வீடு கட்டும்பொழுது/தண்ணீர் தொட்டி

வீட்டுக்கு நாமே கட்டும் தண்ணீர் தொட்டி நல்லதா அல்லது சின்டெக்ஸ் டான்க் நல்லதா..என்ன காரணம் என்று சொல்லுங்க ப்லீஸ்.

தரைக்கு என்னென்ன போடலாம்..எது உடலுக்கு நல்லது...பில்ட் இன் கட்டில் செய்வது நல்லதா..
வார்ட்ரோப் எதில் செய்வது நல்லது..நாங்கள் வீடு வைக்கும் இடம் நல்ல மழையுள்ள இடம் ட்ராபிகல் வெதெருக்கு எது ஒத்துக்கொள்ளும்..பொதுவாகவே அங்கு சீக்கிரம் வார்ட்ரோப் எல்லாம் கெட்டு விடும்.அதற்கு என்ன செய்வது.

எம் டி எஃப் என்கிறார்களே அது நல்ல உழைக்குமா.ஈரப்பதத்தால் கெட்டு விடுமா..கிச்சன் மாடுலர் கிச்சன் நல்லதா.ப்ராக்டிகலா அது எப்படி .
கான்டெம்பரரி ஸ்டைலில் ரூஃபிங் சமமாக உள்ளதால் மழை நீர் தங்கும் ப்ரச்சனை பின்னாடி வருமா?தண்ணீர் போக எப்படியெல்லாம் வசதி படுத்தலாம்
கிணற்றை பராமரிப்பது எப்படி..எப்படி மூடி போடலாம்..
.இப்படியான தகவல் கிடைத்தால் உபயோகமாக இருக்கும்

வீடுன்னாலே ஓடி வந்துடுவேன் அதுவும் நீங்க இவளோ கேட்டு இருக்கீங்க, வராமலா போய்டுவேன். இதோ என் ஐடியா மற்றும் கருத்துக்கள்...

டைப் பண்ணிட்டே இருக்கேன், சீக்கரம் எல்லா ஐடியா போடறேன்....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வீட்டுக்கு என்னென்ன பாதுகாப்பு வசதிகள் செய்யலாம்அதாவது ஜன்னல் கதவுகளில் எந்த மாதிரியான விஷயங்களை கொண்டு வர முடியும்...சுகி முடியலையா ?அனுப்புங்க காத்திருக்கேன்

//வீட்டுக்கு நாமே கட்டும் தண்ணீர் தொட்டி நல்லதா அல்லது சின்டெக்ஸ் டான்க் நல்லதா..என்ன காரணம் என்று சொல்லுங்க ப்லீஸ்//

எனக்கும் இந்த தகவல் தேவைப் படுகிறது.. யாராவது விளக்கம் தாருங்களேன்..

சுகந்தி இன்னும் டைப் செய்து முடிக்க வில்லையா? கருத்துக்களுக்காக வெய்ட்டிங்ங்ங்ங்ங்..... ;)

நேத்து டைப் பண்ணிட்டு முடியும் போது, system restart ஆயிடுச்சு. அதான் பதிவு போடல. இப்போ மீண்டும் டைப் பண்ணிட்டேன், இப்போ பதிவு வந்துடும்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வீட்டுக்கு நாமே கட்டும் தண்ணீர் தொட்டி நல்லதா அல்லது சின்டெக்ஸ் டான்க் நல்லதா ---- இதை பொறுத்த வரை என்னுடைய சாய்ஸ், சின்டெக்ஸ் மட்டுமே. அதற்க்கு சில காரணம் இருக்கு.

1 . நீங்க தொட்டி கட்றீங்கன்னா அது கொஞ்ச காலத்துக்கு அப்பறம் விரிசல் விழ வாய்ப்பு அதிகம், மேலும் ஓதம் அடிக்க தொடங்கும்.
2 . இதை எல்லாத்தையும் விட பெரிய பாதிப்பு எது தெரியுமா? தொட்டி க்கு பக்கத்திலோ, அல்லது கொஞ்சம் தள்ளியோ மரம் இருந்தால் அதனுடைய வேர் பகுதி தொட்டிக்கு கண்டிப்பா வரும், அப்படி வரும் போது நமக்கு பல செலவுகளை வைக்கும்.
3 . அது மட்டும் இல்லாம, தொட்டி கிளீனிங் கொஞ்சம் கஷ்டம், சின்டெக்ஸ் பொறுத்தவரைக்கும் நாமே ஜாலி ஹா உள்ளே இறங்கி கிளீன் பண்ணலாம்... தொட்டி கிளீன் பண்ண ஆள் தேடனும்.......
4.சின்டெக்ஸ் போடுவதில் மேலும் ஒரு வசதி இருக்கு. Auto - Filling செட் பண்ணிக்க முடியும், தண்ணீர் போட்டு விட்டு நாம் மறந்து அது நிறைஞ்சு, அது ரோடு வரைக்கும் போய் கஷ்ட்ட பட வேண்டாம். டைம் செட் பண்ணிட்டு, நாம எப்ப தண்ணி போட்டு விட்டாலும், அதுவா நிறைஞ்சு ஆப் ஆகி விடும். தண்ணி வேஸ்ட் ஆகாம save பண்ணலாம்.

*************************************

தரைக்கு என்னென்ன போடலாம்:

இதை பொறுத்தவை உங்களது பட்ஜெட் பொறுத்து போடலாம். இருந்தாலும் ஒரு ஒரு வகை பத்தியும் சொல்றேன்.
இப்போதுள்ள காலக்கட்டத்தில் மக்கள் விரும்புவது, மூண்டு வகையான தரை தான்.அவை கிரானைட், மார்பிள், டைல்ஸ்

டைல்ஸ்:
1.விலை பொறுத்த வரை, எல்லா ரேஞ் ளையும் கிடைக்கும்.
2.எவளோ காஸ்ட்லி வேணும்னாலும் வாங்க முடியும், பார்க்க மிக அழகாகவும், அமைப்பாகவும் இருக்கும்.
3.உங்க தீம் க்கு தகுந்த மாதிரி கலர் மாறும். கிளீன் பண்றது ரொம்ப ஈஸி.
கிளைமட் மாறும் போது, ரொம்ப கூல் எல்லாம் ஆகாது, ஓரளவு மாடரேட் ஹா இருக்கும்.

இதனுடைய நெகடிவ்:
1.எதாவது ஒரு பொருள் பட்டு டைல்ஸ் உடையும் நிலை வந்தா, நம் பாடு பெரும் பாடு. ஏனெனில் இது சீக்கரம் உடையும் பொருள்.
2.நாம எவளோ ஜாக்கிரதையா இருந்தாலும், நம்ம நேரம் கேட்ட நேரமா இருந்து, டைல்ஸ் ஒடஞ்சா, அதை மாத்துவது என்பது தலைவலி புடுச்ச வேலை.
3.எப்ப டைல்ஸ் வாங்கும் போதும், நம் தேவைக்கு மீறி கொஞ்சம் எக்ஸ்ட்ரா வாங்கி வைத்து கொள்வது புத்திசாலி தனம். ஏன்னா, ஒடஞ்சா நம்ம கலர், நம்ம டிசைன் அந்த நேரத்தில் மார்க்கெட் ல கிடைக்காது.

~~~~~~~~~~~~~~~~

மார்பிள்:
1.டைல்ஸ் விட காஸ்ட்லி, தரைக்கு போடும் போது ரிச் லுக் கிடைக்கும்
2.பெரிய பெரிய பீஸ் ஹா போடுவது தான் அழகே, இதில் பெரியா கலர் difference கிடைக்காது.
3.பெரும்பாலும் half -white தான் இதன் நிறமே. சின்ன சின்ன பீஸ் எடுத்த விலை கம்மியா இருக்கும். பெரிய பீஸ் எடுக்கும் போது விலை அதிகம்.
4.டைல்ஸ் விட ஸ்ட்ராங், பாலிஷ் பண்ண பண்ண நல்லா ஷைன் கிடைக்கும்.

இதனுடைய நெகடிவ்:
1.கொஞ்ச வருஷத்துள்ள கலர் மாறி விடும் :-(
2.போடும் போது இருக்கும் கலர் சில வருடங்களிலேயே போய்விடும். மீண்டும் 3.பாலிஷ் பண்ணினால், கலர் கிடைக்கும். மொத்தமா சொல்லனும்ன்னா சில வருடங்களுக்கு ஒரு முறை,பாலிஷ் பண்ணிட்டே இருக்கணும்.
4.மழை காலத்தில்,தரை ரொம்ப குளிர் ஹா இருக்கும், மத்த இரண்டு flooring விட, இது ரொம்ப ரொம்ப குளுர்ச்சியை தரும்.
5.பெரியவங்களுக்கு, குழந்தைகள் இருக்கும் இடங்களுக்கு கொஞ்சம் யோசுச்சு போடணும்.

