பாயில்ட் எக் ஃப்ரை

தேதி: January 5, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

அவித்த முட்டை - 3
சிக்கன் 65 மசாலா - 1டீஸ்பூன்
மிளகுத்தூள் -கால் டீஸ்பூன்
தயிர் - 1டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்லோர் - 2 டேபிள்ஸ்பூன்
ரெட் கலர் - பின்ச்
எண்ணெய் - 2-3 டேபிள்ஸ்பூன்
உப்பு - சிறிது


 

அவித்த முட்டையை நீள்வாக்கில் கட் செய்து கொள்ளவும்.

ஒரு பவுலில் சிக்கன் 65 மசாலா,மிளகுத்தூள்,கார்ன்ஃப்லோர்,தயிர்,உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு சூடு செய்யவும்.கட் செய்த முட்டையை ரெடி செய்த மசாலாவில் பிரட்டி சூடான எண்ணெயில் சாலோ ப்ரை செய்து எடுக்கவும்,ஒரு புறம் மசாலா வெந்தவுடன் மறு புறம் திருப்பி போட்டு எடுக்கவும்.

சுவையான பாயில்ட் எக் ஃப்ரை ரெடி.மல்லி இலை நறுக்கி மேல் தூவி பரிமாறலாம்.


இதனை பிரியாணி,ஃப்ரைட் ரைஸ், புலாவ்,வெரைட்டி ரைஸ் உடன் பரிமாறலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

படத்தை இணைத்த அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நேற்று இந்த முறையில் egg fry பண்ணேன். நன்றாக இருந்தது.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society