காலிஃப்ளவர் எக் பொரியல்

தேதி: October 18, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (10 votes)

 

காலிஃப்ளவர் - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
முட்டை - 2
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தாளிக்க
தாளிக்க:
சீரகம் - அரை தேக்கரண்டி
கடலை உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 6 இதழ்
வரமிளகாய் - 2


 

முதலில் காலிஃப்ளவரை 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வரமிளகாயை கிள்ளிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி தக்காளி குழைந்ததும் காலிஃப்ளவரை போட்டு பிரட்டவும்.
பின் மல்லித்தூளை சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
5 நிமிடம் கழித்து இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி பிரட்டி விட்டு, வெந்ததும் இறக்கவும்.
சுவையான காலிஃப்ளவர் முட்டை பொரியல் ரெடி. மிளகுத் தூள் சேர்த்தும் இறக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரம்ஸ் குறிப்பு நல்லா இருக்கு. புரட்டாசிதான் முடிஞ்சுட்டே இனி செய்துபார்க்க வேண்டியது தான். சீக்கிரம் செய்துட்டு சொல்றேன்.

நல்ல காரசாரமான காலிப்ளவர் பொரியல் மதியம் வெரும் சாம்பார் சாதம் தான் ஒரு ப்ளேட் பீளீஸ்..........

இப்படிக்கு ராணிநிக்சன்

நல்ல குறிப்பு வாழ்த்துக்கள் அக்கா.இப்படித்தான் எங்க வீட்டில்லும் செய்வோம் அக்கா by Elaya.G

உன் காலிஃப்ளவர் எக் பொரியல்.... ரொம்ப கலர்புல்லா இருக்கு டா.....
பார்க்கவே நாக்கு ஊருது..... நேத்தோட ஒரு மாதம் விரதம் முடியுது....
உன் குறிப்பை செய்துட வேண்டியது தான்...... :)

காலிஃப்ளவர் ரொம்ப பிடிக்கும், அதனுடன் முட்டையுமா... சொல்லவே வேண்டாம்....டேஸ்ட் சூப்பர் தான். அடுத்த முறை உங்க காம்பினேஷன் தான். வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ர‌ம்யா,
பொரிய‌ல் ந‌ல்லா இருக்கு!. என‌க்கும் இதுபோல் காலிஃப்ளவரில் எக் சேர்த்து செய்யும் டேஸ்ட் ரொம்ப பிடிக்கும்! :) வாழ்த்துக்க‌ள்!

அப்புற‌ம், ர‌ம்யா,அழைப்பை அக்செப்ட் பண்ணதுக்கு நன்றி! ஆனால், என்னால் மீண்டும் க‌னெக்ட் ப‌ண்ண‌ முடிய‌வில்லை. உங்க‌ இன்வைட் லின்க் ஏதோ பிர‌ச்ச‌னை குடுக்குது. மீண்டும் ஒரு அழைப்பு அனுப்புகிறீர்க‌ளா?! ;)

அன்புடன்
சுஸ்ரீ

சூப்பரா இருக்கு... குறிப்பும் சரி, படங்களும் சரி... ரொம்ப அருமை. பிடிச்சிருக்கு. இதுக்காகவே காலிஃப்ளவர் வாங்கிடுறேன் சீக்கிரம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ம்ம் காலிஃப்ளவரோட எக் கேக்கவே நல்லாருக்கே ட்ரை பன்னிடுவோம் வாழ்த்துக்கள் ரம்ஸ்......:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ரம்யா காலிஃபிளவர் எக் பிரை பார்க்கவே சூப்பராயிருக்குபா.நானும் இது போல தான்செய்வேன் ஆனா காலிஃபிளவரை துருவி எக் போட்டு பொரியல் செய்வேன்.வாழ்த்துக்கள் ரம்யா.

கிட்டதட்ட நான் செய்றமாதிரியே இருக்கு வாழ்த்துக்கள்

நன்றி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி ;)

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் ;)

வினு
நன்றி டா செய்து பாருங்க

ராணி
கண்டிப்பா வீட்டுக்கு வாங்க, விருந்தே போடறேன்..நன்றி :)

இளையா
அப்படியா நன்றி டா ;)

தீபா
கண்டிப்பா செய்து பாருங்க ..நன்றீ டா :)

சுகி
செய்து பார்த்துட்டு பதிவு ஓடுங்க ..நன்றீ ;)

வனி
கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க.. நன்றீ ;)

ஸ்வரு
ரொம்ப நன்றி டா ஸ்வரு ;)

ஃபாத்தி
ரொம்ப நன்றிங்க ;)

சுஜா
சுஜா.. ரொம்ப நன்றி டா.. :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

Hi Ramya,
I tried this recipe today... It came out very well... Both my kids finished it and I'm very happy... Keep up ur good work