பட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே! வருத்தமே!**

அன்பார்ந்த அறுசுவை ரசிகர்களே! ரசிகைகளே!

அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு, நீங்கள் ஆவலோடு ஒருவாரகாலமாக எதிர்பார்த்த நமது பட்டி இனிதே துவங்கி விட்டது. என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொண்டு... சென்ற வாரம் போலவே இந்த வாரமும் நாம் பேச விருக்கும் தலைப்பும் பயனுள்ளதுதான்...அது அடுத்து வரும் கோடைவிடுமுறையை முன்னிறுத்தி...

அறுசுவை தோழி உதிராவின்

***விடுமுறைக் கால பயணங்களால் வருவது
அலுப்பும் , அலைச்சலும், பணவிரயமும்! (வருத்தமே)
அனுபவமும் , ஆனந்தமும், மனநிறைவும்!(ஆனந்தமே)***

என்ற தலைப்பின் கீழ் பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!!!

உங்களது பொன்னான நேரத்தை அறுசுவைக்காக கொஞ்சம் ஒதுக்கி..அறுசுவையின் பட்டியை இம்முறையும் வெற்றிப் பட்டியாக்க .... அனைவரும் வருக ஆதரவு தருக என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்;-) நன்றி வணக்கம்_()_

பின்குறிப்பு: முதற்கட்ட அறிவிப்பு ஒவ்வொரு பதிவுக்கு பிறகும் சோடா வழங்கப்படும்.

முக்கியக்குறிப்பு: பட்டியின் விதிமுறைகளை மனதில் கொண்டு...பதிவுகளை பதிய வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

சமயத்துக்கு ஏற்ற அருமையான தலைப்பை தேர்ந்தெடுத்த நடுவருக்கு வாழ்த்துக்கள். தலைப்பை தந்த தோழிக்கு நன்றி.

இதுல எந்தவித சந்தேகமும் இல்லை நடுவரே பயணங்களால் ஆனந்தமே...

வருசம் முழுவதும் வீடு,வேலை,பள்ளி இப்படியான மிஷின் வாழ்க்கைக்கு வடிகால் தான் பயணங்கள் நடுவரே அது கண்டிப்பா ஆனந்தம் தான்.....

எப்போ பசங்களுக்கு பள்ளி முடியும் விடுமுறை வரும்னு ஆவலோடு எதிப்பார்ப்பதே விடுமுறை பயணத்தை அனுபவிக்கத்தானே.
ஒவ்வொறு வருடமும் ஒரு இடத்துக்கு போகனும்னு ப்ளான் போட்டு போவது சந்தோசமான விசயம்ங்க.மனசுக்கு ரிலாக்ஸ்ன்னும் சொல்லலாம்.
வருசம் முழுக்க பாட புத்தங்களை பார்த்து படிச்சி பள்ளிக்கூடம் மட்டுமே வாழ்க்கையா இருக்கும் குழந்தைகளுக்கு சந்தோசம் தரும் விசயம் விடுமுறை பயணங்கள்தான்.
கோடை விடுமுறை எப்போ வரும் எப்போ அம்மா வீட்டுக்கு போகலாம் அப்படியே எல்லோருமா சேர்ந்து ஊருக்கெல்லாம் போய் சுத்தலாம்னு ஐடியா போடுவதே ஆனந்தத்தை அனுபவிக்கத்தான் என்று கூறி இப்போதைக்கு எனது வாதத்தை முடிக்கிறேன் நடுவர் அவர்களே .

மீண்டும் வருகிறேன்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு நடுவருக்கும்,அருமை தோழிகளுக்கும் எனது முதல் வணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன்.அருமையான தலைப்பை தந்த தோழி உதிராவிற்க்கு் வாழ்த்துக்கள்.விடுமுறை பயணங்களால் கிடைப்பது அனுபவம்,ஆனந்தம்,மனநிறைவே.இது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.வருடம் முழுவதும் நமக்கு குடும்பப்பொறுப்பு,நம் குழந்தைகளுக்கோ படிப்பு,கணவருக்கோ ஆபீஸ் வேலை.அலைச்சல்.இதுப்போல எல்லோரும் பொறுப்புக்களில் மூழ்கிபோயிருக்கோம்.விடுமுறை வ்ருகிறது என்றாலே பிள்ளைகளுடம் சேர்ந்து நம் மனதும் துள்ளாட்டம் போட ஆரம்பித்துவிடுகிறது.மூன்று மாததிற்க்கு முன்பே டிக்கெட் புக்கிங்,ஷாப்பிங் என பிசியாகிவிடுறோம்.

