பட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே! வருத்தமே!**

அன்பார்ந்த அறுசுவை ரசிகர்களே! ரசிகைகளே!

அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு, நீங்கள் ஆவலோடு ஒருவாரகாலமாக எதிர்பார்த்த நமது பட்டி இனிதே துவங்கி விட்டது. என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொண்டு... சென்ற வாரம் போலவே இந்த வாரமும் நாம் பேச விருக்கும் தலைப்பும் பயனுள்ளதுதான்...அது அடுத்து வரும் கோடைவிடுமுறையை முன்னிறுத்தி...

அறுசுவை தோழி உதிராவின்

***விடுமுறைக் கால பயணங்களால் வருவது
அலுப்பும் , அலைச்சலும், பணவிரயமும்! (வருத்தமே)
அனுபவமும் , ஆனந்தமும், மனநிறைவும்!(ஆனந்தமே)***

என்ற தலைப்பின் கீழ் பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!!!

உங்களது பொன்னான நேரத்தை அறுசுவைக்காக கொஞ்சம் ஒதுக்கி..அறுசுவையின் பட்டியை இம்முறையும் வெற்றிப் பட்டியாக்க .... அனைவரும் வருக ஆதரவு தருக என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்;-) நன்றி வணக்கம்_()_

பின்குறிப்பு: முதற்கட்ட அறிவிப்பு ஒவ்வொரு பதிவுக்கு பிறகும் சோடா வழங்கப்படும்.

முக்கியக்குறிப்பு: பட்டியின் விதிமுறைகளை மனதில் கொண்டு...பதிவுகளை பதிய வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அருமையான (சூழ்நிலைக்கேத்த) தலைப்பை தேர்ந்தெடுத்த நடுவருக்கு வணக்கம். தலைப்பை தந்த தோழிக்கு நன்றிகள் பல. வாதாடும் தோழிகளுக்கும் வாசிக்கும் தொகிகளுக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுகின்றன.

நடுவரே கேள்வி கேட்ட என்ன ஒரு அவசியம் சொல்லுங்க பார்ப்போம். சும்மா வெளியில் காய்கறி வாங்க போயிட்டு வந்தாலே அலுப்பு தான். வந்ததும் யாராவது ஒரு காபி போட்டுக் கொடுக்கமாட்டாங்களா என்றிருக்கும். அதுவும் விடுமுரைனாலே கோடையில் தானே...அப்போ எப்படி இருக்கும்...பங்குனி வெய்யில் பல்லை காடும். அப்பொழுது வெளியில் போய் வேர்த்து விறுவிறுத்து ....அய்யோ சொல்லும் போதே விரலெல்லாம் பிசுபிசுங்குது நடுவரே! சந்தேகமே இல்லாமல் விடுமுறை பயணங்களால் வருவது அலுப்பு, அலைச்சல், பணவிரையம் தான்.

எப்போவுமே ஒரு கேள்வி கேட்டு இரண்டு பதில் கொடுத்தால் பெரும்பாலானோர் முதலில் இருக்கும் விடை கண்டிப்பாக தப்பாக இருக்கும் அதனால் இரண்டாவதை தான் தேர்ந்தெடுப்பர். இது சைக்காலஜி. ஒன்றை விட ஒன்று பெட்டர் என்பதால். புடவை கடையில் என்ன தான் புரட்டிப் போட்டாலும் முதலில் பார்த்ததை தான் கடைசியில் வாங்குவோம். அது போல தான் நடுவரே, நீங்கள் கேட்ட கேள்வியில் இருக்கும் இரண்டாவது ஆப்ஷனை எல்லோரும் தட்டியிருக்கிறார்கள். ஆடியன்ஸ் சாய்ஸில் நிறைய வோட்டு விழுததால் அது சரியான விடை என்று லாக் செய்ய வேண்டாம் நடுவரே மற்ற ஆப்ஷனையும் பாருங்க சரியா?

இந்த விடுமுறைக்கு பிளானிங் பண்ணுவதை பத்தி முதலில் பேசுவோம் நடுவரே. அதவாது இப்பொழுதுள்ள சூழ்நிலையில் யாரும் விடுமுறைக்கு (முன்போல்) தாத்தா வீட்டுக்கு அத்தை வீட்டுக்கு என்று போக விரும்புவதில்லை. எல்லோருமே வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் தான். அப்போ தானே குழந்தை ஸ்கூலுக்கு போனதும் அழகாக கட்டுரை எழுத முடியும். அப்படி கோடையில் வெளியூர் போக அந்த வருடம் முழுதுமே ப்ளான் செய்யனும். ஒவ்வொரு மாதமும் அதற்கென்று தனி பட்ஜெட்டை ஒதுக்கி வைக்கணும். எதிர்ப்பாரமால் செலவு வந்தால் எங்கே போக வேண்டும் என்று சேர்த்து வைத்தோமோ அதை விடுத்து இருக்கும் காசில் ஒரு இடத்துக்கு போய் வருவோம். எதிர்ப்பார்த்தது கிடைக்கலைனா, அங்கே என்ன வரும்? ஏமாற்றம் தான். சோ அங்கேயே அராம்பாமாச்சு இல்ல....

போனால் தனியா போவோம். ஒரு கூட்டமா போவோம். சிலர் இந்த மாதிரி பயணங்களுக்காகவே ஷாப்பிங் பண்றாங்களாம் நடுவரே! நீங்க நினைக்கிற மாதிரி ஊருக்கும் எடுத்து செல்லும் அத்தியாவிசிய பொருட்கள் இல்லை. டிரஸ் ஷாப்பிங். ஏனென்றால் அவர்கள் முன் சென்ற விடுமுறைக்கு போட்டாதே திருப்பப் போட்டால் எல்லா போட்டவும் அதே ட்ரஸில் இருக்குமாம். குடும்பத்தலைவர் அப்பவே தலையில் கையை வைத்து உட்கார்ந்திடுவார்.

அதற்க்கப்புறம் எங்கே செல்கிறோமோ அங்கே போவதற்குரிய டிக்கட்டை புக் பண்ணனும். நீங்க இரண்டு மாதத்திற்கு முன் முன்பதிவு செய்ய முடியாது. அப்படியே டிக்கட் புக் பண்ணினாலும் பெர்த் கன்பார்ம் ஆகாது. அது ஆகுமா ஆகாதா என்று பயணிக்கும் நாள் வரையிலுமே தெரியாது. அப்படியே கன்பார்ம் ஆனாலும் ஒரே கோச்சில் இருக்குமா? இரண்டு மூன்று நாள் பயணம் என்றால் பிள்ளைங்களை எப்படி சமாளிக்க போறோம் அப்படி இப்படி என்று குடும்பத்தலைவிக்கு அப்போவே பீபி ஏறிவிடும்.

அப்புறம் இந்த துணி மணிகள் அடிக்கி வைப்பது. எல்லோரும் அவங்க துணியை அவங்களாகவே எடுத்தும் வைக்க மாட்டாங்க. எடுத்து வைப்பவங்களையும் ஏன் இதை எடுத்து வைத்த, இதை யாரு போடுவா என்று எடுத்து வைப்பவர்களையும் கடுபெத்துவார்கள். எப்படியோ மூட்டை முடிச்சி எல்லாத்தையும் முன்னரே கட்டினாலும் என்னத்தான் லிஸ்ட் போட்டு போட்டு எடுத்து வைத்தாலும் கண்டிப்பா முக்கியமானது விட்டு தான் போகும். என்னத்தான் மாஞ்சி மாஞ்சி எடுத்து வைத்தாலும் அதற்க்கு ஒரு பாராட்டும் இருக்கும் அந்த விட்டு போன போருல்லுக்காக போன இடத்தில் சண்டை தான் நடக்கும். அட அப்படி என்னடா பொருள் எங்கும் கிடைக்காதா என்றெல்லாம் நீங்கள் யோசிக்கவேண்டாம் நடுவரே....நம் மக்களுக்கு சண்டை போட காரணத்தை சொல்லியா கொடுக்க வேண்டும்.

இப்போ தான் ப்ளானிங்கே நடக்குது அதற்குள் இவ்வளவு பிரச்சனை இன்னும் ரெடி ஆகானும் கரெக்ட் நேரத்துக்கு வண்டி ஏறணும் .....இன்னும் வரும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்பு நடுவருக்கும் மற்றும் இங்கு வாதாட இருக்கும் அனைத்து தோழிகளுக்கும் வணக்கம், வணக்கம், வணக்கம்.

விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். இதில் ஊர் சுற்றுவது என்பது அலாதி சுகமே. குடும்பத்தோடு எல்லோரும் வெளிய போய் விட்டு வருவதால் பிள்ளைகளுக்கும் ஆனந்தம் (பாவம் இல்லையா அவுங்க. வரும் புல்லா படிச்சு படிச்சு களச்சு போய் ஓடா தேய்ந்து போய் இருப்பாங்க) பெற்றோர்க்கு மனக்கஷ்டம், வீட்டு டென்ஷன் என எல்லாத்தையும் கொஞ்சம் தூக்கி போட்டு விட்ட ஆனந்தம். எனவே விடுமுறைக் கால பயணங்களால் வருவது அனுபவமும் , ஆனந்தமும், மனநிறைவும் தான்.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

விடுமுறைக்காக பணம் சேர்த்து வைக்க சொல்லுவதன் மூலம் சிறு பிராயம் முதலே நம் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்கும் பழக்கத்தை நம்மால் உண்டாக்க முடியும். இப்போது உள்ள generation க்கு சேர்த்து வைக்க கற்று தருவது நல்ல விஷயம் தானே. அவர்களுக்கு பிடித்த விஷயத்தில் இருந்து ஆரம்பித்தால் தான் பிற்காலத்திலும் அவர்களுக்கு சேர்த்து வைக்கும் பழக்கம் வரும்.