~~~~~~~~~~~~~~~~

கிரானைட்:
1 . இது விலை மத்த இரண்டையும் விட அதிகமே
2.இதில் கலர் நிறையா இருக்கும், கிரானைட் ஹா இது? அப்படின்னு கேட்ட்கும் அளவு கலர், டிசைன் அதிகம் (விலையும் அப்படியே :-)
3.மார்பிள் விட ரொம்ப ரிச் லுக் கிடைக்கும், இதிலும் நம் தேவைக்கு தகுந்த தீம் செட் பண்ண முடியும்.
4.மத்த இரண்டையும் விட, ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங். அதனால் உடையும் வாய்ப்பு மிக குறைவு.
5.ஒரு முறை பாலிஷ் பண்ணினாலே போதும், நல்ல கலர் கிடைக்கும். மீண்டும் மீண்டும் பண்ண வேண்டியது இல்லை.
6.மழை, குளிர் காலத்தில் வீட்டுக்குள்ள ஒரு சூடு நிலவும். கொஞ்சம் வெது வெதுப்பா இருக்கும்.
7.கிளீன் பண்றது ரொம்ப ஈஸி, மெயின்டனன்ஸ் ரொம்ப சுலபம்.

இதுக்கு நெகடிவ் இல்லை என்பது என் அனுபவம். எங்க வீட்டில் இது தான் இருக்கு. நெகடிவ் ன்னு சொலனும்ன்னா இதன் "விலை" மட்டுமே.

எனக்கு தெருஞ்சது, கொஞ்சம் அனுபவம் வெச்சு சொல்லி இருக்கேன். இதில் ஏதேனும் சந்தேகம் இருக்கா??

மத்த கேள்விக்கு மீண்டும் பதிலோட வரேன்..... :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

wall mounted flush tanks & wall mounted toilets
பத்தி யாருக்காவது தெரியுமா..அதாவது ஃப்லஷ் டேன்க் கன்சீல்டா வரும்..டாய்லெட் பவுல் தரையை தொடாது நீட்டா இருக்கும் .பாத்திருக்கேன் தவிற எனக்கு தெரிந்த யாரிடமும் இல்லை அதனால் அது குறித்து தெரியாது..அது நல்ல வெயிட் தாங்குமா எதாவது செர்வீஸ் என்றால் கஷ்டமா..செலவு அதுகமா..பார்க்க நீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

நல்லா இருக்கும். விலை அதிகம் தான். சாதாரண மாடல் எல்லாம் அதிகபட்சம் 7000ல் முடியும். இது 12ல் துவங்கும். பிரெச்சனை ஏதும் இதுவரை இல்லை... எங்க கிராமத்து வீட்டில் இது தான் இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தளி என் அனுபவத்தில் சின்டெக்ஸ் வேண்டாம் என்றுதான் சொல்வேன். நாங்கள் சின்டெக்ஸ் வைத்து விட்டு இப்போ ஏண்டா வைத்தோம் என்று யோசிக்கறோம் :(. வேறு ஒரு பிரச்சினையும் இல்லை காலை 10 மணிக்கு மேல் பைப்பை திறந்தால் சும்மா கொதிக்கற தண்ணீர்தான் வருது. வாட்டர் ஹீட்டரே வேணாம். இப்போ இதை சமாளிக்க என்ன பண்ணலாம்னு மண்டையை உடைச்சுக்கிட்டு இருக்கோம். சுகி இதுக்கு ஏதாச்சும் ஐடியா இருக்கா ப்ளீஸ் சொல்லுங்க.

தண்ணீர் தொட்டி கட்டுவதாக இருந்தால் மொட்டைமாடி தரையோடு சேர்த்து கட்டாமல் ஒன்றரை அடி உயரத்திற்கு நான்கு பில்லஎ கட்டி அதன் மீது கான்க்ரீட் ஸ்லாப் போட்டு தொட்டி கட்டினால் லீக்கேஜ் ப்ராளம் வந்தாலும் பில்டிங்கை பாதிக்காது. எளிதில் சரியாக்கி விடலாம். வாட்டர் ப்ரூஃப் சிமென்ட் மற்றும் ஆன்டி ஆல்கே சொல்யூஷன் ஊற்றி கட்டினால் பாசி பிடிக்காது லீக்கேஜ் ப்ராப்ளமும் இருக்காது.

தரை: பெஸ்ட் கிரானைட். காஸ்ட்லிதான் ஆனால் ட்யூரபிலிட்டி அதிகம். கிரானைட் கல் விலை அதிகம் என்றாலும் பாலிஷிங் செலவு கிடையாது. வாங்கும் போது ரொம்ப கவனமா பார்த்து வாங்கணும் இல்லேன்னா கிராக் விழுந்த கல்லை தலையில் கட்டிடுவாங்க. டிசைன் பார்க்கப் போனாலும் பகலில் போகணும் அப்போதான் சரியான டிசைனும் கலரும் தெரியும். கிராக் இருந்தாலும் கண்டு பிடித்து விடலாம். எல்லாம் அனுபவம்தான் தளி :(, கிரானைட் செலக்ட் பண்ணிட்டு அனுப்ப சொல்லிட்டு வந்துட்டோம். வீட்டில் பதிப்பதற்காக எடுத்தால் எல்லா ஸ்லாப்களிலும் நடுவே பெரிய கிராக். உடனே அந்த கடையில் பேசி கொஞ்சம் சண்டையும் போட்டு மாற்றி எடுத்தேன்.

அடுத்தது மார்பிள். கிரானைட் விட விலை குறைவு. இதிலும் கிராக் பார்த்து வாங்கணும். ஆனால் இதற்கு பாலிஷிங் செலவு உண்டு. அதனால் கிரானைட்டா மார்பிளான்னு பணத்தின் அடிப்படையில் முடிவு செய்வதாக இருந்தால் நீங்கள் செலக்ட் செய்திருக்கும் மார்பிளின் விலையோடு பாலிஷிங் கூலியும் சேர்த்து சதுர அடிக்கு எவ்வளவு என்று கணக்கிட்டு அதை கிரானைட்டுடன் ஒப்பிடுங்கள்.

அடுத்து வெட்ரிஃபைட் டைல்ஸ்: எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று. இப்போது நேனோ டெக்னாலஜி பயன் படுத்தி செய்த வெட்ரிஃபைட் டைல்ஸ் வந்திருக்கிறது. இது ஸ்கிராச் ஃப்ரீ. கொஞ்சம் விலை அதிகமானது வாங்கினால் குவாலிட்டியும் டிசைனும் அழகாக கிடைக்கிறது. சுகி சொன்ன மாதிரி கொஞ்சம் எக்ஸ்ட்ரா டைல்ஸ் வாங்கி வச்சுக்கணும். பிற்காலத்தில் உடைந்தாலும் மாற்றிக் கொள்ளலாம்.

வார்ட்ரோப் பொறுத்த வரைக்கும் ரூமின் சைசைப் பொறுத்து முடிவு செய்யுங்க. என்னுடைய சாய்ஸ் பில்ட் இன் இல்லை. காரணம் ஒருவாட்டி செய்தாச்சுன்னா பின்னாடி மாத்தறது கஷ்டம். ஆனால் கஸ்டம் டிசைன் வார்ட்ரோப் வாங்கி வச்சோம்னா பிற்காலத்தில் மாற்றுவது எளிது. இனிஷியல் செலவும் குறைவு. ஆனால் பில்ட் இன் தான் உங்கள் சாய்ஸ் னா செலவைப் பார்க்காமல் மரத்தில் செய்வதுதான் நல்லது. காலா காலத்துக்கும் உழைக்கும்.

கிச்சனைப் பொறுத்த வரை மாடுலார் கிச்சன் தான் என் சாய்ஸ். கிச்சன் எப்போதும் நீட்டாக மெய்ன்டெய்ன் பண்ண முடியும். ஹெச்டிஎஃப் வுட்டில் செய்வது நல்லது. எம்டிஎஃப் ஐ விட இதன் குவாலிட்டியும் விலையும் அதிகம். ஆனால் டீக் வுட்டிலும் செய்யலாம். நீடித்து உழைக்கும். ஆனால் செலவு அதிகம். எங்கள் மாடுலார் கிச்சனின் ஃபோட்டோ அடுத்த வாரம் அனுப்புகிறேன்(ஹி ஹி புரியுது தளி எப்பவோ அனுப்பறேன்னு சொன்னேன் இன்னும் அண்ணா சார்ட் அவுட் பண்ணி எனக்கு அனுப்பலை அதான் லேட்டாகுது). ஹெச் டி எஃப் இல்தான் செய்தோம். நீட்டா வந்திருக்கு. மாடுலார்தான் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா கிச்சனின் நாலு சுவரும் கட்டின உடனேயே மாடுலார் கிச்சன் ஆட்களை கூப்பிட்டு டிசைன் பண்ணுங்க. அப்பதான் நாம கேட்கற எல்லா வசதிகளோட நமக்கு பிடிச்ச டிசைனில் செலக்ட் செய்து அதுக்கு தகுந்த மாதிரி ஸ்லாப் மற்றும் தரையில் கட்ட வேண்டிய திண்டுகளும் கட்ட வசதியா இருக்கும்.

wall mounted flush tanks & wall mounted toilets இப்போ இதைதான் தளி எங்க வீட்டில் செய்திருக்கிறோம். விலை கொஞ்சம் அதிகம்னாலும் பாத்ரூம் ரொம்ப நீட்டா அழகா இருக்கு. ஜாக்குவார் பிராண்ட் வேண்டாம். ஃப்ளஷ் டேங்க் லீக்கேஜ் ப்ராப்ளம் இருக்குன்னு சொன்னாங்க. நாங்க வாங்கினது GROHE. நாம என்னதான் இதெல்லாம் பார்த்து பார்த்து வாங்கிக் கொடுத்தாலும் இதை மாட்டற ஆட்கள் சரியா இருக்கணும் அது ரொம்ப ரொம்ப முக்கியம். ஃப்ளஷ் டேன்கில் ஏதும் பிரச்சினை வந்தால் கம்பெனி ஆட்களைத்தான் கூப்பிட வேண்டும்.. ஆனால் சுவரெல்லாம் உடைக்கணுமோன்னு பயம் வெண்டாம்.

இன்னும் ஏதாவது டீட்டெய்ல்ஸ் வேணும்னாலும் கேளுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தளி ஃப்ளாட் ரூஃபின்க்கில் தன்ணீர் கட்டும் பிரச்சினை வராமல் இருக்கணும்னா ஃப்ளோரிங் ஸ்லோப் சரியா போடணும். மழை நீர் வெளியேற ரெண்டு அல்லது அதற்கு மேல் மடைகள் மொட்டை மாடியின் அளவுக்கேற்ப வைக்கணும். மழை அதிகம் உள்ள இடம் என்பதால் வாட்டர் ப்ரூஃப் ரப்பர் சொல்யூஷன் கிடைக்குது. உங்கள் எஞ்சினியர் கிட்ட கேட்டீங்கன்னா சொல்லுவார். தரை ஓடு பதிக்கும் போது அதை யூஸ் பண்ணலாம்.

