பண்டிகை ஸ்பெஷல் (க்லிட்டர் ஹென்னா)

தேதி: October 29, 2011

5
Average: 4.3 (13 votes)

 

கருப்பு ஹென்னா கோன் - 1
சிவப்பு மற்றும் சில்வர் கலர் க்லிட்டர் கோன்ஸ்

 

கருப்பு ஹென்னா கோன் கொண்டு கைகளில் இரண்டு பூக்களும், இலையும் வரைந்து கொள்ளவும்.
அதன் கீழே சற்று இடைவெளி விட்டு அதே போல் பூவும், இலையும் வரையவும்.
இப்போது பூக்களை சுற்றி சுழிகள் வரைந்து, ஆள்காட்டி விரலில் பூ வரைந்து விடவும்.
இரண்டு பூக்களுக்கும் நடுவே உள்ள இடைவெளியை படத்தில் உள்ள டிசைன் கொண்டு நிரப்பவும்.
இது 15 நிமிடம் காய்ந்த பின் சிவப்பு க்லிட்டர் கொண்டு பூக்கள் மற்றும் உங்கள் விருப்பம் போல் நிரப்பவும்.
மீண்டும் சிறிது நேரம் காய விட்டு பின் சில்வர் நிறம் கொண்டு நிரப்ப விரும்பும் டிசைனை நிரப்பவும்.
சுலபமாக போடக்கூடிய க்லிட்டர் ஹென்னா டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அச்சு பதுச்ச மாதிரி இருக்கு, ரொம்ப தெளிவான படங்கள்...
உங்க கைக்கு ப்ளாக் எடுப்பா தெரியுது..... கலக்கல்ஸ் தான்... :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வனிக்கா எப்பவும் போலவே ரொம்ப சூப்பரா இருக்கு வனிக்கா.... வாழ்த்துக்கள் வனிக்கா...

ஆஹா கலக்கல் நாயகி வனிக்கா கலக்குறீங்களே! சூப்பர் . சிகப்பு கலர் க்லிட்டர் வச்ச்ருக்கிறது சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.

எனக்கு உங்க டிசைன் பார்க்கவே தோனல கை அவளோ அழகா இருக்கு ஒவ்வொரு டிசைன் கும் கை கலர் ஏறிட்டே போகுதே எப்புடி .
எதோ உங்க புண்ணியத்துல நா பத்து பேருக்கு மெகந்தி போட்டு சம்பாரிக்குற அளவுக்கு ஆயிட்டேன் ரொம்ப நன்றி அக்கா
இந்த டிசைன் ரொம்ப சிம்ப்ளா அழகா இருக்கு வாழ்த்துக்கள் அக்கா by Elaya.G

ரொம்ப ரொம்ப சூப்பர்.... இந்த க்லிட்டர் கோன் எத்தனை நாள் இருக்கும்? சாதரண மெகந்தி கோன் மாதிரி காய்ந்த உடன் உதிர்ந்து வருமா?

சூப்பரோ சூப்பர் கலக்கோ கலக்குனு கலக்குங்க பா வாழ்த்துகள் வீட்டுக்கு போய் இந்த டிசைன்லாம் போட்டு விட போறேன் எல்லார்க்கும் நன்றி இந்த மாதிரி டிசைன் கொடுக்கறதுக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அட்ட்ட்ட்ட்ட்ட்டகாசமா இருக்கு வனிக்கா, கலக்குறீங்க என்ன ஒரு நேர்த்தி அப்பப்பா சூப்பர்ப். இப்பவே போட்டு பார்க்க போறேன். என்கிட்ட கேமரா இல்ல இல்லைனா உங்களுக்கு போட்டோ எடுத்து அனுப்பிடுவேன்.

வனி ரொம்ப ரொம்ப அழகா இருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அழகா இருக்கு. பிடிச்சிருக்கு வனி. பொங்கலுக்கு எனக்கு, கோல்ட் கலர் வச்சு போட்டு விடுறீங்களா! ;)

‍- இமா க்றிஸ்

wow....u r having different ideas with creativity.