அதுவும் என் போல வருடத்திற்க்கு ஒரு முறை ஊருக்கு போவோரை பற்றி கேட்கவே வேண்டாம்.அம்மா,அப்பா உற்றார் உறவினர்களை எப்போது பார்ப்போம் என மனம் சந்தோஷத்தில் இருக்கும்.அவர்களுக்கு என்ன பரிசுகள் வாங்கிப்போகலாம் என ஆலோசனை செய்யதொடங்கிவிடும்.ஆசை ஆசையாய் நாம் செய்யும் இந்த செலவை பணவிரயம்ன்னு சொன்னா எப்படிங்க.வருடத்திற்க்கு ஒரு தடவை கூட நம் ஆனந்ததிற்கென்று செலவு செய்யவில்லை என்றால் நாம் வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு என்னங்க பிரயோசனம்.ஊருக்கு போய் அம்மா கைய்யால் செய்யும் சாப்பாடு சாப்பிட்டு,அம்மா மடியில் தலைவைத்து படுத்தால் வருடம் முழுவதுமுள்ள அலுப்பு போயே போச்..இதில் கிடைக்கும் மன நிறைவை வார்த்தைகளால் சொல்ல முடியாது.மேலும் வாதத்துடன் வருகிறேன்.

போட்டியே இல்லாமல் ஏகமனதாக இந்த எமர்ஜென்சி நடுவரை பதிவியில் அமர்த்திய ( சதிகார கும்பல் தலைவி... நற... நற.. )எனது அன்பிற்கினிய தோழிக்கு எனது பதில் வணக்கங்கள்;-) உங்கலுக்கும் எனது வாழ்த்துக்கள்;-)

//காங்கோவில் விளைஞ்ச ப்ரெஸ் பழ ஜூஸை கபால்னு பல்லுல படாம குடிச்சு தெம்பாய்க்குங்க.// ** எனக்கு வாயத்தொறந்தா வாயெல்லாம் பல்லுதான்னு சொல்லுவாங்க... ரொம்ப கஷ்டமான வேலைய கொடுத்துட்டீங்களே!! சரி சரி குடுங்க குளுக்கோஸ் பாட்டில போட்டு ஏத்திக்கறேன்;-)

//இதை பிடிக்காத மனித ஜென்மமும் உண்டா?//** இதுக்கு என்ன பதில்டா சொல்றதுன்னு ரொம்ப கலக்கமா யோசிச்சுட்டு இருந்தேன் நல்ல வேளை அடுத்த வரியில //தெய்வத்திற்கு சமம்னு சொல்ல வர்றேன்//** அப்படின்னு சொல்லி என்னைக் காப்பாத்திட்டீங்க;-)

//விடுமுறை கொண்டாட்டம்னாலே வயசு வித்யாசம் இல்லாம ஆறிலிருந்து அறுபது வரை துள்ளி குதிச்சுடுவோம்//** பேங்க் அகவுண்ட்ல இருக்கிற பணமும் துள்ளிக்குதிக்குதே அத விட்டுட்டீங்களே ஹி ஹி!

//நடுவரே, சேரை பிடிக்க தான் ஓடிவந்தேன். நான் போய் நல்லா ரோசனை பண்ணிட்டு வர்றேன். அதுவரை எங்கேயும் போகாம.. வாசப்படியையே பார்த்துட்டு இருங்க. நாங்க எப்ப வருவோம்னு..// ** வாசப்படி என்ன தெரு மூலையிலதான் நின்னுட்டு இருக்கேன் முக்காடு போட்டு போனாலும் கப்புன்னு புடிச்சிருவேன்;-)

Don't Worry Be Happy.

