பட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே! வருத்தமே!**

அன்பார்ந்த அறுசுவை ரசிகர்களே! ரசிகைகளே!

அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு, நீங்கள் ஆவலோடு ஒருவாரகாலமாக எதிர்பார்த்த நமது பட்டி இனிதே துவங்கி விட்டது. என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொண்டு... சென்ற வாரம் போலவே இந்த வாரமும் நாம் பேச விருக்கும் தலைப்பும் பயனுள்ளதுதான்...அது அடுத்து வரும் கோடைவிடுமுறையை முன்னிறுத்தி...

அறுசுவை தோழி உதிராவின்

***விடுமுறைக் கால பயணங்களால் வருவது
அலுப்பும் , அலைச்சலும், பணவிரயமும்! (வருத்தமே)
அனுபவமும் , ஆனந்தமும், மனநிறைவும்!(ஆனந்தமே)***

என்ற தலைப்பின் கீழ் பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!!!

உங்களது பொன்னான நேரத்தை அறுசுவைக்காக கொஞ்சம் ஒதுக்கி..அறுசுவையின் பட்டியை இம்முறையும் வெற்றிப் பட்டியாக்க .... அனைவரும் வருக ஆதரவு தருக என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்;-) நன்றி வணக்கம்_()_

பின்குறிப்பு: முதற்கட்ட அறிவிப்பு ஒவ்வொரு பதிவுக்கு பிறகும் சோடா வழங்கப்படும்.

முக்கியக்குறிப்பு: பட்டியின் விதிமுறைகளை மனதில் கொண்டு...பதிவுகளை பதிய வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

//சங்கடப்படுபவர்களானால் விடுமுறையில் போய் வெளியே பாருங்கள் அவரவர் இடங்களில் அலைகடல் என மக்கள் வெள்ளம். இவரெல்லாம் விடுமுறை பிடிக்காமல் வந்தவரா சொல்லுங்க நடுவரே..சொல்லுங்க//**அதானே??

//நடுவரே, தலைப்பை எப்படி மாத்தி போட்டிருந்தாலும் எங்க தேர்வு இந்த தலைப்பாக தான் இருந்திருக்கும். சுவையான கனி இருக்க யாராவது கசக்கும் காயை தேர்ந்தெடுப்பார்களா?//** விடுங்க கல்ப்ஸ் அவங்க சுகர் பேசண்ட்டா இருப்பாங்க ஹி ஹி;-)

//நடுவரே, நாங்களாச்சும் புரட்டி போட்டு, சேல்ஸ் மேனையே புரட்டி எடுத்து விட்டு தான் முதலில் தேர்ந்தெடுத்த சேலைக்கே வருகிறோம். இவங்க என்னென்ன புடவை இருக்குன்னே பார்க்காம, எதுவும் நல்லார்க்குதுன்னு முடிவு பண்ணிட்டு அநியாயத்துக்கு சூப்பர் சூப்பர் டிசைன்களையெல்லாம் மிஸ் பண்றாங்க.//**அதானே மொதல்ல பார்த்த பொண்ணயேவா கல்யாணம் பண்றாங்க எவ்ளோ பஜ்ஜி சொஜ்ஜி மிஸ் ஆகும். கொஞ்சம் வெயிட் பண்ணி புடவை செலக்ட் பண்ணினா கூல்ட்ரிங்ஸும் ஸ்னாக்சும் கிடைக்கும்கிறது பாவம் அவங்கலூக்கு தெரியலை கல்ப்ஸ்;-)

//நடுவர் அவர்களே, குடும்பத் தலைவரை மறதியாக விட்டு சென்றிருப்போம். இதெல்லாம் ஒரு மேட்டரா? போன் போட்டு மேட்டரை சொல்லி அடுத்த ட்ரெயினில் ஜாய்ன் பண்ணிக்க சொன்னா போச்சு. இதுக்காகவெல்லாம் விடுமுறை கொண்டாட்டத்தை இழக்க மனம் வருமா?//** ஹா ஹா மறக்காம க்ரடிட் கார்டை எடுத்துவைச்சுக்கனும்கிறதை மறக்க மாட்டோமே. ஹி ஹி வீட்டுக்காரரை மறந்துட்டு போறதும் ப்ளான்னுன்னு அவங்களுக்கு அதாங்க உங்க எதிரணிக்கு தெரியலை பாவம்

நன்றி கல்ப்ஸ் வயிருகுலுங்க சிரிக்க வைச்சீங்க ;-) இன்னும் ஊட்டி பயணம் வரலையே அதுக்காக நடுவர் வெயிட்டிங்;-)

Don't Worry Be Happy.

அன்புக்கும் வம்புக்கும் நடுவே இன்நேரம் சிக்கி இருப்பீங்கன்னு நினைச்சேன்... ஆனா ஹாயா ஒரே அணி பக்கம் மட்டுமே வரும் வாதங்களால் ஜாலியா போறாப்போல தெரியுது!!! வருவாங்க வருவாங்க... எதிர் அணி பக்கம் வருவாங்க. வரலன்னா... ஹஹஹா... போட்டியே இல்லாம எங்க அணி ஜெயிச்சுடும்ல!!! :)

நடுவரே... பயணம்!!! நிறைய பேச ஒரு தலைப்பை கொடுத்திருக்கீங்க... அதுவும் வனிக்கு சொல்லவே வேணாம்... சரியா ஊர் சுத்தும் பைத்தியம் நான். ஒரு லீவ் நாள் வீட்டில் இருக்க சொன்னா அழுதுருவேன். இப்போ தெரியுதா... நான் ஏன் இந்த அணிக்கு வந்தேன்னு?? ;)

நடுவரே... பயணங்கள் ஓய்வதில்லை.

1. விடுமுறை நாட்களில் அப்பாக்கு லீவ் கிடைக்கலன்னா கூட தன் அம்மா வீட்டுக்கு பிள்ளைகளோடு போய் 1 மாசம் டேர போட்டுட்டு வருவோமே... அங்க துவங்குச்சு நம்ம பயணம் :) அந்த நாட்களை இன்று மறக்க முடியுமா நடுவரே. தாத்தா, பாட்டி உறவுகள் எல்லாரும் கொஞ்சி பிள்ளைகளோடு விளையாடி கொண்டாடிய விடுமுறை நாட்கள்... ஆகா அகா... இன்றும் இனிமையாக தான் இருக்கு.

2. பள்ளி காலங்களில் நண்பர்களோடு ஒரு நாள் ட்ரிப் போய் வந்தா கூடா அதை மறக்காம இருக்க அங்க ஒரு க்ரூப் போட்டோ எடுத்து கொண்டு வந்து வெச்சு இன்னைக்கும் நம்ம பழைய போட்டோக்களை பார்க்கும் போது அன்று அங்கே நடந்த சிறு சிறு சண்டைகளை நினைவுக்கு கொண்டு வந்து மனது பறக்குது தானே... அந்த பள்ளி காலம் மீண்டும் வேண்டுமென. அப்படி ஒரு இனிமையான நினைவுகளை கொடுத்தது பள்ளி கால பயணங்கள்.

3. கல்லூரியில் கேட்கவே வேண்டாம்... பள்ளியே அந்த அட்டகாசம்னா... கல்லூரி!!! ஆகா... இனிமையோ இனிமையான பயணங்கள்.

4. வீட்டில் அப்பா அம்மாவோடு சென்ற ட்ரிப் ஒவ்வொன்னும் ஒரு இனிமை... இன்று எங்களுக்கு திருமணம் ஆன பின் அப்பா, அம்மா, தங்கை, நான் மட்டும் போகும் பயணங்களை எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா நடுவரே???

5. கல்யாணத்துக்கு பின் முதன் முதலாக கணவரோடு போன விமான பயணம்... அறுசுவைக்கே தெரியுமே... நான் எத்தனை ரசித்தேன், அதில் எத்தனை விஷயங்களை தெரிந்து கொண்டேன் என்று. அப்படி ஒரு அனுபவம் எல்லாம் பயணங்கள் இல்லை என்றால் ரசிக்கவோ, நினைக்கவோ முடிஞ்சிருக்காதே!!!

6. இப்போ கணவர் பிள்ளைகள் என போன பயணம்... மீண்டும் எப்போது போவோம் என விடுமுறைக்காக காத்திருக்கேன் நடுவரே.

யாரோட எப்போ போனாலும் பயணங்கள் மட்டும் இனிமையான நினைவுகளை விட்டு செல்லுது நம்மிடம். அதை நாம மறுக்க முடியுமா?

வரேன்... 6 மணிக்கு மேல. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க;-)

//சுற்றுலான்னாலே நண்டு சிண்டு முதல் தொண்டு கிழம் வரைக்கும் குதூகலமும் கொண்டாட்டமும்தானே! அப்புறம் எங்கிட்டு இருந்து வரும் அலுப்பும் சலிப்பும்?! //** தொண்டு கிழம்னாலே மத்தவங்களுக்கு தொண்டு செய்யறதுதானே அப்புறம் அவங்கலுக்கு எப்படி சலிப்பு வரும்..எப்படி புடிச்சேன் பாருங்க பாயிண்ட்டை சபாஷ் ஜெய்;-)

//"அச்சச்சோ டூர் ரொம்ப சீக்கிரமா முடிஞ்சிடுச்சே"// ** ஐ! இது சூப்பரா இருக்கு;-)