வார்ட்ரோப் பொறுத்த வரை ஈரப்பதம் அதிகம் என்றால் மரத்தில் செய்வதே நல்லது. அதுவும் தேக்கு மரமாக இருந்தால் எந்த வெதரிலும் கெட்டுப் போகாது. எங்க வீட்டில் 50 வருடங்களாக உள்ள அலமாரிகளும் கதவுகளும் கொஞ்சம் கூட கேடாகாமல் இருக்கிறது. செலவு அதிகம்தான். ஆனால் நீடித்து உழைக்கும். இல்லேன்னா ஹெச்டிஎஃபில் செய்யுங்க. பத்து வருடங்களுக்கு கியாரன்டி கொடுக்கறாங்க.
கதவுகளுக்கு பாதுகாப்பு வசதிக்கு திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு ஹோம் எக்சிபிஷனில் கிடைத்த புக்கில் பார்த்தேன். நம் பழைய வீடுகளி உள்ளிருந்து கதவுக்கு குறுக்கே பெரிய இரும்பு பாளம் போடுவங்க தெரியுமா? பொதுவா அது நாம் வீட்டிற்குள்ளிருக்கும் போது பாதுகாப்பாக போடுவோம். இதே நாம் வெளியில் போகும் போது வீட்டின் முன் கதவுக்கு உட்புறமாக இந்த பாளத்தை போடுவது மாதிரி லாக் சிஸ்டம் பார்த்தேன். ரொம்ப பாதுகாப்பானது அவ்வளவு சீக்கிரம் யாராலும் திறக்க முடியாது.

அப்புறம் திருவனந்தபுரத்தில் இன்னொரு டோர் கடை இருக்கிறது. பெயர் மறந்துட்டேன். தேடிப் பார்த்து சொல்கிரேன். அங்கே ரெடிமேட் இரும்பு கதவுகள் ஆனால் பார்ப்பதர்கு மரக்கதவுகள் போலவே ரொம்ப அழகா இருக்கு. யாராலும் உடைத்து திறக்க முடியாது. ஆனால் இந்த கதவுதான் வேணும்னு முடிவு பண்ணிட்டோம்னா நிலை(கட்டளை புரிஞ்சுதா தளி) விடுவதற்கு முன்பாகவே செலக்ட் பண்ணிடணும். அப்பதான் நாம செலக்ட் பண்ணியிருக்கற கதவுக்கு தகுந்த நிலையை பொருத்த முடியும். இதோட லாக்கிங் சிஸ்டமும் ரொம்ப பாதுகாப்பானது. டூப்ளிகேட் சாவி செய்ய முடியாது.

ஏற்கெனவே நிலை விட்டாச்சு இனிமே இரும்பு கதவு செய்ய முடியாதுன்னா லாக் சிஸ்டம் வாங்கும் போது விலை அதிகமானாலும் டூப்ளிகேட் சாவி செய்ய முடியாத லாக் வாங்குங்க. லாக் வாங்கும் போதே 5செட் கீ கிடைக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மாடுலார் கிச்சனைப் பொறுத்தவரை தேவையான அசெசரிஸ் மட்டுமே ஃபிக்ஸ் பண்ணுங்க. நான் கட்லெரி ட்ரே, ப்ளேட் ஸ்டான்ட் வித் ட்ரெய்னிங் ட்ரே, சின்குக்கு கீழே சோப் வாஷிங் லிக்விட் எல்லாம் வைக்க ஒரு புல் அவுட் ஷெல்ஃப் இவ்வளவுதான் வச்சிருக்கேன். மீதி எல்லாமே ஷெல்ஃப் மாதிரிதான் டிசைன் பண்ணினேன். கார்னர் கேபினெட்டில் ரொட்டேட்டிங் ஷெல்ஃப், பாத்திரங்கள் வைக்க மெஷ் ட்ரேன்னு நிறைய மார்க்கெட்டில் இருக்கு. ஆனால் இதெல்லாம் வசதியா இருந்தாலும் க்ளீனிங் என்பது கொஞ்சம் கஷ்டம். கம்பிகளுக்கு இடையே துணி வைத்து துடைப்பது எனக்கு சிரமமா இருக்கும்னு தோணிச்சு.

அடுப்புக்கு கீழே நமது வலது பக்கம் Draawer unit வர்ற மாதிரி கேட்டேன். இதில் கட்லெரி ட்ரே, தினப்படி சமையலுக்கு தேவையான பொடி வகைகள் தாளிப்பு பொருட்கள், இப்படி எல்லாம் வச்சுக்க வசதியா இருக்கும். சமைக்கும் போது அடுப்புக்கு கிட்டே நின்னுகிட்டே எல்லா சாமானும் கைக்கெட்டும் தூரத்தில் எடுக்கலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்