பட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே! வருத்தமே!**

அன்பார்ந்த அறுசுவை ரசிகர்களே! ரசிகைகளே!

அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு, நீங்கள் ஆவலோடு ஒருவாரகாலமாக எதிர்பார்த்த நமது பட்டி இனிதே துவங்கி விட்டது. என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொண்டு... சென்ற வாரம் போலவே இந்த வாரமும் நாம் பேச விருக்கும் தலைப்பும் பயனுள்ளதுதான்...அது அடுத்து வரும் கோடைவிடுமுறையை முன்னிறுத்தி...

அறுசுவை தோழி உதிராவின்

***விடுமுறைக் கால பயணங்களால் வருவது
அலுப்பும் , அலைச்சலும், பணவிரயமும்! (வருத்தமே)
அனுபவமும் , ஆனந்தமும், மனநிறைவும்!(ஆனந்தமே)***

என்ற தலைப்பின் கீழ் பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!!!

உங்களது பொன்னான நேரத்தை அறுசுவைக்காக கொஞ்சம் ஒதுக்கி..அறுசுவையின் பட்டியை இம்முறையும் வெற்றிப் பட்டியாக்க .... அனைவரும் வருக ஆதரவு தருக என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்;-) நன்றி வணக்கம்_()_

பின்குறிப்பு: முதற்கட்ட அறிவிப்பு ஒவ்வொரு பதிவுக்கு பிறகும் சோடா வழங்கப்படும்.

முக்கியக்குறிப்பு: பட்டியின் விதிமுறைகளை மனதில் கொண்டு...பதிவுகளை பதிய வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நடுவர் அவர்களே விடுமுறை கால பயணங்கள் என்றில்லை பயணங்கள் என்றாலே ஆனந்தம் தான்.

எதை சொல்ல எதை விடன்னு எம் அணி தோழி எல்லாவற்றையும் கொட்டிட்டு போய்ட்டாங்க

சின்னவயசுல போன ஊட்டி,மைசூர்,திருப்பதி,பாண்டிச்சேரி இன்னும் பல ஊர்களுக்கு போன நினைவுகள்

இன்னும் மனசை விட்டு நீங்காமல் இனிக்குதுங்க அதெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்.

இப்போ போன கொடைக்கானல்,ஏர்காடு,குற்றாலம்,பாபநாசம்,
சிங்கை,மலேசியா,கேரளா,சூரத்னு எல்லா பயணங்களும் சந்தோசமான நினைவுகள் தான்

நான் போன பயணங்களையும் சந்தோசத்தயும் சொல்கிறேன் கேளுங்கள் நடுவரே மிளகாய் பஜ்ஜியெல்லாம் பத்திரமா வச்சிக்கோங்க அப்பால வந்து ஒண்ணு குறையுதேன்னு என்னை கேக்கபிடாது ஆமா :)

ஓர் நாள் பயணம் தான் நான் என்னோட அத்தை,மாமா,அவங்க பொண்ணுங்க இருவர் எதிர் வீட்டு மாமி என ஆறு பேர் காரில் செல்கிறோம்

முதலில் திருவாரூர் தியாகராஜர் கோவில் சாமி தரிசனம் முடிந்து காலை
டிபன் சாப்பிட அமர்ந்தோம் வீட்டில் இருந்தே செய்து எடுத்துவந்தாங்க ஆளுக்கு 4 இட்லி பூண்டு சட்னியோடு ஆஹா அருமையோ அருமை வீட்டில் இட்லின்னா இன்னிக்கும் இட்லியான்னு கேட்கும் நாங்கள் இன்னும் வேனும்னு கேக்க வச்சுதே :)

அதை முடித்து காரைக்கால் அம்மையார்,அடுத்து பக்கத்துல இருக்கும் கடல்கரை அருகில் மீனவர் குப்பம் பார்க்கவே அழகு கையோடு ஸ்டவ் சமைக்க
தேவையான் பொருள் எல்லாம் கைவசம் இருந்தது அங்கு போனதும் மீன் வாங்கி சுத்தம் செய்து அதை வறுக்கும் வேலையில் அத்தை இறங்கிட்டாங்க நாங்க கடலை பார்த்து சும்மா இருப்போமா அலையோடு விளையாட
ஆயத்தமாகிட்டோம் அடடா அந்த நேரத்தையும் நினைவுகளையும் நினைக்கும் போது இனிமையிலும் இனிமைன்னே சொல்லலாம்

அடுத்து பாண்டிச்சேரி அங்கும் கடல்கரை கோவில்ன்னு எல்லாம் இடமும் பார்த்து முடித்து வீடு திரும்பும் வேலை வழியில் செக்போஸ்ட் போகும் வண்டியெல்லாம் நிறுத்தி விசாரணை செய்யும் ட்ராஃபிக் போலீஸ் எங்கள் வ்ண்டியை பார்த்ததும் குடும்பத்தோடு இருப்பதை பார்த்து நீங்க போகலாம்னு சொல்லிட்டார்
நானும் என் அத்தை பொண்ணுங்களும் கோரசாக தேங்க்யூ சார் டாட்டான்னு கையை காட்டிட்டு கிளம்பியதை
பார்த்து அவர் இருந்த வேலையையும் மறந்து உற்சாகமாக டாட்டா காட்டினார் :)

காரில் நாங்க அடிச்ச ரகளை கொஞ்சம் நஞ்சமில்லை ஆட்டம்,பாட்டம்னு ஒரே கொண்டாட்டம் தான்
காலை 5 மணிக்கு கிளம்பி இரவு 12.30க்கு வீடு திரும்புகிறோம் காரை
விட்டு இறங்கியதும் ட்ரைவர் சொல்றார் கார் ஓட்டின அலுப்பே தெரியல
இந்த புள்ளைகள் அடிச்ச லூட்டியிலன்னு :) ஊரை சுத்தின எஙகளுக்கும் அலுப்பு இல்லை ட்ரைவருக்கும் அலுப்பு தெரியல சந்தோசமான அனுபவம் தான் மிஞ்சியது.