//இந்த முறை எல்லோரும் சேரப் போகிறோம் என்று தெரிந்ததுமே முதலில் யோசித்தது எங்கே செல்லலாம் என்பதைத்தான். இடத்தை தேர்ந்தெடுக்கு எல்லோரும் ஃபோனில் பேசி விவாதித்து முடிவு செய்து, ஹோட்டல் தேடி புக் செய்து, வசதியாக செல்ல வாகனம் தேர்ந்தெடுத்து... அப்பப்பா இந்த திட்டமிடல்கள் கூட எத்தனை சந்தோஷம் தெரியுமா? இதெல்லாம் பெரியவர்கள் வேலை என்றால், குட்டீஸ் எல்லாம் என்ன ட்ரெஸ் போடலாம் என்னெல்லா ம் பேக் பண்ணலாம்னு அவங்களுக்குள்ள டிஸ்கஸ் பண்ணி எல்லாவற்றையும் 10நாட்களுக்கு முன்னாடியே எடுத்து வச்சு தினம் தினம் இன்னும் 10 நாள்தான் 9 நாள்தான்னு கவுன்ட் டவுன் செய்து நம்மையும் சந்தோஷப் படுத்துவார்கள்//** குட்டி தீபாவளி ஆச்சே பரவாயில்லைன்னு சாதாரணமா விட முடியுமா என்ன?? அனுபவிக்கனுமுங்க அப்பதான் தெரியும் அதன் மகிழ்ச்சி;-)

.// பயணத்தினிடையே பாட்டும் டான்சும் கேலியும் கிண்டலுமாக பயண அலுப்பே தெரியாமல் செல்ல வேன்டிய இடத்தை அடைந்து//** எத்தனை நடனப்புயலையும், கானக்குயில் சித்ராவையும் கண்டுபிடிச்சிருப்போம் இதிலெல்லாம் மகிழ்ச்சிதாங்க நிறைஞ்சு வழியுது மறுத்து சொல்ல எதிரணி ரெடியா??

//சுற்றுலா முடிந்து வீடு திரும்பிய பின்னரும் கூட அங்கே நடந்த இனிய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியடைவோம். இதை எல்லாமா எதிரணியினர் அலுப்புன்னு சொல்றாங்க? என்ன கொடுமை நடுவரே இது!!!//** அவங்க இன்னும் சுற்றுலாக்கே போனதில்லைன்னு நினைக்கிறேங்க என்ன இனிமையான அனுபவம் நான் ஒத்துக்கறேன் கவி;-)

//மீண்டும் வருவோம்ல கல்லூரி சுற்றுலாவோடு :). அதையும் லிஸ்ட்ல சேர்க்கலாம்ல?! தெளிவு படுத்திடுங்க நடுவரே//** அட்டண்டன்ஸோட கிடைக்கிற லீவு விட்டராலாமா?? கட்டாயம் சொல்லுங்க கவி;-)

அடுத்து வர லீவுக்கு எங்க போலாம்னு இப்பவே ஏங்க வைச்சிட்டீங்க கவி..நன்றி கவி.. இவங்கலுக்கு எதிர்வாதம் பண்ண யாருக்காவது தெம்பு இருக்கா பதில் சொல்லமுடியும்னு நினைக்கிறீங்க அப்ப வாங்க வாங்க ........

Don't Worry Be Happy.

வாங்க நிகிலா உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்;-)

//பயணம் என்றாலே அலைச்சல் உண்டு ,ஆனால் மனம் விரும்பி ஈடுபடும் போது அலைச்சலாவது அலுப்பாவது ஒரே கொண்டாட்டம் தான்.//**ஆமாம்ல;-)

//தமிழ்நாடா கேரளாவா சிங்கபூரா மலேசியாவா எங்கே என்பது முக்கியமல்ல. இதில இல்லைங்க சந்தோசம்.. டூர் போறோம் டூர் போறோம்னாலே சந்தோசம் தான்.//** ம் அது...!

//டூர் போனா நாங்களும் குழந்தைங்க தாங்க.. குழந்தைங்க விளையாடற அத்தனை விளையாட்டும் நாங்களும் சேர்ந்து விளையாடுவோம். பால் போடுறது சைக்கிள் விடுறது ,படகு சவாரி எதையும் விட்டு வைக்கிறதில்ல ஜாலியோ ஜாலி செம ஜாலி தான்.//**ஜாலியோ ஜிம்கானாதான்;-)

//காலை முதல இரவு வரை நல்ல்லா சுத்திட்டு வந்து படுக்கும் பொது அலுப்பு இருந்தாலும் ,மறு நாள் காலை மீண்டும் ஊர்சுற்ற ரெடி ஆகி விடுவோம் .அலுப்பே தெரியாது ஏன்னு யோசிச்சீங்கலா
மனசு ...மனசு ..தாங்க காரணம் அந்த சந்தோசம் அலுப்பை உணர விடாதுங்க.//** ரொம்ப நல்லா சொன்னீங்க நிகிலா..;-)

