ரிச்பேரீட்சை உருண்டை

தேதி: March 21, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

பேரீட்சை - ஒரு கப்
முந்திரி, பாதாம், திராட்சை, பிஸ்தா, அனைத்தும் கலந்து - ஒரு கப்
நெய் - ஒரு தேக்கரண்டி


 

முதலில் பேரீட்சையில் உள்ள விதைகளை எடுத்து விடவும்.
முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை ஒன்றிரண்டாக உடைத்து வைக்கவும்.
பின் பேரீட்சையை நன்கு பிசையவும்.
இதனுடன் உடைத்த பருப்பை சேர்க்கவும். அதில் சிறிது நெய் கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை உருண்டையாக பிடித்து வைக்கவும். மிகவும் சத்தான உருண்டை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

hi
மிகவும் நல்ல குறிப்பு, மற்றும் மிகவும் சத்தானதும், என் மகளுக்கு பேரிச்சம்பழம் மிகவும் விருப்பம், இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாழ்த்துக்கள்.மிகவும் எளிமையான,சத்தான குறிப்பு. உங்க பெயரை சரியா வாசிக்க தெரியல.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

நல்ல குறிப்பு. நான் இது போல் செய்வேன், ஆனால் நட்ஸ் எல்லாம் பொடி செய்து சேர்ப்பேன். இது நல்லா இருக்கு, செய்து பார்க்கிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு சாத்விகாந்த்

அடுப்பில் வைத்து சமைக்காமல் செய்யக்கூடிய சுவையான சத்தான சமையல்.

பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

என் சமையல் குறிப்பை வெளியிட்ட அனைவருக்கும் எனது நன்றி.

என் சமையல் குறிப்பை பாராட்டிய அனைத்து தோழிக்கும் எனது நன்றி.

சாத்வி,

சுலபமான, நல்லதொரு ஆரோக்கிய குறிப்பு கொடுத்திருக்கிங்க. வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