ஓர் நாள் பயணம் என்றாலும் ஓராண்டு காலத்துக்கும்

இல்லை இல்லை வாழ்க்கையின் இறுதி பயணம் வரை இனிமையை கொடுக்கும்ங்க

பயணங்கள்.....

//ஹோட்டல் அறைகளில் தங்குவதெல்லாம் பாதுகாப்பற்றது என்பதை மறுக்க முடியுமா. //

எந்த காலத்துல இருக்காங்க எதிரணி ஹோட்டலில் தங்குவது பாதுக்காப்பு இல்லையா

என்ன இப்படி சொல்லிட்டாங்க பாதுகாப்பு இல்லாமலா சுற்றுலா தளங்களில்

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
ஹோட்டல்கள் புதுசு புதுசாய் வருகின்றது.

இப்பலாம் ஆன்லைன்லயே ரூம் புக் பண்னிட்டு தான் சுற்றுலாவுக்கே போறாங்க நடுவரே இதை

கொஞ்சம் எதிரணிக்கு எடுத்து சொல்லுங்கள்.

மீண்டும் வருகிறேன்.....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்புள்ள நடுவர் அவர்களே
எப்பவும் கார்லேயே போற நீங்க கொடைக்கானல் லேக்கை சுற்றி குடும்பசகிதம் சைக்கிள் விடுங்க .அதுவும் நீங்க உங்க கணவருடன் டபுள்சா.அந்த என்ஜய்மெண்டே தனி தான் .நம்ம ஊரு ரோட்ல இப்படி போக முடியுமா?
டூர் போக நிறைய காசு பணம் வேணும்னு அவசியம் இல்லைங்க.பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி பிளான் பண்ணுங்க
நிறைய பேர் சேர்ந்து போன அவரவர் பேமிலிக்கு அவரவர் செலவு செய்தால் பிரச்னை ஏதும் வராது
டூர் போம்போது குழந்தைகள் சண்டை போடுவது ஒரு பிரச்னை என்று எதிரணியினர் சொல்றங்க .நான் சொல்றேன் நிங்களும் சேர்ந்து குழந்தையாய் மாறி அதை ரசியுங்கள் .சரிக்குசமமாய் நீங்களும் விளையாடுங்க .
எல்லாம் ஒரு அனுபவங்க .அதை பாசிடிவ்வா எடுத்து கொள்ளுங்கள் .
பணவிரயம் ,தொல்லை ,அலுப்பு ,இப்படி நினைச்சாஎப்படிங்க ?
ஒரு ஸ்வீட்டை சாப்பிடும் போது இன்பம்
ஒரு புது ட்ரெஸ உடுத்தும் போது இன்பம் .
ஆனால் டூர் போனதை எப்போ நினைச்சாலும் இன்பமுங்க .
அதனால தான் அது பேரு இன்பசுற்றுலா .

நடுவரே, எங்களை ஃபாலோ பண்றேன் பேர்வழின்னு பஜ்ஜி மிளகாய் அத்தனையும் காலி பன்ணிட்டீங்க. இப்ப பாருங்க. அடுத்து விளைச்சல் முடிஞ்சு வந்தா தான் மிளகாயே கிடைக்குமாம். அவ்ளோ தட்டுப்பாட்டை கொண்டு வந்துட்டீங்களே. உங்களை முன்னாடி விட்டுட்டு நான் பின்னாடி வந்திருக்கனும். தப்பு பண்ணிட்டேன். இனியாச்சும் கரெக்டா ஃபாலொ பண்ணுங்க..

விடிகாலை 5.30க்கு மலை ஏற தொடங்கி ஊட்டி மலையில் 8 மணி அளவில் சென்றடைந்தோம். அந்த நேரத்திற்கு சுட சுட ஒரு ப்ரூ காப்பி இருந்தால் நன்றாக இருக்குமே என மனசு விரும்பியது. நான் நினைத்து முடிக்கும் முன்னரே, பஸ் நின்றதும் எங்கள் மாமா ஒரு ஓட்டலுக்குள் எங்களை அழைத்துக் கொண்டு நுழைந்தார். உள்ளே நுழைந்ததும் கப கப வென ஆர்டர் செய்த பூரி செட், தோசை,பொங்கல்,மெதுவடை,இட்லி என அனைத்தையும் போட்டு தாக்கி விட்டு காப்பிக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் எதிர் டேபிளில் எங்களோடு வந்த பாட்டியின் அக்குரமங்களை பார்த்து சிரிப்பு வந்தது. அவர் பாவம் தோசைக்கு சட்னி கிண்னத்தை எடுக்க நினைத்தவர் நடுங்கும் குளிரில் மாற்றி குழம்பு கிண்ணத்தை எடுக்க, அது தவறி சட்னியில் விழுந்து ஒரு ரகளையே பண்ணிக் கொண்டிருந்தார். அதை பார்த்து ரசித்து சிரித்துக் கொண்டிருக்கும் போதே காப்பியும் வந்து விட, காப்பியை காணாதவர் போல காணப்பட்டோம் அந்த இடத்தில். ஏனென்றால் அத்தனை குளிரில் காப்பி இன்னும் இன்னும் இருந்தால் நன்றாக இருக்கும் என்றே தோன்றியது. காபியை ஒவ்வொரு சிப்பாக உறிஞ்சி குடித்துவிட்டு(நக்கி) தெம்பாக வெளியே வந்து வெயிலை தேடினோம். ம்ஹூஹுகும்.. வந்தபாடில்லை, குளிருக்கு இதமாக சால்வையை சுற்றிக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத அந்த ரோட்டில் காலாற நடந்துக் கொண்டிருந்தோம். இந்த சைக்கிள் கேப்பில் பஸ் வீலை மாற்றி இன்னொரு வீலை ஏற்றிக் கொண்டிருந்தார் டிரைவர். அவர் முடிக்கட்டும் என காத்திருந்து அங்கிருந்த போர்ட் அவுசிற்கு போய் இறங்கினோம்.

வழி நெடுக ஒரு வீடாவது தரையில் இருக்குமா என்று பார்த்து தோற்று தான் போனோம். அத்தனையும் அவசரத்திற்கு தலையில் குத்திய ஹேர்பின்களை போல மலைச்சரிவுகளி செருகி வைக்கப்பட்டிருந்தன. இங்கே கோலம் போட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை கழுதையை தட்டி விட்டு பார்த்தேன். அது கேவலமாக கத்திக் கொண்டே பழைய இடத்திற்கு வந்து சேர்ந்தது. அதை ஒருவழியாக கட்டிப் போட்டு விட்டு, ப்ரெஷ்ஷாக விளைந்திருந்த, மார்க்கெட் கடைகளில் மட்டுமே கண்டுகளித்த காய்கறிகள், கேரட், முட்டை கோஸ், காலிபிளவர் ஆகிய காய்கறிகள் தோட்டத்தில் விளைந்திருப்பதை ஆச்சர்யமும், ஆவலும் மிக வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே சென்றேன்.

போர்ட் அவுசில் வண்டி நின்றது. போட்டில் போகலாம் என விசாரித்தால் மதியம் 2 மணிக்கு தான் எடுப்பார்களாம். நாங்கள் எப்படியும் 4 மணி நேரமாவது காக்க வேண்டியிருக்கும். அதற்குள் டீ எஸ்டேட்டை சுற்றி பார்த்துவிட்டு வரலாம் என அதற்கு இன்னொரு வண்டியை வாடகைக்கு பிடித்து அங்கே போய் சேர்ந்தோம். உள்ளே டிக்கெட் வாங்கிக் கொண்டு போனோம். அங்கே பெரிய டிரேக்களில் தரமான டீ இலைகள் பச்சை பசேல் என காய்ந்து கொண்டிருந்தன. அடாடா.. இவை எப்போது காய்வது? நாம் எப்போது டீதூள் ஆவதை பார்ப்பது? இன்றைக்கு முழுக்க இந்த பேக்டரிக்குள்ளேயே பேட்டரி போனது போல இருக்க வேண்டியது தானா? என்று மனம் வெம்ப தொடங்கும் முன்னரே, அந்த் டீ இலைகள் அங்கிருந்த மெஷினில் அரைக்கப்பட்டு ஜலித்து தரம் பிரித்து எடுக்கப்பட்டு தனி தனியாக பேக்கிங்கில் சென்று கொண்டிருந்தன. தப்பு கணக்ககுபோட்டுடோமே என தலையில் எனக்கு நானே தட்டிக் கொண்டு கீழே இறங்கும்போது அங்கு தயாரான மணமான டீதூளில் சுவையான தேநீர் பானத்தை தந்து உபசரித்து கொண்டிருந்தார்கள். சாதாரணமாக எனக்கு டீ பிடிக்காது. இருந்தும் அந்த டீயின், சுவையும், மணமும் என்னை கொள்கை மீற செய்தன. இருமுறை வாங்கி குடித்தேன்.(ப்ரீ தான் ;))) அங்கேயே பாக்கெட்டுக்களில் போட்டு விற்பனையும் செய்தார்கள். வீட்டில் இருக்கும் மாமா,அத்தை,சித்தப்பூ,நண்பர்கள்,என அனைவருக்குக்கும் டீ தூளை வாங்கி கொண்டு நாவும்,மனதும் பூரிக்க வேறு இடத்தை பார்க்க கிளம்பினோம்.

