாய் பஜ்ஜி வெங்காய பக்கோடா உருளை சிப்ஸ் எடுத்துக்கோங்க எல்லார்க்குமே தா நீங்க ரெண்டு பேரு மட்டும் காலி பண்ணிடாதீங்க சரியா எல்லாரும் வாங்க தோழிகளே

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சாரி ரேணு சர்வர் ப்ராப்ளம் அதான் பதில் குடுக்கமுடியல, எனக்கு காபி வெங்காய பஜ்ஜி ஒ கே வா!

இப்படிக்கு ராணிநிக்சன்

ரேணு எல்லாம் பிடிச்ச ஐட்டம்,எனக்கு ஒரு ப்ளேட். எனக்கு கொஞ்சம் மிச்சம் வைங்க.தோழிகளே.

அட வருவதற்குள் தட்டு காலியா....?:(
அட என்னங்கப்பா நம் அறுசுவை தோழிகள் இப்படியாகட்டுகட்டுன்னு கட்டுவீங்க? உங்களுக்காக சொன்ன எனக்கே ஒன்னுமில்லையே......:((
சரிசரி பரவாயில்லை ,நம்ம ரேணு இருக்கபோய் நல்லதாப்போச்சு,ரேணு எனக்கு இன்னொருகப் சூப்புமா....:))
என்ன ஒற்றுமை இன்று நானும் வாழை,வெங்காய பஜ்ஜி போட்டேன்.....சோ, எனக்கு அவை வேணாம் சரியா.....

நசீம் அதே தான் பா இங்கயும் எப்ப எப்டி மாறுவாங்கனு சொல்லமுடியாது விடுங்க பாத்துப்போம் நமக்கும் காலம் வரும் அப்ப பேசிக்கலாம

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு ரெண்டு பேரும் ஒரே நினைப்புல இருக்கோம்போல. இப்படி ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல் சொல்லிகிறது மனசுக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்குபா.

நசீம் இப்பகூட அப்டி தா நாளைக்கு ஹாஸ்பிட்டல் போகலாம்னு இருந்தோம் இப்ப அவங்க அம்மாவ கூட்டிட்டு போனு சொல்றார் அவங்களோட போன அங்கயும் என்னை ஒருவழி பண்ணிடுவாங்க நா எப்டி போறதுபா அவர்ட்ட சொல்லி புரிய வெச்சி கூட்டி போகணும் இல்லனா தனியாதா போகப்போறேன் அவங்களோட போக பிடிக்கல எனக்கு அங்க போயும் என்னதா குறை சொல்லுவாங்கப்பா என்ன செய்ய நா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்