//டூர் ப்ளான் போட்டதுமே எங்க வீட்ல ஆ னந்த அலை அடிக்க ஆரம்பிசுரும்ங்க//** எங்க வீட்டிலேயும்தாங்க அதில நாங்க மிதக்கவே ஆரம்பிச்சுருவோம்;-)

ரொம்ப சந்தோஷமான விசயங்களை மிக அழகா எடுத்து சொல்லியிருக்கீங்க நன்றி நிகிலா..இதிலெல்லாம் சந்தோஷம்தானே இருக்கு எங்கே வருத்தம் இருக்குன்னு கேக்கறாங்க நம்ம நிகிலா... உங்க எதிரணி என்ன சொல்லப்போறாங்கன்னு பொருத்திருந்து பாப்போம் நிகில்ஸ்;-)

Don't Worry Be Happy.

நடுவருக்கும், பங்கு பெறும் மற்றும் பார்வையிடும் அனைவருக்கும் வணக்கம்.

இப்பல்லாம் ஒரு கொள்கை வச்சிருக்கேன் நடுவரே,(அவ்வளவு பெரிய ஆளா நீயின்னு எல்லாம் கேக்கப்படாது) இது பட்டிமன்றத்தைப் பொறுத்தவரை.

எந்தப் பக்கம் சாய்வதுன்னு குழப்பம் வந்துச்சுன்னா, இங்கி பிங்கி பாங்கி போட்டுப் பாக்கறதுக்குப் பதிலாக, எந்தப் பக்கம் கொஞ்சம் வீக் ஆக இருக்குன்னு தோணுதோ, அதுதான் எம் அணி! அப்பத்தானே இரண்டு பக்கமும் பாலன்ஸ் ஆக இருக்கும், ஏன்னா, எங்க வெயிட்(!) அப்படி!!

இங்கே அத்தனை பேருமே ஆனந்தம் ஆனந்தம்னு பாடறாங்க. கேக்கறப்ப எல்லாம் நல்லாத்தான் இருக்கும், ஆனா, நடைமுறையில் பாக்கறப்பதான் எப்படியெல்லாம் பாடுபடறோம் என்பது தெரியும்.

எங்களைப் பொறுத்த வரை - “அடுப்படியே திருப்பதி, அகமுடையானே குல தெய்வம்”. நாங்க அம்மையப்பனை சுத்தி வந்தாலே உலகத்தை சுத்தி வந்த மாதிரி திருப்திப் பட்டுக்கற ஆளுங்க.

அயல் நாட்டில் வசிக்கும் நமது தோழியர் எல்லாம் தாய் நாட்டுக்கு வருவதை நினைத்து, நெஞ்சம் நெகிழ சொல்லியிருந்ததைப் படிச்சேன். எனக்குமே கண் கலங்கி விட்டது. உண்மைதான்.

ஆனா, அவங்க இங்கே வருவது விடுமுறைக்காக அல்லவே. நாள் பூராவும் இரை தேடும் பறவைகள், மாலையானால், கூடு தேடி ஓடி வருமே, அதைப் போன்றதல்லவா, இது.

ஆஃபிஸ் விட்டு வீட்டுக்கு வர்றதை, விடுமுறைப் பயணம்னு சொல்லுவீங்களா, அல்லது அக்கடான்னு வீட்டில் வந்து, உட்காருவது என்று சொல்வீர்களா!

கட்சியை முடிவு செய்தாச்சு, இன்னும் வாதங்களுடன் வர்றேன்.

இடம் பிடிச்சாச்சு, வந்து இன்னும் சொல்றேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

//அன்புக்கும் வம்புக்கும் நடுவே இன்நேரம் சிக்கி இருப்பீங்கன்னு நினைச்சேன்... ஆனா ஹாயா ஒரே அணி பக்கம் மட்டுமே வரும் வாதங்களால் ஜாலியா போறாப்போல தெரியுது!!! வருவாங்க வருவாங்க... எதிர் அணி பக்கம் வருவாங்க. வரலன்னா... ஹஹஹா... போட்டியே இல்லாம எங்க அணி ஜெயிச்சுடும்ல!!! // என்ன ஒரு சந்தோஷம் ;-)) எப்பவுமே மனக்கோட்டை ஜெயிக்காதுன்னு உங்க எதிரணிக்கு தெரியுமுங்கோ ;-)

ஒன்னுல இருந்து ஆறு வரைக்கும்னு உங்க பயணங்களைப்பத்தி அடுக்கி சொல்லி எங்க மனச பறக்க விட்டு இப்படி ஆறு மணின்னு டீல் விட்டுட்டீங்களே அப்புறம் யாராவது நடுவால பூந்து (நடுவால நடுவரா...இருக்கட்டும் இருக்கட்டும்..நற..நற..)உங்க டீலை கட் பண்ணினா என்னைக்கேட்கக்கூடாது ஆமா சொல்லிட்டேன்..;-)