நாம் வெளிய போய் வந்தாலே அலுப்பு தான் வரும் நமக்கு. அதற்க்கு என்று வெளிய போய் வேலை பார்க்காமலா இருக்கிறோம் ? எனத்தான் வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் வெளிய போகணும்ன்னா போய் தான் ஆகணும். இதில் என்ன இருக்கு ? அலுப்பை பார்த்தால் புழப்பு நடக்குமா ?

சரி பங்குனி வெயில்ன்னு நம்ம பிள்ளைகள் வெளிய போய் விளையாடமலா இருப்பாங்க ? அதுக்கு அவுங்களுக்கு பயனுள்ள முறையில் பயணங்கள் மேற்கொள்வது நல்லது தானே.

குடும்ப தலைவிகள் என்ன வேலை பார்த்தாலும் யாரும் பாராட்டுவதே இல்லை. இந்த விஷயத்தில் மட்டும் எப்படி நமக்கு பாராட்டு கிடைக்கும் ? பாராட்டு என்ற ஒன்றை எல்லாம் நாம் எதிர்பார்க்க கூடாது.

//புடவை கடையில் என்ன தான் புரட்டிப் போட்டாலும் முதலில் பார்த்ததை தான் கடைசியில் வாங்குவோம்// என்னதான் நீங்க மாஞ்சு மாஞ்சு இரண்டாவது தலைப்புக்கு வாதாடினாலும் முதல் தலைப்பு தான் சரின்னு கடைசியில் சொல்லுவீங்க.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

அன்பு தோழி... இங்கே பெயர் சொல்லி வாதிட கூடாதுன்னு எல்லா பட்டியிலும் திரும்ப திரும்ப சொல்றோம்... தயவு செய்து லாவண்யா பெயரை நீக்குங்க. யாரும் இன்னும் உங்க பதிவில் பதிலளி தட்டல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டிக்கும், நடுவருக்கும் வணக்கம். விடுமுறைக் கால பயணங்களால் வருவது
அலுப்பும் , அலைச்சலும், பணவிரயமும் தான் நடுவரே, வாதத்தை பிறகு வந்து கொடுக்கிறேன். எங்க கட்சிய பலமாக்குவோம்ல.

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

வனி மத்திட்டேன்பா. சாரி.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

மிக்க நன்றி ஜென்னிவினோ :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு நடுவருக்கும் ,அருமை தோழிகளுக்கும் வணக்கமுங்கோ:)..

விடுமுறை கால பயணங்களால் ஆனந்தமும்,அனுபவமும்,மனநிறைவும்தாங்க

விடுமுறைக்கு சுவாரஸ்யம் கூட்டுவது இதுபோன்ற பயணங்கள்தானே..!

இயற்கையோடு இடைஞ்சலின்றி,சைகையாய்,சத்தமாய்,சுதந்திரமாய்

பேசமுடிவது இதுபோன்ற பயணங்களில்தாங்க.:-.

புது இடம்,புது கலாச்சாரம்,புது மனிதர்கள்,என ஒவ்வொரு பயணமும் உலகமே

ஒரு பள்ளிக்கூடம் என சொல்லாமல் சொல்லி தர வாய்ப்பு கிடைப்பது இந்த

பயணங்களாலதானே..!

நீயொரு குழந்தை,நானொரு குழந்தையென குழந்தைகளோடு வயது

வித்யாசமின்றி ஆர்ப்பரிக்கவும் இது ஒரு வாய்ப்பு...அலுப்பான அன்றாட

நாட்களில் எப்பவும் அப்படியெல்லாம் இருக்கமுடியாது இல்லியா?

திட்டமிடுதல்,சேமிப்பு,பூகோள அறிவு,உற்சாகம்,சகிப்புத்தன்மை,என பல

பண்புகளை விருத்தி செய்யவும் இது ஒரு வாய்ப்பு

அவரவர் வசதிக்கேற்ப

ஏற்காடோ,இமாலயாவோ,கன்னியாகுமரியோ,சுவிட்சர்லாந்தோ

ஏதோ ஒரு இடம் தேர்வு செய்துக்க வேணும்...வசதிக்கேற்ப ப்ளான் பண்ணிட்டா

சுற்றுலா மன நிறைவே...

அது போன்று போய் வந்தபின்னே அந்த பயணத்தை அனுபவித்து

எத்தனை ,எத்தனை கட்டுரைகள் ஒவ்வொரு சுற்றுலா இடம் பற்றியும் இருக்கு

தெரியுங்களா..எங்க போகணுமோ..அந்த இடத்தை பற்றிய பயண

அனுபவங்களை தெரிஞ்சுட்டு போவது இன்னும் சுவை..

