கடலைப்பருப்பு குருமா

தேதி: October 6, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

அறுசுவையில் தொடர்ந்து ஏராளமான குறிப்புகள் வழங்கி வரும் <a href="experts/3181" target="_blank">திருமதி. சுபா ஜெயப்பிரகாஷ் </a> அவர்கள் வழங்கிய செய்முறை இது. செய்து பார்த்து உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள்.

 

கடலைப் பருப்பு - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி,பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - சிறிதளவு
பட்டை - ஒரு அங்குலம் அளவு
கிராம்பு - 4
கறிவேப்பிலை - 1 இணுக்கு


 

கடலைப்பருப்பை பாதி குழைய வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு பொரிந்தவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து கறிவேப்பிலை போடவும். பின்னர் நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
அதன் பின் நறுக்கின தக்காளி சேர்த்து நன்கு வதங்கும் வரை வதக்கவும். தக்காளி வதங்கிய பின்னர் அதில் வேகவைத்த கடலை பருப்பை சேர்க்கவும்.
இதனுடன் சாம்பார்தூள், உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். சாம்பார் தூளின் வாசம் போகும் வரை வேகவைக்கவும்.
நன்கு வெந்தவுடன் இறக்கவும். கடலை பருப்பு குருமா ரெடி. சப்பாத்தி, பூரிக்கு ஏற்றது. மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடியது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Hi சுபா நல்லா இருந்தது.இது போல நானும் என்னொட குறிபுகளை எப்படி அனுப்புவது கொஞ்சம் சொல்லுங்க plz-ambika

ஹாய் அம்பிகா,
நன்றி.
இதற்கு முதல் பக்கத்திலேயே 'கூட்டாஞ்சோறு பகுதியில் இணைவது எப்படி ?'
இதை படித்தாலே புரியும்.
இல்லை அட்மினுக்கு 'தொடர்புக்கு' என்று உள்ளதில் சென்று ஒரு மெயில் அனுப்பினால் அவர் அதற்குறியவைகளை சரி செய்து தருவார்.
குறிப்பு சேர்க்க என்ற ஆப்ஷன் அவர் தான் நமது பக்கத்தில் சேர்ப்பார்.
புரிந்ததா??
----இல்லை என்றால் எனக்கு பிறகு யாராவது விளக்குவார்கள்
நன்றி அம்பிகா..

ஹாய் சுபா
மிக்க நன்றி.

HOw to make சாம்பார் பொடி ? Pls explain

ஹாய் கல்பனா,
எப்டி இருக்கீங்க??
புதிதாக அறுசுவை வந்துள்ளீர்களா???
சாம்பார் பொடி செய்ய இங்கெ போய் பார்க்கவும்...
http://www.arusuvai.com/tamil/node/7174
ஈசி வழி இங்கும் உள்ளது...
http://www.arusuvai.com/tamil/10
முயன்று பாருங்கள்..

இல்லை என்றால் ரெடிமேட் பொடி கூட கிடைக்கிறது... சக்தி சாம்பார் பொடி,.....