அன்பு தோழிக்கு வணக்கம்;-) அறுசுவை பட்டி பத்தி உங்க பாராட்டைக் கேட்க எனக்கும் சந்தோஷமா இருக்குங்க.. இந்த அறுசுவை பட்டி மூலமாதான் நாங்களும் உள்ளே வந்தோம்.. குறிப்பா சொல்லனும்னா எங்கள மாதிரி வெளிநாட்டு வாழ் வாசிக்கு தமிழ் பேசவும்., எண்ணங்களை வடிக்கவும் கிடைத்த அற்புதமான தளம். நீங்களும் பங்கு கொள்வதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி;-)

உங்களின் அனுபவத்தை கேட்க ஆவலாக உள்ளோம் சீக்கிரம் பதிவுகளோடு வாங்க;-)

Don't Worry Be Happy.

உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள்... நன்றி நன்றி! ;-)

//நடுவரே... இதில் என்ன சந்தேகம்?? “அனுபவமும் , ஆனந்தமும், மனநிறைவும்” தான்.//** எனக்கு ஒரு டவுட்டும் இல்லீங்கோ...

//அனுபவம் தானே ஒரு மனிதனுக்கு நல்ல வாதியார்!!//

அனுபவமே ஆசான்., வெல்ப்ளாண்டு ட்ரிப் எப்பவுமே வெற்றிதான்னு சொல்லி உங்க வெற்றிக்கும் இப்போதே நங்கூரம் பாய்ச்சி ஸ்டாராங்கா நின்னுட்டீங்க பேஷ் பேஷ்! இதிலெல்லாம் மனநிறைவே கிடைக்குதுன்னு ஆணித்தரமா தன் தரப்பு வாதங்களை எடுத்து வைச்சிருக்காங்க வனி உங்களுக்கு எனது நன்றி!

Don't Worry Be Happy.

வாங்க! வாங்க! வருகைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்;-)

// துண்டு போட்டு இடம் பிடிக்கத்தான் வந்தேன்.//** சுற்றுலான்னதும் துள்ளிக்குதிச்சு ஓடிவந்தீங்களா?? பாருங்க சந்தோஷத்துல அண்ணாவோட ஜரிகைதுண்டை போட்டுட்டீங்க எம்புட்டு நேரம் காவல் காக்கறது விரசா ஓடியாங்க வாதத்தோட;-)

Don't Worry Be Happy.

நடுவரே,

//சும்மா வெளியில் காய்கறி வாங்க போயிட்டு வந்தாலே அலுப்பு தான்// நடுவரே எதற்கும் நம்ம மனசு தான் காரணம். காய்கறி வாங்க செல்லும் நிகழ்வை கூட சந்தோஷமாக உணர்ந்து பாருங்கள். அப்புறம் வீட்டில் காய் இருந்தாலும், சும்மாவே மார்க்கெட் போக தோன்றும் :)

// வந்ததும் யாராவது ஒரு காபி போட்டுக் கொடுக்கமாட்டாங்களா என்றிருக்கும்.//நடுவரே, காய்கறி எந்த நேரத்துக்கு வாங்க போவாங்க? எப்படியும் உச்சி வெயில் மண்டையை கொளுத்தும் நேரத்தில். இது தான் சாதாரணமாக நடப்பது. இப்படி இருக்கும் போது போய் வந்து யாராவது காப்பியை தேடுவார்களா? க்ளைமேட்டும் சூடாக, தேடும் விஷயமமும் சூடாக இருப்பதால் இவர்களால் அந்த தருணத்தை ரசிக்க முடியவில்லை. அடுத்த முறை மார்க்கெட்டுக்கு கூலாக போய், வீட்டுக்கு வந்தவுடன் ஜில்ல்லுன்னு ஒரு ஜிகர்தண்டா அடிச்சு பாருங்க. உங்களுக்கே புரியும்..:)

//அதுவும் விடுமுரைனாலே கோடையில் தானே...அப்போ எப்படி இருக்கும் // லீவு எப்ப கிடைக்குதோ அப்பதானே நடுவரே விடுமுறையை கொண்டாட முடியும்? இதுக்கு போயி அலுத்துக்கலாமா? சொல்லப்போனா விடுமுறை கொண்டாட்டத்தை பள்ளி செல்லும் வாண்டுகளை விட வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான் அதிகமாக எதிர்பார்த்து காத்திருப்பார்கள். முதல்ல அவங்களுக்கு தான் அலுப்பும், சலிப்பும் வரனும். என்னடா வீட்லயும் கஷ்டப்பட்டுட்டு, வெளியே வெயில்ல அலைஞ்சுடம் கஷ்டப்படனுமான்னு. நம் தோழி சொல்வது போல சங்கடப்படுபவர்களானால் விடுமுறையில் போய் வெளியே பாருங்கள் அவரவர் இடங்களில் அலைகடல் என மக்கள் வெள்ளம். இவரெல்லாம் விடுமுறை பிடிக்காமல் வந்தவரா சொல்லுங்க நடுவரே..சொல்லுங்க..

//எப்போவுமே ஒரு கேள்வி கேட்டு இரண்டு பதில் கொடுத்தால் பெரும்பாலானோர் முதலில் இருக்கும் விடை கண்டிப்பாக தப்பாக இருக்கும் அதனால் இரண்டாவதை தான் தேர்ந்தெடுப்பர். இது சைக்காலஜி// நடுவரே, தலைப்பை எப்படி மாத்தி போட்டிருந்தாலும் எங்க தேர்வு இந்த தலைப்பாக தான் இருந்திருக்கும். சுவையான கனி இருக்க யாராவது கசக்கும் காயை தேர்ந்தெடுப்பார்களா?

//ஒன்றை விட ஒன்று பெட்டர் என்பதால். புடவை கடையில் என்ன தான் புரட்டிப் போட்டாலும் முதலில் பார்த்ததை தான் கடைசியில் வாங்குவோம்.// நடுவரே, நாங்களாச்சும் புரட்டி போட்டு, சேல்ஸ் மேனையே புரட்டி எடுத்து விட்டு தான் முதலில் தேர்ந்தெடுத்த சேலைக்கே வருகிறோம். இவங்க என்னென்ன புடவை இருக்குன்னே பார்க்காம, எதுவும் நல்லார்க்குதுன்னு முடிவு பண்ணிட்டு அநியாயத்துக்கு சூப்பர் சூப்பர் டிசைன்களையெல்லாம் மிஸ் பண்றாங்க.

//எப்படியோ மூட்டை முடிச்சி எல்லாத்தையும் முன்னரே கட்டினாலும் என்னத்தான் லிஸ்ட் போட்டு போட்டு எடுத்து வைத்தாலும் கண்டிப்பா முக்கியமானது விட்டு தான் போகும்.// நடுவர் அவர்களே, குடும்பத் தலைவரை மறதியாக விட்டு சென்றிருப்போம். இதெல்லாம் ஒரு மேட்டரா? போன் போட்டு மேட்டரை சொல்லி அடுத்த ட்ரெயினில் ஜாய்ன் பண்ணிக்க சொன்னா போச்சு. இதுக்காகவெல்லாம் விடுமுறை கொண்டாட்டத்தை இழக்க மனம் வருமா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹா ஹா! தேர்தல் மாதிரி அறிக்கை விட்டதுமே கூட்டணி அமைச்சீட்டீங்களே கல்ப்ஸ், வனி, கவி, உமா, கோமதி இது உங்களுக்கே அடுக்குமா??;-)

ஆனந்தம் ஆனந்தம்னு சொல்லி நடுவரைக் கலக்கமாக்கிட்டீங்க அப்பு ஒரு வாரம் பட்டி நடத்தவேண்டாமா இல்லை இப்பவே தீர்ப்பு சொல்லட்டுமா அவ்வ்வ்வ்வ்வ்வ்;(

கோமதி, //ஜெயிக்கற கட்சிக்கு வந்தாச்ச//** ஐ! அப்படியெல்லாம் நினைக்கப்படாது;)

மினி டூர்... டாடா.. பை பையா.. பட்டி பத்தி கவலை இல்லாமயா விடுவோமா என்னன்னு உங்க எதிரணில கேக்கறாங்க அப்பூ........நடுவருக்கு ஏற்கனவே மேல் மாடி காலி.. யாரு என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவேன்.. ஆமா இப்பவே சொல்லிட்டேன்;-)

ஹேப்பி ஜர்னி கோமதி;-)

Don't Worry Be Happy.