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

அன்புடன்,
மலர்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

சுகி... ரொம்ப நன்றி. போடுங்க, உங்க கைலயும் கியூட்டா இருக்கும்.

சுமி... ரொம்ப நன்றி.

நஜீம்... மிக்க நன்றி.

இளையா... மிக்க நன்றி. //நா பத்து பேருக்கு மெகந்தி போட்டு சம்பாரிக்குற அளவுக்கு ஆயிட்டேன் // - புரியல...

ப்ரியா... மிக்க நன்றி. உதிராது.. கருப்பு கோன் போல் காய்ந்ததும் ஒட்டி வைத்த மாதிரி இருக்கும். அப்படியே பீல் பண்ணி எடுத்துடலாம். நான் வாங்கி வெச்சு 6 மாசம் ஆகுது... ஒன்னும் ஆகல. சில கோனில் எக்ஸ்பைரி டேட் இருக்கும், அதுக்கு ஏற்றபடி வெச்சுக்கலாம்.

ரேணு... கண்டிப்பா போட்டு விடுங்க... மிக்க நன்றி.

யாழினி... அவசியம் போட்டு பாருங்க... கேமரா இப்போ இல்லனா என்ன, இனி வாங்கிடலாம். மிக்க நன்றி.

சுவர்ணா... மிக்க நன்றி.

இமா... அவசியம் வாங்க, கண்டிப்பா போட்டு விடுறேன். மிக்க நன்றி.

மலர்... மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பக்ரீத்திற்கு மகள் கையில் போட இலகுவான நல்ல டிசைன்,பகிர்வுக்கு நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வனிதா,
வாவ்...வழக்கம் போல அருமையான டிசைன்.அந்த ஐந்தாவது படத்தில் உங்க கை அவ்வளவு அழகு.பார்த்துட்டே இருந்தேன்.கலக்கிட்டீங்க.பாராட்டுக்கள்.

வழக்கம் போல ரொம்ப அருமையா இருக்கு
ரொம்ப ட்ரென்ரியா இருக்கு
வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆசியா... இப்போலாம் குறிப்பு வருது உங்களை காணோமேன்னு நினைச்சேன்... பதிவை பார்த்ததும் மகிழ்ச்சியா இருக்கு. மிக்க நன்றி :)

ஹர்ஷா.. என் கைக்கு பெரிய ரசிகை நீங்க தான் ;) ஹிஹிஹீ (இப்படிலாம் நினைப்பா உனக்குன்னு கேட்பது தெரியுது... இருந்தாலும் ஒரு பிலடப் வேணுமில்ல...) மிக்க நன்றி.

ரம்யா... எங்கடா பீட்ஸா அனுப்பிட்டு ஆள் எஸ்கேப் ஆயிட்டீங்கன்னு நினைச்சேன்... வந்துட்டீங்களா? இப்போ தான் நிம்மதியா இருக்கு. மிக்க நன்றி ரம்யா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உன் விழிகளில் என்னை கண்ட போதே என்மனதிற்குள் நீவந்துவிட்டாய் நான்மலர அல்ல நம் காதல் மலர. என் மனதில் உன் உருவத்தை தீட்டி வைத்துள்ளேன் ஓவியமாக இல்லை உயிராக

இங்கே கவிதைகள் பதிக்க கூடாது... கவிதைகள் அனுப்ப் அவிரும்பினால் அறுசுவை அட்மினுக்கு அனுப்பவும். இல்லை என்றால் வேறு இழைகளில் பதிவிடவும். இங்கே யாரும் பார்க்க மாட்டாங்க. உங்க கவிதைக்கு கீழே பதிலளி தட்டாமல் வைத்திருக்கேன்... கொஞ்சம் மாற்றிடுங்க ப்ளீஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா