பட்டிமன்றம் - 57 : பட்டிமன்றங்கள் பயனுள்ளதா? பொழுதுபோக்கா?

அன்பு தோழிகளுக்கு என் முதல் வணக்கம். பட்டியை துவங்க வேண்டிய கட்டாயம் இன்று எனக்கு... அதனால வனியேவா மீண்டும் நடுவர்ன்னு கோவிக்காம எல்லாரும் வாதிட வரணும்னு அன்போடு கேட்டுக்கறேன். :)

இன்றைய தலைப்பு நம் தோழி ஆயிஸ்ரீ அவர்களுடையது:

பட்டிமன்றங்கள் பொழுதுபோக்காக இருத்தல் சுவையா? அல்லது அரிய பல கருத்துக்களோடு, முக்கிய செய்திகள் பற்றிய விவாதமாக இருத்தல் சுவையா?

மிக்க நன்றி ஆயிஸ்ரீ. :)

தலைப்பை நான் விளக்கவே தேவையில்லை, அதுவே விளக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இங்கே ஏற்கனவே விவாதித்த / கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளை எடுத்துக்காட்டாக பேச கூடாது என்பதே விதிமுறை. காரணம் தலைப்பு கொடுத்தவர் மனதை காயப்படுத்திட கூடாது. அதனால் இந்த தலைப்பு, அந்த தலைப்பு, அவசியமா இல்லையான்னு போகாம பொதுவா பொழுதுபோக்கானதா இருக்கனுமா, கருத்தோட இருக்கனுமான்னு மட்டும் பேச வேணும்.

மற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம். வாங்க... வாங்க... ஆரம்பிங்க :)

நடுவரே உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி. உங்களுக்கு நண்பன் (3இடியட்ஸ்) படத்துல வர வைரஸ் ப்ரொஃபசர் மாதிரி உள்ள ப்ரொஃபசர் வகுப்பு எடுத்தா புடிக்குமா இல்லை சின்ன ஜோக் அடித்து மாணவர்களோடு நண்பர்களாக பழகி வகுப்பு எடுக்கு ப்ரொஃபசரைப் பிடிக்குமா? எல்லோருக்கும் இரண்டாவது வகை ஆசிரியரைத்தான் பிடிக்கும். அய்யோ இவரா அப்படீன்னு நினைக்கற வைரஸ் டைப் ப்ரொஃபசர் சொல்லித் தருவது மண்டையில் ஏறாது. ஹையா நம்ப சார் கிளாஸ் ஆச்சேன்னு ஆர்வமா எதிர் பார்க்கும் ஆசிரியர் சொல்லித் தருவதுதான் மனதில் பதியும்.

அது போல்தான் ஜனரஞ்சகமான நகைச்சுவை கலந்த பட்டிமன்றங்கள்தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கும். வெறும் கருத்துப் பட்டிமன்றங்கள் வைரஸ் ப்ரொஃபசர் வகுப்பு போலத்தான் இருக்கும்.

அறிவொளி அவர்களின் பட்டிமன்ற பேச்சைக் கேட்டால் மனம் அதிலேயே லயித்து விடும். முதலில் நம்மைக் குழப்புவது போல் ஜனரஞ்சகமாக நகைச்சுவையாக பேசி பின்னர் தான் சொல்ல வந்த கருத்தை நயமாக எளிய நடையில் சொல்லும் போது எத்தனைக் காலங்கள் ஆனாலும் நம் மனதை விட்டு அகலாது அவரது பேச்சு. மெய்யான பொய், பொய்யான மெய், மெய்யான மெய், பொய்யான பொய் ன்னு அவர் சொல்லி என்னடா இதுன்னு நாம் குழம்பும் நேரத்தில் ஒவ்வொன்னையும் உதாரணங்களோடு விளக்கி சொல்லும் போது "அட ஆமால்ல" அப்படீன்னு நம்மை சொல்ல வைத்து அவர் பல வருடங்களுக்கு முன் பேசிய பட்டிமன்ற பேச்சு இன்றும் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. பட்டிமன்றங்கள் அப்படி இருக்க வேன்டும்.

அதை விட்டு கருத்துதான் பிரதானம்னு அதையே பேசிக்கிட்டு இருந்தா அட போங்கையா மைக் கிடைச்சா ரம்பம் போடாம விட மாட்டானுங்களேன்னு சாமானிய மக்கள் எழுந்து போயிடுவாங்க. அவங்களையும் உட்கார வைக்கணும்னா பட்டிமன்றங்கள் ஜனரஞ்சகமா பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததா இருக்கணும்.

அப்புறம் இப்பல்லாம் பட்டிமன்றங்கள் வீட்டு நடப்பைச் சுற்றியே இருக்குதாம். முன்னாடில்லாம் இலக்கிய இதிகாச தலைப்புகளில் கருத்துச் செறிவுள்ள பட்டிமன்றங்கள் நடத்தி பட்டிமன்றங்கள் ஒரு குறுகிய வட்டத்துக்கானதாகவே இருந்தது. வீட்டு நடப்புகளைப் பற்றி பேச ஆரம்பித்த பின் தான் பட்டிமன்றத்தின் வீச்சு அதிகமானது. பாமரனுக்கும் புரிய ஆரம்பித்தது.

எனவே பட்டிமன்றங்கள் ஜனரஞ்சகமாக பொழுதுபோக்காக இருப்பதே சிறந்தது என்று இம்முறை நடுவர் மீது ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறோம் :).

சோடா ப்ளீஸ்!!!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே!! 10த், +2 ஸ்டூடண்ட்சையெல்லாம் என்ன பாடுபடுத்துறாங்க!! எதுக்கு? ஏன்? அப்படியே அவங்க போக்கில் விட்டுட வேண்டியதுதானே!!
ஸ்கூல்லயும் படிக்கனும், டியூசன்லயும் படிக்கனும். சரி!! இதையெல்லாம் முடிச்சிட்டு நைட் 10 மணிக்கா வீட்டுக்கு வந்தாவது ஒரு டிவிகிவி பார்க்கலாம்னா கேபிளை பிடுங்கி வெச்சிருப்பாங்க. தூங்ககூட விடுறதில்ல!! மிட்நைட் 12 வரைக்கும் படிக்கனும், காலை 4 மணிக்கு எழுந்து படிக்கனும், திரும்ப காலை 6 மணிக்கு டியூசன் போகனும், ஸ்கூல் போகனும், படிக்கனும். அதுமட்டுமில்லாம +1யும் சேர்த்து ரெண்டு வருஷம் +2 படிக்கனும். இதெல்லாம் எதுக்குங்க! இன்னிக்கு கஷ்டப்பட்டு படிச்சா நாளைய லைஃப் நல்லா இருக்கும்னு தானே சொல்றோம்.
எதிரணியினர் சொல்ற தோழமை ஆசிரியர்களால் ரிசல்ட் கொடுக்க முடியுமா? ஸ்ரிக்ட்டான ஆசிரியர்களால்தான் மட்டுமே முடியும்!!

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

பிரெச்சனையில் இருப்பவர்களுக்கு டெம்பரவரி சொலுஷன் வேணாம், பெர்மனண்ட் சொலுஷன் தான் வேணும்... அதனால கருத்து சொல்லுங்க, ஜோக் அடிக்காடீங்கன்னு சொல்றீங்க. நியாயம் நியாயம். :)

கரக்ட்டு... யார்கிட்டையோ காசு கொடுத்து அட்வைஸ் கேட்காம பட்டிமன்றங்களீல் வரும் கருத்துக்களை ஃப்ரீயா எஞ்சாய் பண்ணலாம் தானே... கரக்டா கேட்டீங்க தான்யா... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கரக்ட்டு... காமெடி வேற கோமாளித்தனம் வேறு... சிந்திக்க வைத்து சிரிக்க வைப்பது காமெடி, எதுவுமே இல்லாம சும்மா சிரிக்க மட்டும் வைப்பது கோமாளித்தனம். சரியா சாந்தினி?!

சரியா சொன்னீங்க... மாற்றம் நம்மில் துவங்கினா தான் வெளியே கொண்டு வர இயலும். மன அழுத்தத்துக்கு நல்ல மருந்தே சிரிப்பு தானே.

கரக்டு ரொம்ப சீரியஸ் டாப்பிக் எப்பவாது எடுத்தா 2 பக்கம் கூட தாண்டாது... கேட்டா அடுத்த பட்டியாவது கொஞ்சம் நகைச்சுவை பட்டியா இருக்கட்டும்னு நமக்கே அட்வைஸ் வரும் ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் இன்னும் அந்த படமெல்லாம் பார்க்கலயே... ;) அதனால் கேள்விக்கு பதில் சொல்லாம எஸ்கேப். ஹிஹிஹீ.

// மெய்யான பொய், பொய்யான மெய், மெய்யான மெய், பொய்யான பொய் ன்னு அவர் சொல்லி என்னடா இதுன்னு நாம் குழம்பும் நேரத்தில் ஒவ்வொன்னையும் உதாரணங்களோடு விளக்கி சொல்லும் போது "அட ஆமால்ல" அப்படீன்னு நம்மை சொல்ல வைத்து // - நிஜமா இவர் யாருன்னு எனக்கு தெரியல... இருந்தாலும் நீங்க சொல்லும் போது இதெல்லாம் நாம் மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தம் இருக்கு.

//அட போங்கையா மைக் கிடைச்சா ரம்பம் போடாம விட மாட்டானுங்களேன்னு சாமானிய மக்கள் எழுந்து போயிடுவாங்க. // - அட மைக் கிடைக்காமலே வயிறு வலிக்க சிரிக்க வைக்கிற ஆளெல்லாம் அறுசுவையில் உண்டே ;)

உண்மை தான்... இன்னும் பழைய கால பட்டிமன்றங்கள் போலவே இதிகாசத்தை பேசிகிட்டு இருந்தா நாமலாம் (முக்கியமா நானெல்லாம்) பட்டி பக்கமே வர முடியாதே ;)

என்ன தான் சரியா பேசினாலும் நடுவர் மேல அடிச்சுலாம் பேசப்புடாது... நடுவர் பாவம் நடுவர் பாவம்!!! பிடிங்க சோடா. விடுங்க என்னை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா... ஸ்ட்ரிக்ட்டான வாதியார்கிட்ட தான் பசங்க ஒழுங்கா இருப்பாங்கன்னு சொல்றீங்களா???

எதிர் அணி... கேட்டீங்களா??? வாங்க... வந்து என்னன்னு கேளுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு தோழிகளே.. இன்று இரவு தீர்ப்பு வரும்... இனி தான் யோசிக்கனும், தலையை பிச்சுகிட்டிருக்கேன் :( எல்லாருமா சேர்ந்து என்னை குழப்பிட்டீங்க தானே.

சரி... மாலை வரை பதிவு போட விரும்புபவர்கள் போடுங்க, அதன் பின் தீர்ப்பு போடுறேன். யோசிக்கவும், அதை தட்டவும் கொஞ்சம் நேரம் வேணும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே ஆசிரியருக்கு பயந்து புரியாமல் மனப்பாடம் செய்து பெறும் மதிப்பெண்கள் வாழ்க்கைக்கு உதவுமா? இல்லை நட்பான ஆசிரியரின் மீதுள்ள பிரியத்தால் அவர் நடத்திய பாடங்களை மனதில் உள்வாங்கி புரிந்து படித்து பெற்ற மதிப்பெண்கள் உதவுமா? அது போல்தான் வெறுமனே கருத்து தோரணம் கட்டிய பட்டிமன்றங்களும்! அந்த நேரத்தில் ஏதோ புரிந்தது போல இருக்கும். அதன் பின் எல்லாம் காற்றோடு போய்விடும். நகைச்சுவைப் பட்டிமன்றங்கள் அப்படி இல்லை. இனிய நினைவுகளாக மனதில் தங்கி நிற்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே!! தேர்வுத்தாள் திருத்தும் ஆசிரியருக்கு தேவை கேள்விக்கு சரியான பதில், நல்ல கல்லூரியில் சீட் கிடைக்க தேவை நல்ல மதிப்பெண். இதில் நாம புரிஞ்சி படிக்கிறோமா, புரியாம மக்கப் பண்றோமா என்பதெல்லாம் யாரும் ஆராய்ச்சி பண்றதில்லை.
நடுவரே!! எதிரணியினர் சொல்ற ஜாலியான, டேக் இட் ஈசியான, அதேசமயம் புரிஞ்சி படிச்ச மாணவர்களெல்லாம் இன்னைக்கும் சாதாரண நிலையில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனா ஒரு மிட்டாய் கணக்கை கூட சரியா போட தெரியாத அதாவது நண்பன் படத்துல வர்ற சைலன்சர் மாதிரியான ஆளுங்க வாழ்க்கையில் எங்கோ போயிடறாங்க. காரணம் (மக்கப்), அவங்க உலகத்தின் போக்கை புரிஞ்சிட்டு ஸ்டெப் வைக்கறதாலதான்.
என்னதான் சிரிச்சி, சிரிச்சி பொழுது போக்கினாலும் திரும்ப சீரியசான நம்ம வாழ்க்கைக்கு வந்துதான் ஆகனும். அந்த வாழ்க்கைய டேக் இட் ஈசியா எடுத்துக்கிட்டாலோ, பிறந்தோம் வளர்ந்தோம் பொழுது போக்கினோம்னு இருந்தாலோ நம்மால் வாழ்க்கையில் ஒருபடி கூட முன்னேறவோ, எதையும் சாதிக்கவோ முடியாது நடுவரே!!
சிரித்து வாழனும் ஆனா பிறர் சிரிக்க வாழ்ந்துட கூடாதுதானே நடுவரே!!
நடுவரே!! விஜய் டிவியில் டைரக்டர் சங்கர் பேசும்போது சொன்னார், தன் நண்பர் ஒருவர் கூறிய சிந்திக்க வைத்த ஒரு வார்த்தையால் இரவெல்லாம் தூங்கவில்லை என்றும் அந்த வார்த்தையால்தான் இவ்வளவு உயர முடிந்தது என்றும் கூறினார்.
அறுசுவைத் தோழிகள் கருத்துள்ள பொன்மொழிகளைதானே விருப்ப வாசகத்தில் போட்டுள்ளார்கள். நீங்களும்கூட நடுவரே!! எதிரணியினரும்தான் நடுவரே!!
ஆகவே நடுவரே!! தலைகால் புரியாமல் இருக்கும் இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் பயனுள்ள, கருத்துள்ள பட்டிமன்றங்கள்தான் தேவை!! தேவை!! தேவை!!
1.வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்

2. இன்று தலையில் கை வைத்து உட்கார்ந்தவனை கேள்!
நேற்று கையில் தலை வைத்து படுத்திருந்தேன் என்பான்.
இன்று இப்பொழுது என செயலாற்றில் இறங்கியவர்களே
என்றும் எப்பொழுதும் வரலாற்றில் ஏறினார்கள்.
என்று கூறி இந்த பட்டிக்கான எனது வாதத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன் நடுவரே!! முதல்முறையாக பட்டிக்கு வாதிட வந்த என் பேச்சுக்கு ஊக்கம் தந்த நடுவர் அவர்களுக்கு என் நன்றி!! வணக்கம்!!

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

கட்டாயமா படிக்க வெச்சா மனசுக்கு போகாதுன்னு சொல்றீங்க... கருத்துக்கு வந்த கெட்ட நேரத்தை பார்த்தீங்களா ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்