ஒரு குட்டி டெலஸ்கோப் டவரில் ஏறி நின்று விட்டு எதையும் பார்க்காமல் பார்த்தது போல பிலிம் காட்டி விட்டு வந்தாகி விட்டது ;) அடுத்து வாடகை வண்டியின் டிரைவர் அவசரப்படுத்தியதால் தொட்டபெட்டா பயணம் ரத்தானது ;( இருந்தாலும் விட்டேனா பார் (அறுசுவை குறிப்பு அல்ல) என்று நானும் எங்க் தங்கையும் ஓடி போய் தொட்டபெட்டவை தொட்டு விட்டு திரும்ப ஓடிவருகிறோம். ஒடிவருகிறோம்.. மூச்சு தான் வாங்குகிறதே தவிர ஓட்டம் கூடவில்லை. ஒருவழியாக வண்டியை அடைந்து, பழைய எங்கள் இடத்திற்கே வந்து சேர்ந்தோம். அங்கே ஒரு குட்டி ஷாப்பிங். பாதாம்,முந்திரி,ஸ்ட்ராபெரி,ப்ளம்ஸ்,கேரட்,முள்ளங்கி,விதவிதமான கொக்கி கம்மல்கள் என அடுக்கி குவித்து விட்டு, அது போதாமல், இன்னொரு கடைக்கு நானும் என் தங்கையும் ஜூட் விட்டோம். அங்கிருந்த வேலைப்பாடுகள் நிறைந்த ஜூட் ஹேண்ட் பேக் கண்னை பறிக்க ஒன்றுக்கு இரண்டாக வாங்கி வைத்துக் கொண்டு, என் நண்பரின் ஆலோசனையின் பெயரில் வரிக்கிக்கு பெயர் போன இன்பீரியல் பேக்கரிக்குள் நுழைந்தேன். அங்கே நண்பர் மற்றும் குடும்பத்தினருக்கும் சேர்த்து பெரிய அளவில் வரிக்கி, கோகோனெட் பால் வாங்கிக் கொண்டு திரும்புவதற்குள் வரிக்கி புகழ் எங்களோடு வந்த மற்றவர்களுக்கும் தெரியவர, அனைவரும் திமுதிமுவென கடைக்குள் நுழைந்து கடையையே காலி பண்ணி விட்டனர். கடைக்காரருக்கு ஆனந்தமோ ஆனந்தம் தான். பின்னே போன வருஷம் போட்ட சரக்கு அத்தனையும் நம்ம புண்ணியத்துல காலி ஆய்ருச்சே. நாங்க முன்னாடியே வந்து டெஸ்ட் பண்ணி பார்த்து அன்னைக்கு சரக்கை வாங்கி வச்சுட்டோம் ;))

இது போதாமல், மாம்ஸோடு ஒரு நர்சரிக்குள் நுழைந்து போன்சாய் செடிகள், ரோஸ் செடிகள், பூக்கள்,காய்கறி விதைகள் என விதவிதமாக வாங்கி குவித்துக் கொண்டு, அங்கே பேமசான ஹோம் மேட் சாக்லெட்டையும் வாங்கி வண்டியில் டிரைவர் அண்ணாவிடம் சொல்லி காவல் காக்க சொல்லிவிட்டு மதிய உணவை முடிக்க போனோம். மதிய உணவும் முடிந்து, சிறிது நேர இளைப்பாறலுக்கு பின் பொட்டனிக்கல் கார்டனுக்குள் சென்றோம் டிக்கெட் வாங்கிக் கொண்டு. நாங்கள் உள்ளே நுழையும் போது 5 மணி. 5.30க்கே அங்கே கேட்டை சார்த்திவிடுவார்களாம் ;( ஓட்டமும் நடையுமாக ஒவ்வொரு இடத்தையும்,பூக்களையும், மரங்களையும் அவசர அவசரமாக ரசித்து, அவசரமாக போட்டொ எடுத்து அவசரமாக கிளம்பி பஸ்ஸில் அடைந்தோம். இருட்டுவதற்குள் இறங்கியாக வேண்டும் என்று. நேரமும், மணித்துளியும் இன்னும் நீளாதா என ஏங்க வைத்த பயணம் அது நடுவர் அவர்களே ;(

எதிரணி குழம்பியிருப்பார்கள். என்னடா இங்கே வாதத்தை வைக்க சொன்னால், பயண அனுபவத்தை வைக்கிறார்களே என்று. அவர்களுக்கு சொல்லுங்கள் நடுவரே, நாங்கள் சென்று அனுபவித்த மகிழ்ச்சி கலந்த மனநிறைவான விடுமுறை எடுத்து கொண்டாடிய பயணத்தை பற்றி தான் இங்கே சொல்லிக் கொண்ட்டிருந்தேன் என்று.

நடுவரே, வீட்டுக்கு போவனும். ஆத்தா வையும் காசை குடுங்க.. செலவே இல்லாம ஊட்டியை சுத்தி பார்த்தீங்கல்லோ.. காச குடுங்க..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//இப்படிப் பட்டவங்க நிஜம்மாவே திருப்பதிக்கு போனா எவ்வளவு சந்தோஷப் படுவாங்க! //** ஒரு வேளை அங்க போனாலும் அடுப்படியத் தேடிதான் போவாய்ங்களோ??

//சில குடும்பங்கள் இணைந்து செல்லும் சுற்றுலாக்களைத் திட்டமிடும் போது ஒவ்வொரு குடும்பத்தினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையை கலெக்ட் செய்து பொதுப்பணமாக வைத்துக் கொண்டு சாப்பாடு, தங்கும் செலவு, வாகன செலவு போன்ற பொதுச்செலவுக்கு வைத்துக் கொண்டு அவரவருக்கு வேண்டிய ஷாப்பிங்குக்கு அவரவர் செலவு செய்து கொண்டால் எல்லா செலவும் நானேதான் செய்தேன்னு ஏன் அலுப்பு வருது. திட்டமிடல் வேணும் நடுவரே திட்டமிடல் வேணும்.//** இதெல்லாம் நம்மளமாதிரி அடிக்கடி போறவங்கலுக்கு தோணும்..என்னிக்காவது ஒருநாள் அதுவும் வேண்டா வெறுப்பா போறவங்க எதையாவது சொல்லி கெடுக்கதான் பாப்பாங்க ;( நீங்க சொல்லுங்க கவி;-)

