ஹென்னா டிசைன் - 17

தேதி: January 6, 2012

5
Average: 4.2 (29 votes)

 

ஹென்னா கோன்

 

மணிகட்டின் கீழே இடைவெளி விட்டு கோடுகள் வரைந்து முதல் இரண்டு கோடுகளுக்கும் நடுவே நிரப்பவும்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது கோடுகளுக்கு நடுவே உள்ள இடத்தை கட்டங்கள் கொண்டு நிரப்பவும்.
மூன்றாவது கோடுக்கு பதிலாக வளைவுகள் வரைந்து அதை கோடுகள் கொண்டு நிரப்பவும்.
வளைவுகளுக்கு கீழே பூ மற்றும் இலைகள் வரைந்து முடிக்கவும்.
முதல் வரைந்து கோட்டுக்கு மேலே பூக்கள் வரைந்து ஆள்காட்டி விரல் வரை முடிக்கவும்.
விரல்களில் படத்தில் காட்டியுள்ள படி கோடுகள் கொண்ட டிசைனை வரையவும்.
ஆங்காங்கே முத்துக்கள் போல் வரைந்து முடிக்கவும். சுலபமாக போடக்கூடிய ஹென்னா டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் வனிதாக்கா எப்படி இருக்கீங்க?மெஹந்தி டிசைன் ரொம்ப ரொம்ப ரொம்ப பிரமாதம்.பேன்சியா இருக்கு.

அன்புத்தோழி வனிதா.............. சூப்பர்.சூப்பர்......சூப்பர்........டிசைன். போடுவதற்கு எளிமையாகவும் பார்க்க அருமையாகவும் இருக்கு. வாழ்த்துக்கள்.

(நியூஇயர்க்கு நான் போட்ட டிசைன் மற்றும் ஒரு சமையல் ரெஸிபியும் காமிராவிலேயே இருக்கு. ரொம்ப இழுத்தடிக்கிறேன்ன்னு நினைக்கிறேன். இந்த வீக் எண்டுல போட்டுடறேன். கோவிக்காதீங்க.)

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

வனி டிசைன் ரொம்ப நல்லா இருக்கு என் பொண்ணுக்கு கோன் வச்சுக மருதாணி வச்சுக ரொம்ப புடிக்கும் ஆனா என்ன வச்சு 10 நிமிசத்துல கழுவுறேன்னு சொல்லுவா அதுதான் எனக்கு வைக்க ரொம்ப கஷ்டமா இருக்கு உங்களோட last போஸ்ட் ஹென்னா டிசைன் பார்த்துட்டு வைக்க சொல்லி கேட்ட நல்லா இருக்குனு இந்த டிசைன் சூப்பர் இருக்கு நான் ட்ரை பண்றேன் பொண்ணுக்கு

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

வனி உங்க டிசைன் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம் எப்பவும் போல அசத்தல்தான். வாழ்த்துக்கள்
.

Its very nice to see the design in right hand.... so neat and clear like left hand.... vanikka the great....... again u proved.....

வாவ்! சூப்பரா இருக்கு வனி,ம்ம்ம்ம் இத எல்லாம் பார்த்து பெருமூச்சு விட வேண்டியதுதான், ஏன்னா போட்டு பார்க்க எனக்கு ஒரு பெண் குழந்தை இல்லயே, வாழ்த்துக்கள் வனி.

ஹாய் வனிதா எனக்கு ஹென்னா போடனும்னு ரொம்ப நாளா ஆசை. உங்களோட டிசைன் பார்த்ததுக்கு அப்றம் நம்மலாலயும் போட முடியும்னு நம்பிக்கை வந்துச்சு. ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
zaina.

அது எப்படி வனி ரைட் ஹாண்ட்ல வைக்கும் போதும் கூட ஒரு சிலுப்பல் இல்லாமல் இவ்வளவு பெர்பெக்டா வெச்சிருக்கீங்க? உங்களுடைய டிசைன் வரும்போதெல்லாம் எப்படியாவது ஒரு நாள் கண்டிப்பாக போட்டே விட வேண்டும் என்று தோன்றும். இன்னமும் போட தான் இல்லை :(

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சூப்பர் டிசைன் வனி.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நல்லா இருக்கு இப்போலாம் இந்த மாதிரி புதுசா டிசைன் பார்த்து போடுறதுல ரொம்ப ஆர்வம் வந்துடுச்சு நன்றி அக்கா .இப்போ குளிரா இருக்கதால மெகந்தி போடுறது இல்ல சீக்கிரம் போட்டு பார்த்துட்டு உங்களுக்கு போட்டோஸ் அனுப்புறேன் அக்கா.உங்க கைக்கு இந்த டிசைன் ரொம்ப நல்லா இருக்கு ஒரு டவுட் அக்கா வலது கைல போற்றுக்கிங்களே லெப்ட் கை யூஸ் பண்ணி போடுவிங்களா by Elaya.G

வனி ரொம்ப ரொம்ப நல்லாருக்குங்க டிசைன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹலோ வனிதா ஹென்னா டிசைன் சூப்பரோ சூப்பர்...............சுமாரா போடுவேன் நு சொல்லிட்டு சூப்பரா போட்டு அசத்திட்டீங்க போங்க.................

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

கிஃபா... நான் நலம். நீங்க எப்படி இருக்கீங்க? கொஞ்ச நாளா வரலயா நீங்க? பார்க்க முடியலயே. முதல் பதிவுக்கு மிக்க நன்றி. :)

ஆனந்தபிரியா... மிக்க நன்றி. அவசியம் நீங்க போட்ட டிசைனை சீக்கிரம் அனுப்பி வைங்க. ஆவளோடு காத்திருக்கோம் காண :)

தனா... அப்படியா??? குட்டிக்கு வெச்சுவிடுங்க, நம்ம வினோ சொன்ன மாதிரி இன்ஸ்டண்ட் கோன் வாங்கிக்கங்க. அது உடனே பிடிக்குறாதால் குட்டீஸ்க்கு நல்ல கலர் வரும். வைக்கும் ஒரு நாள் முன் ஒரு முறை ஸ்கின்க்கு ஒத்துக்குதான்னு ஒரு துளி வெச்சு டெஸ்ட் பண்ணிடுங்க. :) மிக்க நன்றி.

வினோ... மிக்க நன்றி :) கைவினைன்னா வினோ பதிவு இல்லாம இருக்காது. உங்களுடைய ஊக்கப்படுத்தும் பதிவுகளுக்கு மீண்டும் நன்றி.

பிரியா... கவனிச்சுட்டீங்க வலது கைன்னு... :) மிக்க நன்றி.

சங்கிதா... அதனால் என்ன நம்ம கை தான் இருக்கே, கை கொடுக்க ;) மிக்க நன்றி.

ஸைனா... மிக்க நன்றி தோழி. அவசியம் போட்டு பாருங்க, இதை விட நல்லா வரும் :)

லாவண்யா... எல்லாம் பழக்கம் தான். ஆரம்பத்தில் இருந்தே இடது கை வலது பயன்படுத்துவது போல் எல்லா வேலையிலும் சமமா பயன்படுத்துவேன். அதனால் இதுக்கும் பயன்படுத்த பழகிடுச்சு. :) மிக்க நன்றி. சீக்கிரமே வெச்சு பாருங்க.

இமா... ரொம்ப ரொம்ப நன்றி இமா. நீங்களும் ஒரு ஹென்னா டிசைன் அனுப்பினா இன்னும் மகிழ்ச்சியா இருக்கும் :)

இளையா... மிக்க நன்றி. சீக்கிரம் போட்டு அனுப்புங்க, படங்களை காண காத்திருக்கேன். ஆமாம் இடது கை பயன்படுத்தி வலதில் போடுவேன். இல்லைன்னா நமக்கு போட இங்க யார் இருக்கா??? ;(

சுவர்ணா... ரொம்ப நன்றிங்க. :)

கவிதா... மிக்க நன்றி. இதெல்லாம் சுமார் தாங்க, அறுசுவையிலேயே மற்றவர்கள் டிசைன்ஸ் இதை விட சூப்பரானதுலாம் இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,

வழக்கம்போல ஹென்னா டிசைன் சூப்பரோ சூப்பர்! ரொம்ப அழகா இருக்கு! நானும் லாவண்யா மாதிரிதான் நினைத்து அசந்துபோனேன், அது எப்படி இடதுக்கையால வலது கையில் போட்டுக்கொள்வதே இத்தனை பெர்ஃபெக்டா இருக்கேன்னு... :) வாழ்த்துக்கள் வனி!

அன்புடன்
சுஸ்ரீ

//இதெல்லாம் சுமார் தாங்க, அறுசுவையிலேயே மற்றவர்கள் டிசைன்ஸ் இதை விட சூப்பரானதுலாம் இருக்கு//
வனிக்கா இது உங்களுக்கே ரொம்ப அநியாயமா தெரியலயா? இது சுமாரான டிசைனா... உங்க தன்னடக்கத்துக்கு ஒரு அளவே இல்லயா? இதுவே சுமார்னா இனி நீங்க சூப்பரா போட்டா எப்படி இருக்கும்....

ஹாய் வனி என்ன அழகு எத்தனை அழகு.வனி உங்க ஹென்னா டிசைன் அழகாக இருக்கு.வழ்த்துக்கள் வனி இதுபோல் டிசைன் நிறைய கொடுக்கவும்.

சூப்பரா இருக்கு வனிதா உன் ஹென்னா டிசைன்....வாழ்த்துக்கள்.

பார்க்க பார்க்க பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு..
இதுக்கு முன்னே வந்த டிசைன்க்கு என்னால் பதில் போடா முடியாம போச்சு..
சேத்துவெச்சு இப்போ சொல்றேன்..
என் கையை உங்க கிட்டே நீட்டனும் போல இருக்கு..
வரப போறேன் பாருங்க..

கோலம் போடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்..
மெஹந்தி அபப்ப்போ ட்ரை பண்ணுவேன்..
இப்போ நீங்க அழகா கத்து குடுக்கரதால எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்..
நன்றிகள் பல!!!

மிக்க நன்றி. பழக்கம் தான் சுஸ்ரீ... வேற ஒன்னுமே இல்லை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா இது தன்னடக்கமெல்லாம் இல்லைங்க... ரசனை அவ்வளவு தான். பெண்களூக்கு தன் புடவையை விட மற்றவர் புடவை மேல தான் கண்ணிருக்குமாம்... எனக்கு புடவை விஷயத்தில் அப்படி இல்லை, ஆனா இங்க வரும் எல்லா மருதாணி டிசைனும் என்னோடதை விட பெட்டரா இருக்குறதா தோனும் :) உண்மை தான்... நம்புங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. இங்க இருக்கும் போது ஓரளவு சென்னையை விட ஓய்வு கிடைக்குது, ஆனா மருதாணி வெச்சா சமையல் தான் ஆக மாட்டங்குது ;) முடியும் போது அவசியம் டிசைன்ஸ் அனுப்பிகிட்டே இருப்பேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க முன்ன இருந்த அதே உத்ராவா??? அமர் அக்பர் அந்தோனி??? முன்பே கேட்க நினைச்சேன், மறந்துட்டேன்.

உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி உத்ரா. வாங்க மாலத்தீவுக்கு இரண்டு கையையும் ஹென்னாவால் நிரப்பிடுறேன் :) எனக்கும் போட்டு விட ஆள் கிடைக்காம கை துரு துருங்குது. அவசியம் போட்டு பார்த்து சுலபமா வந்துதான்னு சொல்லுங்க.

எனக்கு தரையில் கோலமே வராது ;) கையில் மட்டுமே கோலம் போட தெரியும். நம்ம அறுசுவையில் ரங்கோலிக்கு ஒரு பக்கம் இருந்தா நல்லா இருந்திருக்குமில்ல??? நான் உங்க கோலம் எல்லாம் பார்த்து ரசிச்சிருப்பேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதாக்கா நான் நலம்.இந்த டிசைன் என் கையில் போட்டுமாச்சு.என் கணவரிடம் பாராட்டு வாங்கியுமாச்சு.கையின் உட்பக்கம் போட்டுக்கொண்டேன்.நீங்கள் ஏதும் ஹென்னா வகுப்புக்கு சென்றீர்களா?

அப்படியா... ரொம்ப சந்தோஷங்க... முன்ன மாதிரின்னா உங்க கையை படமெடுத்து இங்க போட்டிருக்கலாம், நானும் பார்த்திருப்பேன் ;( இப்போ முடியாதே. ஆசையா இருக்கு, எல்லார் செய்யும் குறிப்பு, ஹென்னா எல்லாம் பார்க்கனும்னு. ரொம்ப நன்றி கீஃபா.

ஹென்னா வகுப்புலாம் போக எனக்கு லைஃப்ல நேரம் இதுவரை ஓயலங்க... இதெல்லாம் கல்லூரி காலத்தில் ஹாஸ்டலில் எனக்கு ஒரு ஃப்ரெண்ட்ஸ்ம் இல்லாம தனியா போரடிக்குதுன்னு போட ஆரம்பிச்சு கத்துகிட்டது. காலேஜ்ஜில் ஏதும் விஷேஷம் என்றால் இதை போட்டுக்க மட்டும் எனக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ்... :) ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

i like this site

டிசைன் நல்லா இருக்கு வனிதா!!!

Eat healthy

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi... vanitha ...how u?...
romba nalla design...enakku romba
pidichirukku ....continiuuuuuuuu....

தோழிகளே.......
உங்கள் வாழ்க்கை பாதையை மலர்களால் தூவ
முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் புன்னகையால்
தூவுங்கள்........so smile please...

வணக்கம்...வனிதா..
ரொம்ப நல்ல மெஹந்தி டிசைன்...பொடுவதற்கு மிக மிக எளிமையாக...இருந்தது....
நண்றி....

தோழிகளே.......
உங்கள் வாழ்க்கை பாதையை மலர்களால் தூவ
முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் புன்னகையால்
தூவுங்கள்........so smile please...

மிக்க நன்றி. போட்டீங்களா??? ரொம்ப சந்தோஷங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா