கேப்ஸிகம் ரைஸ்

தேதி: January 9, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (10 votes)

 

பாசுமதி அரிசி - ஒரு கப்
கேப்ஸிகம் - ஒன்று
உப்பு
முந்திரி - சிறிது
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
வறுத்து பொடிக்க:
மிளகாய் வற்றல் - 5
தனியா - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுந்து - 1 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
பட்டை - 1” துண்டு
வேர்கடலை - சிறிது


 

அரிசியை கழுவி உதிரியாக வடித்து வைக்கவும். வறுக்க தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
அனைத்தையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து எடுத்து மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து இத்துடன் நறுக்கிய கேப்ஸிகம் சேர்த்து 2 - 4 நிமிடம் வதக்கவும்.
இதில் பொடி, உப்பு சேர்த்து கலந்து விடவும்.
சூடாக சாதத்தை போட்டு கிளறி 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.
வறுத்த முந்திரி கொண்டு அலங்கரிக்கவும். சுவையான கேப்ஸிகம் ரைஸ் தயார். விரும்பினால் கடைசியாக சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Parka romba arumiya iruku vanitha enaku oru parcel ethey decoration udan partuku sariya irukum ethu

வாழ்க வளமுடன்

குறிப்பு ஈஸியா இருக்கு. கடைசி படம் அருமை வாழ்த்துகள். 3 குடைமிளகாயிலும் ஒரே சாதம் தானே. ஒன்னு மட்டும் வேற கலருல இருக்கு.

வனி கேப்சிகம் ரைஸ் சூப்பரா இருக்கு கடைசி படம் செம சூப்பர்ர்ர் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பர் வனி. படம் எல்லாம் அழகா வந்திருக்கு.

‍- இமா க்றிஸ்

கெப்சிகம் ரைஸ் - பசித்த வயிரோடு உங்கள் குறிப்பை பார்த்ததும் கண்களுக்கு நல்ல விருந்தாயுள்ளது.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :) - இதே டயலாக்கை போட்டு போட்டு எனக்கும் போரடிக்குது... அடுத்த குறிப்பில் வேற் அடயலாக் யோசிச்சு போடனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா கேப்ஸிகம் ரைஸ் படங்கள் அத்தனையும் சூப்பர். கடைசி படம் அருமையோ அருமை. எடுத்த போட்டோவே இப்படினா அப்ப ரைஸ் சொல்லவா வேனும். வழக்கம் போல அசத்துறீங்க. வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி :) டெகரேஷனோட பார்சல் அனுப்பிடுறேன். உங்களூக்கு இல்லாததா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. வினோ கடைசி படத்தில் இருக்கும் 3 கேப்ஸிகம்ல ஒன்னு உள்ள ரைஸ் இல்ல... ;) அது அது உள்ளவே உள்ள விதை தான். பூ மாதிரி பார்க்க கியூட்டா இருந்ததுன்னு வெச்சேன். இங்க படம் குட்டிய்யா போனதால தெளிவா தெரியல. :) ஹிஹிஹீ. மிஸ் ஆயிருச்சு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. இப்போலாம் சமையலை விட போட்டோ எடுக்குறதில் தான் இண்ட்ரஸ்ட் அதிகமா இருக்கு :) நேரம் தான் கம்மியா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா... நீங்க சூப்பர்ன்னு சொல்ல கொடுத்து வெச்சிருக்கனுமே நான். :) நன்றி நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. பசியா ஏன் இருக்கீங்க... ஏன் இன்னும் சாப்பிடல?? நேரமாயிருக்குமே... முதல்ல சாப்பிடுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. போட்டோவை வெச்சு தான் ரேட்டிங்கா??? அப்போ இனி சமைக்காம போட்டோ மட்டும் போட்டுடுறேன் ;) என்ன ஐடியா நல்லா இருக்கா? ஹிஹிஹீ. சும்மா சொன்னேன் நசீம். செய்து பார்த்து சொல்லுங்க, பிடிச்சுதான்னு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,
அசத்தறீங்க... ஃபோட்டாகிராஃபியிலும்! :) கடைசிப்படம் ப்ரசண்டேஷன் சூப்பர்!
கேப்ஸிகம் ரைஸ் - அப்பப்ப செய்வதுண்டு,‍ லன்ச் பாக்ஸ்க்கு. உங்களோட இன்னொரு கேப்ஸிகம் ரைஸ்கூட ட்ரை பண்ணி பார்த்திருக்கேன். நல்லா இருத்தது. இதுவும் அருமை! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

மிக்க நன்றி. ம்ம்... நினைவிருக்கு, முன்பு அறுசுவையில் உள்ள குறிப்பை தான் செய்து அனுப்பினேன். லாவண்யா குறிப்புன்னு நினைக்கிறேன். இது நான மாற்றி ட்ரை பண்ணது... இதையும் செய்து பாருங்க :) பிடிச்சுதான்னு சொல்லுங்க.