ஒவ்வொரு பயணங்களும் சொல்கிறதே...ன்னு பாட்டே பாடலாம் போல இருக்கு..இதுக்குமேலயும் இல்லை அப்படி மகிழ்ச்சின்னு ஒன்னு கிடையவே கிடையாதுன்னு சொல்ல வர்ரீங்களா “வருத்தமே” தோழீஸ்... ஆஹா நீங்க தன்மானச் சிங்கங்கள் ஆச்சே ...என் தங்கங்கள் ஆச்சே வாங்க வாங்க எல்லாருக்கும் ஐஸ்க்ரீம் சுடச்சுட ரெடியா இருக்கு ஆவி பறக்க;-)

நன்றி வனி பயங்கர குஷி மூட்ல இருக்கீங்க வாழ்த்துக்கள்;-) ஆனா நம்ம தோழிகளைத் தவறா எடைப்போட்டுட்டீங்களே ................என்ன சொல்ல என்னச் சொல்ல இப்படி புலம்ப வைச்சுட்டாங்களே......

Don't Worry Be Happy.

வாங்க சீதாம்மா, உங்களுக்கும் எங்களின் வணக்கம்;-)

//எந்தப் பக்கம் சாய்வதுன்னு குழப்பம் வந்துச்சுன்னா, இங்கி பிங்கி பாங்கி போட்டுப் பாக்கறதுக்குப் பதிலாக, எந்தப் பக்கம் கொஞ்சம் வீக் ஆக இருக்குன்னு தோணுதோ, அதுதான் எம் அணி! அப்பத்தானே இரண்டு பக்கமும் பாலன்ஸ் ஆக இருக்கும், ஏன்னா, எங்க வெயிட்(!) அப்படி!!//** ஆஹா நீங்க நம்ம கச்சியாச்சே...நானும் அதே இங்கி பிங்கிதான்;-)நம்ம வெயிட் பத்தி இவங்களுக்கு எங்க தெரியப்போகுதுங்க கொஞ்சம் தேமேன்னு இருந்தாலும் அவ்வளவுதான் வெடிச்சு யாருக்குமே உபயோகம் இல்லாம போயிடுமே நாம ”குக்கர் வெயிட்” மாதிரி சீதாம்மா;-)

// அவங்க இங்கே வருவது விடுமுறைக்காக அல்லவே. நாள் பூராவும் இரை தேடும் பறவைகள், மாலையானால், கூடு தேடி ஓடி வருமே, அதைப் போன்றதல்லவா, இது.//**ஆமாம் அதானே!

நன்றி சீதாம்மா சூப்பரான இடம் பிடிச்சி நடுவரை நெஞ்சு குளிர வைச்சிட்டீங்க ....கண்ணுல ஆனந்த கண்ணீர் வருது.....இனி நான் நிம்மதியா........தூங்குவேன் நன்றி சீதாம்மா நன்றி...;-)

”ஆனந்தமே” அணிக்கு நான் அப்பவே சொன்னேன் மனக்கோட்டை எல்லாம் வேண்டாம்னு பாருங்க மணல்கோட்டை மாதிரி தரை மட்டமாயிருச்சு ..;-)இனி யாராவது சொல்லுவீங்களா சொல்லுவீங்களா ம்ம் அந்த பயம்;-)

Don't Worry Be Happy.

நடுவர் அவர்களே, இப்ப நாம எங்கே இருக்கோம். ஊட்டி மலைக்கு கீழே. அப்படியே என்னை ஃபாலோ பண்ணிட்டு வாங்கோ.. நடுவரே, இங்கே ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு மேற்கொண்டு பயணத்தை தொடர்கிறேன். எங்களுடன் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் எங்களை போன்ற சின்ன வயசுப்பசங்கன்னு நினைக்காதீங்க. கையில் கொம்பூன்றும் பாட்டிகளும், பிரசவித்து சில நாட்கள் ஆன பெண்களும் தான். எத்தனை, ஆர்வமும், உற்சாகமும் மேலோங்கி இருந்தால், தங்கள் உடல் சிரத்தையையும், வயதையும் மீறி அவர்கள் அந்த சந்தோஷ சுற்றுலாவில் தங்களையும் இணைத்துக் கொண்டிருப்பார்கள். எண்ணுங்கள் நடுவரே.. எண்ணுங்கள்.

ஒகேனக்கல் பயணம் இனிதே முடிந்து அன்று இரவும் வந்தது. ஹோட்டல் ரூம் புக் பண்ண தேடினால் அனைத்தும் புஃல். வேறு வழியில்லாமல் அங்கிருந்து ஒரு கல்யாண மண்டபத்தை புக் செய்து அன்று இரவு அங்கே படுத்திருந்தோம். விடிகாலை 5 மணிக்கு மலையேற வேண்டும். அதனால அனைவரையும் சீக்கிரம் படுத்து சீக்கிரம் எந்திரித்து கிளம்ப சொன்னார்கள். பாத்ரூமை பிடிக்கனுமே. நமக்கு தூக்கம் வருமா? செல்போனில் அலாரம் வைக்கலாம் என்றால் அதில் சார்ஜ் காலி. நாங்கள் படுத்திருந்த இடத்தில் 2 ஸ்விட்ச் பாயிண்டுகல் மட்டுமே இருந்தன. அதற்கே ஏக போட்டி. இருந்தாலும் எப்படியோ சார்ஜ் போட்டு அலாரம் செட் பண்ணி படுத்தாயிற்று. விடிகாலை 3.30க்கே வைத்து, யாரும் எழும் முன்பு என் மாமியை உஷார் பண்ணி துணைக்கு அழைத்து சென்று முதல் ஆளாக பாத்ரூமில் நுழைந்து அதற்குள் செய்தி பரவ அனைவரும் எழுந்து ஒருவழியாக களேபாரத்தில அனைவரும் கிளம்பி ரெடியானோம். அந்த குளிரில் தொண்டைக்கு இதமாக டீயோ,காப்பியோ குடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணம் தோன்றும் முன்னரே மாமா ஒரு டீகடையின் முன்பே நின்றார். மாமா எப்போதுமே அட்வான்ஸ்டாக இருப்பார். கைவசம் காளான் பொடி எப்போதும் வைத்திருப்பார். தவிர தேவையான பொருள்களை கூடவே வைத்திருப்பார். அழகாக அந்த கடையில் பால் மட்டுமே வாங்கிக் கொண்டு கொண்டு சென்ற காளான் பொடியை கலந்து, அதனுடன் கொண்டு சென்ற மாரீ பிஸ்கட் ஆளுக்கு நான்கு நான்கு வெட்டி விட்டு வண்டியை கிளப்பினோம். பயணத்தை நறுமணமாக்க உடன் வந்த தோழி ஒருவர் எங்கிருந்தோ மலராத மல்லிகையை வாங்கி தலையில் சூட்டி விட்டார். காற்றின் வீசும்போதெல்லாம் மல்லிகையின் மனம் ஏகாந்த அனுபவத்தையே தந்தது.

விடிகாலை 5.30 வாக்கில் மலையேற தொடங்கினோம். இருள் பிரியாத புத்தம்புது காலை, கூடவே செடி,கொடிகளின் பச்சைய வாசனை. அடாடா... மண்ணுலகிலேயே சொர்க்கத்தை கண்டேன். உடன் வந்தவர்கள் மலை ஏற ஏற அந்த த்ரில்லை காண மனம் இல்லாமல் கண்ணை மூடிக் கொண்டிருந்தார்கள். நான் மட்டும் கொட்ட கொட்ட விழித்து ஒவ்வொரு வளைவையும், செடி,கொடிகளின் மேல் விழுந்திருந்த க்றிஸ்டல் முத்துக்களை போன்ற பனித்துளிகளையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே வந்தேன். கடவுள் தந்த இந்த இயற்கை அழகை காண மாட்டேன் என ஒதுக்கி தள்ள இருந்தேனே என்று என்னை நானே நொந்துக் கொண்டேன். அழகே ஆபத்து. ஆபத்தும் அழகு தான் நடுவரே. மலையுச்சியில் இருந்துக் கொண்டு கீழிருந்து முளைத்து விண்னை எட்டும் அந்த காட்டு மரங்களை காண்பதும் ஒரு அழகு தான். இயற்கை காட்சிகளில் வரைந்து வைத்திருப்பார்களே, மெல்லிய பனிப்படலத்தினூடே மரங்களையும், செடி அதில் பூத்திருக்கும் பூக்களையும். அந்த அழகை படங்களில் மட்டுமே கண்டு களித்த எனக்கு நேரில் கண்டால் எப்படி இருக்கும்?

நடுவரே, மலையேறி லைட்டா மூச்சு வாங்குது.. நான் கொஞ்சம் ரெஷ்ட் எடுத்துட்டு வாரேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//நடுவர் அவர்களே, இப்ப நாம எங்கே இருக்கோம். ஊட்டி மலைக்கு கீழே. அப்படியே என்னை ஃபாலோ பண்ணிட்டு வாங்கோ.. நடுவரே,//** சொல்லுங்க கல்ப்ஸ் அப்படியே சூடா மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டே வரேன் ;-)

//தங்கள் உடல் சிரத்தையையும், வயதையும் மீறி அவர்கள் அந்த சந்தோஷ சுற்றுலாவில் தங்களையும் இணைத்துக் கொண்டிருப்பார்கள். எண்ணுங்கள் நடுவரே.. எண்ணுங்கள்.//** நானும் இரண்டு மூணு தடவை எண்ணிட்டேன் என்கிட்ட இருந்த ஐஞ்சு மிளகாய் பஜ்ஜில ஒன்னு குறையுது.......

அருமையான மலரும் நினைவுகள் கல்ப்ஸ்...செல்போனில் சார்ஜ் ஏத்தறதிலேர்ந்து..பாத்ரூம் களோபரம்..டீ ...ஸ்னாக்ஸ்..மல்லிகைபூ..வளைவுகள் செடிகொடிகள்னு பசுமையான நினைவுகளை அப்படியே சிந்தாம சிதறாம எடுத்து வைச்சிருக்கீங்க வெகு அழகு;-)

எல்லாத்தையும் சொன்னீங்க ஒன்ன விட்டுட்டீங்களே மங்க்கி! நாங்க போனப்ப இந்த மங்க்கிய பாத்து ஒரே குதிதான் பஸ்ஸ நிறுத்துங்க நிறுத்துங்கன்னு சொல்லி ஒரே அடம்;)

இன்னும் இன்னும் கொண்டுட்டுவாங்க கல்ப்ஸ் வேணும் வேணும்னு மனம் கேக்குது உங்க அனுபவங்களைப் படிக்க ;-)நன்றி கல்ப்ஸ்;-)

Don't Worry Be Happy.

நடுவரே!! பயணங்களின் விளைவாய் எங்களுக்கு கிடைத்ததென்னவோ அலுப்பும், அலைச்சலும், பணவிரையமும்தான்.
அதற்காக வீட்டுக்குள்ளேயே அடைந்து விடவில்லை. வற்புறுத்தலால் சென்று, திரும்ப திரும்ப இதையே அனுபவிக்கிறோம் என்று சொல்ல வருகிறோம்.
ஒரு குரூப்பாக கிளம்பி போகிறோம். இதில் எல்லோருடையை ஒத்துழைப்பும், அனுசரிப்பும் அவசியமாகிறது. ஆனால் எல்லோரும் அப்படியா இருக்கிறார்கள். சிலர் பாக்கெட்டில் இருந்து காசை எடுப்பேனா என்பார்கள், சிலர் காசே இல்லாத மாதிரி நடிப்பார்கள். ஏமாந்தவர்கள் யார் என்று பார்த்து எல்லா செலவையும் நம் தலையிலேயே கட்ட பார்ப்பார்கள். இதனால் மிஞ்சுவது மனக்கசப்புதான்.
சந்தோஷமாக கிளம்பி போய், ஆளாளுக்கு முகத்தை திருப்பி கொண்டு திரும்ப வேண்டும்.
ஹோட்டல் அறைகளில் தங்குவதெல்லாம் பாதுகாப்பற்றது என்பதை மறுக்க முடியுமா. அடுத்து இந்த நண்டு, சிண்டுகளின் நச்சரிப்பு. அவர்கள் எங்கே பார்வையை விட்டு விலகிடுவார்களோ என்று கண்காணிக்கவே சரியாய் இருக்கும்.
ஒரு பத்து பேர், இருபது பேர் கிளம்பி போனா ஹோட்டல் சாப்பாடெல்லாம் கட்டுபடியாகாதும்மா, பெண்கள் நீங்களே சமைச்சிடுங்களேன் என்பார்கள்.
வீட்டில் செய்யும் வேலையை, டூர் அழைச்சிட்டு போய் செய்ய சொல்வாங்க. இதில் நாங்களும் டூர் போனோம்னு பெருமை வேறயா நடுவரே.
அதுமட்டுமில்லாமல் பட்ஜெட்டில் துண்டு விழாமல் பார்ப்பதே இன்று பெரிய விஷயம். இதில் வருடம் முழுக்க சிறுக சிறுக சேர்த்ததை ஒரே நாளில் செலவழித்தால் குடும்பம் தாங்குமா? கொஞ்சமேனும் பொறுப்பு வேண்டாமா நடுவரே.
சொந்தபந்தங்களெல்லாம் ஒன்று சேர்ந்தால் சந்தித்த ஒரு பத்து நிமிடம்தான் சந்தோஷம், குதூகலம் எல்லாம். பிறகு மெதுமெதுவாக பேச்செல்லாம் மரக்கிளைகள் போல் எங்கெங்கோ பிரிந்து கடைசியில் மனக்கஷ்டத்தில் கொண்டுபோய் விடும். அதுவும் இதுபோன்ற சுற்றுலாக்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம். கடைசியில் ஏன்டா போனோம் என்றாகிவிடும்.
அப்புறம் அனுபவம் பற்றி சொல்லிவிடுகிறேன். நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படிபட்ட குடும்பங்களில் கிடைக்காத அனுபவம், சுற்றுலாக்களில் கிடைத்துவிடுமா என்ன? சுற்றுலா என்பது ஜஸ்ட் ஒரு மாறுதல் அவ்வளவே!! இன்னும் சொல்ல போனால் மாயை, கானல்நீர். இதில் சிக்கிவிட்டால் மீழ்வது சாத்தியமில்லை.
சுற்றுலாவில்தான் இயற்கையை ரசிக்க முடியுமா? நாம் போகும் பாதை எங்கும் கூடவே வரும் பௌர்ணமி வான்நிலவும், நாம் ஆசையாய் வளர்த்த தோட்டத்தில் பூத்த ரோஜாவும், கோடையிலும் அவ்வப்போது நம்மை வருடி போகும் மென்மையான காற்றும், நம் கண்முன்னே பொலபொலவென உதிரும் தூரலும், ஆலங்கட்டி மழையும், ஊட்டி கொடைகானலை நம் ஏரியாவுக்கே கொண்டு வரும் குளிர்காலமும் இயற்கையில்லையா? இதையெல்லாம் இலவசமாகவே அனுபவிக்கலாமே!! காசு எதற்கு?
நீர் பிரதேசங்களிலும், மலை பிரதேசங்களிலும் எத்தனை,எத்தனை மரணங்கள். சொல்லும்போதே உயிர் உறைகிறது. இன்பச்சுற்றுலா என்று சொல்லி, மிஞ்சுவதென்னமோ துன்பம்தான்.
இன்று உலகமே கம்ப்யூட்டருக்குள் வந்துவிட்டது. ஒரு பட்டனை தட்டினால் விவரங்கள் கிடைத்துவிட்டு போகிறது. இதற்காக காடு, மலையெல்லாம் அலைந்து திரிய வேண்டுமா என்ன.
அதுமட்டுமில்லாமல் டிஸ்கவரி, அனிமல் ப்ளானட் என்று இயற்கையின் பொக்கிஷங்களும், பல்வேறு மக்களின் வாழ்க்கை முறைகளும், உணவு பழக்கங்களும் நம் வீட்டுக்கே வந்து விருந்தளிக்கும் போது உலகமே வீட்டுக்குள் இருப்பது போலல்லவா தோன்றுகிறது.
ஒகேனக்கல்தானே நடுவரே. நான் பணம் கொடுத்து அழைத்தாலும் போக மாட்டேன்பா. எங்கே பார்த்தாலும் ஆண்கள், அரை நிர்வாணமாய் குளிக்கிறார்கள். மசாஜ் செய்து கொள்கிறார்கள். ஃபுல் மப்பில் இருக்கிறார்கள். அடுத்து பரிசல் பயணம் அப்பப்பா, அதை முடிப்பதற்குள் என்க்கிருந்த மரணபயம் சொல்லி தீராது. பரிச்ல்காரர் என்னமோ எல்லாவற்றையும் விளக்கி விலாவாரியாக சொல்லி கொண்டுதான் வந்தார். ஆனால் நான் தான் அதை கேட்கும் மனநிலையில் இல்லை. ஏதோ மரண குகையில் அகப்பட்டது போலிருந்தது நடுவரே. அந்த நீரில் ஆட்டம் போட்ட பிறகுதான் தெரியும் உடம்பெல்லாம் பேயடித்த மாதிரி வலிக்கும். அப்புறம் சளி பிடித்து, ஜுரம் வந்து................
தேவையா நடுவரே இதெல்லாம். வீட்டில் ஹாயாக சோபாவில் உட்கார்ந்து, ஸ்நாக்ஸ் கொரித்து கொண்டே சேனலை மாற்றினால் அங்கே கிடைக்குது நடுவரே. ஆனந்தமும், அனுபவமும், மனநிறைவும்.
இயற்கையோடு பின்னிபிணைந்த மனித வாழ்வைதான் இறைவன் படைத்தார். ஆனால் நாமோ நம்மை சுற்றியிருக்கும் இயற்கையெல்லாம் அழித்துவிட்டு. எங்கோ கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் இயற்கையையும் விட்டு வைக்க மனமில்லாமல், அனுபவிக்கிறோம் பேர்வழி என்று அழிக்க கிளம்பி விட்டோம். எங்கெல்லாம் மனித தடம் பதிகிறதோ, அங்கெல்லாம் இயற்கை செத்து, செயற்கை முளைத்து விடுகிறதே. வாழுங்கள் வாழவிடுங்கள் என்று அந்த இயற்கை நம்மிடம் கெஞ்சுவது போல் என் காதுகளில் கேட்கிறது நடுவரே.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

மேலும் சில பதிவுகள்