எனக்கு 38வது வார கர்ப்பம். Help me

எனக்கு 38வது வாரம் ஆகிரது. எனக்கு பனிக்குடம் நீர் குறைவாக இருக்கு சொல்றாங்க. பயமாக உள்ளது. எதாவது பிரச்சனையா சொல்லுங்க pls pls.

வாழ்த்துக்கள் முதல்ல :)

ஒரு பிரெச்சனையும் இல்லை... இதெல்லாம் குழப்பிக்காதீங்க. நல்லா நீர் எடுத்த்க்கங்க, நீர் ஆகாரம் எடுத்துக்கங்க. அடுத்த முறை டெஸ்ட் பண்ணி பாருங்க, சரியா இருக்கும் :)

எதுக்காக சொல்வாங்கன்னா இது போல் நீர் குறைவா இருந்தா சில நேரம் குழந்தை உள்ளே சுற்றி வர கஷ்டமா இருக்கும். சில நேரம் மூச்சு விட சிரமப்படும்... அதனால் மிக குறைவாக போனால் குழந்தையை வெளியே எடுக்க முயற்சிப்பாங்க. அதுக்காக முன்கூட்டியே சொல்லி வெச்சிருப்பாங்க. நீங்க நல்லா தண்ணி குடிங்க... கண்டிப்பா நீரின் லெவல் கூடும். 38 வாரம் ஆயிடுச்சே... இனி இதெல்லாம் பெரிய பிரெச்சனை இல்லை... அதனால் கவலையை விடுங்க. நல்லபடி பிள்ளை பெற்றெடுப்பீங்க... பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி அக்கா

மேலும் சில பதிவுகள்