Note: உங்க ஸ்டைலில் உங்களுக்கு பதிவு போடுறேன் ;) ஹிஹிஹீ. உங்க பின்னூட்டம் மற்ற இழைகளில் பார்த்து பதிலும் போட்டுட்டேன். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. மீண்டும் நன்றிகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப கலர் புல்லா இருக்கு. நான் இன்று செய்து பார்த்து சொல்றேன்.பார்க்கவே அழகா இருக்கு. அருமையா பிரசன்ட் செய்திருக்கீங்க.வாழ்த்துக்கள்

"எல்லாம் நன்மைக்கே"

என்ன வனி மாலே போனதிலிருந்து சமையல் அறை விட்டு வெளியே வரவே இல்லையா? உங்களவர் பாடு கொண்டாட்டம் தான் போங்க. புட் போடோக்ராபி பற்றி கண்டிப்பாக நீங்கள் ஒரு இழையை ஆரம்பிக்க வேண்டும் :) குறிப்பும் கடைசி படமும் அமர்க்களமாக இருக்கு.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அசத்துறீங்க வனிக்கா, ப்ரசண்டேஷன் பார்க்கறதா, குறிப்ப பார்க்கறதான்னு பயங்கர குழப்பமா இருக்கு. வாயிற்றுக்கு மட்டும் இல்ல கண்ணுக்கும் விருந்தளிக்கிறீங்க வனிக்கா. அசத்தலா இருக்கு குறிப்பும் படங்களும்.

hai yellorukkum vanakkam...naan new user.intha site engha veettula yellorukkum romba help pa irukku.naan ithula new samayal kurippugal parthu veettula solluven.udaney senju asatthuvanga.so plz to all sisters puthusa yethvum sollungha....nandri...

முகப்பில் படத்தை பார்த்ததும் நினைச்சேன்...... இது கண்டிப்பா நம்ம வனியோட கைவண்ணம்மாதான் இருக்கும்ன்னு....... : D
புதுசு புதுசா கண்டுபிடிக்கரதுல உங்களுக்கு இணை நீங்கதான் போங்க...... பிரசெண்டேஷன் ரொம்பவே அழகா இருக்கு வனி...... விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன்.......

பாக்கியலக்‌ஷ்மி... மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு சொல்லுங்க :)

லாவண்யா... மிக்க நன்றி. எங்க வர விடுறாங்க அடுப்படியை விட்டு... ;( அந்த சோகத்தை நேற்று தான் மாமியாரிடம் புலம்பினேன் ;) நீ நல்லா ரெஸ்ட் எடும்மான்னாங்க... “உங்க பிள்ளைகிட்டா வந்தா ரெஸ்ட் எங்க எடுக்குறது?? சமைச்சதை விட்டுட்டு சமைகாததையே கேட்கறார்”னு. ஹிஹிஹீ. ஃபுட் போட்டோக்ராஃபீ... என்னை வெச்சு காமெடி பண்ண கூடாது. அதெல்லாம் பெரிய விஷயங்க... எனக்கு நல்ல போட்டோக்ராபரா வரனும்னு ஆசை... அதனால் சின்ன சின்னதா எதாவது இருக்க கேமராவில் ட்ரை பண்ணுவேன். அவ்வளவு தான். சின்ன வயசுல கொடாக் காலண்டர்ஸ், டைரிலாம் வரும்... அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் இருக்கு.

யாழினி... மிக்க நன்றி. நீங்க சொன்னா சரி தான் யாழினி. :)

ஃபர்ஹான்... தளம் பிடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. தினம் தினம் அறுசுவையில் புதுசா வந்துட்டே தானே இருக்கு, ட்ரை பண்ணுங்க. :)

தீபா... பார்த்து கண்டு பிடிக்க முடிஞ்சா மகிழ்ச்சி தான். அவசியம் செய்து பார்த்து எப்படி இருந்துதுன்னு சொல்லுங்க மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மேடம்,
அழகான ப்ரெசென்ட் செய்து இருக்கீங்க..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

படமே சூப்பர். மாலே களைகட்டி இருக்கு போல!!! டிஸ்ப்ளே எப்படி பண்றதுன்னு இந்தியா வந்து கிளாஸ் எடுங்க, எனக்கு தான் முதல் அட்மிஷன். எப்பவும் போல சூப்பர்... :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மிக்க நன்றி. இதவிட சூப்பரா டிஸ்ப்லே பண்ற மக்கள் ஏகமா இருக்காங்க... ;) நான் ஏதோ இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா ட்ரை பண்றேன். வாங்க இருவரும் சேர்ந்து எங்கையாவது க்லாஸ் போவோம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க காப்சிகம் ரைஸ் தான் இன்னைக்கு எங்க வீட்ல. நல்லா வந்திச்சு. ரொம்ப நன்றி. டூர் போகும் போது இதை பண்ணலாம் போல என் கணவர் சொன்னார். ரொம்ப நன்றிபா.

"எல்லாம் நன்மைக்கே"

வனி உங்க கேப்ஸிகம் ரைஸ் நேற்று செய்தேன். சூப்பரா இருந்துச்சு. உங்க டெக்கரேஷன் அருமையாக இருக்கு.
வாழ்த்துக்கள்!!!

அன்புடன்
மகேஸ்வரி

மிக்க நன்றி. நான் ரொம்ப லேட்டா பதிவுகளை பார்க்கறேன் :( சாரிங்க. செய்து பார்த்து பதிவிட்டமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி பாக்கியா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி மகேஸ்வரி. இந்த குறிப்பில் இருந்த பதிவுகளை மிஸ் பண்ணிட்டிருக்கேன், ரொம்ப சாரிங்க. வாழ்த்துக்களுக்கும் செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கும் ரொம்ப ரொம்ப நன்றி மாகேஸ்வரி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா