மாவற்றல் குழம்பு

தேதி: October 14, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

மாவற்றல் - பத்து
புளி - சிறு எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
தக்காளி - ஒன்று
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
தேங்காய் - பாதி மூடி
தாளிக்க :
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கருவடகம் - விருப்பத்திற்கு
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 10 பல்


 

புளியை கரைத்து அதனுடன் தக்காளியை கரைத்து உப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும். மாவற்றலை கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடம் ஊற விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்.
பின் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றவும்.
நன்றாக கொதித்தபின் மாவற்றலை சேர்க்கவும்.
10 நிமிடம் கொதித்த பின் மிளகாய் வாசம் போனதும் குழம்பு சுண்டி வந்ததும் தேங்காயை அரைத்து அதனுடன் சேர்த்து சிம்மில் ஐந்து நிமிடம் வைக்கவும்.
பின் அடுப்பை அணைக்கவும். சுவையான சூடான சாதத்துடன் சாப்பிட மாவற்றல் குழம்பு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கத்திரி வத்தல் தெரியும், மா வத்தலில் கூட குழம்பா.... ரொம்ப சூப்பரா இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குமாரி அக்கா..... மாவத்தல் குழம்பு நியாபகபடுத்திட்டீங்களே... இப்போ பாட்டிய உடனே வர சொல்லி சமைச்சு சாப்பிடனும்... (பாட்டி என்மேல கோபமா இருக்காங்க எப்படி கூப்பிட்றது. ம்ம்ம்ம் :-( )

KEEP SMILING ALWAYS :-)

ஆஹா சூப்பர்ப்பா மாவத்தல் குழம்பு செய்து ஆசையை தூண்டி விட்டுட்டீங்களே மழைகாலத்துக்கு ஏற்ற குழம்பு வாழ்த்துக்கள் குமாரி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பார்க்கும்போதே நா ஊறுகிறது..என்னிடம் மாங்காய் வற்றல் இருக்கு,உடனே செஞ்சிடறேன்,பாராட்டுக்கள் குமாரி.

Eat healthy

Supera irukku.try pannitu varen.

மாவற்றல் குழம்பு அருமையா இருக்கு, பார்த்ததும் சாப்பிட தோணுது! :) வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

குமாரி,
மாவத்தல் குழம்பு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.கலர் சூப்பரா இருக்கு.ஆனால் இங்கு மா வத்தல் கிடைக்காது.சுவையான குறிப்பு.வாழ்த்துக்கள்.

எனக்கு இந்த வகை குழம்புகள்னா ரொம்பவே இஷ்டம்.
மாங்கா வாங்கி வெட்டி காய போட வேண்டியது தான் ;)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை குழுவினருக்கு நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மா வத்தல் கூட செய்வாங்க வனி.செய்து பாருங்க கடைல கிடைக்குமானு தெரியல.நன்றி வனி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நாகா கவலை படாதே டா,இங்கே வா நான் உனக்கு சமைச்சி தறேன் .நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஆமாம் ஸ்வர்ணா மழை காலத்து ஏற்ற குழம்புதான் ..நம்ம ஊரு சமையல் தான்,வாழ்த்துக்கு நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க ரசியா, வாழ்த்துக்கு நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க ஜானு வாழ்த்துக்கு நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் சுஸ்ரீ செய்து பாருங்க பிடிக்கும் வாழ்த்துக்கு நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அன்பு அங்கே மா வத்தல் கிடைக்காத ஊருல இருந்து எடுத்துட்டு போகலையா,வாழ்த்துக்கு நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ரம்யா ஆமாம் மாங்காய் வாங்கி வெட்டி அதை அவிச்சி காயவைக்கணும் பாதி காயும் போதே நான் எடுத்து சப்பிட்டுடுவேன் .வாழ்த்துக்கு நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

என்னங்க இது கலர் இப்படி கிரங்க வைக்குது;) இங்க கிடைக்கும்னு நினைக்கிறேன் தேடி கண்டுபுடிச்சறேன் . சுவையான குறிப்புக்கு வாழ்த்துக்கள்;)

Don't Worry Be Happy.

நன்றி jaya

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