பூர்ணிமா, உங்களுக்கும் எனது வணக்கங்கள். பட்டிக்கு வருகை தந்தமைக்கு எனது நன்றிகள்;-)

//சிறியவர்களுக்கு வேண்டுமானால் விடுமுறை கால பயணங்கள் குதூகலத்தை தரலாம். ஆனால் பெரியவர்களுக்கு வீட்டில் இருப்பதை காட்டிலும் பயணங்களின் போது அதிக அக்கரையும், பொறுப்பும் தேவைப்படுகிறது. அதனால் அவர்களால் பயணங்களை அனுபவிக்கவோ, ஆனந்தமடையவோ, மனநிறைவோடவோ நிச்சயம் திரும்ப முடியாது. வீடு வந்து சேர்ந்ததும் மிஞ்சியிருப்பது அலுப்பும், அலைச்சலும்தான்//** அருமையாக.. ’வருத்தமே’ என்ற அணிக்கான ஆணித்தரமான கருத்தை மிக அழகாக வைத்துள்ளீர்கள் பாராட்டுக்கள்! எப்படி? ஏன்? என்ற காரணங்களோடு இன்னும் பல விரிவான பதிவுகளை எதிர்பார்க்க வைச்சுட்டீங்க;-) வாழ்த்துக்கள்... தொடருங்கள் உங்கள் வாதங்களை.. காத்திருக்கிறோம் எதிர்பார்ப்போடு.....

Don't Worry Be Happy.

வந்துட்டோம்ல :). இன்னும் எல்லார் வாதங்களயும் படிக்கவில்லை. ஆனால் எங்கள் அணியின் பலம் அதிகமா இருக்குதுன்னு மேலோட்டமா பார்த்ததில் புரிஞ்சுக்கிட்டேன் :). முதலில் நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன். அப்பாலிக்கா வந்து எதிரணிக்கு பதில் சொல்றேனுங்கோ!

சுற்றுலான்னாலே நண்டு சிண்டு முதல் தொண்டு கிழம் வரைக்கும் குதூகலமும் கொண்டாட்டமும்தானே! அப்புறம் எங்கிட்டு இருந்து வரும் அலுப்பும் சலிப்பும்?! சுற்றுலா முடிந்து வீடு திரும்பியதும் "அச்சச்சோ டூர் ரொம்ப சீக்கிரமா முடிஞ்சிடுச்சே" ன்னு சந்தோஷ அலுப்பு வேணும்னா வரும்.

ஆண்டு முழுதும் பள்ளியில் வீட்டுப்பாடம் பரீட்சைன்னு எண்களோடும் எழுத்துக்களோடும் போராடும் குழந்தைகளுக்கு சுற்றுலா கொடுப்பது ஒரு புத்துணர்ச்சி! ஆண்டு முழுதும் அடுப்படியே கதியெனக் கிடக்கும் இல்லத்தரசிக்கு சமையல், கூட்டுதல், பெருக்குதல் எல்லாவற்றிலிருந்தும் சிறிது விடுதலை அதனால் கிடைக்கும் புத்துணர்ச்சி!வருஷம் பூராவும் அலுவலகத்தில் ப்ராஜெக்ட், டார்கெட், மேலதிகாரின்னு எல்லா அழுத்தங்களிலிருந்தும் விடுபட்டு கிடைக்கும் புத்துணர்ச்சி! வேலைகளிலேயே மூழ்கி விடும் பிள்ளைகளின் அருகாமையை மீண்டும் இந்த ஒரு சுற்றுலாவின் போது முழுமையாக அனுபவிக்கும் பெரியவர்கள் என குடும்பத்தில் அத்தனைபேருக்கும் அடுத்த ஆண்டிற்கான புத்துணர்ச்சியையும் எனர்ஜியையும் கொடுப்பதுதான் சுற்றுலாக்கள்.