உதாரணத்துக்கு ..ஒரு சிரியாவை பற்றிய வர்ணனையோடும்,செய்திகளோடும்

கட்டுரை படிக்கும்போதே போகத்தூண்டும் இனிமை இருக்கே...அதெல்லாம்

அனுபவித்தால் தானேங்க எழுதமுடியும்..!!

போகமுடியலன்னாக்கூட அட்லீஸ்ட் படிச்சாவது ஆசைய தீர்த்துக்கலாமின்னு அந்த அனுபவத்தை எண்ணி குழந்தைங்க குச்சி ஐஸ்க்கு ஆசைப்படறமாதிரி நம் மனக்குழந்தையை ஏங்க வைக்கும் பயணங்கள் உண்மையில் சுகம்..அதனால் எதிரணி சொல்லும் அலைச்சல்,பணவிரயம் அதெல்லாம் சும்மா சுகமான சுமை மட்டுமே..

ஒரு சில நாளில் அலைச்சல் சரியாயிடும்,பணவிரயம் கூட சரிகட்டிடலாம்..

ஆனால் அந்த அனுபவத்தின் சந்தோசம் அப்போது எடுக்கின்ற

போட்டோக்களும்,வீடியோக்களும் எத்தனை முறை பலவருஷம் கழித்து

போட்டு பார்த்தாலும் மனக்கேமராவில் மறுபடியும் மறுபடியும் கிளிக் ஆகி

சிரித்து ,அட அடுத்த விடுமுறை எப்ப வரும் என எதிர்பார்த்து

நம்மையும்,குழந்தைகளையும் காலத்துக்கும்,ஏன் காலம் தாண்டியும் நினைத்து

ஏங்க வைக்கும்..இல்லையா?

அப்படியே இந்த விடுமுறைக்கு எல்லாரும் கன்னியாகுமரிக்கு.. ப்ளான்

பண்ணுங்கோ..பணம் பிரச்சனேயே இல்ல ...

.நடுவர் ஸ்பான்சர் ஒகேவா,எதிரணியும் வரலாம்:)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

துண்டு போட்டு முன்னமே பட்டி நாற்காலியில் இடம்பிடித்த தோழிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்....;-) பிடிச்ச சீட்டில துண்டு கீழ விழாம இருக்க அப்பப்ப கரக்குட்டா வந்து பாத்தறனும்னும் அன்பு கட்டளை போட்டறேன்;-)

இன்னும் துண்டு போடாம சீட்டு நிறைய இருக்கு... துண்டு இல்லைன்னாலும் பரவாயில்லை கர்ச்சீப்போ.., குடையோ.. இப்படி எதாவது ஒன்னை டப்புன்னு போட்டு இடம் பிடிச்சிருங்க ....ஏன்னா லேட்டா வந்தா சீட்டு இருக்காது ஏலக்கடையில போட ப்ளான் நடந்துட்டு இருக்கு;-)

Don't Worry Be Happy.

நடுவருக்கு வாழ்த்துக்கள் தலைப்பை குடுத்த தோழிக்கும் வாழ்த்துக்கள்
விடுமுறை கால பயணங்களால் வருவது சந்தோசம் தான் நடுவரே, நாம் எப்பொதும் வீட்டில் இருக்கிறோம் அந்த ஒரு வாரம் அல்லது 4 நாட்கள் நாம் வெளியில் சென்று வருவது நமக்கு சந்தோசம் தான் நடுவரே வடிவேலு பணியில் சொன்னால் எதையும் பிளான் பண்ணி பண்ணனும் எந்த ஒரு விசயத்தையும் பிளான் பண்ணாம பண்ண கூடாது அவர் அவர் வசதிக்கு ஏற்ப பயணத்தை முடிவு செய்யலாமே இப்போது எல்லாம் பள்ளி,அலுவலகங்களில் கூட இந்த மாதிரி டூர் அழைத்து செல்கிறார்களே அது எல்லாம் சந்தோசம் தானே நான் அதிகம் சென்றது இல்லை நான் சென்ற வரை எல்லாமே சந்தோஷமான அனுபவம் தான் இப்போது இருக்கும் வாழ்க்கை முறையில் வீட்டில் எல்லாரும் சேர்ந்து இருப்பது என்பது மிகவும் அரிது இந்த மாதிரி பயணங்கள் செல்லும் போது எல்லாரும் சேர்ந்து இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் கண்டிப்பாக சொல்கிறேன் இந்த மாதிரி பயணங்களால் வருவது மனநிறைவு, சந்தோசம் தான் சந்தோசமே தான் அடிச்சு சொல்லுறேன் நடுவரே

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்