//அந்த இடத்திற்கே உரிய மண்வாசனையை நுகர முடியுமா? டிவி முன்னாடி பார்ப்பது அத்தனையும் மாயை! //விட்டா டி.வில நீர்விழ்ச்சி காட்டும்போது குளிச்சிக்கலாம்னு சொன்னாலும் சொல்லுவாங்க போல இருக்கே....! படா பேஜாரா கீது ;(

//நடுவரே ஆலங்கட்டி மழையா எங்கிட்டு பெய்யுதுன்னு விசாரிச்சு சொல்லுங்க! அடுத்த சுற்றுலா அங்கிட்டுதான் போகணும்.//** அது இங்கிட்டுதான் கவி;-) அடுத்த ட்ரிப் இங்க போட்டிருங்க;-) இங்க மழை பெய்யறது அந்த ஒரு மாசம்தான் ஆனா ராத்திரி பெய்யறது ஆலங்கட்டி மழையாதான் இருக்கும்;-)

//நிச்சயம் சுற்றுலா சென்ற குழந்தைதான் சந்தோஷமா இருக்கும். பணம் கொடுத்த குழந்தையின் கையில் இருக்கும் நோட்டில் காந்தி தாத்தா மட்டும்தான் சந்தோஷமா சிரிச்சுக்கிட்டு இருப்பார்.//**எனக்கென்னவோ நாம கஷ்டப்பட்டு வாங்கிக்கொடுத்த அர்த்தம் புரியாம இப்படி பணத்துக்கு அடிமையாயிட்டாங்களேன்னு விரக்தியில சிரிக்கிற மாதிரிதான் தெரியுது;-(

//ஆரம்பத்துலயே இவங்க தாமதா கிளம்பி சொதப்பிக்கிட்டு செயின் ரியாக்‌ஷன் மாதிரி எல்லாத்துலையும் சொதப்பி சுற்றுலாவைக் குறை சொன்னால் என்னங்க சொல்றது? இப்படிப் பட்டவங்களால சுற்றுலா மட்டுமல்ல வீட்டுக்குளேயே இருந்தால் கூட நிம்மதியா சந்தோஷமா இருக்க முடியாது.//***சரியாச்சொன்னீங்க கவி;-)

ஜிகர்தண்டா கேட்டீங்களே இந்தாங்க இரண்டு மண்குவலை நிறய அள்ளிக்குடிங்க;-) காலேஜ் டூர் பத்தி சீக்கிரம் சொல்லுங்க....எங்க காலேஜ்ல டூர் அடுத்த மாசம் அடுத்த மாசம்னு சொல்லி கடைசில செமஸ்டர் லீவுல கூட்டிட்டு போன மாதிரி ஏமாத்திடாங்கோ...........!

நன்றி கவி! வாழ்த்துக்கள் அருமையான பதிலடி..இத இத இதத்தானே நடுவரும் எதிர்பாக்கறாரு;-) விரசா அடுத்த தடாலடி பதிவோடு வந்திருங்க ;-)

சுற்றுலாங்கிறது நம்ம மனத்திருப்திக்காக போறது...முழு மனதோடு அனுபவித்தால் சந்தோஷம் நிச்சயம் என்று மிக அழகாக பல நிகழ்வுகளை சுட்டிக்காட்டி விளக்கியிருக்காங்க நம்ம கவிசிவா....இல்லை இல்லை நிம்மதியே கிடைக்காத இடத்தில் மனதிருப்தி எங்கேயிருந்து வரும்னு சொல்லவரிங்களா .....வாங்க வாங்க இங்குட்டு வந்து சொல்லுங்க...

Don't Worry Be Happy.

அன்புத்தோழிக்கு அறுசுவையின் சார்பாக வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்;-)

//இயல்பாக போய் கொன்டிருக்கும் வாழ்க்கையில்
ஒர் புத்துணர்வு தருவது சுற்றுலா தான்.//***மிக அழகாக எடுத்துச்சொல்லியிருக்கீங்க தோழி. இன்னும் கொஞ்சம் அதிக பதிவுகளோடு வாங்க..பட்டியில் கலக்க வாழ்த்துக்கள்;-)

Don't Worry Be Happy.

//உப்பில்லா இட்லியை கூட அன்று ரசித்தோம். எல்லாம் பேக் பண்ணி அங்க கொண்டு போய் தட்டில் போட்டு நின்னுகிட்டே சாப்பிட்டது கூட... ஆகா... மகிழ்ச்சி இன்னும் கண் முன் நிக்குது நடுவரே//** வீட்டில சாப்பிடாத குட்டீஸ்கூட அங்க போனா மொத ஆளா சாப்பிட்டு முடிக்குதே...அதுங்களுக்குதான் என்ன குஷி என்ன குஷி!

.//கோவிலுக்கே போகாம திருப்பத்தி பிராசதமும் ஆன்லைனில் தரிசனமும் கூட இன்று கிடைக்கிறதே... ஏன் எல்லாரும் அங்க போய் கியூ கட்டி நிக்கறாங்க??//***ஏசி ரூம்ல பாப்கார்ன் சாப்பிட்டுட்டே கிரிக்கெட்
பாக்கறவனுக்கும் மொட்டை வெயில்ல ஸ்டேடியத்துல நேரா அனுபவிச்சு பாக்கறவுனுக்கும் இருக்கிற வித்தியாசம்தான்.

//சிரியாவில் நான் போன ஒவ்வொரு இடமும் எனக்கு வரலாறு கற்றுத்தந்தது. இதை இண்டர்னெட்டில் பார்த்து படிச்சா மறந்துருவோம்..//*** இதே மாதிரி ஒரு அனுபவம்தான் எனக்கும் தஞ்சை ப்ரகதிஸ்வர ஆலயம் தரிசிக்க போனபோதும் நேர்ந்தது.. ஊருக்குள் போகும் வரை கோபுரமே கண்ணுக்கு எட்டலை., கோவில் வாயிலைத் தாண்டி உள்ளே சென்றபோதும் நந்திசிலை மட்டுமே கண்ணில்.. கொஞ்ச தூரம் நகர்ந்து நடந்த பொழுதுதான் பிமாண்ட கோபுரம் கண்ணில் பட்டது..இதை புத்தகத்திலோ அல்லது டி.வியிலோ காட்டினாலும் நாம் அடைந்த பிரமிப்பு கிட்டுமா??

//பயணத்தின் போது சிறு தூரல், மழை வந்தா உடனே வண்டியை ஓரங்கட்டி ரோட்டோர டீ கடையில் சூடா ஒரு டீ!!!//** நிஜமா ஊர்ல கூட அப்படிபட்ட டீக்கடைக்கு போக மனசு கூசும் ஆனா வெளியூர்ல அது ஒரு த்ரில்லா இல்ல இருக்கும்;-)

நன்றி வனி! ரொம்ப அழகா கனகச்சிதமா சொல்ல வந்ததை சொல்லியிருக்கீங்க பாராட்டுக்கள் வனி... நேர்ல பாத்து அனுபவிக்கறதுலேயும் டிவில பாத்து அனுபவிக்கறதுலேயும் உள்ள வித்தியாசத்தையும் ரொம்ப அழகா சொல்லிட்டீங்க இதுக்கு மேல அவங்க மறுத்துடுவாங்களா.. என்ன நான் சொல்றது ..அ.அ.பணவிரயம் அணி சரிதானே ...ஐய்யைய்யோ பதில பதிலா சொல்லுங்கபா இப்படியா ஒரு மனுசிய அடிச்சு துவம்சம் பண்றமாதிரியே ஓடியாரது...எதா இருந்தாலும் பேச்சா இருக்கனும்..........அது ..ம் வாங்க சொல்லுங்க.....

Don't Worry Be Happy.

கல்லூரி சுற்றுலா அனுபவத்தோட வந்துட்டேன் நடுவரே!

மூன்றாம் ஆண்டு படிக்கும் போது இன்டஸ்ட்ரியல் விசிட்டுங்கற பேர்ல காரையார் ஹைட்ரோ பவர் ப்லான்டுக்கு போறோம்னு சொல்லிட்டு அகஸ்தியர் ஃபால்ஸ், பாணதீர்த்தம் அருவி, அணையில் படகு சவாரின்னு நல்லா என்ஜாய் பண்ணிட்டு வந்தோம். போனா போகுதுன்னு பவர் பிளான்டுக்குள்ளும் எட்டிப் பார்த்தோம் :).

காலேஜில் இருந்து கிளம்பியதுமே ஆட்டமும் பாட்டமும் ஆரம்பிச்சாச்சு! டேஸ்காலர்ஸ் ஆன நாங்க கொண்டு போயிருந்த ஸ்னாக்ஸ் எல்லாம் எங்களுக்கு தெரிஞ்சும், திருட்டுத் தனமாவும் காலி பண்ணிட்டு அடுத்து யார் பையை காலியாக்கலாம்னு அடிச்ச லூட்டியை இன்று நினைத்தாலும் சந்தோஷம்தான்.

அகஸ்தியர் ஃபால்ஸ் போனதும் குளிக்கணும்னு அடம் புடிச்சு எல்லாரும் ஃபால்ஸில் ஆட்டம் போட்டது அப்படியே பசுமையான நினைவுகளா இருக்கு. பசங்களும், நாங்கள் குளித்த பின் உடைமாற்ற பாதுகாப்பான இடம் தேடி வெளியில் எங்களுக்கு பாதுகாப்பாக நின்று எங்களை அவர்களின் சகோதரிகளாய் கவனித்துக் கொண்டதை நினைத்தால் மனம் நெகிழ்கிறது.

அடுத்து போனது டேம். அங்கே படகில் சவாரி செய்தது, படகில் சவாரி செய்த போது தண்ணீரில் கை விட்டு விளையாடியது, கவிதா தண்ணீரில் கை வைக்காதே டேமில் முதலை இருக்குன்னு சொல்லி என்னை பயம் காட்டி அதன் பின் கைகளைக் கட்டிக் கொண்டு அமர்ந்தது, கரைய சேர்ந்ததும் ஹா ஹா ஏமாந்தியான்னு என்னை கலாய்த்தது, அதன் பின் பாணதீர்த்தம் அருவி பார்க்க மலை ஏறியது, செங்குத்தான பாதைகளில் பசங்க கை கோர்த்து நின்னு எங்களைப் பாதுகாப்பாக மலை ஏற்றியது, ஃபால்சைப் பார்த்ததும் ஏறிவந்த களைப்பில் எங்களில் சிலர் எதைப்பற்றியும் யோசிக்காமல் சரேலென அருவியில் நுழைந்து குளித்தது, மாற்று உடை கையில் இல்லை என்ற உண்மை அவர்களுக்கு உரைக்கும் முன்னே பிறருக்கு உரைத்து அத்தனை பசங்களும் அந்த இடத்தை விட்டு சற்று தொலைவில் சென்று நின்று கொண்டு அவர்கள் உடை காயும் வரை காத்திருந்து பின்னர் மூத்த சகோதரனாக கண்டித்து இதுபோல் எப்போதும் யோசிக்காமல் செய்யாதீங்கன்னு அட்வைஸ் செய்ததுன்னு எல்லாமே பசுமையான மலரும் நினைவுகள் நடுவரே! இன்னிக்கும் எந்த அருவிக்குப் போனாலும் முதலில் உடைமாற்ற இடமும் உடையும் இருக்கான்னு செக் செய்து கொள்ளத் தூண்டுகிறது அன்று அந்த சகோதரர்கள் கொடுத்த அறிவுரைகள்.

மீண்டும் மலையிறங்கி படகில் பயணித்து கரையை அடைந்ததும் தயாராக கொண்டு வந்திருந்த பிரியாணியை "டேய் எனக்கு லெக் பீஸ் கொடுடான்னு" எல்லாரும் கேட்டு பரிமாறியவனை காண்டாக வைத்து சாப்பிட்டு, போனா போகுதுன்னு பவர் ப்லான்டுக்குப் ஓய் "ஓஹ் இதுதான் டர்பைன் னா" "இது சுத்திதான் கரண்டு வருதா" ன்னு கேட்டு தெளிவாகிட்டு, வழியில் நண்பன் வீட்டில் இறங்கி, அவனது குடும்பத்தினரின் அன்பான உபசரிப்பில் நெகிழ்ந்து காலேஜ் வந்து சேர்ந்ததும் அச்சசோ இம்பூட்டு சீக்கிரம் டூர் முடிஞ்சிடுச்சேன்னு சந்தோஷமா அலுத்துக்கிட்டது... இப்போ நினைத்தாலும் மனசுல ஒரு சந்தோஷம் புத்துணர்ச்சி கிடைக்குது நடுவரே!

இன்னொரு கல்லூரி சுற்றுலா இருக்கு அது அடுத்த பதிவில் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க ராதாம்மா ;) உங்களுக்கும் எனது வணக்கங்கள்

//நல்ல தீர்ப்பு தரப்போகும் நடுவருக்கு//**தீர்ப்பு தீர்ப்புன்னு இப்பவே புளியக் கரைச்சு விட்டுட்டீங்களே ...;(((

//ஆனந்தம் ஆனந்தம் பாடும்!
மனம் ஆசை ஊஞ்சலில் ஆடும்!
ஆயிரம் ஆயிரம் காலம் அந்த டூர்
ஞாபகம் மனதினில் இருக்கும்!//** ஆஹா எக்ஸலண்ட் அந்த டூர் ஞாபகம் மனதினில் ஓடும்....வாரே வா! டூர்னாலே பாட்டு ஆட்டம் கொண்டாட்டம்தானே!

//வீட்டில மூடின அறைக்குள்ள ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகிட்டு, வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிட்டுகிட்டு "ஐ லவ் யூ'னு சொல்லிக்கிட்டிருப்பாங்களா?! சொல்லுங்க நடுவரே!!//** நீங்க வேற “ஐ லவ் தென்றல் சீரியல்” ஐ லவ் சன் நியூஸ்” நு ரிமோட் டி/வி சண்டைதான் நடந்திருக்கும். அப்புறம் அடுத்த வாரமே இத ஒரு சாக்கா வைச்சு டைவர்ஸ் வரைக்கும் போயிருவாங்க நம்ம பேஜார் புடிச்ச பசங்க;-(

//சில கணவர்கள் தன் மனைவி முகத்தைப் பார்ப்பதே இது மாதிரி சுற்றுலா நேரங்களில்தான் தெரியுமா? ஒரு காதலான பார்வை,,,சின்ன இடிப்பு, ஒரு 'மீண்டும் கோகிலா' இடுப்புக் கிள்ளல், ஒரு அணைப்பு......இதுக்கெல்லாம் அன்றாட வாழ்வின் அவசரத்தில் எங்கே நேரம் இருக்கு நடுவரே?! நம் எண்ணங்களை, உணர்வுகளைப் புதுப்பிக்க சுற்றுலாக்கள் அவசியம்தானே//** அடடா!வெக்கத்துல நெழிய வைச்சுட்டீங்களே ராதாம்மா;) இந்த சீக்ரெட் எல்லாம் தெரிஞ்சா உங்க எதிரணி ஏன் எதிரணில இருக்கப்போறாங்க;-)

//நான் கிட்டத்தட்ட பத்து நாடுகள் சுற்றியுள்ளேன்.
அந்த அனுபவங்களை இதில் வாதமாக எழுத முடியாது. படிப்பவர்களுக்கும் போர் அடிக்கும். விரைவில் கட்டுரைகளாக அறுசுவையில் எழுதுகிறேன்//** உங்கள் அனுபவம் எல்லாம் கட்டுரையில் படிக்க காத்திருக்கிறோம் ராதாம்மா வாழ்த்துக்கள்;-)

நன்றி ராதாம்மா சொற்ப நேரத்திலும் பட்டிக்காக செலவிட்டதில் மிக்க மகிழ்ச்சி;) ரொமான்ஸ் ரகசியமும் சொல்லி எதுக்காக சுற்றுலா போகனும்கிற முக்கியத்துவத்தையும் நல்லா நயமா சொல்லி புரிய வைச்சிடீங்க அது உங்கள மாதிரி அனுபவஸ்தர்களிடம் இருந்துதான் பெறமுடியும்... மிக்க மகிழ்ச்சி;-) ஒரே ஒரு பதிவுன்னல்லாம் சொல்லலாம சின்னப்பொண்ணு ஏங்கிப்போயிடுவேன்ல ;) டைம் கிடைக்கும்போதல்லாம் கட்டாயம் இங்க வரணும் உங்கள் வாதங்களை காண காத்திருக்கிறோம்;-)

புத்தகக் கல்வியைவிட மேலான அனுபவக்கல்வியைப் பெறுகிறார்கள் குழந்தைகள்.. புதுத் தம்பதியினருக்கும்., தம்பதியினருக்கும் அவர்களுக்குள்ளே ஒரு ஒட்டுதல் உண்டாக்கும்..மனதில் குழப்பம், டென்சன் இருந்தா வெளியூர் சென்றுவாங்கன்னு டாக்டர்சே சொல்லும்போது சுற்றுலா மிக அவசியமான ஒன்னுன்னு ராதாம்மா தீர்க்கமா சொல்லிட்டாங்க இதை மறுத்து பேச இவர் எதிர் அணியில் தெம்பு இருந்தால் தாராளமாக வரலாம்.. தெம்பு இல்லைனாலும் இந்தாங்க நான் கொடுக்கிற இந்த செவ்விழனி குடிச்சுட்டு தெம்பா வந்து பதில் வாதம் வையுங்க இல்லைன்னா நான் ...நான் ....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அழுதுடுவேன்..........

Don't Worry Be Happy.

வாங்க ஜென்னி வாங்க கேளுங்க நியாத்தை;)

//அப்போ எதிர்அணிஇனரை சுற்றுலா செல்ல கூப்பிட்டால் எனக்கு அடுப்படி மட்டும் போதும் என்று சொல்லிடுவன்களா ?
என்னதிது சின்னபுள்ள தனமால்ல இருக்கு//

//ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து கொண்டு ஜாலியா போகலாமே.//***ஆமால்ல பின்ன என்ன வந்ததாம்??? எனக்கும் சுத்தமா புரியலை..

Don't Worry Be Happy.

//நான் போன பயணங்களையும் சந்தோசத்தயும் சொல்கிறேன் கேளுங்கள் நடுவரே மிளகாய் பஜ்ஜியெல்லாம் பத்திரமா வச்சிக்கோங்க அப்பால வந்து ஒண்ணு குறையுதேன்னு என்னை கேக்கபிடாது ஆமா :)//***ச்செ ச்செ உங்ககிட்ட கேப்பேனா? ஆசையா வேணும் வேணும்கிற அளவுக்கு செஞ்சு தர மகராசி ஆச்சே;-)

//ஆளுக்கு 4 இட்லி பூண்டு சட்னியோடு ஆஹா அருமையோ அருமை வீட்டில் இட்லின்னா இன்னிக்கும் இட்லியான்னு கேட்கும் நாங்கள் இன்னும் வேனும்னு கேக்க வச்சுதே :)//***அங்கேயும் போயி இன்னிக்கும் இட்லியான்னா அப்புறம் அந்த இட்லியும் கிடைக்காதுன்னு தெரியாத அளவுக்கு நாம என்ன விவரக்கெட்டவங்களா;-) ஹி ஹி உண்மை வாய்வழியா தெறிச்சு விழுந்துருச்சு கப்புன்னு அமுத்திடுங்க;) அவங்களுக்கு வேற ஒண்ணு சொல்லிடறேன்...இதப்பாருங்க அ.அ.பணவிரயம் அணி அதாவது வீட்டில கிடைக்கிற இட்லியே நாலுநாளாயும் வெளியூர் சுற்றுலால கிடைக்குதுன்னா அதோட மகிழ்ச்சிய என்னன்னு சொல்றது??தண்ணியே கிடைக்காத காட்டுல ஒரு குட்டிப்பானையில கிடைச்ச தண்ணிய காக்கா கல்ல போட்டு போட்டு குடிச்சு ஹேப்பியா பரந்துச்சே! அந்த மாதிரி சந்தோஷம் கிடைக்கும் இதெல்லாம் அனுபவிச்சுப் பாத்தாதான் தெரியுமுங்கோ.................!

நன்றி ஸ்வர்! உங்ககூட எங்களையும் காரைக்கால், பாண்டிச்சேரின்னு ஒரு ட்ரிப் கூட்டிட்டு போனீங்களே மறக்க முடியுமா;) நானும் அந்த ட்ராஃபிக் அங்க்கிளப்பாத்து டாட்டா காட்டிட்டனே...;-)

சுற்றுலாங்கிறது சந்தோஷமான அனுபவம் இறுதி வரை நினைவில் இருக்கும்னு மிக அழகா சொல்லிட்டாங்க நம்ம ஸ்வர்...அருமையான இட்லி வேணும்னா அவங்க வீட்டுக்கு ஒரு ட்ரிப் போட்டு போங்க பதில் வாதம் சொல்லனும்னா எல்லாரும் இங்குட்டு வாங்கோ...........!

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்