சென்ற முறை ஊருக்குப் போன போது சென்ற மூணார் சுற்றுலா மறக்கவே முடியாத அத்தனை சந்தோஷம் தெரியுமா. குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் சேர்வது என்பது இக்காலத்தில் மிக அரிது. அப்படி கிடைக்கும் சந்தர்ப்பங்களை, வீட்டிலேயே இருந்து வீட்டுப் பெண்களை அடுப்படிக்குள் தழைத்து இடாமல் எல்லோரும் சேர்ந்து சுற்றுலா சென்றால் அது எத்தனை மகிழ்ச்சி தெரியுமா?

இந்த முறை எல்லோரும் சேரப் போகிறோம் என்று தெரிந்ததுமே முதலில் யோசித்தது எங்கே செல்லலாம் என்பதைத்தான். இடத்தை தேர்ந்தெடுக்கு எல்லோரும் ஃபோனில் பேசி விவாதித்து முடிவு செய்து, ஹோட்டல் தேடி புக் செய்து, வசதியாக செல்ல வாகனம் தேர்ந்தெடுத்து... அப்பப்பா இந்த திட்டமிடல்கள் கூட எத்தனை சந்தோஷம் தெரியுமா? இதெல்லாம் பெரியவர்கள் வேலை என்றால், குட்டீஸ் எல்லாம் என்ன ட்ரெஸ் போடலாம் என்னெல்லா ம் பேக் பண்ணலாம்னு அவங்களுக்குள்ள டிஸ்கஸ் பண்ணி எல்லாவற்றையும் 10நாட்களுக்கு முன்னாடியே எடுத்து வச்சு தினம் தினம் இன்னும் 10 நாள்தான் 9 நாள்தான்னு கவுன்ட் டவுன் செய்து நம்மையும் சந்தோஷப் படுத்துவார்கள்.

சுற்றுலாவுக்கு முந்தைய தினம் தூக்கம் வரும்னா நினைக்கறீங்க? எப்படா விடியும் கிளம்பலாம்னு காத்துக்கிட்டு இருப்போம். பயணத்தினிடையே பாட்டும் டான்சும் கேலியும் கிண்டலுமாக பயண அலுப்பே தெரியாமல் செல்ல வேன்டிய இடத்தை அடைந்து, இங்கே ஃபோட்டோ எடுக்கலாம் அங்கே எடுக்கலாம்னு நிறைய ஃபோட்டோக்கள் எடுத்து அந்த சந்தோஷத்தை புகைப்படங்களில் பதிவு செய்து... போங்க நடுவரே சந்தோஷங்களை அடுக்கிக்கிட்டே போகலாம்.

குடும்பத்தின் இளம் ஜோடிகள் பெரியவர்களுக்கு டேக்கா கொடுத்து எஸ்கேப் ஆவதும் பெரியவர்கள் இவர்களின் சேட்டையை கண்டும் காணாமல் மனதுக்குள் ரசித்துக் கொண்டும் அதுவும் ஒரு வகை சந்தோஷம் நடுவரே! எஸ்கேப் ஆன ஜோடி மாட்டிக் கொண்டதும் அசடு வழிவதும் கிண்டல் செய்தே காலி செய்வதும், பல ஜோடிகள் மலரும் நினைவுக்குப் போவதும் நம்மோடு பகிர்ந்து கொள்வதும்னு சுற்றுலா களை கட்டும் போங்க!

சுற்றுலா முடிந்து வீடு திரும்பிய பின்னரும் கூட அங்கே நடந்த இனிய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியடைவோம். இதை எல்லாமா எதிரணியினர் அலுப்புன்னு சொல்றாங்க? என்ன கொடுமை நடுவரே இது!!!

மீண்டும் வருவோம்ல கல்லூரி சுற்றுலாவோடு :). அதையும் லிஸ்ட்ல சேர்க்கலாம்ல?! தெளிவு படுத்திடுங்க நடுவரே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்